आगमप्रकरणम्
प्रज्ञानांशुप्रतानैः स्थिरचरनिकरव्यापिभिर्व्याप्य लोका -
न्भुक्त्वा भोगान्स्थविष्ठान्पुनरपि धिषणोद्भासितान्कामजन्यान् ।
पीत्वा सर्वान्विशेषान्स्वपिति मधुरभुङ्मायया भोजयन्नो
मायासङ्ख्यातुरीयं परममृतमजं ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥
यो विश्वात्मा विधिजविषयान्प्राश्य भोगान्स्थविष्ठा -
न्पश्चाच्चान्यान्स्वमतिविभवाञ्ज्योतिषा स्वेन सूक्ष्मान् ।
सर्वानेतान्पुनरपि शनैः स्वात्मनि स्थापयित्वा
हित्वा सर्वान्विशेषान्विगतगुणगणः पात्वसौ नस्तुरीयः ॥ २ ॥
ओमित्येतदक्षरमिदं सर्वं तस्योपव्याख्यानम् । वेदान्तार्थसारसङ्ग्रहभूतमिदं प्रकरणचतुष्टयम् ओमित्येतदक्षरमित्यादि आरभ्यते । अत एव न पृथक् सम्बन्धाभिधेयप्रयोजनानि वक्तव्यानि । यान्येव तु वेदान्ते सम्बन्धाभिधेयप्रयोजनानि, तान्येवेहापि भवितुमर्हन्ति ; तथापि प्रकरणव्याचिख्यासुना सङ्क्षेपतो वक्तव्यानीति मन्यन्ते व्याख्यातारः ।
(ச.பா) இவை எல்லாம் ஓம் என்ற அக்ஷரமே, அதனுடைய உபாக்கியமான இந்த வேதாந்த அர்த்த சாரத்தின் சுருக்கமாகிய இந்த பிரகரண சதுஷ்டயம் (இந்த நான்கு பிரகரணங்கள்) “ओमित्येतदक्षरमिदम्” முதலிய மந்திரங்களால் ஆரம்பிக்கப்படுகிறது. ஆகையால் சம்பந்தம், விஷயம், பிரயோஜனம் இவைகளைத் தனியாகக் கூறவேண்டியதில்லை. வேதாந்த சாஸ்திரங்களில் எந்த சம்பந்தம். விஷயம், பிரயோஜனம் சொல்லப்பட்டதோ அதுவே இந்த கிரந்தத்திற்கும் பொருந்தும், அவ்வாறு இருந்தாலும் பிரகரண கிரந்தத்தின் வியாக்யானத்தை செய்ய விரும்புபவர்கள் அவைகளை சுருக்கமாக விளக்கவேண்டும்.
तत्र प्रयोजनवत्साधनाभिव्यञ्जकत्वेनाभिधेयसम्बद्धं शास्त्रं पारम्पर्येण विशिष्टसम्बन्धाभिधेयप्रयोजनवद्भवति । किं पुनस्तत्प्रयोजनमिति, उच्यते — रोगार्तस्येव रोगनिवृत्तौ स्वस्थता, तथा दुःखात्मकस्यात्मनो द्वैतप्रपञ्चोपशमे स्वस्थता ; अद्वैतभावः प्रयोजनम् ।
(ச.பா) அங்கு பிரயோஜனத்தின் சித்திக்கு அனுகூலமான சாதனத்தை தெரிவிப்பதற்காக தன்னால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட விஷயத்துடன் கூடிய சம்பந்தமுடைய சாஸ்திரம் பரம்பரையாக சம்பந்தம், விஷயம், பிரயோஜனமுடையதாகச் செய்கிறது. மறுபடியும் அதன் பிரயோஜனம் என்ன என்று கூறப்படுகிறது ரோகத்தால் பீடிக்கப்பட்டவன் ரோகம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான், அவ்வாறேதுக்க அபிமானி தன்னுடைய த்வைத பிரபஞ்சம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான் இதன் பிரயோஜனம் அத்வைத பாவமே யாகும்.
(ச.பா) த்வைத பிரபஞ்சம் அவித்தையினால் உண்டானதால் அது வித்தையினால் நீங்கும் என்பதால் பிரஹ்ம வித்தையை பிரகாசப்படுத்துவதற்காக (பிரஹ்ம வித்தையை தெரியப்படுத்துவதற்காக) ஆரம்பிக்கப்படுகிறது “यत्र हि द्वैतमिव भवति” (யத்ர ஹி த்வைதமிவபவதி எங்கு துவைதம் போல் இருக்கிறதோ) “यत्र वान्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येदन्योऽन्यद्विजानीयात्” (யத்ர வான்ய திவஸ்யாத்தத்ரான்யோ அன்யத்பச்யேதன்யோ அன்யத் விஜானீயாத் = எங்கு வேறாய் இருப்பது போல் தோன்றுகிறதோ அங்கு வேறு ஒன்று மற்றொன்றைப் பார்க்க முடிகிறது அல்லது வேறு ஒன்று வேறு ஒன்றை அறிகிறது) “यत्र वास्य सर्वमात्मैवाभूत्तत्केनकंपश्येत्केनकंविजानीयात्” (யத்ர வாஸ்ய சர்வமாத்மைவா பூத்தத்கேன கம்பச்யேத்கேன கம் விஜானீயாத் = எங்கு அதற்கு எல்லாம் ஆத்மாவாகிறதோ அவனால் எதைக் கொண்டு யாரைப்பார்ப்பான், எதனால் யாரை அறிவான்) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் இதன் பொருள் சித்திக்கிறது.
तत्र तावदोङ्कारनिर्णयाय प्रथमं प्रकरणमागमप्रधानमात्मतत्त्वप्रतिपत्त्युपायभूतम् । यस्य द्वैतप्रपञ्चस्योपशमे अद्वैतप्रतिपत्तिः रज्ज्वामिव सर्पादिविकल्पोपशमे रज्जुतत्त्वप्रतिपत्तिः, तस्य द्वैतस्य हेतुतो वैतथ्यप्रतिपादनाय द्वितीयं प्रकरणम् । तथा अद्वैतस्यापि वैतथ्यप्रसङ्गप्राप्तौ, युक्तितस्तथात्वप्रतिपादनाय तृतीयं प्रकरणम् । अद्वैतस्य तथात्वप्रतिपत्तिविपक्षभूतानि यानि वादान्तराण्यवैदिकानि सन्ति, तेषामन्योन्यविरोधित्वादतथार्थत्वेन तदुपपत्तिभिरेव निराकरणाय चतुर्थं प्रकरणम् ।
(ச.பா) அங்கு ஓம்காரத்தை நிர்ணயம் செய்வதற்காக முதலாவதான ஆகமப்பிரதானமான பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. அது ஆத்ம தத்துவத்தை அடைவதற்கான உபாய ரூபமாய் இருக்கிறது. எவ்வாறு கயிற்றில் பாம்பு முதலிய விகல்பங்கள் நீங்கியவுடன் கயிற்றின் யதார்த்த ஸ்வரூபஞானம் ஏற்படுகிறதோ அவ்வாறு துவைத பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ஏற்பட்ட உடன் அத்வைத தத்துவத்தின் யதார்த்த ஞானம் உண்டாகிறது. அந்த துவைதத்தின் மித்தியாத்துவத்தை யுக்தி பூர்வமாய் விளக்குவதற்காக இந்த இரண்டாவது (வைதத்திய) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அத்வைதத்திலும் மித்யாத்துவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக யுக்தி மூலமாய் அதனுடைய சத்தியத்துவத்தை நிலைநாட்டுவதற்காக இந்த மூன்றாவது (அத்வைத) பிரகரணம் வந்துள்ளது. அவ்வாறே அத்வைத சத்தியத்துவ நிச்சயத்தின் விபக்ஷி (மாறுபட்ட கருத்துடைய பக்ஷம்) என்றவேறு அவைதிக மாற்று கருத்துடையவர்கள் அவர்களுக்குள் பரஸ்பர விரோதியாய் இருப்பதால் அது மித்தையாகும். ஆகையால் அவைகளை யுக்திகளால் கண்டனம் செய்வதற்காக நான்காவது (अलातशान्ति) (அலாதசாந்தி) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது.
(ச.பா) ஆத்ம தத்துவத்தின் நிர்ணயம், எவ்வாறு ஆத்மாவை அடைவதற்கு உபாயமாகிறது என்று கூறப்படுகிறது “ओमित्येतत्” (ஓமித்யேதத் = ஓம் என்பது ஆத்மா), “एतदालम्बनम्” (ஏததாலம்பனம் = அதுவே ஆலம்பனம்), “एतद्वै सत्यकाम” (ஏதத்வை சத்தியகாம = ஹே! சத்தியகாம! அதுவேயாகும்) “ओमित्यात्मानं युञ्जीत” (ஓமித்யாத்மானம் யுஞ்ஜீத = ஓம் என்று ஆத்மாவை த்யானம் செய் “ओमिति ब्रह्म” (ஓமிதி பிரஹ்ம = ஓம் பிரஹ்மமாகும்) “ओङ्कार एवेदं सर्वम्” (ஓம்காரஏவேதம் சர்வம் = இந்த எல்லாம் ஓம்காரமே என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
रज्ज्वादिरिव सर्पादिविकल्पस्यास्पदमद्वय आत्मा परमार्थतः सन्प्राणादिविकल्पस्यास्पदं यथा, तथा सर्वोऽपि वाक्प्रपञ्चः प्राणाद्यात्मविकल्पविषय ओङ्कार एव । स चात्मस्वरूपमेव, तदभिधायकत्वात् । ओङ्कारविकारशब्दाभिधेयश्च सर्वः प्राणादिरात्मविकल्पः अभिधानव्यतिरेकेण नास्ति ;
‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम् , सर्वं हीदं नामनि’ (ऐ. आ. २ । १ । ६) इत्यादिश्रुतिभ्यः ।
(ச.பா) சர்ப்பம் முதலிய விகல்பங்களுக்கு அதிஷ்டானமான ரஜ்ஜு முதலியவற்றிக்குச் சமமாக இவ்வாறு அத்விதீய ஆத்மா பரமார்த்த சத்தியமாய் இருப்பதால் பிராணன் முதலிய விகல்பங்களுக்கு ஆஸ்ரியமாய் இருக்கிறதோ, அவ்வாறு எல்லா வாக் பிரபஞ்சங்களான பிராணன் முதலிய ஆத்ம விகல்ப விஷயம் ஓம்காரமே. மேலும் அது (ஓம்காரம்) ஆத்மாவை பிரதிபாதனம் செய்வதால் அந்த ஆத்ம ஸ்வரூபமேயாகும். அவ்வாறே ஓம்காரத்தின் விகாரரூப சப்தங்களால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட ஆத்மாவின் விகல்பரூபம் எல்லா பிராணன் முதலியவைகள் தன்னை பிரதிபாத்தியம் செய்யும் சப்தங்களைக் காட்டிலும் வேறு அல்ல, என்று “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் - வாக்கினால் உண்டான விகாரமே நாமம் எனப்படுகிறது) “तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम्” (ததஸ்யேதம் வாச்சா தன்த்யா நாமபிர்தாமமபி: சர்வம் ஸ்திதம் = இந்த பிரஹ்மமானது இந்த சம்பூரண ஜகத்தையும் வாக்கு ரூபமான கயிற்றினால் நாமங்களாய் வியாபித்திருக்கிறது), “सर्वं हीदं नामनि” (சர்வம் ஹீதம் நாமனி) = இது எல்லாம் நாமமயமே) என்று சுருதிகளினால் அறிகிறோம்.
अत आह
ஆகையால் கூறுகிறார்:-
ओमित्येतदक्षरमिदं सर्वं तस्योपव्याख्यानं भूतं भवद्भविष्यदिति सर्वमोङ्कार एव । यच्चान्यत्त्रिकालातीतं तदप्योङ्कार एव ॥ १ ॥
மந்திர அர்த்தம் - எது எல்லாம் இருக்கிறதோ அது ஓம்காரமே எது எல்லாம் இதற்கு முன் இருந்தது இப்பொழுது இருப்பது இனி இருக்கப்போவதும் எல்லாம் ஓம்காரமே. இதை தவிர மூன்று காலங்களையும் கடந்த வேறு வஸ்து எதுவோ அதுவும் ஓம்காரமே.
ओमित्येतदक्षरमिदं सर्वमिति । यदिदम् अर्थजातमभिधेयभूतम् , तस्य अभिधानाव्यतिरेकात् , अभिधानभेदस्य च ओङ्काराव्यतिरेकात् ओङ्कार एवेदं सर्वम् । परं च ब्रह्म अभिधानाभिधेयोपायपूर्वकमवगम्यत इत्योङ्कार एव ।
(ச.பா) எது எல்லாம் இருக்கிறதோ அது ஓம்காரமே. எந்த இந்த பதார்த்தங்கள் சொல்லப்பட்டதின் (பிரதிபாத்ய) (அபிதேய) சொல்லைக் (பிரதிபாதக) (அபிதான) காட்டிலும் வேறானது ஆகாததால் சொல்லிற்கு ஓம்காரத்தைக் காட்டிலும் வேறாகாத ஓம்காரமே இவையெல்லாம், பரப்ரஹ்மமும் அபிதான, அபிதேய (வாச்சிய வாசக) ரூப உபாயத்தால்தான் அறிய முடிகிறது. ஆகையால் அதுவும் ஓம்காரமே.
तस्य एतस्य परापरब्रह्मरूपस्याक्षरस्य ओमित्येतस्य उपव्याख्यानम् , ब्रह्मप्रतिपत्त्युपायत्वाद्ब्रह्मसमीपतया विस्पष्टं प्रकथनमुपव्याख्यानम् ; प्रस्तुतं वेदितव्यमिति वाक्यशेषः ।
(ச.பா) எந்த அந்த பராபர பிரஹ்மரூப அக்ஷர ஓம்காரமோ அதனுடைய உபவியாக்கியானம் - பிரஹ்மத்தை அடைவதற்கான உபாயமாய் இருப்பதால் அதனை மிக அருகில் உள்ளதாய் ஸ்பஷ்ட்டமாய் கூறுவது என்பது உபவியாக்கியானம் ஆகும். அதை இங்கு ப்ரஸ்துதியை (மேன்மையை) அறிந்துகொள்ள வேண்டும். “प्रस्तुतं वेदितव्यम्” என்பது வாக்கிய சேஷமாகும்.
भूतं भवत् भविष्यत् इति कालत्रयपरिच्छेद्यं यत् , तदपि ओङ्कार एव, उक्तन्यायतः । यच्च अन्यत् त्रिकालातीतं कार्याधिगम्यं कालापरिच्छेद्यमव्याकृतादि, तदपि ओङ्कार एव ।
(ச.பா) பூத, வர்த்தமான, பவிஷ்யத் (சென்ற, இருக்கின்ற, வரப்போகின்ற) ஆகிய முக்காலங்களினாலும் எந்த சிறிய பரிச்சேதம் இருந்தாலும் முற்கூறிய நியாயப்படி ஓம்காரமேயாகும். இதைத் தவிர இந்த மூன்று காலங்களுக்கும் மேலான (பரமான) தன்னுடைய காரியத்தால் அறியப்படுவதும், காலத்தால் அபரிச்சேத்திய (பிரிக்கமுடியாத) அவ்யாகிருத முதலியவைகளான அவையும் ஓம்காரமே ஆகும்.
अभिधानाभिधेययोरेकत्वेऽपि अभिधानप्राधान्येन निर्देशः कृतः ‘ओमित्येतदक्षरमिदं सर्वम्’ इत्यादि । अभिधानप्राधान्येन निर्दिष्टस्य पुनरभिधेयप्राधान्येन निर्देशः अभिधानाभिधेययोरेकत्वप्रतिपत्त्यर्थः । इतरथा हि अभिधानतन्त्राभिधेयप्रतिपत्तिरिति अभिधेयस्याभिधानत्वं गौणमित्याशङ्का स्यात् । एकत्वप्रतिपत्तेश्च प्रयोजनमभिधानाभिधेययोः — एकेनैव प्रयत्नेन युगपत्प्रविलापयंस्तद्विलक्षणं ब्रह्म प्रतिपद्येतेति । तथा च वक्ष्यति —
‘पादा मात्रा मात्राश्च पादाः’ (मा. उ. ८) इति । तदाह —
(ச.பா) அபிதானம், அபிதேயம் இரண்டும் ஒன்றேயானாலும் அபிதானத்தை பிரதானமாக நிர்தேசம் செய்யப்படுவது (விளக்கப்படுவது) ஏன்? ஓம் எனப்படும் இந்த அக்ஷரமே எல்லாம் என்பவை முதலியவைகளால். அபிதானத்தை பிரதானமாக விளக்கி மறுபடியும் அபிதேயத்தை பிரதானமாய் விளக்குவது அபிதானம் அபிதேயம் இவைகளின் ஏகத்துவத்தை புரிந்து கொள்வதற்காக ஆகும், மற்றதோ எனில் அபிதேயத்தின் பிரதிபத்தி அபிதானத்தின் அதீனமாய் இருப்பதால் அபிதேயத்தின் அபிதானத்துவமாய் கௌணமாகுமே என்ற சங்கை ஏற்படலாம். ஏகத்துவ பிரதிபத்தியின் (அடைவின்) பிரயோஜனம் அபிதான அபிதேயம் இவைகளின் ஏகத்துவமாகும் என்பது இவை இரண்டையும் (புருஷ) பிரயத்தனத்தினால் ஒன்றாய் லயமாக்கி அதைக்காட்டிலும் விலக்ஷணமான பிரஹ்மத்தை அடைகிறான். அவ்வாறே கூறப்போகிறார் “पादा मात्रा मात्राश्च पादाः” (பாதாமாத்ராமாத்ராச்ச பாதா = பாதமேமாத்திரை மேலும் மாத்ராவேபாதம்) என்று அதைக் கூறுகிறார்.
सर्वं ह्येतद्ब्रह्मायमात्मा ब्रह्म सोऽयमात्मा चतुष्पात् ॥ २ ॥
மந்தர அர்த்தம் - அது எல்லாம் பிரஹ்மமே. அந்த ஆத்மா பிரஹ்மம் அந்த இந்த ஆத்மா நான்கு பாதங்கள் உடையது.
सर्वं ह्येतद्ब्रह्मेति । सर्वं यदुक्तमोङ्कारमात्रमिति, तदेतत् ब्रह्म । तच्च ब्रह्म परोक्षाभिहितं प्रत्यक्षतो विशेषेण निर्दिशति — अयमात्मा ब्रह्मेति । अयम् इति चतुष्पात्त्वेन प्रविभज्यमानं प्रत्यगात्मतयाभिनयेन निर्दिशति अयमात्मेति । सोऽयमात्मा ओङ्काराभिधेयः परापरत्वेन व्यवस्थितः चतुष्पात् कार्षापणवत् , न गौरिव । त्रयाणां विश्वादीनां पूर्वपूर्वप्रविलापनेन तुरीयस्य प्रतिपत्तिरिति करणसाधनः पादशब्दः ; तुरीयस्य तु पद्यत इति कर्मसाधनः पादशब्दः ॥ २ ॥
(ச.பா) எல்லாம் இந்த பிரஹ்மமே. எது எல்லாம் என்று கூறப்பட்டதோ ஓம்காரமாத்திரம் அது இந்த பிரஹ்மம் இதுவரையிலும் பரோக்ஷரூபமாக கூறப்பட்ட அந்த பிரஹ்மம் விசேஷரூபத்தால் பிரத்யக்ஷமாய் இந்த ஆத்மா பிரஹ்மம் என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இங்கு அயம் (இந்த) என்ற சப்தம் நான்குபாதரூபமாய் பிரித்து பிரத்யக் ஆத்மாவாய் அபிநயம் (முத்திரைக்காட்டி ---- ஆள்காட்டி விரலால்காட்டி) செய்து நிர்தேசம் செய்கிறார் அயமாத்மா (இந்த ஆத்மா) பிரஹ்மம் என்று. அந்த இந்த ஆத்மா ஓம்காரம் எனப்படும் பராபரரூபமாய் கூறப்படும் அந்த இந்த ஆத்மா ரூபாயிற்கு சமானமாக நான்கு பாதங்கள் (கால், அரை, முக்கால், முழுவதும்) என்று உள்ளது. பசுவிற்கு உள்ள கால்கள்போல் அல்ல. விச்வம் முதலிய மூன்று பாதங்களிலும் கிரமமாகபூர்வ, பூர்வத்தில்லயம்செய்து முடிவில் துரீய பிரஹ்மத்தின் அடைவு உண்டாகிறது. “பாத” சப்தம் கரணசாதனம். ஆகையால் முதலில் மூன்று பாதங்களிலும் பாதசப்தம் கரணவாச்சியமாகும். மேலும் துரீயத்தில் அடையப்பட்டது என்ற வகையில் கர்மவாச்சியமாகும்.
कथं चतुष्पात्त्वमित्याह —
அந்த ஆத்மஸ்வரூபமானது எவ்வாறு நான்கு பாதங்களுடன் கூடியது என்பதனை விளக்குகிறார்.
जागरितस्थानो बहिःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः स्थूलभुग्वैश्वानरः प्रथमः पादः ॥ ३ ॥
மந்த்ர அர்த்தம் - ஜாக்கிரதத்தில் வெளிபிரக்ஞை உடையவன், மேலும் ஏழு அங்கங்கள் பத்தொன்பது முகங்கள், ஸ்தூலபுக், ஸ்தூல விஷயங்களை அனுபவிக்கின்ற வைஸ்வாநரன் முதல் பாதம்.
(ச.பா) ஜாக்ரத அவஸ்தா எதற்கு ஸ்தானமோ அது ஜாக்ரதஸ்தானம் எனப்படுகிறது. பஹிஷ் பிரக்ஞை என்றால் ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான விஷயத்தில் பிரக்ஞை எவனுக்கு இருக்கிறதோ அவன் பஹிஷ்பிரக்ஞன். வெளியில் (பாஹ்ய) உள்ள விஷயங்களில் இருக்கும் பிரக்ஞையானது அவித்தையினால் உண்டானதாய் அவபாசிக்கிறது (விளக்குகிறது) என்பது பொருள். அவ்வாறே சப்தாங்கம் அதாவது “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा संदेहो बहुलो वस्तिरेव रयिः पृथिव्येव पादौ” (தஸ்ய ஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ சுதேஜாச்சக்ஷுர்விச்வரூப. பிராண ப்ருதக்வர்மாத்மா சந்தேஹோ பஹுலோ வஸ்திரேவ ரயி. ப்ருதிவ்யேவ பாதௌ = இந்த வைச்வானர ஆத்மாவிற்கு த்யுலோகம் சிரஸ், சூரியன் கண், வாயு பிராணன், ஆகாசம் மத்தியபாகம் (தேஹம்), அன்னம் (அன்னத்தின்காரணரூப ஜலம்) மூத்திரஸ்தானம் மேலும் பிருதிவியானது. இரு பாதங்கள் என்ற சுருதியின்படி அக்னிஹோத்திர கல்பனையில் அங்க பூதமாய் இருப்பதால் ஆஹவநீய அக்னி அதன் முகரூபமாய் கூறப்படுகிறது. இவ்வாறு எதற்கு இந்த ஏழு அங்கங்களோ அது சப்தாங்கம் எனக் கூறப்படுகிறது.
तथा एकोनविंशतिर्मुखान्यस्य ; बुद्धीन्द्रियाणि कर्मेन्द्रियाणि च दश, वायवश्च प्राणादयः पञ्च, मनो बुद्धिरहङ्कारश्चित्तमिति, मुखानीव मुखानि तानि ; उपलब्धिद्वाराणीत्यर्थः । स एवंविशिष्टो वैश्वानरः यथोक्तैर्द्वारैः शब्दादीन्स्थूलान्विषयान्भुङ्क्त इति स्थूलभुक् । विश्वेषां नराणामनेकधा सुखादिनयनाद्विश्वानरः, यद्वा विश्वश्चासौ नरश्चेति विश्वानरः, विश्वानर एव वैश्वानरः, सर्वपिण्डात्मानन्यत्वात् ; स प्रथमः पादः । एतत्पूर्वकत्वादुत्तरपादाधिगमस्य प्राथम्यमस्य ।
(ச.பா) அவ்வாறே பத்தொன்பது முகங்கள் உடையது, அதாவது ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆக பத்து மேலும் பிராணவாயுக்கள். ஐந்து, மேலும் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் ஆகிய பத்தொன்பதும் முகங்கள் போல் முகங்கள், அவைகள் உபலப்தி (ஞானம்= அறிவு ஏற்படுவதற்கான) வாயில்களாகும் என்பது பொருள். இவ்வாறு இவைகளுடன் கூடிய வைச்வாநரன் முன் கூறப்பட்ட வாயில்களின் மூலமாய் சப்தம் முதலிய ஸ்தூல விஷயங்களைப் புஜிக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்தூலபுக் எனப்படுகிறான். சம்பூர்ண நரர்களையும் (எல்லா வகைப் பிராணிகளையும்) நடத்திச் செல்வதால் வைச்வாநரன் எனப்படுகிறான். அல்லது விச்வம் எல்லாம் நரரூபமாய் இருப்பதால் விச்வாநரன். விச்வாநரனே வைச்வாநரன். எல்லா தேஹங்களுக்கும் அநன்யமாய் (அபின்னமாய்) இருப்பதால் அதுவே முதல் பாதம். இது முதலில் இருப்பதால் இதற்குப் பின்வரும் பாதத்தின் ஞானத்திற்கு முன் இதனுடைய ஞானம் ஏற்படுவதால் இதுவே முதலாவது ஆகும்.
कथम् ‘अयमात्मा ब्रह्म’ इति प्रत्यगात्मनोऽस्य चतुष्पात्त्वे प्रकृते द्युलोकादीनां मूर्धाद्यङ्गत्वमिति ।
(ச.பா) (அயமாத்மா பிரஹ்ம) இந்த சுருதியின் படி இங்கு பிரத்யக் ஆத்மாவிற்கு நான்கு பாதங்களுடையதைக் கூறுவதற்கானதாகும். அதில் த்யுலோகம் முதலியவை இதன் சிரஸ் முதலிய அங்கரூபமாய் எவ்வாறு கூறலாம்?
नैष दोषः, सर्वस्य प्रपञ्चस्य साधिदैविकस्य अनेनात्मना चतुष्पात्त्वस्य विवक्षितत्वात् । एवं च सति सर्वप्रपञ्चोपशमे अद्वैतसिद्धिः । सर्वभूतस्थश्च आत्मा एको दृष्टः स्यात् ; सर्वभूतानि चात्मनि ।
‘यस्तु सर्वाणि भूतानि’ (ई. उ. ६) इत्यादिश्रुत्यर्थश्चैवमुपसंहृतः स्यात् ; अन्यथा हि स्वदेहपरिच्छिन्न एव प्रत्यगात्मा साङ्ख्यादिभिरिव दृष्टः स्यात् ; तथा च सति अद्वैतमिति श्रुतिकृतो विशेषो न स्यात् , साङ्ख्यादिदर्शनेनाविशेषात् । इष्यते च सर्वोपनिषदां सर्वात्मैक्यप्रतिपादकत्वम् ; ततो युक्तमेवास्य आध्यात्मिकस्य पिण्डात्मनो द्युलोकाद्यङ्गत्वेन विराडात्मनाधिदैविकेनैकत्वमित्यभिप्रेत्य सप्ताङ्गत्ववचनम् ।
‘मूर्धा ते व्यपतिष्यत्’ (छा. उ. ५ । १२ । २) इत्यादिलिङ्गदर्शनाच्च ।
(ச.பா) இது தோஷமில்லை. ஏனெனில் இந்த ஆத்மாவின் மூலமாகத்தான் அதிதைவதத்துடன் கூடிய சம்பூர்ண பிரபஞ்சத்தின் நான்கு பாதங்களையும் பிரதிபாதனம் செய்வதற்கு (விவரிப்பதற்கு) ஆகும். இவ்வாறு இருக்கும் பொழுது சம்பூர்ண பிரபஞ்சத்தின் உபசமனமே (நீக்கமே) அத்வைத சித்தியாகும். எல்லா பூதங்களிலும் (பிராணிகளிலும்) இருக்கின்றது ஒரே ஆத்மா, எல்லா பூதங்களிலும் ஆத்மாவிலும் (சாக்ஷாத்தாய்) பார்க்கபடுவதாய் விடும் “यस्तु सर्वाणि भूतानि” என்பது முதலிய சுருதியின் அர்த்தமும் இல்லாமல் போய் விடும் மேலும் அவ்வாறு இல்லையெனில் சாங்கிய தர்சன முதலியவைகளைப் போல் தன்னுடைய தேஹத்தில் பரிச்சின்னமாய் அந்தராத்மாவின் தர்சனமாகிவிடும், இவ்வாறானால் “अद्वैतं” என்ற சுருதிபிரதிபாதித விசேஷ பாவனையின் சித்தி உண்டாகாது. ஏனெனில் சாங்கியம் முதலிய தர்சனங்களின் அபேக்ஷை இதில் சிறிதும் விசேஷமுடையதாகாது. ஆனால் எல்லா உபநிஷத்துக்களுக்கும் ஆத்மாவின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதிலேயே இஷ்டம் ஆகையால் இந்த ஆத்யாத்மிக பிண்டாத்மாவின் த்யூலோகம் முதலியவைகளை அங்கரூபமாய் ஆதி தைவீக பிண்டாத்மாவுடன் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் அபிப்பிராயம் கொண்டு அந்த சப்தாங்கம் கூறப்பட்டது உசிதமேயாகும். இதைத் தவிர “मूर्धा ते व्यपतिष्यत्” (மூர்த்தா தே வ்யபதிஷ்யத்) உன்னுடைய தலை விழுந்துவிடும்) என்ற வாக்கியம் இதில் ஹேதுவாகும்.
(ச.பா) எந்த விராட்டுடன் ஏகத்துவம் கூறப்பட்டதோ அந்த ஹிரண்யகர்பன் அவ்யாகிருதன் இவைகளின் ஏகத்துவத்தை உபலக்ஷிப்பதாகும். மது பிராஹ்மணத்திலும் “यश्चायमस्यां पृथिव्यां तेजोमयोऽमृतमयः पुरुषो यश्चायमध्यात्मम्” (யச்சாயமஸ்யாம் பிருதிவ்யாம் தேஜோமயோஅம்ருதமய புருஷோயச்சாயமத்யாத்மம் = எந்த ஒருவன் இந்த பிருதிவியில் தேஜோமயமாயும் அம்ருதமாயும் உள்ள புருஷன். அவ்வாறே எந்த அந்த அவனே அத்தியாத்ம புருஷன்) என்பது முதலியவை. ஒரு விசேஷமும் இல்லாத காரணத்தால் தூங்கும் புருடனும் அவ்யாக்ருதத்துடன் ஏகத்துவம் சித்திக்கிறது. இவ்வாறு இருப்பதால் என்ன சித்திக்கிறது எனில் எல்லா துவைதங்களும் நீங்கின பின் அத்வைதமே சித்திக்கிறது என்பதாகும்.
स्वप्नस्थानोऽन्तःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः प्रविविक्तभुक्तैजसो द्वितीयः पादः ॥ ४ ॥
மந்தர அர்த்தம் - ஸ்வப்னத்தை ஸ்தானமாகவும், அந்தः பிரக்ஞனாயும், ஏழு அங்கங்களுடன் கூடியவனும் பத்தொன்பது முகமுடையவனும் சூக்ஷ்ம விஷயங்களின் போக்தாவாயும் உள்ள தைஜசன் இரண்டாவது பாதம்.
(ச.பா) ஸ்வப்பனத்தை ஸ்தானமாக உடையதால் ஸ்வப்னஸ்தானன் எனப்படுகிறான். அநேக சாதனங்களுடன் கூடிய ஜாக்கிரத்கால புத்தியானது மனதின் ஸ்புரண மாத்திரத்தாலேயே வெளி விஷயங்களில் சம்பந்தம் காணப்படுகிறது. அதனால் மனதில் சம்ஸ்காரம் ஏற்படுகிறது. சித்திரம் வரையப்பட்ட வஸ்திரம் போல் இவ்வாறு சம்ஸ்காரங்களால் அந்த மனது அவித்யை. காமனை மேலும் கர்மத்தின் காரணமாய் பாஹிய சாதனங்களின் அபேக்ஷை இல்லாமலேயே பிரேரிக்கப்பட்டு (ஸ்வப்னத்தில்) ஜாக்கிரம் போல் காணப்படுகிறது. இவ்வாறு சுருதிகளில் கூறப்பட்டுள்ளது - “இந்த எல்லா சாதனங்களுடன் கூடிய ஜகத்தின் சம்ஸ்காரத்தைக் கிரஹணம் செய்கிறது. அவ்வாறே அதர்வண சுருதியிலும் பரம (இந்திரியங்கள் முதலியவைகளால் உத்கிருஷ்ட்டமான) தேவதை (பிரகாசம் செய்யக்கூடிய) மனதில் ஒரே ரூபமாய் ஆகிறது”. என்று துதித்துக் கூறுகிறார் = “இங்கு ஸ்வப்பன ஸ்தானத்தில் எந்த தேவன் உள்ளானோ அவன் தன்னுடைய மஹிமையை அனுபவிக்கிறான் என்பதாகும்.
इन्द्रियापेक्षया अन्तःस्थत्वान्मनसः तद्वासनारूपा च स्वप्ने प्रज्ञा यस्येति अन्तःप्रज्ञः, विषयशून्यायां प्रज्ञायां केवलप्रकाशस्वरूपायां विषयित्वेन भवतीति तैजसः । विश्वस्य सविषयत्वेन प्रज्ञायाः स्थूलाया भोज्यत्वम् ; इह पुनः केवला वासनामात्रा प्रज्ञा भोज्येति प्रविविक्तो भोग इति । समानमन्यत् । द्वितीयः पादः तैजसः ॥ ४ ॥
(ச.பா) இந்திரியங்களைக் காட்டிலும் உள்ளிருப்பது மனம், அது வாசனை ரூபமாய் ஸ்வப்னத்தில் இருக்கிறது. அது அந்த: பிரக்ஞன் எனப்படுகிறது. விஷயங்கள் அற்றதில் கேவலம் பிரகாசரூபமான பிரக்ஞை விஷயீ (அனுபவிப்பது) ஆக இருப்பதால் “தைஜசன்” என்கிறோம், விச்வம் பாஹ்ய விஷயத்துடன் கூடியதாய் இருக்கிறது. ஆகையால் ஜாக்ராவஸ்தையில் ஸ்தூல பிரக்ஞை அதற்கு போஜ்ய மாகிறது. ஆனால் தைஜசனுக்கு கேவலம் வாசனா மாத்திர பிரக்ஞை புஜிக்கிறதாய் இருக்கிறது. ஆகையால் அதன் போகம் சூக்ஷ்மம் ஆகும். மற்றவைகளின் அர்த்தம் முன்போலாகும். இது தைஜசனின் இரண்டாவது பாதம் ஆகும்.
दर्शनादर्शनवृत्त्योः स्वापस्य तुल्यत्वात्सुषुप्तग्रहणार्थं यत्र सुप्त इत्यादिविशेषणम् । अथवा, त्रिष्वपि स्थानेषु तत्त्वाप्रतिबोधलक्षणः स्वापोऽविशिष्ट इति पूर्वाभ्यां सुषुप्तं विभजते ।
(ச.பா) (அ.கை) தர்சன (ஜாக்ரத ஸ்தானம்) அதர்சன (ஸ்வப்ன ஸ்தானம்) இவை இரண்டும் தத்துவஞானம் அற்ற லக்ஷணமான சுழுத்திக்கு ஒப்பாய் இருப்பதால் சுழுத்தி அவஸ்தையை கிரஹிப்பதற்காக இங்கு சுஷுப்தி முதலிய விசேஷணங்கள் ஆகும். அல்லது மூன்று ஸ்தானங்களிலும் தத்துவத்தின் அக்ஞானம் நித்திரைக்கு சமானமாகும். ஆகையால் முதலில் இரண்டு அவஸ்தைகளிலிருந்து சுஷுப்தியை பிரித்து காட்டுகிறார் (விபாகம் செய்கிறார்).
यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति तत्सुषुप्तम् । सुषुप्तस्थान एकीभूतः प्रज्ञानघन एवानन्दमयो ह्यानन्दभुक्चेतोमुखः प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥
மந்திர அர்த்தம் - எந்த அவஸ்தையில் தூங்குகின்ற புருடன் எந்த போகத்திலும் இச்சை கொள்வதில்லையோ, ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அது சுஷுப்தி எனப்படுகிறது. அந்த சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அவ்வாறேஏக பூதமாய் ப்ரகடனமாய் ஞானரூபமாய் ஆகிறது. அது ஆனந்தமயம். ஆனந்தத்தின் போக்தா. சேதனரூப முகமுடையது. அது பிராக்ஞன். அதுவே மூன்றாவது பாதமாகும்.
यत्र यस्मिन्स्थाने काले वा सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति । न हि सुषुप्ते पूर्वयोरिवान्यथाग्रहणलक्षणं स्वप्नदर्शनं कामो वा कश्चन विद्यते । तदेतत्सुषुप्तं स्थानमस्येति सुषुप्तस्थानः ।
(ச.பா) எந்த ஸ்தானத்திலோ, எந்த காலத்திலோ நன்றாக உறங்கினவன் सुप्तः ஒரு சுவப்னத்தையும் காண்பதில்லை. காமனைகளையும் காமனை (ஆசை) செய்வதில்லை. நல்ல உறக்கத்தில் முன்பு போல் வேறு ஓன்றை கிரஹிக்கும் லக்ஷணமாகிய ஸ்வப்ன தர்சனமோ காமமோ இல்லை. அந்த இந்த சுஷுப்தி ஸ்தானம் எதற்கோ அது சுஷுப்தி ஸ்தானம் எனப்படும்.
स्थानद्वयप्रविभक्तं मनःस्पन्दितं द्वैतजातं तथा रूपापरित्यागेनाविवेकापन्नं नैशतमोग्रस्तमिवाहः सप्रपञ्चमेकीभूतमित्युच्यते । अत एव स्वप्नजाग्रन्मनःस्पन्दनानि प्रज्ञानानि घनीभूतानीव ; सेयमवस्था अविवेकरूपत्वात्प्रज्ञानघन उच्यते । यथा रात्रौ नैशेन तमसा अविभज्यमानं सर्वं घनमिव, तद्वत्प्रज्ञानघन एव । एवशब्दान्न जात्यन्तरं प्रज्ञानव्यतिरेकेणास्तीत्यर्थः ।
(ச.பா) எவ்வாறு இரவில் தினமானது இருளால் மறைக்கப்படுகிறதோ அவ்வாறு முன்பு கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) வேறு வேறு விதமாய் தோன்றுகின்ற மனதின் வெளிப்பாட்டால் துவைத பிரபஞ்சத்துடன் தன்னுடைய ஸ்வரூபத்தை விட்டு விடாமல் அக்ஞானத்தால் மறைக்கப்படுகிறது. ஆகையால் பிரபஞ்சத்துடன் ஒன்றாகி (ஏகீபூதமாய்) விட்டது என்று கூறப்படுகிறது. ஆகையால் தான் ஸ்வப்ன ஜாக்ரத் ஆகிய மனதின் அசைவுகள் ஆகிய பிரக்ஞைகள் கனீபூதம், அதாவது மிகவும் கடினமாக அடர்த்தியானவை போல் இருக்கிறது. அந்த அவஸ்தை அவிவேகரூபமாய் இருப்பதால் பிரக்ஞானகனம் எனப்படுகிறது. எவ்வாறு இரவில். இரவின் இருளை தனியாகப் பிரிக்க முடியாததால் சம்பூர்ண ஜகத்தும் கனீபூதமாய் அறியப்படுகிறது. இவ்வாறு இது பிரக்ஞானகனமாகும். “एव” என்ற சப்தத்தால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த சமயத்தில் பிரக்ஞானத்தைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதில்லை என்பது பொருள்.
मनसो विषयविषय्याकारस्पन्दनायासदुःखाभावात् आनन्दमयः आनन्दप्रायः ; नानन्द एव, अनात्यन्तिकत्वात् । यथा लोके निरायासः स्थितः सुख्यानन्दभुगुच्यते । अत्यन्तानायासरूपा हीयं स्थितिरनेनात्मनानुभूयत इत्यानन्दभुक् ,
‘एषोऽस्य परम आनन्दः’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुतेः ।
(ச.பா) மனதிற்கு விஷயவிஷயீ ஆகார சலனம் இல்லாததால் ஆயாசமான துக்கத்தின் இன்மையே ஆனந்தமயம். அதாவது ஆனந்தம் போல் இருக்கிறதே தவிர ஆனந்தமல்ல. நிலையற்றதாய் இருப்பதால். உலகில் எவ்வாறு ஆசை அற்று இருக்கும்பொழுது சுகி என்றும் ஆனந்தபுக் என்றும் ஸ்திதியை அவனால் அனுபவிக்கப்படுவதால் ஆனந்தபுக் எனப்படுகிறான். இதுவே சுருதியிலும் “एषोऽस्य परम आनन्दः” என்று கூறப்பட்டுள்ளது.
स्वप्नादिप्रतिबोधं चेतः प्रति द्वारीभूतत्वात् चेतोमुखः ; बोधलक्षणं वा चेतो द्वारं मुखमस्य स्वप्नाद्यागमनं प्रतीति चेतोमुखः । भूतभविष्यज्ज्ञातृत्वं सर्वविषयज्ञातृत्वमस्यैवेति प्राज्ञः । सुषुप्तोऽपि हि भूतपूर्वगत्या प्राज्ञ उच्यते । अथवा, प्रज्ञप्तिमात्रमस्यैव असाधारणं रूपमिति प्राज्ञः ; इतरयोर्विशिष्टमपि विज्ञानमस्तीति । सोऽयं प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥
(ச.பா) ஸ்வப்னம் முதலிய ஞானரூப சேதனத்திற்கு துவார (வழி) ரூபமாய் இருப்பதால் சேதோமுகம் எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னம் முதலியவைகளை அடைவதற்கான ஞானரூப சித்தமே இதன் துவாரம் (வழி) எதுவோ அது முகம் எனப்படும். ஆகையால் அது சேதோமுகம் எனப்படுகிறது. இறந்தகாலம், (भूत) வரும்காலம், (भविष्यत्) அவ்வாறே எல்லா விஷயங்களை அறியும் ज्ञाता (ஞாதா) அதுவே, ஆகையால் அது प्राज्ञं (பிராக்ஞன்) எனப்படுகிறான். சுப்த்த (தூங்கும்) அவஸ்தை இருந்தாலும் இதற்குமுன் உள்ள பூத முந்திய கதியினால் பிராக்ஞன் எனப்படுகிறான். அல்லது கேவலம் ஞப்த்தி (ஞானம்) மாத்திரம் இதற்கு அசாதாரண ரூபம் ஆகையால் பிராக்ஞன் ஆகும். ஆகையால் விச்வன், தைஜசன் இவைகளுடன் கூடிய விக்ஞானமும் ஆகும். இந்த பிராக்ஞன் மூன்றாவது பாதமாகும்.
एष सर्वेश्वर एष सर्वज्ञ एषोऽन्तर्याम्येष योनिः सर्वस्य प्रभवाप्ययौ हि भूतानाम् ॥ ६ ॥
மந்தர அர்த்தம் - இது எல்லாவற்றிற்கும் ஈ.ஸ்வரனே. இது சர்வக்ஞன், இது அந்தர்யாமி மேலும் எல்லா ஜீவர்களின் உத்பத்தி லயம் இவற்றின் ஸ்தானமாவதால் இது எல்லாவற்றின் காரணமாகும்.
एष हि स्वरूपावस्थः सर्वेश्वरः साधिदैविकस्य भेदजातस्य सर्वस्य ईश्वरः ईशिता ; नैतस्माज्जात्यन्तरभूतोऽन्येषामिव,
‘प्राणबन्धनं हि सोम्य मनः’ (छा. उ. ६ । ८ । २) इति श्रुतेः । अयमेव हि सर्वस्य सर्वभेदावस्थो ज्ञातेति एषः सर्वज्ञः । अत एव एषः अन्तर्यामी, अन्तरनुप्रविश्य सर्वेषां भूतानां यमयिता नियन्ताप्येष एव । अत एव यथोक्तं सभेदं जगत्प्रसूयत इति एषः योनिः सर्वस्य । यत एवम् , प्रभवश्चाप्ययश्च प्रभवाप्ययौ हि भूतानामेष एव ॥ ६ ॥
(ச.பா) தன்னுடைய ஸ்வருபத்தில் இருக்கும் பிராக்ஞனே சர்வேஸ்வரன் அதாவது எல்லா அதிதைவத்துடன் கூடி எல்லா பேத சமூகங்களின் ஈ.ஸ்வரன் அதாவது சாசனம் செய்பவன் (நடத்துபவன்) “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சோம்யமனः = ஹே சோம்ய பிராணபந்தனமே மனம்) என்று சுருதியின் வாக்கியம். எல்லா பேதங்களிலும் இருப்பது எல்லாவற்றின் ஞாதாவாகும். ஆகையால் அது சர்வக்ஞன். அது அந்தர்யாமி. அதாவது எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து அவைகளை நியமனம் செய்வது (நடத்துவது) அதுவேயாகும். ஆகையால் முன் கூறப்பட்ட பேதத்துடன் எல்லா ஜகத்தும் இதிலிருந்து உண்டாவதால் அதுவே எல்லாவற்றிக்கும் காரணமாகும். ஆகையால் எல்லா பிராணிகளின் உற்பத்தி லயஸ்தானமும் அதுவே ஆகும்.
अत्रैते श्लोका भवन्ति —
இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.
(अव) अत्रैतस्मिन्यथोक्तेऽर्थ एते श्लोका भवन्ति ।
(அ.கை) இங்கு இந்த முன் கூறப்பட்ட அர்த்தத்தால் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.
बहिःप्रज्ञो विभुर्विश्वो ह्यन्तःप्रज्ञस्तु तैजसः ।
घनप्रज्ञस्तथा प्राज्ञ एक एव त्रिधा स्मृतः ॥ १ ॥
कारिका अन्वयः-विभुः विश्वः बहिष्प्रज्ञः तैजसः अन्तः-प्रज्ञः हि तथा प्राज्ञः घनप्रज्ञः एक एव त्रिधा स्मृतः।
காரிகா அர்த்தம் - விபு விச்வம் பஹிஷ்பிரக்ஞம், தைஜஸன் அந்தர் பிரக்ஞம். அவ்வாறே பிராக்ஞன் கனபிரக்ஞன் (பிரக்ஞானகனன்) இவ்வாறு ஒரே ஆத்மா மூன்று பிரகாரமாக கூறப்பட்டுள்ளது.
बहिःप्रज्ञ इति । पर्यायेण त्रिस्थानत्वात् सोऽहमिति स्मृत्या प्रतिसन्धानाच्च स्थानत्रयव्यतिरिक्तत्वमेकत्वं शुद्धत्वमसङ्गत्वं च सिद्धमित्यभिप्रायः, महामत्स्यादिदृष्टान्तश्रुतेः ॥ १ ॥
(ச.பா) “बहिष्प्रज्ञ” என்று இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம் என்னவெனில் கிரமமாய் மூன்று ஸ்தானங்கள் இருப்பதால் மேலும் நான் அதுவாய் இருக்கிறேன் என்று ஸ்மிருதியால் அனுசந்தானம் செய்வதின் காரணமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு மூன்று ஸ்தானங்களைக்காட்டிலும் வேறானதாயும், ஏகத்துவமானதாயும்.. சுத்தத்துவமாயும் மேலும் அசங்கத்துவமானதாயும் சித்திக்கிறது. எவ்வாறு மஹாமத்ஸ்யம் முதலிய திருஷ்ட்டாந்தங்கள் சுருதியில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாறாகும்
जागरितावस्थायामेव विश्वादीनां त्रयाणामनुभवप्रदर्शनार्थोऽयं श्लोकः
(ச.பா) (அ.கை) ஜாக்ரத அவஸ்தையில் விச்வன் முதலிய மூன்று அனுபவங்களைக் காட்டுவதற்காக இந்த ஸ்லோகம்-
दक्षिणाक्षिमुखे विश्वो मनस्यन्तस्तु तैजसः ।
आकाशे च हृदि प्राज्ञस्त्रिधा देहे व्यवस्थितः ॥ २ ॥
कारिका अन्वयः- विश्वः दक्षिणाक्षिमुखः मनस्यन्तस्तु तैजसः आकाशे ह्य्दि च प्राज्ञः(भवति) देहे त्रिधा व्यवस्थितः।
காரிகா அர்த்தம் - வலது கண்களின் உள்ளே விச்வன் வசிக்கிறான். தைஜசன் மனதினுள் இருக்கிறான் பிராக்ஞன் ஹ்ருதயாகாசத்தில் இருக்கிறான். இவ்வாறு இந்த சரீரத்தில் மூன்று பிரகாரமாய் வசிக்கிறான்.
(ச.பா) வலது கண்தான் அறியக்கூடிய ஸ்தானம். அதில் பிரதானமாய் ஸ்தூல பதார்த்தங்களின் சாக்ஷீயாகிய விச்வத்தின் அனுபவம் ஏற்படுகிறது. “इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन्पुरुषः” (இந்தோ ஹ வை நாமைஷ யோஅயம் தக்ஷிணேஅக்ஷன்புருஷः) = எந்த வலது கண்ணில் இருக்கும் புருஷன் “இந்த” (इन्ध) என்ற பெயரால் பிரசித்தம்) என்பது இந்த சுருதியினால் அறிகிறோம். “இந்த” (इन्ध) என்பது ஜொலிக்கும் குணமுடைய வைஸ்வானரன். ஆதித்தியனிடத்தில் அந்தர்கதமான வைராஜன் எனப்படும் ஆத்மா, மேலும் கண்களில் இருக்கும் ஸாக்ஷீ ஆகிய இரண்டும் ஒன்றே ஆகும்.
नन्वन्यो हिरण्यगर्भः क्षेत्रज्ञो दक्षिणेऽक्षिण्यक्ष्णोर्नियन्ता द्रष्टा चान्यो देहस्वामी ।
(ச.பா) சங்கை - ஹிரண்யகர்பன் வேறு. அவ்வாறே வலது கண்ணில் உள்ள நேத்திர இந்திரியத்தை இயக்கும் ஸாக்ஷீதேஹத்தின் ஸாக்ஷியாகிய க்ஷதே்திரக்ஞன் வேறாக இருக்கும்பொழுது இரண்டும் எவ்வாறு ஒன்றாகும்?
(ச.பா) சமாதானம் - அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு ஸ்வாபாவமாய் பேதம் இல்லை. ஏனெனில் “एकोदेवः सर्वभूतेषु गूढः” (ஏகோதேவः சர்வபூதேஷு கூட - ஒரே தேவன் எல்லா பிராணிகளிடத்தும் மறைந்து இருக்கிறார்) என்று சுருதியிலும், “क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत” (க்ஷதே்ரக்ஞம்சாபி மாம் வித்தி சர்வக்ஷதே்திரேஷு பாரத) = எல்லா க்ஷதே்ரங்களிலும் (சரீரங்களிலும்) என்னை க்ஷதே்ரக்ஞன் என்று அறி “अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्” (அவிபக்தம்ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் = பிரிவு அற்று இருந்தாலும்NO-CH பிரிவுற்றதுபோல் இருக்கிறது) என்று ஸ்மிருதியினாலும் அறியப்படுகிறது. எல்லா இந்திரியங்களிலும் சமமாய் இருந்தாலும் வலது கண்ணில் அதன் உபலப்தி (ஞானம்) ஸ்பஷ்ட்டமாய் தெரிவதால் அது விச்வத்தை விசேஷ ரூபமாய் நிர்தேசம் செய்கிறது.
दक्षिणाक्षिगतो रूपं दृष्ट्वा निमीलिताक्षस्तदेव स्मरन्मनस्यन्तः स्वप्न इव तदेव वासनारूपाभिव्यक्तं पश्यति । यथा तत्र तथा स्वप्ने ; अतः मनसि अन्तस्तु तैजसोऽपि विश्व एव ।
(ச.பா) வலது கண்ணில் உள்ள ஜீவாத்மா ரூபத்தைப்பார்த்து கண்ணை மூடியபின் மனதில் அந்த நினைவு வாசனாரூபமாய் வெளிப்பட்டு அந்த ரூபத்தை ஸ்வப்னத்தில் காண்கிறது. எவ்வாறு இந்த (ஜாக்ரத்) அவஸ்தையில் பார்க்கிறதோ அவ்வாறே ஸ்வப்ன அவஸ்தையிலும் உண்டாகிறது. இதுவே ஸ்வப்னா அவஸ்தையாகும். ஆகையால் மனதின் உள் இருக்கும் தைஜசனும் விச்வனே ஆகும்.
(ச.பா) அவ்வாறே ஸ்மரணரூப வியாபாரத்திலிருந்து நிவிர்த்தி ஆனவுடன் ஹிருதயாகாசத்தில் இருக்கும் பிராக்ஞன் மனதின் வியாபாரம் நீங்கியதால் பிராக்ஞன் ஏகமாய் பிரக்ஞானகனன் ஆகிறான். தர்சனமும் நினைக்கும் பொழுதும் (ஸ்மரணம் ஏற்பட்ட பொழுது) அல்லவா மனது சலிக்கிறது. அது இல்லாத பொழுது ஹிருதயத்தின் உள்ளே விசேஷமற்ற பிராணரூபமாய் இருக்கிறது. “प्राणो ह्येवैतान्सर्वान्सवृङ्क्ते”(ப்ராணோ ஹ்யேவைதான்சர்வான் சவ்ருங்க்த்தே = பிராணனே இந்த எல்லாவற்றையும் தன்னிடத்தில் லீனமடையச் செய்கிறது) என்ற சுருதி பிரமாணத்தால் அறியப்படுகிறது. மனம் இருப்பதால் தைஜசன் ஹிரண்யகர்ப்னே ஆவான். “लिङ्गं मनः” (லிங்கம் மனः = லிங்கரூபம் மனம்), “मनोमयोऽयं पुरुषः” (மனோமயோऽயம் புருஷ. அந்த புருஷன் மனோமயன்) என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
ननु व्याकृतः प्राणः सुषुप्ते । तदात्मकानि करणानि भवन्ति कथमव्याकृतता ?
(ச.பா) (சங்கை) - சுஷுப்தியிலும் பிராணன் (வியாகிருதம்) விசேஷ பாவத்தை அடைகிறான். அவ்வாறே இந்திரியங்களும் பிராணரூபமாக ஆகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது அது எவ்வாறு அவ்வியாக்ருதமாகும்?
नैष दोषः, अव्याकृतस्य देशकालविशेषाभावात् । यद्यपि प्राणाभिमाने सति व्याकृततैव प्राणस्य ; तथापि पिण्डपरिच्छिन्नविशेषाभिमाननिरोधः प्राणे भवतीत्यव्याकृत एव प्राणः सुषुप्ते परिच्छिन्नाभिमानवताम् ।
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. அவ்யாகிருதத்திற்கு தேசகால விசேஷம் கிடையாததால் என்பதாகும். ஆனாலும் பிராணனிடத்தில் அபிமானம் இருக்கும் பொழுது அதற்கு வ்யாக்ருததா இருப்பினும் சுஷுப்தி அவஸ்தையில் பிராணனிடத்தில் பிண்டபரிச்சின்ன விசேஷத்தின் அபிமானம் இல்லாததால் பரிச்சின்ன தேஹ அபிமானிகளுக்கும் அந்த சமயத்தில் அவ்யாக்ருதமேயாக இருக்கும்.
यथा प्राणलये परिच्छिन्नाभिमानिनां प्राणोऽव्याकृतः, तथा प्राणाभिमानिनोऽप्यविशेषापत्तावव्याकृतता समाना, प्रसवबीजात्मकत्वं च । तदध्यक्षश्चैकोऽव्याकृतावस्थः । परिच्छिन्नाभिमानिनामध्यक्षाणां च तेनैकत्वमिति पूर्वोक्तं विशेषणमेकीभूतः प्रज्ञानघन इत्याद्युपपन्नम् । तस्मिन्नेतस्मिन्नुक्तहेतुसत्त्वाच्च ।
(ச.பா) எவ்வாறு பிராணன் லயம் ஆனவுடன் பரிச்சின்ன தேஹ அபிமானிகளின் பிராணன் அவ்யாகிருத ரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே பிராண அபிமானிகளுக்கும் பிராணனின் அவிசேஷத்தை அடைந்து அதற்கு அவ்யாக்ருததாவாயும் அவ்வாறே பிரசவ பீஜரூபமாயும் ஆகிறது. ஆகையால் இந்த இரு அவஸ்தைகளின் சாக்ஷியும் அவ்யாகிருத அவஸ்தையில் இருப்பது ஒன்றேயாகும். பரிச்சின்ன தேஹத்தின் அபிமானியும் அதன் சாக்ஷியும் ஒன்றேயாகும். ஆகையால் முன்பு கூறப்பட்ட एकीभूतः (ஏகீபூத) प्रज्ञानघनः (பிரக்ஞானகன) விசேஷணங்கள் பொருத்தமானதேயாகும். அதில் முன்பு கூறப்பட்ட காரணம் இருப்பதாலும் ஆகும்.
कथं प्राणशब्दत्वमव्याकृतस्य ।
(ச.பா) (சங்கை) - ஆனால் அவ்யாக்ருதத்திற்கு பிராண சப்தவாச்சியம் எவ்வாறு உண்டாயிற்று?
(ச.பா) (சமாதானம்) - ஹே சௌம்ய! “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சௌம்ய மன) மனமானது பிராணனின் அதீனமாய் இருக்கிறது என்ற சுருதி வாக்கியத்தின்படி.
(ச.பா) (சங்கை) - ஆனால் இங்கு “सदेव सोम्य” (சதேவசௌம்ய) = ஹே சௌம்ய சத்தே என்ற சுருதியை அனுசரித்து இந்த சமயத்தில் (இடத்தில்) சத்பிரஹ்மம் பிராண சப்த வாச்சியம்.
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏனெனில் சத்பிரஹ்மத்தின் பீஜாத்மகம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு “प्राण” (பிராண) சப்தவாச்சியம் சத்பிரஹ்மமாகும். இவ்வாறு இருந்தாலும் ஜீவர்களின் உத்பத்திக்கு பீஜாத்மகத்துவத்தை தியாகம் செய்யாமலேயே அந்த சத்பிரஹ்மத்தில் பிராண சப்தத்துவமும், சத்சப்தத்தின் வாச்சியமும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சத்சப்தத்தால் நிர்பீஜ ஆத்மாவை சொல்லும் பொழுது “नेति नेति” (நேதி, நேதி- இது இல்லை, இது இல்லை) “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “अन्यदेव तद्विदितादथो अविदितात्” (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாத்) = அது அறிந்ததைக்காட்டிலும் வேறு அறியாததைக்காட்டிலும் வேறு என்று சுருதிகளாலும், “न सत्तन्नासदुच्यते” (ந சத்தந்நாசதுச்யதே) = அது சத் என்றும் சொல்ல முடியாது, அசத் என்று சொல்ல முடியாது என்ற ஸ்மிருதியினாலும் அறிகிறோம்.
निर्बीजतयैव चेत्सति प्रलीनानां सम्पन्नानां सुषुप्तिप्रलययोः पुनरुत्थानानुपपत्तिः स्यात् ; मुक्तानां च पुनरुत्पत्तिप्रसङ्गः, बीजाभावाविशेषात् , ज्ञानदाह्यबीजाभावे च ज्ञानानर्थक्यप्रसङ्गः ; तस्मात्सबीजत्वाभ्युपगमेनैव सतः प्राणत्वव्यपदेशः, सर्वश्रुतिषु च कारणत्वव्यपदेशः ।
(ச.பா) இங்கு சத் அதாவது பிரஹ்மத்தை நிர்பீஜரூபமாய் காண்பிப்பதற்கு இஷ்டமாய் இருந்தாலும் சுஷுப்தி, பிரளய (மரண) அவஸ்தைகளில் பிரஹ்மத்தில் (சத்தில்) லயமான புருஷர்கள் திரும்பவும் உத்பன்னமாவது சம்பவிக்காது. அவ்வாறே முக்தபுருஷர்களும் மறுபடியும் உத்பத்தி உடையவர்களாவார்கள் என்று ஏற்பட்டுவிடும். ஏனெனில் பீஜத்தின் அபாவம் இரண்டிற்கும் சமானமாவதால், ஞானத்தினால் தஹிக்கப்பட்ட பீஜம் அபாவமாவதால் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் சத்பிரஹ்மத்திற்கு பீஜம் உடையதாக எடுத்தக்கொண்டு அதன் பிராண ரூபமாய் எல்லா சுருதிகளிலும் காரணரூமாய் காட்டப்பட்டுள்ளது.
(ச.பா) ஆகையால் “अक्षरात्परतः परः” (அக்ஷராத்பரத பர = அது பர அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்),“सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யன்தரோ ஹ்யஜ = அது பாஹ்யம் (காரியம்) அப்யந்தரம் (காரண)மாய் (அவற்றிற்கு சாக்ஷியாய்) இருந்தும் ஜன்மம் அற்றது, “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “नेति नेति” (நேதி நேதி = இது அல்ல, இது அல்ல) என்பது முதலிய சுருதிகளால் சுத்த பிரஹ்மத்தின் நிர்தேசம், பீஜத்துவத்தை நிராகரணம் செய்வதின் வாயிலாய் செய்யப்பட்டது. அந்த பிராக்ஞ சப்தவாச்சியம், ஜீவனுடைய தேஹ முதலிய சம்பந்தம் அவ்வாறே ஜாக்ரத் முதலிய அவஸ்தைகள் அற்ற வாச்சியத்தின் அந்த பரமார்த்த பீஜ மற்ற அவஸ்தையை துரீய ரூபமாய் தனியாக வர்ணனை செய்யப்போகிறார். பீஜா அவஸ்தை ஜாக்ரத் ஆகும் பொழுது “நான் ஒன்றும் அறியவில்லை” என்ற பிரதீதியும் (ஞானமும்) சரீரத்தில் அனுபவிக்கப்படுகிறது. ஆகையால் அது தேஹத்தில் மூன்று விதமாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.
विश्वो हि स्थूलभुङ् नित्यं तैजसः प्रविविक्तभुक् ।
आनन्दभुक्तथा प्राज्ञस्त्रिधा भोगं निबोधत ॥ ३ ॥
कारिका अन्वयः - विश्वो हि नित्यं स्थूलभुक् तैजसः नित्यं प्रविविक्तभुक् तथा प्राज्ञः आनन्दभुक् भोगं त्रिधा निबोधत ।
காரிகா அர்த்தம் - விச்வன் எப்பொழுதும் ஸ்தூல பதார்த்தங்களை புஜிப்பவன். தைஜசன் சூக்ஷ்ம பதார்த்தங்களின் போக்தா. அவ்வாறே பிராக்ஞன் ஆனந்தத்தை புஜிப்பவன். இவ்வாறு மூன்று விதமாக போகம் அறியப்படுகிறது.
स्थूलं तर्पयते विश्वं प्रविविक्तं तु तैजसम् ।
आनन्दश्च तथा प्राज्ञं त्रिधा तृप्तिं निबोधत ॥ ४ ॥
कारिका अन्वयः - स्थूलं विश्वं तर्पयते प्रविविक्तं तु तैजसं तथा आनन्दश्च प्राज्ञं त्रिधा तृप्तिं निबोधत ।
காரிகா அர்த்தம் - ஸ்தூல பதார்த்தங்கள் விச்வனைத் திருப்தி செய்கிறது. சூக்ஷ்மம் தைஜசனை திருப்தி செய்கிறது. அவ்வாறே ஆனந்தம் பிராக்ஞனை திருப்தி செய்கிறது இவ்வாறு திருப்தி மூன்று விதமாகும்.
उक्तार्थौ श्लोकौ ॥ ३ ॥ ॥ ४ ॥
இவ்விரண்டு சுலோகங்களின் அர்த்தம் சொல்லப்பட்டுவிட்டது.
त्रिषु धामसु यद्भोज्यं भोक्ता यश्च प्रकीर्तितः ।
वेदैतदुभयं यस्तु स भुञ्जानो न लिप्यते ॥ ५ ॥
कारिका अन्वयः - त्रिषु धामसु यत् भोज्यं भोक्ता यः च प्रकीर्तितः यस्तु एतत् उभयं वेद भुञ्जानः सः न लिप्यते ।
காரிகா அர்த்தம் - இந்த மூன்று ஸ்தானங்களில் (ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி இவைகளில்) எந்த போஜ்ய போக்தா என்று இவ்இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போகங்களை புஜித்தாலும் அவனை அது ஒட்டாது.
त्रिषु धामसु जाग्रदादिषु स्थूलप्रविविक्तानन्दाख्यं यद्भोज्यमेकं त्रिधाभूतम् ; यश्च विश्वतैजसप्राज्ञाख्यो भोक्तैकः ‘सोऽहम्’ इत्येकत्वेन प्रतिसन्धानात् द्रष्टृत्वाविशेषाच्च प्रकीर्तितः ; यो वेद एतदुभयं भोज्यभोक्तृतया अनेकधा भिन्नम् , सः भुञ्जानः न लिप्यते, भोज्यस्य सर्वस्यैकभोक्तृभोज्यत्वात् । न हि यस्य यो विषयः, स तेन हीयते वर्धते वा । न ह्यग्निः स्वविषयं दग्ध्वा काष्ठादि तद्वत् ॥ ५ ॥
(ச.பா) ஜாக்ரத் முதலிய மூன்று அவஸ்தைகளில் எந்த ஸ்தூல, சூக்ஷ்ம, ஆனந்தம் எனப்படும் மூன்று பேதங்களையும் அனுபவிப்பவன் (போஜ்யம்) ஒருவனே, “அவன்நான்” என்று இவ்வாறு ஒரே ரூபமாய் அனுசந்தானம் செய்பவனிடம் திருஷ்டாத்தன்மையில் ஒருவிசேஷமும் இல்லாததால் விச்வன், தைஜசன், பிராக்ஞன் எனப்படுவது எதுவோ அது ஒரே போக்தா எனப்படுகிறான். இவ்வாறு போஜ்ய, போக்தா ரூபமாய் அநேக விதபின்னமான இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போக்தாவாய் இருந்தாலும் அவனை ஒட்டாது. ஏனெனில் எல்லா போஜ்யங்களும் ஒரே போக்தாவின் போகமாகும். எவ்வாறு அக்னி தன்னுடைய விஷயமான கட்டைகளை எரிப்பதால் நஷ்டமாவதோ, வளர்வதோ இல்லை. அவ்வாறு எதற்கு விஷயமாகிறதோ அந்த விஷயத்தின் காரணமாய் குறைவதோ வளர்வதோ இல்லை.
प्रभवः सर्वभावानां सतामिति विनिश्चयः ।
सर्वं जनयति प्राणश्चेतोंशून्पुरुषः पृथक् ॥ ६ ॥
कारिका अन्वयः - सतां सर्वभावानां प्रभवः विनिश्चयः प्राणः पुरुषः चेतोंशून् सर्वं पृथक् जनयति ।
காரிகா அர்த்தம் - நிச்சயமான விஷயம் என்னவெனில் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அவை எல்லாம் உத்பத்தியானதே. பீஜாத்மகமான பிராணனே எல்லாவற்றையும் உத்பத்தி செய்கிறான். மேலும் சேதனாத்மகமான புருஷன் சேதனத்தின் ஆபாச பூதமான ஜீவர்களை தனித்தனியாக உண்டாக்குகிறான்.
(ச.பா) சத் அதாவது தன்னுடைய அவித்யையினால் உண்டான நாம ரூப ஆத்மகமான மாயையின் ஸ்வரூபத்தால் உண்டான விச்வன், தைஜசன், பிராக்ஞன் ஆகிய பேதங்களால் எல்லா பதார்த்தங்களும் உத்பத்தியாகிறது. இனி கூறப்போகிறார் - “वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वाऽपि जायते” इति (வந்தியா புத்ரோ ந தத்வேன மாயயா வாऽபிஜாயதே = வந்தியா புத்திரன் உன்மையாகவே, மாயையாலோ உண்டாவது இல்லை. அசத் பதார்த்தங்களுக்கு உத்பத்தி இருந்தால் வியவஹாரமற்ற பிரஹ்மத்தை கிரஹிப்பதற்கு (அறிவதற்கு) ஒரு வழியும் இல்லாததால் அசத் என்று ஆகிவிடும். அவித்தையினால் உண்டான மாயாமயமான பீஜத்திலிருந்து உத்பன்னமான ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளும், ரஜ்ஜு முதலிய ரூபத்தால் சத்தாகத் தோன்றுகிறது. ஒரு புருஷனும் நிராஸ்ரயமான ரஜ்ஜு சர்ப்பத்தையோ மிருக திருஷ்ணா முதலியவைகளை ஒருபொழுதும் பார்க்க முடியாது. எவ்வாறு சர்ப்பத்தின் உற்பத்திக்கு முன் அது ரஜ்ஜுவில் ரஜ்ஜு ரூபமாய் சத்தாகவே இருந்தது. அவ்வாறே எல்லா பதார்த்தங்களும் தன்னுடைய உற்பத்திக்கு முன் பிராணாத்மகமான பீஜரூப சத்தாகவே இருந்தது. ஆகையால் சுருதி கூறுகிறது. “ब्रह्मैवेदम्” (பிரஹ்மைவஇதம் - இது பிரஹ்மமே) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவஇதமக்ர ஆசீத் = முன் இது ஆத்மாவாகவே இருந்தது என்று.
सर्वं जनयति प्राणः चेतोंशून् अंशव इव रवेश्चिदात्मकस्य पुरुषस्य चेतोरूपा जलार्कसमाः प्राज्ञतैजसविश्वभेदेन देवमनुष्यतिर्यगादिदेहभेदेषु विभाव्यमानाश्चेतोंशवो ये, तान् पुरुषः पृथक् सृजति विषयभावविलक्षणानग्निविस्फुलिङ्गवत्सलक्षणान् जलार्कवच्च जीवलक्षणांस्त्वितरान्सर्वभावान् प्राणो बीजात्मा जनयति,
‘यथोर्णनाभिः. . . यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गाः’ (बृ. उ. २ । १ । २०) इत्यादिश्रुतेः ॥ ६ ॥
(ச.பா) எல்லா பதார்த்தங்களையும் பீஜரூபமான பிராணன் உற்பத்தியாகச் செய்கிறது. அவ்வாறேஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியனைப்போல் மனுஷ்ய, திரியக் முதலிய விதவிதமான சரீரங்களில் பிராக்ஞன். தைஜசன், விச்வன் ஆகிய ரூபங்களாய் விளங்குகின்ற சிதாத்மக புருஷனின் கிரணரூப சிதாபாசம் ஆகும். அந்த விஷய பாவத்தால் விலக்ஷணமாயும் அவ்வாறு அக்னி பொறிபோலும், ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன்போலும் சஜாதீய ஜீவர்களை புருஷன் தனியாகவே உற்பத்தி செய்கிறார். இதைத்தவிர மற்ற எல்லா பதார்த்தங்களையும் பீஜாத்மகமான பிராணன் உத்பத்தி செய்கிறது. “यथोर्णनाभिः” (யதோர்ணனாபிः எவ்வாறு சிலந்தி) “यथाग्नेःक्षुद्राविस्फुलिङ्गाः” (யதாக்நே: க்ஷுத்ரவிஸ்புலிங்கா = எவ்வாறு அக்னியிலிருந்து பொறிகள் வெளிக்கிளம்புகிறதோ) முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
विभूतिं प्रसवं त्वन्ये मन्यन्ते सृष्टिचिन्तकाः ।
स्वप्नमायासरूपेति सृष्टिरन्यैर्विकल्पिता ॥ ७ ॥
कारिका अन्वयः - अन्ये सृष्टिचिन्तकाः तु विभूतिं प्रसवं मन्यन्ते अन्यै सृष्टिः स्वप्नमायासरूपा इति विकल्पिता ॥
காரிகா அர்த்தம் - சிருஷ்டி விஷயத்தில் விசாரம்செய்யும் மற்றவர்கள் பகவானுடைய விபூதியே ஜகத்தின் சிருஷ்ட்டி என்று எண்ணுகிறார்கள். அவ்வாறே மற்றவர்கள் இந்த சிருஷ்டியை ஸ்வப்னம் மற்றும் மாயையையினால் கல்பிக்கப்பட்டது என்று நினைக்கிறார்கள்
विभूतिर्विस्तार ईश्वरस्य सृष्टिरिति सृष्टिचिन्तका मन्यन्ते ; न तु परमार्थचिन्तकानां सृष्टावादर इत्यर्थः,
‘इन्द्रो मायाभिः पुरुरूप ईयते’ (बृ. उ. २ । ५ । १९) इति श्रुतेः । न हि मायाविनं सूत्रमाकाशे निःक्षिप्य तेन सायुधमारुह्य चक्षुर्गोचरतामतीत्य युद्धेन खण्डशश्छिन्नं पतितं पुनरुत्थितं च पश्यतां तत्कृतमायादिसतत्त्वचिन्तायामादरो भवति । तथैवायं मायाविनः सूत्रप्रसारणसमः सुषुप्तस्वप्नादिविकासः ; तदारूढमायाविसमश्च तत्स्थप्राज्ञतैजसादिः ; सूत्रतदारूढाभ्यामन्यः परमार्थमायावी । स एव भूमिष्ठो मायाच्छन्नः अदृश्यमान एव स्थितो यथा, तथा तुरीयाख्यं परमार्थतत्त्वम् । अतस्तच्चिन्तायामेवादरो मुमुक्षूणामार्याणाम् , न निष्प्रयोजनायां सृष्टावादर इत्यतः सृष्टिचिन्तकानामेवैते विकल्पा इत्याह — स्वप्नमायासरूपेति । स्वप्नसरूपा मायासरूपा चेति ॥ ७ ॥
(ச.பா) சிருஷ்டி ஈஸ்வரனின் விபூதி என்று சிருஷ்டியைக்குறித்து விசாரம் செய்பவர்கள் கருதுகிறார்கள், பரமார்த்த சிந்தனை உடையவர்கள் சிருஷ்ட்டி விஷயத்தில் ஆதரிப்பதில்லை. “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்தரோமாயாபி புரு ரூப ஈ.யதே = இந்திர (பரமாத்மா) மாயையினால் அநேக ரூபமாகிறது) என்று சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு மாயாவியானவன் ஆகாயத்தில் கயிற்றை எறிந்து அதில் ஆயுதங்களுடன் ஏறி கண்ணுக்கு எட்டாத வரையில் சென்று யுத்தத்தின் மூலமாய் கண்டதுண்டமாய் வெட்டி விழுந்து மறுபடியும் எழுந்துள்ளதைப் பார்க்கும் புருஷர்கள் அவனால் உண்டாக்கிய மாயை முதலிய ஸ்வரூபத்தின் சிந்தனையை ஆதரிப்பது இல்லை. அந்த மாயாவியின் கயிற்றை வீசுதல் சமானமே சுஷுப்தி ஸ்வப்னம் முதலியவைகளின் விகாசமாகும். அவ்வாறே அந்த கயிற்றில் செல்லும் மாயாவிக்கு சமானமாய் அந்த சுஷப்தி முதலிய அவஸ்தைகளில் இருக்கும் பிராக்ஞன். அவ்வாறே தைஜசன் முதலியவைகளும் ஆகும். ஆனால் உண்மையான மாயாவி கயிறு அதன்மேல் இருக்கும் மாயாவியைக் காட்டிலும் வேறு. மேலும் அது எவ்வாறு மாயையால் மறைக்கப்பட்டதால் காணப்படாவிட்டாலும் பூமியில் இருக்கிறான். அவ்வாறே துரீயம் எனப்படும் பரமார்த்த தத்துவமும் ஆகும், ஆகையால மோக்ஷத்தில் இச்சையுள்ள ஆரிய புருஷர்களுக்கு அதனை சிந்திப்பதில் ஆதரவு உடையவர்களாய் இருக்கின்றனர். பிரயோஜனமற்ற சிருஷ்டியில் அவர்களுக்கு ஆதரவு உண்டாகாது. ஆகையால் எல்லா விகல்பமான சிருஷ்டியும் சிந்திப்பவர்களுக்கே ஆகும். ஆகையால் கூறப்படுகிறது - “स्वप्नमायासरूपा इति” (ஸ்வப்னம் மாயா சொரூபம் என்று) அதாவது ஸ்வப்னரூபம். மாயாரூபம் என்றும்.
इच्छामात्रं प्रभोः सृष्टिरिति सृष्टौ विनिश्चिताः ।
कालात्प्रसूतिं भूतानां मन्यन्ते कालचिन्तकाः ॥ ८ ॥
कारिका अन्वयः - सृष्टौ प्रभोः इच्छामात्रं सृष्टिः विनिश्चिताः कालचिन्तकाः कालात् भूतानां प्रसूतिं मन्यन्ते ॥
காரிகா அர்த்தம் - சிலர் பிரபுவின் இச்சையே சிருஷ்ட்டி என்று நிச்சயம் செய்கிறார்கள். அவ்வாறே காலத்தைக் குறித்து விசாரம் செய்பவர்கள் காலத்தினாலேயே ஜீவர்களின் உத்பத்தி என்று கருதுகிறார்கள்.
इच्छामात्रं प्रभोः सत्यसङ्कल्पत्वात् सृष्टिः घटादीनां सङ्कल्पनामात्रम् , न सङ्कल्पनातिरिक्तम् । कालादेव सृष्टिरिति केचित् ॥ ८ ॥
(ச.பா) - பகவான் சத்திய சங்கல்பன், ஆகையால் கடம் முதலியவைகளின் சிருஷ்டி பிரபுவின் சங்கல்ப மாத்திரமேயாகும். சங்கல்பத்தைக் காட்டிலும் வேறானது அல்ல, அவ்வாறே சிலர் சிருஷ்டி காலத்தினால் உண்டாகிறது என்று கூறுகிறார்கள்.
भोगार्थं सृष्टिरित्यन्ये क्रीडार्थमिति चापरे ।
देवस्यैष स्वभावोऽयमाप्तकामस्य का स्पृहा ॥ ९ ॥
कारिका अन्वयः - अन्ये भोगार्थं सृष्टिरिति अपरे क्रीडार्थ-मिति च देवस्य एषः स्वभावः अयं आप्तकामस्य का स्पृहा ॥
காரிகா அர்த்தம் - சிலர் போகத்தின் பொருட்டு சிருஷ்டி என்கிறார்கள். சிலர் விளையாட்டிற்காக என்கிறார்கள். பகவான் ஸ்வபாவமாகவே பூர்ண ஆப்தகாமராய் இருப்பவருக்கு இச்சை எவ்வாறு உண்டாகும்.
भोगार्थम् क्रीडार्थमिति च अन्ये सृष्टिं मन्यन्ते । अनयोः पक्षयोर्दूषणं देवस्यैष स्वभावोऽयमिति देवस्य स्वभावपक्षमाश्रित्य, सर्वेषां वा पक्षाणाम् — आप्तकामस्य का स्पृहेति । न हि रज्ज्वादीनामविद्यास्वभावव्यतिरेकेण सर्पाद्याभासत्वे कारणं शक्यं वक्तुम् ॥ ९ ॥
(ச.பா) சிலர் போகார்த்தம் என்றும், சிலர் விளையாட்டிற்காக என்று சிருஷ்டியை கருதுகிறார்கள். “देवस्यैष स्वभावोऽयम्” (தேவஸ்யைஷ ஸ்வபாவோऽயம் = தேவனுடைய ஸ்வபாவமே இது) இந்த வாக்கியத்தால் தேவனின் ஸ்வபாவபக்ஷத்தை ஆஸ்ரயித்து இந்த இரண்டு பக்ஷங்களும் தோஷம் உடையது என்றாகிறது. அல்லது “आप्तकामस्य का स्पृहा” (ஆப்தகாமஸ்ய கா ஸ்புருஹா = ஆப்தகாமனுக்கு எவ்வாறு இச்சையுண்டாகும்). இந்த நான்காவது பாதம் எல்லா பக்ஷங்களையும் தோஷம் உடையதாகச் செய்கிறது. ஏனெனில் அவித்யா ரூபம் தன்னுடைய ஸ்வபாவமில்லாமல் ரஜ்ஜு முதலியவைகளை சர்ப்பம் முதலியவைகளின் அபிவியக்திக்கு காரணத்துவத்தை கூறமுடியாது.
चतुर्थः पादः क्रमप्राप्तो वक्तव्य इत्याह — नान्तःप्रज्ञमित्यादिना । सर्वशब्दप्रवृत्तिनिमित्तशून्यत्वात्तस्य शब्दानभिधेयत्वमिति विशेषप्रतिषेधेनैव तुरीयं निर्दिदिक्षति ।
(ச.பா) (அ.கை) இப்பொழுது கிரமமாய் அடைந்த நான்காவது பாதத்தைக் கூறவேண்டும். ஆகையால் “नान्तःप्रज्ञम्” முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது. இந்த நான்காவது பாதம் எல்லா சப்த பிரவிர்த்திக்கும் நிமித்தமற்றது. ஆகையால் அதை சப்தங்களால் வர்ணிக்க முடியாது. ஆகையால் சுருதியானது விசேஷ பாவத்தை (அதாவது “अन्तःप्रज्ञम्” முதலிய விசேஷ பாவத்தை நிஷேதம் செய்து அந்த துரீயபாவத்தை நிர்தேசம் செய்வதற்குப் பிரவிர்த்திக்கிறது.
शून्यमेव तर्हि तत् ।
(ச.பா) (சங்கை) - ஆகையால் அது சூன்யம் அல்லவா?
न, मिथ्याविकल्पस्य निर्निमित्तत्वानुपपत्तेः ; न हि रजतसर्पपुरुषमृगतृष्णिकादिविकल्पाः शुक्तिकारज्जुस्थाणूषरादिव्यतिरेकेण अवस्त्वास्पदाः शक्याः कल्पयितुम् ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. மித்யா விகல்பத்தைத் தவிர வேறு நிமித்தத்தால் சம்பவிக்காது. வெள்ளி, சர்ப்பம், புருஷன், கானல்நீர் முதலிய விகல்பங்கள் சிப்பி, கயிறு, ஸ்தாணு, ஊஷரபூமி முதலியவைகளின் ஆஸ்ரயம் இல்லாமல் வெள்ளி முதலியவற்றை கல்பிக்க முடியாது.
एवं तर्हि प्राणादिसर्वविकल्पास्पदत्वात्तुरीयस्य शब्दवाच्यत्वमिति न प्रतिषेधैः प्रत्याय्यत्वमुदकाधारादेरिव घटादेः ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருக்கும் பொழுது பிராணன் முதலிய எல்லா விகல்பங்களுக்கும் ஆஸ்ரியமாய் இருப்பதால் துரீய சப்தத்தின் வாச்சியம் சித்திக்கிறது. ஜலத்திற்கு ஆதாரமான கடம் முதலியவைகளைப் போல் (அந்த ப்ரக்ஞாதிகளை) நீக்கி அதன் ப்ரதீதி (தோற்றம் உண்டாவதில்லை.)
न, प्राणादिविकल्पस्यावस्तुत्वाच्छुक्तिकादिष्विव रजतादेः ; न हि सदसतोः सम्बन्धः शब्दप्रवृत्तिनिमित्तभाक् , अवस्तुत्वात् ; नापि प्रमाणान्तरविषयत्वं स्वरूपेण गवादिवत् , आत्मनो निरुपाधिकत्वात् ; गवादिवन्नापि जातिमत्त्वम् , अद्वितीयत्वेन सामान्यविशेषाभावात् ; नापि क्रियावत्त्वं पाचकादिवत् , अविक्रियत्वात् ; नापि गुणवत्त्वं नीलादिवत् , निर्गुणत्वात् ; अतो नाभिधानेन निर्देशमर्हति ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல ஏனெனில் சுக்தி முதலியவைகளில் தோன்றும் வெள்ளி முதலியவைகளைப் போல் பிராணன் முதலிய விகல்பங்கள் அசத் ரூபமாகும். அவ்வாறு சத், அசத்தின் சம்பந்தம் அசத்ரூபமாய் ஆவதால் சப்தத்தின் பிரவிர்த்திக்கு ஹேது ஆகமுடியாது. மேலும் பசு முதலியவைகளைப் போல் அந்த ஸ்வஸ்வரூபத்துடன் வேறு ஒரு அன்ய பிரமாணத்திற்கு விஷயமாகாது. ஏனெனில் ஆத்மா உபாதி அற்றது. இவ்வாறு அத்விதீய ரூபமாய் இருப்பதால் சாமான்ய அல்லது விசேஷபாவம் ஆகாததால் அதில் பசு முதலியவைகளைப் போல் அதற்கு ஜாதித்தன்மை இல்லை. மேலும் சமையல் செய்வது முதலியவை போல் கிரியாவத்துவம் கிடையாது. அவ்வாறே நீலம் முதலிய குணத்துவம் போல் குணத்துவமும் கிடையாது ஆகையால் ஒரு நாமத்தாலும் குறிப்பிட முடியாது.
शशविषाणादिसमत्वान्निरर्थकत्वं तर्हि ।
(ச.பா) (பூர்வ) அவ்வாறானால் முயல்கொம்பு போல் அது அர்த்தமற்றதாகிவிடுமே.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் சுத்தி ஞானம் ஏற்பட்டவுடன் எவ்வாறு (அந்த ஆரோபித) வெள்ளியில் உள்ள ஆசை நீங்குகிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அநாத்மாவைக் குறித்த ஆசை நீங்குவதற்குக் காரணமாகிறது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறிவதால் அவித்தியா அவ்வாறே திருஷ்ணை (ஆசை) முதலிய தோஷங்கள் சம்பவிக்காது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறியாததற்கு காரணம் ஒன்றும் இல்லை ஏனெனில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அது நீயாய் இருக்கிறாய்), “अयमात्मा ब्रह्म” (அயமாத்மா பிரஹ்ம = இந்த ஆத்மா பிரஹ்ம), “तत्सत्यं स आत्मा” (தத்சத்தியம் ச ஆத்மா = அது சத்தியம் அது ஆத்மா), “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (யத்சாக்ஷாத்அபரோக்ஷாத் பிரஹ்ம = எது சாக்ஷாத் அபரோக்ஷ பிரஹ்மம்) “स बाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யப்யந்தரோஹ்யஜः = அது வெளியிலும், உள்ளும் இருப்பது பிறப்பற்றது, “आत्मैवेदं ँँ्सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம்) = ஆத்மாவே இவை எல்லாம்).
सोऽयमात्मा परमार्थापरमार्थरूपश्चतुष्पादित्युक्तः । तस्यापरमार्थरूपमविद्याकृतं रज्जुसर्पादिसममुक्तं पादत्रयलक्षणं बीजाङ्कुरस्थानीयम् । अथेदानीमबीजात्मकं परमार्थस्वरूपं रज्जुस्थानीयं सर्पादिस्थानीयोक्तस्थानत्रयनिराकरणेनाह — नान्तःप्रज्ञमित्यादि ।
(ச.பா) அந்த இந்த ஆத்மா பரமார்த்த ரூபமாயும் அபரமார்த்த ரூபமாயும் நான்கு பாதம் உடையது ஆகும். பீஜாங்குரம் போன்று மூன்று பாத ரூபமான அபரமார்த்த ரூப ரஜ்ஜு சர்ப்பம் போன்ற அவித்தையினால் உண்டானது. சர்ப்பம் முதலியவைப் போன்று கூறப்பட்ட மூன்று பாதங்களை நிராகரணம் செய்து “नान्तःप्रज्ञम्” முதலிய ரூபத்தால் அதன் ரஜ்ஜுவைப் போன்ற பீஜமற்ற பரமார்த்த ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது.
इति ।
नान्तःप्रज्ञं नबहिःप्रज्ञं नोभयतःप्रज्ञं नप्रज्ञानघनं नप्रज्ञं नाप्रज्ञम् । अदृश्यमव्यवहार्यमग्राह्यमलक्षणमचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥ ७ ॥
(मन्त्र अन्वयः) - अन्तः प्रज्ञं न बहिः प्रज्ञं न उभयतःप्रज्ञं न प्रज्ञान घनं न प्रज्ञं न अप्रज्ञं न अदृष्टं अव्यवहार्यं अग्राह्यं अलक्षणं अचिन्त्यं अव्यपदेश्यं एकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवं अद्वैतं सः चतुर्थं मन्यन्ते सःआत्मा विज्ञेयः।
(மந்திர அர்த்தம்) - (விவேக ஜனங்கள்) துரீயத்தை இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு எனில் அந்தப்பிரக்ஞனல்ல, பஹிர்பிரக்ஞன் அல்ல, அந்த இரண்டு பிரக்ஞனுமல்ல. பிரக்ஞானகனன் இல்லை. பிரக்ஞன் இல்லை, அப்ரக்ஞன் அல்ல, ஆனால் அதிருஷ்ட்டமாயும். வியவஹாரியம் அற்றதாயும், அக்கிராஹ்யமாயும், லக்ஷணமற்றதாயும் அசிந்தயமாயும், இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாததாயும், ஏகாத்ம பிரத்தியசாரமாயும், பிரபஞ்சம் அற்றதாயும், சாந்தமாயும், சிவமாயும் அத்வைத ரூபமாயும் நான்காவது (பாதத்தைப்போல்) கருதப்படுகிறது. அது ஆத்மா. அது சாக்ஷாத் அறிவதற்கு யோக்கியமானது.
नन्वात्मनश्चतुष्पात्त्वं प्रतिज्ञाय पादत्रयकथनेनैव चतुर्थस्यान्तःप्रज्ञादिभ्योऽन्यत्वे सिद्धे ‘नान्तःप्रज्ञम्’ इत्यादिप्रतिषेधोऽनर्थकः ।
(ச.பா) ஆத்மா நான்கு பாதங்கள் உடையது என்று கூறி அதில் மூன்று பாதங்களை கூறியதாலேயே நான்காவது பாதத்தின் அந்தப் பிரக்ஞம் முதலிய விசேஷணங்களைக் காட்டிலும் வேறானது என்று சித்திக்கிறது. ஆகையால் “नान्तःप्रज्ञं” என்பது முதலியவை கூறுவது வியர்த்தமாகுமே எனில்-
न, सर्पादिविकल्पप्रतिषेधेनैव रज्जुस्वरूपप्रतिपत्तिवत्त्र्यवस्थस्यैवात्मनस्तुरीयत्वेन प्रतिपिपादयिषितत्वात् , ‘तत्त्वमसि’ इतिवत् । यदि हि त्र्यवस्थात्मविलक्षणं तुरीयमन्यत् , तत्प्रतिपत्तिद्वाराभावात् शास्त्रोपदेशानर्थक्यं शून्यतापत्तिर्वा । रज्जुरिव सर्पादिभिर्विकल्प्यमाना स्थानत्रयेऽप्यात्मैक एव अन्तःप्रज्ञादित्वेन विकल्प्यते यदा, तदा अन्तःप्रज्ञादित्वप्रतिषेधविज्ञानप्रमाणसमकालमेव आत्मन्यनर्थप्रपञ्चनिवृत्तिलक्षणं फलं परिसमाप्तमिति तुरीयाधिगमे प्रमाणान्तरं साधनान्तरं वा न मृग्यम् ; रज्जुसर्पविवेकसमकाल इव रज्ज्वां सर्पनिवृत्तिफले सति रज्ज्वधिगमस्य ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் எவ்வாறு சர்ப்பம் முதலிய விகல்பங்களை நீக்கியதால் ரஜ்ஜுவின் ஞானம் ஏற்படுகிறது. அது போல் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் வேறாக துரீயா அவஸ்தையை “तत्त्वमसि” (தத்துவமஸி) முதலிய வாக்கியங்கள் எடுத்துக்காட்டுகிறது. துரீய ஆத்மா மூன்று அவஸ்தைகளுடன் சம்பந்தப்பட்ட ஆத்மாவைக்காட்டிலும் எல்லாவகையிலும் பின்னமாய் (வேறாய்) இருந்தால் அதை அடைவதற்கான ஒரு உபாயமும் இல்லாததால் சாஸ்த்திர உபதேசம் வீணாகிவிடும், அவ்வாறே சூன்யவாதமாகிவிடும். சர்ப்பம், மாலை, ஜலதாரை முதலிய ரூபமாய் விகல்பமடைந்த ரஜ்ஜுவைப் போல் மூன்று ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) ஒரே ஆத்மாவே அந்த:பிரக்ஞம் முதலிய ரூபமாய் விகல்பமடைந்திருக்கிறது. அப்பொழுது அந்த:பிரக்ஞம் முதலியவைகளை நீக்கும் விக்ஞான ரூப பிரமாணத்தின் உத்பத்தி காலத்திலேயே ஆத்மாவிடத்தில் அநர்த்த பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ரூப பலன் அடையப்படுகிறது. ஆகையால் துரீயத்தின் சாக்ஷாத்காரம் செய்வதற்கு இதைத் தவிர வேறு பிரமாணமோ வேறு சாதனத்தை மேற்கொள்ளவோ வேண்டியதில்லை. எவ்வாறு ரஜ்ஜு சர்ப்பத்தின் விவேகம் ஏற்பட்ட சமகாலத்திலேயே ரஜ்ஜுவில் சர்ப்பநிவிர்த்திரூபபலப் பிராப்த்தி ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவின் ஞானம் உண்டாகிறது (அது போல் என்று இங்கு அறிந்து கொள்ளவேண்டும்)
येषां पुनस्तमोपनयनव्यतिरेकेण घटाधिगमे प्रमाणं व्याप्रियते, तेषां छेद्यावयवसम्बन्धवियोगव्यतिरेकेण अन्यतरावयवेऽपि च्छिदिर्व्याप्रियत इत्युक्तं स्यात् ।
(ச.பா) எவர்களுடைய மதத்தில் கட ஞானத்தில் அந்தகார நிவிர்த்தியைத் தவிர ஏதோ ஒரு காரியத்தில் பிரமாணத்தின் பிரவிர்த்தி உண்டாகிறது. அவ்வாறு நினைப்பவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். வெட்டவேண்டிய பதார்த்தத்தில் அவயவங்களின் சம்பந்தத்தை சேதம் செய்வதைக் காட்டிலும் வேறானதான (வெட்டும்) சேதனக் கிரியையின் வஸ்துவில் ஏதோ ஒரு அவயவத்தில் ஏதோ ஒரு வியாபாரம் இருக்கிறது.
यदा पुनर्घटतमसोर्विवेककरणे प्रवृत्तं प्रमाणमनुपादित्सिततमोनिवृत्तिफलावसानं छिदिरिव च्छेद्यावयवसम्बन्धविवेककरणे प्रवृत्ता तदवयवद्वैधीभावफलावसाना, तदा नान्तरीयकं घटविज्ञानं न प्रमाणफलम् ।
(ச.பா) சேதிக்கவேண்டிய அவயவத்தின் சம்பந்தத்தை சேதம் செய்யும் சேதனக் கிரியா எவ்வாறு அந்த அவயவத்தை பிரித்தபின் முடிவு அடைகிறதோ, அவ்வாறு கடம் மேலும் அந்தகாரத்தை பிரிப்பதற்க்கு பிரவிர்த்தித்த பிரமாணம் அநிஷ்ட அந்தகாரத்தின் நிவர்த்தி ரூப பலத்தில் முடிவு அடைதலை அறிந்தபொழுது கட ஞானம் அவசியம் உண்டாகிறது. அது பிரமாணபலன் அல்ல.
न च तद्वदप्यात्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वादिविवेककरणे प्रवृत्तस्य प्रतिषेधविज्ञानप्रमाणस्य अनुपादित्सितान्तःप्रज्ञत्वादिनिवृत्तिव्यतिरेकेण तुरीये व्यापारोपपत्तिः, अन्तःप्रज्ञत्वादि निवृत्तिसमकालमेव प्रमातृत्वादिभेदनिवृत्तेः । तथा च वक्ष्यति —
‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति । ज्ञानस्य द्वैतनिवृत्तिक्षणव्यतिरेकेण क्षणान्तरानवस्थानात् , अवस्थाने वा अनवस्थाप्रसङ्गाद्द्वैतानिवृत्तिः ; तस्मात्प्रतिषेधविज्ञानप्रमाणव्यापारसमकालैव आत्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वाद्यनर्थनिवृत्तिरिति सिद्धम् ।
(ச.பா) அதைப்போல் ஆத்மாவில் ஆரோபம் செய்யப்பட்ட அந்த பிரக்ஞ முதலியவைகளை விவேகம் செய்ய பிரவிர்த்தித்த பிரதிசேதம் (நீக்கும்) விக்ஞானரூப பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளுவதில் இஷ்டமில்லாத அந்த:பிரக்ஞம் முதலியவைகளின் நிவர்த்தியைத் தவிர வேறு வியாபரம் சம்பவிக்காது. ஏனெனில் அந்தः பிரக்ஞத்துவம் முதலிய பேதங்கள் நிவிர்த்தியின் சம காலத்திலேயே பிரமாத்திரு முதலிய பேதங்கள் நிவர்த்தி ஆகிறது. அவ்வாறே காரிகையில் கூறப்பட இருக்கிறது- “ज्ञाते द्वैतं न विद्यते” (ஞாதேத்வைதம் ந வித்யதே) = ஞானம் ஏற்பட்ட உடன் துவைதம் இருக்காது) என்று ஏனெனில் விருத்திக் ஞானமும் துவைதவிருத்தி இருக்கும் க்ஷணத்தைத் தவிர அடுத்த க்ஷணத்தில் இருக்காது. மேலும் அதன் இருப்பு இருக்கும் எனில் அநவஸ்தாதோஷம் ஏற்படும். அதனால் துவைதத்தின் நிவிர்த்தியும் உண்டாகாது. ஆகையால் பிரதிஷேத விக்ஞானரூப பிரமாணத்தின் பிரவிர்த்தியின் சமகாலத்திலேயே ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்ட “அந்தःபிரக்ஞம்” முதலிய அநர்த்தங்கள் நிவிர்த்தி ஆகிறது.
नान्तःप्रज्ञमिति तैजसप्रतिषेधः ; नबहिःप्रज्ञमिति विश्वप्रतिषेधः ; नोभयतःप्रज्ञमिति जागरितस्वप्नयोरन्तरालावस्थाप्रतिषेधः ; नप्रज्ञानघनमिति सुषुप्तावस्थाप्रतिषेधः, बीजभावाविवेकस्वरूपत्वात् ; नप्रज्ञमिति युगपत्सर्वविषयज्ञातृत्वप्रतिषेधः ; नाप्रज्ञमित्यचैतन्यप्रतिषेधः ।
(ச.பா) அந்த: பிரக்ஞம் அல்ல என்று தைஜசனை விலக்குகிறது. பஹிஷ்பிரக்ஞம் அல்ல என்று விச்வத்தை நீக்குகிறது. இரண்டு விதபிரக்ஞம் இல்லை என்று ஜாக்ரத், ஸ்வப்னத்தின் நடுவில் உள்ள அவஸ்தையை நீக்குகிறது. பிரக்ஞானகனம் அல்ல என்று சுஷுப்தி அவஸ்தையை விலக்குகிறது. பீஜபாவமானது அவிவேகரூபம். பிரக்ஞம் இல்லை என்பதால் ஒரே சமயத்தில் எல்லா விஷயங்களின் ஞாத்துருத்துவத்தை நீக்குகிறது. அவ்வாறே பிரக்ஞை இல்லை என்பதால் அசேதனம் நீக்கப்படுவதாகிறது.
कथं पुनरन्तःप्रज्ञत्वादीनामात्मनि गम्यमानानां रज्ज्वादौ सर्पादिवत्प्रतिषेधादसत्त्वं गम्यत इति, उच्यते ; ज्ञस्वरूपाविशेषेऽपि इतरेतरव्यभिचारादसत्यत्वं रज्ज्वादाविव सर्पधारादिविकल्पभेदवत् ; सर्वत्राव्यभिचाराज्ज्ञस्वरूपस्य सत्यत्वम् ।
(ச.பா) அந்த: பிரக்ஞாதி தர்மங்கள் ஆத்மாவில் பிரத்யக்ஷமாய் அறியப்படும் பொழுது கேவலம் அதன் நீக்கத்தால் மாத்திரம் எவ்வாறு ரஜ்ஜுவில் தோன்றும் சர்ப்பாதிகள் போல் அசத்தியமாய் ஆகும். இதற்குக் கூறுகிறார் - ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம், ஜலதாரை முதலிய விகல்பபேதங்கள் போல் அவைகளின் சித் ஸ்வரூபத்தில் பேதம் இல்லாததால் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் மாறுபட்டு இருப்பதால் அசத் ரூபமாகும். ஆனால் சித்ஸ்வரூபமோ ஒரு நாளும் மாறுபாடு அடையாது. ஆகையால் அது சத்தியம்.
(ச.பா) சுஷுப்தி அவஸ்தையில் அதற்கு (சைதன்யத்திற்கு) வியபிசாரம் (மாறுபாடு) இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் சுஷுப்தி அவஸ்தையில் அனுபவம் உண்டாகிறது. “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपोविद्यते” ந ஹி விக்ஞாதுர்விக்ஞாதேர்விபரிலோபோவித்யதே = விக்ஞாத்தாவின் விக்ஞாத்தத்தின் லோபம் ஏற்படாது” என்பது சுருதி சித்தமாகும்.
अत एव अदृश्यम् । यस्माददृश्यम् , तस्मादव्यवहार्यम् । अग्राह्यं कर्मेन्द्रियैः । अलक्षणम् अलिङ्गमित्येतत् , अननुमेयमित्यर्थः । अत एव अचिन्त्यम् । अत एव अव्यपदेश्यं शब्दैः । एकात्मप्रत्ययसारं जाग्रदादिस्थानेषु एक एवायमात्मा इत्यव्यभिचारी यः प्रत्ययः, तेनानुसरणीयम् ; अथवा, एक आत्मप्रत्ययः सारः प्रमाणं यस्य तुरीयस्याधिगमे, तत्तुरीयमेकात्मप्रत्ययसारम् ,
‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इति श्रुतेः ।
(ச.பா) ஆகையால் அது அதிருஷ்டம் அதிருஷ்டமாய் இருப்பதால் வ்யவஹாரம் அற்றது. அவ்வாறே கர்மேந்திரியங்களால் கிரஹிக்கமுடியாது, லக்ஷணமற்றது அவ்வாறே லிங்கமற்றது. ஆகையால் அனுமானம் செய்யமுடியாது. ஆகையால் சிந்திக்கவும் முடியாது. சப்தமூலமாய் அதைக்கூறவும் முடியாது. அது ஏகாத்ம பிரத்யயசாரமாகும். ஜாக்கிரத் முதலிய ஸ்தானங்களில் ஒரே ஆத்மா வியபிசாரமற்ற பிரத்யயமாய் இருக்கிறது. அதை அனுசரிக்க வேண்டியதாகும். அல்லது “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத = ஆத்மா என்று உபாசிப்பாயாக) சுருதியின்படி துரீயத்தின் ஞானம் அடைவதற்காக ஒரே ஆத்ம பிரத்யயமே முழுப்பிரமாணமாகும். அந்த துரீயம் ஏகாத்ம பிரத்தியயசாரமாகும்.
अन्तःप्रज्ञत्वादिस्थानिधर्मप्रतिषेधः कृतः । प्रपञ्चोपशममिति जाग्रदादिस्थानधर्माभाव उच्यते । अत एव शान्तम् अविक्रियम् , शिवं यतः अद्वैतं भेदविकल्परहितं चतुर्थं तुरीयं मन्यन्ते, प्रतीयमानपादत्रयरूपवैलक्षण्यात् । स आत्मा स विज्ञेयः इति । प्रतीयमानसर्पदण्डभूच्छिद्रादिव्यतिरिक्ता यथा रज्जुः, तथा ‘तत्त्वमसि’ इत्यादिवाक्यार्थः आत्मा
‘अदृष्टो द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) ‘न हि द्रष्टुदृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्यादिभिरुक्तो यः, स विज्ञेय इति भूतपूर्वगत्या । ज्ञाते द्वैताभावः ॥ ७ ॥
(ச.பா) அந்த:பிரக்ஞம் முதலிய ஸ்தானத்தை உடையவைகளின் தர்மங்களின் நீக்கம் செய்யப்பட்டது. பிரபஞ்சத்தின் உபசமனம் கூறியதால் ஜாக்ரத் ஸ்தான தர்ம அபாவம் கூறப்பட்டது. ஆகையால் சாந்தம், கிரியையற்றது, சிவம், அத்வைதமானதால் பேத விகல்பமற்றது. மூன்று பாதங்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதால் துரீயம் (சதுர்த்தம் = நான்காவது) என்று கருதப்படுகிறுது. அந்த ஆத்மா அது அறியப்பட வேண்டியது. எவ்வாறு கயிறு தன்னிடத்தில் தோன்றும் சர்ப்பம், தண்டம், பூமியின் பிளவு இவைகளைக் காட்டிலும் எவ்வகையிலும் வேறானதோ அவ்வாறு “தத்துவமஸி” முதலிய வாக்கியங்களின் அர்த்த ஸ்வரூபமான ஆத்மா “अदृष्टो द्रष्टा” (அதிருஷ்டோ திருஷ்டா = அதிருஷ்டமாய் இருந்தாலும் அறியமுடியும்) “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (நஹி த்ருஷ்டுர்த்ருஷ்டேர் விபரிலோபே வித்யதே = திருஷ்டாவின் திருஷ்டிக்கு லோபம் உண்டாகாது) என்பது சுருதிகளால் பிரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. அது அறியப்பட வேண்டியது என்று பூத பூர்வகதியினால் கூறப்பட்டது ஏனெனில் அதன் ஞானம் ஏற்பட்டவுடன் துவைதத்தின் அபாவம் ஏற்படுகிறது. (துவைதம் நீங்குகிறது)
अत्रैते श्लोका भवन्ति —
இந்த அர்த்தத்தில் இந்த சுலோகங்கள் இருக்கின்றன.
निवृत्तेः सर्वदुःखानामीशानः प्रभुरव्ययः ।
अद्वैतः सर्वभावानां देवस्तुर्यो विभुः स्मृतः ॥ १० ॥
कारिका अन्वयः - सर्व दुःखानां निवृत्तेः ईशानः प्रभुः अव्ययः अद्वैतः देवः तुर्यः सर्वभावानां विभुः स्मृतः।
(காரிகா அர்த்தம்) - துரீய ஆத்மா எல்லாவிதமான துக்கங்களையும் நீக்குகின்ற ஈ.சானன் பிரபு = (சாமர்த்தியம் உடையவன்) அது அவிகாரி, எல்லா பதார்த்தங்களின் அத்வைத ரூபம், தேவன் அவனே துரீயன். வியாபகன் எனப்படுகிறான்.
प्राज्ञतैजसविश्वलक्षणानां सर्वदुःखानां निवृत्तेः ईशानः तुरीय आत्मा । ईशान इत्यस्य पदस्य व्याख्यानं प्रभुरिति ; दुःखनिवृत्तिं प्रति प्रभुर्भवतीत्यर्थः, तद्विज्ञाननिमित्तत्वाद्दुःखनिवृत्तेः ।
(ச.பா) - துரீய ஆத்மா பிராக்ஞன், தைஜசன், விச்வரூப எல்லா துக்கங்களின் நிவிர்த்திசெய்யும் ஈ.சானன். இந்த “ईशान” (ஈ,சான) என்ற பதத்தின் வியாக்யானம் பிரபு என்பதாகும். துக்கநிவிர்த்தி செய்வதில் பிரபு என்பது பொருள். துக்க நிவிர்த்திக்குக் காரணம் விக்ஞானம் ஆகும்.
अव्ययः न व्येति, स्वरूपान्न व्यभिचरति न च्यवत इत्येतत् । कुतः ? यस्मात् अद्वैतः, सर्वभावानाम् — सर्पादीनां रज्जुरद्वया सत्या च ; एवं तुरीयः,
‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः — अतो रज्जुसर्पवन्मृषात्वात् । स एष देवः द्योतनात् तुर्यः चतुर्थः विभुः व्यापी स्मृतः ॥ १० ॥
(ச.பா) अव्ययः (அவ்யயம்) என்பது வியயம் (விகாரம்) அற்றது என்பதாகும். அது அத்வைதமாய் இருப்பதால் அதற்கு விகாரம் ஏற்படுவது இல்லை. மற்றஎல்லா பதார்த்தங்களும் ரஜ்ஜுவில் அத்யஸ்தமான சர்ப்பத்திற்கு சமானமாக மித்யையாகும். ஆகையால் அது பிரகாச சொரூபமாய் இருப்பதால் அது தேவ, துரீய, சதுர்த்த, விபு, வியாபகம் எனப்படுகிறது.
विश्वादीनां सामान्यविशेषभावो निरूप्यते तुर्ययाथात्म्यावधारणार्थम् ।
(ச.பா) அ.கை) துரீயத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்துகொள்வதற்காக விச்வம் முதலியவைகள் சாமான்ய ரூபமாகவும், விசேஷ ரூபமாகவும் நிரூபணம் செய்யப்படுகிறது.
कार्यकारणबद्धौ ताविष्येते विश्वतैजसौ ।
प्राज्ञः कारणबद्धस्तु द्वौ तौ तुर्ये न सिध्यतः ॥ ११ ॥
कारिका अन्वयः - तौ विश्वतैजसौ कार्यकारणबद्धौ इष्येते कारणबद्धः तौ द्वौ तुर्ये न सिध्यतः ॥
காரிகா அர்த்தம் - விஷ்வன், தைஜசன் இரண்டும் காரிய காரணத்தால் பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் பிராக்ஞன் கேவல காரண அவஸ்தாவாகவே பந்தப்பட்டுள்ளது. அவ்வாறே அவை இரண்டும் துரிய அவஸ்தையில் இல்லை.
कार्यं क्रियत इति फलभावः, कारणं करोतीति बीजभावः । तत्त्वाग्रहणान्यथाग्रहणाभ्यां बीजफलभावाभ्यां तौ यथोक्तौ विश्वतैजसौ बद्धौ सङ्गृहीतौ इष्येते । प्राज्ञस्तु बीजभावेनैव बद्धः । तत्त्वाप्रतिबोधमात्रमेव हि बीजं प्राज्ञत्वे निमित्तम् । ततः द्वौ तौ बीजफलभावौ तत्त्वाग्रहणान्यथाग्रहणे तुरीये न सिध्यतः न विद्येते, न सम्भवत इत्यर्थः ।
(ச.பா) - கிரியை செய்வதை காரியம் என்கிறோம். அது பல பாவமாகும். எது செய்விக்கிறதோ அது காரணம். அது பீஜ பாவம் ஆகும். முன்பு கூறப்பட்ட விச்வ, தைஜச தத்துவத்தை கிரஹிக்காமலும் வேறு விதமாய் கிரஹிக்கும் ரூபமான பீஜ பாவத்தாலும், பல பாவத்தாலும் நன்றாக பந்தப்பட்டதாகிறது. ஆனால் பிராக்ஞனோ கேவலம் பீஜ பாவத்தால் பந்தப்பட்டுள்ளது. தத்துவத்தை அறியாத ரூபமான பீஜமே அந்த பிராக்ஞத்துவத்திற்குக் காரணமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பீஜ ரூப, பல பாவ ரூப தத்துவத்தை கிரஹிக்காததும், வேறு விதமாய் கிரஹித்தலுமாகிய இரண்டும் துரீயத்தில் சம்பவிக்காது.
कथं पुनः कारणबद्धत्वं प्राज्ञस्य तुरीये वा तत्त्वाग्रहणान्यथाग्रहणलक्षणौ बन्धौ न सिध्यत इति । यस्मात् ॥ ११ ॥
(ச.பா) (அ,கை) பிராக்ஞனுக்கு காரண பந்தத்துவம் எவ்வாறு உண்டானது. அவ்வாறே துரீயத்தில் தத்துவத்தை கிரஹித்தல்; வேறு விதமாய் கிரஹித்தல் ரூபமான பந்தம் எவ்வாறு சித்திக்கிறது. இதைக்குறித்து விளக்குகிறார்.-
नात्मानं न परं चैव न सत्यं नापि चानृतम् ।
प्राज्ञः किञ्चन संवेत्ति तुर्यं तत्सर्वदृक्सदा ॥ १२ ॥
कारिका अन्वयः - प्राज्ञःआत्मानं परांश्चेैव न सत्यं अनृतं चापि किञ्चन न संवेत्ति तुर्यं सत् सदा सर्वदृक् ।
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் தனக்கோ, மற்றவர்கோ அல்லது சத்தியத்திற்கோ, பொய்யானதற்கோ அறிய முடியாததாய் இருக்கிறது. ஆனால் அது துரியமாய் எப்பொழுதும் சர்வத்ருக்காய் (எல்லாவற்றையும் அறிவதாக) இருக்கிறது.
आत्मानम् , विलक्षणम् , अविद्याबीजप्रसूतं वेद्यं बाह्यं द्वैतम् — प्राज्ञो न किञ्चन संवेत्ति, यथा विश्वतैजसौ ; ततश्चासौ तत्त्वाग्रहणेन तमसा अन्यथाग्रहणबीजभूतेन बद्धो भवति । यस्मात् तुर्यं तत्सर्वदृक्सदा तुरीयादन्यस्याभावात् सर्वदा सदैव भवति, सर्वं च तद्दृक्चेति सर्वदृक् ; तस्मान्न तत्त्वाग्रहणलक्षणं बीजम् । तत्र तत्प्रसूतस्यान्यथाग्रहणस्याप्यत एवाभावः । न हि सवितरि सदाप्रकाशात्मके तद्विरुद्धमप्रकाशनमन्यथाप्रकाशनं वा सम्भवति,
‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।
(ச.பா) பிராக்ஞன் ஆத்மாவை விட வேறான அவித்தியா ரூப பீஜத்திலிருந்து உண்டானது. வெளியில் உள்ள அறியப்படும் பதார்த்த ரூப துவைதத்தை விஸ்வன், தைஜசன் அறிவது போல் அறியாது. ஆகையால் அன்னியத்தை கிரஹிக்கும் பீஜ பூதமான தத்துவத்தை கிரஹிக்காத அந்தகாரத்தால் பந்திக்கப்படுகிறது. துரீயத்தைக் காட்டிலும் அந்நிய வஸ்து எவ்வகையிலும் அபாவமாய் இருப்பதால் அது எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாகும். அது சர்வரூபமாயும் அதற்கு சாக்ஷியாயும் இருப்பதால் அது சர்வதிருக் எனப்படுகிறது ஆகையால் அதைக் கிரஹிக்க முடியாத பீஜ ரூபம் அதற்கு இல்லை. மேலும் அதில் உத்பன்னமாகும் வேறாய் கிரஹிப்பதும் அபாவமாய் இருக்கிறது. ஏனெனில் எப்பொழுதும் ஸ்வபிரகாசமாய் இருக்கும் சூரியனிடத்தில் விபரீதமான பிரகாசமற்ற தன்மை அல்லது வேறு விதமாய் பிரகாசிக்கும் தன்மையோ சம்பவிப்பதில்லை. அவ்வாறு “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந ஹி திரஷ்டு திருஷ்டேர்விபரிலோபோ வித்யதே =திரஷ்டாவின் திருஷ்டிக்கு விபரிலோபம் ஏற்படுவதில்லை) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
(ச.பா) அல்லது ஜாக்ரத் அவ்வாறே ஸ்வப்னாவஸ்தையின் சம்பூர்ண பூதங்களில் இருக்கின்ற, மேலும் எல்லா பதார்த்தங்களில் சாக்ஷீரூபமாய் துரீயம் விளங்குகிறது. ஆகையால் அது எப்பொழுதும் சர்வசாக்ஷீயாய் இருக்கிறது. “नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யததோஅஸ்தி திரஷ்ட்ரு = அதைக் காட்டிலும் வேறான ஒரு திரஷ்டா இல்லை) என்பது சுருதி வாக்கியம்.
द्वैतस्याग्रहणं तुल्यमुभयोः प्राज्ञतुर्ययोः ।
बीजनिद्रायुतः प्राज्ञः सा च तुर्ये न विद्यते ॥ १३ ॥
कारिका अन्वयः - प्राज्ञतुर्ययोः उभयोः द्वैतस्य अग्रहणं तुल्यं बीजनिद्रायुतः सा च तुर्ये न विद्यते ।
காரிகா அர்த்தம் - துவைதத்தைக் கிரஹிக்காததால் பிராக்ஞனும் துரீயமும் சமானமாகும். ஆனால் பிராக்ஞன் பீஜரூப நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நித்திரை இல்லை.
निमित्तान्तरप्राप्ताशङ्कानिवृत्त्यर्थोऽयं श्लोकः। कथं द्वैताग्रहणस्य तुल्यत्वे कारणबद्धत्वं प्राज्ञस्यैव, न तुरीयस्येति प्राप्ता आशङ्का निवर्त्यते ।
(ச.பா) இந்த ஸ்லோகம் வேறு நிமித்தத்தால் உண்டாகும் ஆசங்கையின் நிவிர்த்திக்கு ஆகும். துவைத கிரஹணமற்றதன்மை சமானமாய் இருந்தாலும் எவ்வாறு பிராக்ஞனுக்கு காரணத்துடன் பந்தம் இருக்கிறது? ஏன் துரீயத்திற்கு இல்லை? இவ்வாறு உண்டான சங்கையை நிவிர்த்தி செய்கிறது.
यस्मात् बीजनिद्रायुतः, तत्त्वाप्रतिबोधो निद्रा ; सैव च विशेषप्रतिबोधप्रसवस्य बीजम् ; सा बीजनिद्रा ; तया युतः प्राज्ञः । सदासर्वदृक्स्वभावत्वात्तत्त्वाप्रतिबोधलक्षणा बीजनिद्रा तुर्ये न विद्यते ; अतो न कारणबन्धस्तस्मिन्नित्यभिप्रायः ॥ १३ ॥
(ச.பா) ஏனெனில் பிராக்ஞன் பீஜ நித்திரையுடன் கூடினவன். அது விசேஷ விக்ஞானத்தின் உத்பத்திக்கு பீஜ (காரண)மாகிறது. ஆகையால் அதை பீஜ நித்திரை என்கிறோம். பிராக்ஞன் அதோடு கூடினவன். ஆனால் எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாய் இருப்பதால் துரீயத்தில் பீஜ நித்திரை இல்லை, ஆகையால் அதில் காரணத்தில் பத்த (கட்டுபட்டதாக) முடையதாக ஆகாது. இதுவே இதன் தாத்பர்யம்.
स्वप्ननिद्रायुतावाद्यौ प्राज्ञस्त्वस्वप्ननिद्रया ।
न निद्रां नैव च स्वप्नं तुर्ये पश्यन्ति निश्चिताः ॥ १४ ॥
कारिका अन्वयः - आद्यौ स्वप्ननिद्रायुतौ प्राज्ञस्तु अस्वप्न निद्रया युक्तः निश्चिताः तुर्ये निद्रां स्वप्नं च न पश्यन्ति ।
காரிகா அர்த்தம் - விச்வனும் தைஜசனும் ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவைகள். அவ்வாறே ப்ராக்ஞன் ஸ்வப்ன மற்ற நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நிச்சயமுடையவன் நித்திரையைப் பார்ப்பதில்லை ஸ்வப்னத்தையும் காண்பதில்லை.
स्वप्नोಽन्यथाग्रहणं सर्प इव रज्ज्वाम् , निद्रोक्ता तत्त्वाप्रतिबोधलक्षणं तम इति ; ताभ्यां स्वप्ननिद्राभ्यां युतौ विश्वतैजसौ ; अतस्तौ कार्यकारणबद्धावित्युक्तौ । प्राज्ञस्तु स्वप्नवर्जितया केवलयैव निद्रया युत इति कारणबद्ध इत्युक्तम् । नोभयं पश्यन्ति तुरीये निश्चिताः ब्रह्मविद इत्यर्थः, विरुद्धत्वात्सवितरीव तमः । अतो न कार्यकारणबद्ध इत्युक्तस्तुरीयः ॥ १४ ॥
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிப்பது போல் வேறாய் கிரஹிப்பது என்பது ஸ்வப்னம். தத்துவத்தை அறியாத தமஸ்ஸை நித்திரை என்கிறோம். அந்த ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவர்கள் விச்வ தைஜசர்கள். ஆகையால் அவர்கள் காரியகாரண பத்தர்கள். ஆனால் பிராக்ஞனோ ஸ்வப்னமற்ற கேவல நித்திரை உடையவனாய் இருப்பதால் காரணபத்தன் எனப்படுகிறான். இவ்வாறு நிச்சயம் செய்த பிரஹ்ம வேத்தாக்கள் துரீயத்தில் இவை இரண்டையும் பார்ப்பதில்லை. எவ்வாறு சூரியனிடத்தில் இருள் இருக்க முடியாதது போல் ஆகும். ஆகையால் துரீயம் காரியத்துடனோ, காரணத்துடனோ பந்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
कदा तुरीये निश्चितो भवतीत्युच्यते
(ச.பா) (அ.கை) எப்பொழுது துரீயத்தில் நிச்சயம் அடைந்தவனாக ஆவான் என்பதனை விளக்குவது இந்த காரிகை.
अन्यथा गृह्णतः स्वप्नो निद्रा तत्त्वमजानतः ।
विपर्यासे तयोः क्षीणे तुरीयं पदमश्नुते ॥ १५ ॥
कारिका अन्वयः - अन्यथा गृणतः स्वप्नः तत्त्वम् अजानतः निद्रा भवति तयोः विपर्यासे क्षीणे तुरीयं पदम् अश्नुते ॥
காரிகா அர்த்தம் - வேறு ஒன்றை கிரஹிப்பதால் ஸ்வப்னம் ஏற்படுகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாமையால் நித்திரை உண்டாகிறது. இந்த இரண்டின் விபரீத ஞானம் நாசம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகும்.
स्वप्नजागरितयोः अन्यथा रज्ज्वां सर्पवत् गृह्णतः तत्त्वं स्वप्नो भवति ; निद्रा तत्त्वमजानतः तिसृष्ववस्थासु तुल्या । स्वप्ननिद्रयोस्तुल्यत्वाद्विश्वतैजसयोरेकराशित्वम् । अन्यथाग्रहणप्राधान्याच्च गुणभूता निद्रेति तस्मिन्विपर्यासः स्वप्नः । तृतीये तु स्थाने तत्त्वाग्रहणलक्षणा निद्रैव केवला विपर्यासः ।
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிக்கப்படுவது போல் ஸ்வப்ன, ஜாக்ர அவஸ்தைகளில் தத்துவத்தை வேறு விதமாய் கிரஹிக்கும்பொழுது ஸ்வப்னம் உண்டாகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாத பொழுது நித்திரை ஏற்படுகிறது. இவ்வாறு மூன்று அவஸ்தைகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இவ்வாறு ஸ்வப்னமும், நித்திரையும் ஒரே மாதிரியாய் இருப்பதால் விச்வனும் தைஜசனும் ஒரே ராசிதான், அவைகளில் வேறாய் கிரஹிப்பது பிராதானமாய் இருப்பதால் நித்திரை கௌணமாகும். ஆகையால் அவஸ்தைகளில் ஸ்வப்னரூப விபரீத ஞானம் இருக்கிறது. ஆனால் மூன்றாவது ஸ்தானமாகிய சுஷுப்தியில் கேவலம் தத்துவத்தைக் கிரஹிக்காத நித்திரையாய் மாறிற்று.
अतस्तयोः कार्यकारणस्थानयोः अन्यथाग्रहणतत्त्वाग्रहणलक्षणविपर्यासे कार्यकारणबन्धरूपे परमार्थतत्त्वप्रतिबोधतः क्षीणे तुरीयं पदमश्नुते ; तदा उभयलक्षणं बन्धनं तत्रापश्यंस्तुरीये निश्चितो भवतीत्यर्थः ॥ १५ ॥
ஆகையால் அந்த காரியகாரண ரூப ஸ்தானங்களை ஒன்றை மற்றொன்றாய் கிரஹித்தல் மேலும் தத்துவத்தை கிரஹிக்காத மாறுபாட்டை பரமார்த்த போதத்தால் க்ஷயம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகிறது. அந்த அவஸ்தையில் இரண்டு பிரகாரமான பந்தம் காணப்படாததால் புருஷன் துரீயத்தில் நிச்சயமடைந்தவனாக ஆகிறான்.
अनादिमायया सुप्तो यदा जीवः प्रबुध्यते ।
अजमनिद्रमस्वप्नमद्वैतं बुध्यते तदा ॥ १६ ॥
कारिका अन्वयः - यदा अनादिमायया सुप्तः जीवः प्रबुध्यते तदा अजम् अनिद्रम् अस्वप्नम् अद्वैतं बुध्यते ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது அநாதிமாயையால் தூங்கிக்கொண்டிருக்கும் ஜீவன் விழிப்பை (தத்துவ ஞானத்தை) அடைகிறானோ அப்பொழுது அஜம், நித்திரை அற்ற, ஸ்வப்னமற்ற, அத்வைத ஆத்ம தத்வ ஞானத்தை அடைகிறான்.
योऽयं संसारी जीवः, सः उभयलक्षणेन तत्त्वाप्रतिबोधरूपेण बीजात्मना, अन्यथाग्रहणलक्षणेन चानादिकालप्रवृत्तेन मायालक्षणेन स्वापेन, ममायं पिता पुत्रोऽयं नप्ता क्षेत्रं गृहं पशवः, अहमेषां स्वामी सुखी दुःखी क्षयितोऽहमनेन वर्धितश्चानेन इत्येवंप्रकारान्स्वप्नान् स्थानद्वयेऽपि पश्यन्सुप्तः ।
(ச.பா) - தத்துவத்தை அறியாததாலும், அனாதிகாலமாய் பிரவிர்த்தித்த மாயையாலும் தூங்கினவனான சம்சாரி ஜீவனானவன் விழிப்பு அடைகிறானோ அதாவது ஜீவனானவன் தத்துவத்தை அறியாத ரூபமான பீஜாத்மாவினால் தொன்றுதொட்டு பிரவிருத்தித்ததான மாயை எனப்படும் ஸ்வப்னத்தாலும், இது என்னுடையது, இவர் என்னுடைய தந்தை இவன் என்னுடைய மகன், இவன் என் பேரன், இது என்னுடைய நிலம், இவை என் பசுக்கள், இவைகளுக்கெல்லாம் நானே எஜமான், நான் சுகீ நான் துக்கீ, நான் இவைகளால் இணைந்தவனாய் உள்ளேன், நான் இவைகளால் வளர்ந்து புஷ்டியுடையவனாய் இருக்கிறேன் என்பவை போன்றகனவுகளை முற்கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களில் ஸ்வப்னத்தைப் பார்ப்பவனாய் இருக்கிறான்.
यदा वेदान्तार्थतत्त्वाभिज्ञेन परमकारुणिकेन गुरुणा ‘नास्येवं त्वं हेतुफलात्मकः, किन्तु तत्त्वमसि’ इति प्रतिबोध्यमानः, तदैवं प्रतिबुध्यते ।
(ச.பா) எப்பொழுது வேதாந்த அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்த பரமகருணையுடைய குரு மூலம் இவ்வாறு நீ ஹேது பல ரூபமும் அல்ல, ஆனால் அதுவாகவே இருக்கிறாய் என்று அறிந்தபொழுது போதம் (ஞானம்) ஏற்படுகிறது.
कथम् ? नास्मिन्बाह्यमाभ्यन्तरं वा जन्मादिभावविकारोऽस्ति, अतः अजम्
‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः, सर्वभावविकारवर्जितमित्यर्थः । यस्माज्जन्मादिकारणभूतम् , नास्मिन्नविद्यातमोबीजं निद्रा विद्यत इति अनिद्रम् ; अनिद्रं हि तत्तुरीयम् ; अत एव अस्वप्नम् , तन्निमित्तत्वादन्यथाग्रहणस्य । यस्माच्च अनिद्रमस्वप्नम् , तस्मादजम् अद्वैतं तुरीयमात्मानं बुध्यते तदा ॥ १६ ॥
(ச.பா) எவ்வாறு போதம் உண்டாகும்? இதில் பாஹ்ய அல்லது ஆப்யந்தர ஜன்மம் முதலிய விகாரங்கள் இல்லை, ஆகையால் இது ஜன்மமற்றது எல்லா பாவ விகாரங்கள் அற்றது. மேலும் இதில் ஜன்மம் முதலியவைகளின் காரணபூத அவ்வறே அவித்தியாரூப அந்தகாரத்தின் பீஜ பூத அவித்யை இல்லாததால் அது நித்திரை அற்றதாகும். துரீயம் அநித்திரையாகும் ஆகையால் ஸ்வப்னமும் இல்லை. ஏனெனில் வேறு ஒன்றை கிரஹிக்காதது (தத்துவத்தை அறியாதது) நித்திரைக்குக் காரணம் ஆகும். இவ்வாறு நித்திரை அற்றதாயும். ஸ்வப்னமற்றதாயும் இருக்கும்பொழுது ஜன்மம் அற்றதாயும், அத்வைதமாயும், துரீய ஆத்மாவின் போதம் உண்டாகிறது.
प्रपञ्चनिवृत्त्या चेत्प्रतिबुध्यते, अनिवृत्ते प्रपञ्चे कथमद्वैतमित्युच्यते ।
(ச.பா) (அ,கை) (துரீய) போதமானது பிரபஞ்ச நிவிர்த்தியினால் உண்டாகிறது, என்றாலும் எதுவரை பிரபஞ்சத்தின் நிவிர்த்தி இல்லையோ அதுவரை அத்வைதம் எவ்வாறு ஏற்படும் என்பது கூறப்படுகிறது-
प्रपञ्चो यदि विद्येत निवर्तेत न संशयः ।
मायामात्रमिदं द्वैतमद्वैतं परमार्थतः ॥ १७ ॥
कारिका अन्वयः - प्रपञ्चः यदि विद्येत निवर्तेत न संशयः। इदं द्वैतं मायामात्रं परमार्थतः अद्वैतम् ।
காரிகா அர்த்தம் - பிரபஞ்சமானது இருக்குமேயானால் நிவர்த்திக்கப்படும் என்பதில் ஒரு சந்தேஹமுமில்லை. ஆனால் அந்த த்வைதம் மாயா மாத்திரமே, உண்மையில் அது அத்வைதமே.
सत्यमेवं स्यात्प्रपञ्चो यदि विद्येत ; रज्ज्वां सर्प इव कल्पितत्वान्न तु स विद्यते । विद्यमानश्चेत् निवर्तेत, न संशयः । न हि रज्ज्वां भ्रान्तिबुद्ध्या कल्पितः सर्पो विद्यमानः सन्विवेकतो निवृत्तः ; न च माया मायाविना प्रयुक्ता तद्दर्शिनां चक्षुर्बन्धापगमे विद्यमाना सती निवृत्ता ; तथेदं प्रपञ्चाख्यं मायामात्रं द्वैतम् ; रज्जुवन्मायाविवच्च अद्वैतं परमार्थतः ; तस्मान्न कश्चित्प्रपञ्चः प्रवृत्तो निवृत्तो वास्तीत्यभिप्रायः ॥ १७ ॥
(ச.பா) பிரபஞ்சம் இருக்குமேயானால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பிதமாய் இருப்பதால் உண்மையில் இல்லை என்பதாகும். இவ்வாறு இருப்பதால் இதில் ஒரு சந்தேஹம் இல்லை நிவிர்த்தியாகிவிடும். ரஜ்ஜுவில் பிரமபுத்தியினால் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் உண்மையாய் இருந்தால் விவேகத்தால் நாசமாகாது. மாயாவியால் ப்ரயோகம் செய்யப்பட்ட மாயை பார்வையாளர்களின் கண் நீக்கப்பட்டவுடன், அதற்கு முன்நிலையில் உண்மையில் இருப்பதாயிருந்து நீங்குவது இல்லை. அது போல் இந்த பிரபஞ்சமும் ஆகும். உண்மையில் கயிறு போலும், மாயாவிபோலும் இரண்டாவது அற்றதே. முதலில் பிரவிர்த்ததான பிரபஞ்சமோ பின்பு நீக்கப்பட்ட பிரபஞ்சமோ இல்லை என்பது கருத்து.
ननु शास्ता शास्त्रं शिष्य इत्ययं विकल्पः कथं निवृत्त इत्युच्यते ।
(ச.பா) (அ.கை) மேலும் சாஸ்தா, சாஸ்திரம், சிஷ்யன் என்ற விகல்பமானது எவ்வாறு நீக்கப்பட்டது என்பதை விளக்குவதாகும்.
विकल्पो विनिवर्तेत कल्पितो यदि केनचित् ।
उपदेशादयं वादो ज्ञाते द्वैतं न विद्यते ॥ १८ ॥
कारिका अन्वयः - विकल्पः केनचित् यदिकल्पितः स्यात् तर्हि विनिवर्तेत उपदेशात्। अयं वादः ज्ञाते द्वैतं न विद्यते ।
காரிகா அர்த்தம் - இந்த (குரு சிஷ்ய) ஆகிய விகல்பங்கள் எவராவது கல்பனை செய்தால் அது நிவிர்த்தியாகிறது. இந்த (குரு சிஷ்ய) வாதம் உபதேசத்திற்காகவாகும். ஆத்மஞானம் அடைந்த உடன் துவைதம் நிவிர்த்தியாகிவிடும்.
विकल्पो विनिवर्तेत यदि केनचित्कल्पितः स्यात् । यथा अयं प्रपञ्चो मायारज्जुसर्पवत् , तथा अयं शिष्यादिभेदविकल्पोऽपि प्राक्प्रतिबोधादेवोपदेशनिमित्तः ; अत उपदेशादयं वादः — शिष्यः शास्ता शास्त्रमिति । उपदेशकार्ये तु ज्ञाने निर्वृत्ते ज्ञाते परमार्थतत्त्वे, द्वैतं न विद्यते ॥ १८ ॥
(ச.பா) ஏதோ ஒருவன் கல்பனை செய்திருந்தால் அந்த விகல்பம் நிவிர்த்தியாகும். எவ்வாறு பிரபஞ்சம் மாயை மேலும் ரஜ்ஜு சர்ப்பம் போல் இந்த சிஷ்யன் முதலிய விகல்பங்களும் ஆத்மஞான உபதேசத்திற்கு முன் உள்ள நிமித்தத்தாலாகும். ஆகையால் சிஷ்யன், குரு, சாஸ்திரம் இவை உபதேசத்திற்காக ஆகும். உபதேசத்தின் காரிய ஸ்வரூபஞானம் அடைந்தபின் அதாவது பரமார்த்த தத்துவத்தின் ஞானம் அடைந்த உடன் துவைதம் இல்லாமல் போய்விடுகிறது.
अभिधेयप्राधान्येन ओङ्कारश्चतुष्पादात्मेति व्याख्यातो यः-
(ச.பா) (அ.கை) இது வரையிலும் கூறப்பட்ட அந்த அபிதேய பிரதான ஓம்கார ரூப சதுஷ்பாத் (நான்காவது பாதம்) ஆத்மாவை பிரதானமாய் வர்ணிக்கப்படுகிறது.
इति ।
सोऽयमात्माध्यक्षरमोङ्कारोऽधिमात्रं पादा मात्रा मात्राश्च पादा अकार उकारो मकार इति ॥ ८ ॥
(मन्त्र अन्वयः) - सोऽयमात्माध्यक्षरमोङ्कारः अधिमात्रं पादाः मात्राः मात्राः च पादाः अकार उकार मकार इति ।
(மந்திர அர்த்தம்) - அந்த ஆத்மா அக்ஷர திருஷ்டியில் ஓம்காரம் ஆகும். அது மாத்திரைகளை விஷயம் செய்து கொண்டிருக்கிறது. பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். அந்த மாத்திரைகள். அகார, உகார மகாரங்களாகும்.
सोऽयम् आत्मा अध्यक्षरम् अक्षरमधिकृत्य अभिधानप्राधान्येन वर्ण्यमानोऽध्यक्षरम् । किं पुनस्तदक्षरमित्याह — ओङ्कारः । सोऽयमोङ्कारः पादशः प्रविभज्यमानः, अधिमात्रं मात्रामधिकृत्य वर्तत इत्यधिमात्रम् । कथम् ? आत्मनो ये पादाः, ते ओङ्कारस्य मात्राः । कास्ताः ? अकार उकारो मकार इति ॥ ८ ॥
(ச.பா) - அந்த இந்த ஆத்மா அத்யக்ஷரம், அக்ஷரத்தை ஆஸ்ரயித்து எதனுடைய அபிதானத்தை பிரதானமாய் வர்ணனை செய்யப்பட்டதோ அது அத்யக்ஷரம் எனப்படும். அந்த அக்ஷரம் எது? அது அந்த ஓம்காரத்தைப் பாதரூபமாய் பிரிவினை அடைந்த பின்னர் அதிமாத்திரமாய் தனது மாத்திரையை ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதை (அதிமாத்திர) என்று கூறப்படுகிறது. எவ்வாறு? ஓம்காரத்தின் பாதம் எதுவோ அது ஓம்காரத்தின் மாத்திரை அவையாவை? அகார, உகார, மகாரம் என்பதாகும்.
तत्र विशेषनियमः क्रियते ।
(ச.பா) (அ.கை) அதில் விசேஷ நியமனங்கள் செய்யப்படுகின்றன.
जागरितस्थानो वैश्वानरोऽकारः प्रथमा मात्राप्तेरादिमत्त्वाद्वाप्नोति ह वै सर्वान्कामानादिश्च भवति य एवं वेद ॥ ९ ॥
(मन्त्र अन्वयः) - जागरितस्थानः वैश्वानरः अकारः प्रथमा मात्रा आप्तेः आदिमत्त्वात् वा यः एवं वेद सः ह वै सर्वान् कामान् आप्नोति आदि च भवति ।
(மந்திர அர்த்தம்) - ஜாக்ரத் ஸ்தானம் வைச்வானர வ்யாப்தி மேலும் (ஓம்காரத்தின்) முதலாவதாய் இருப்பதால் முதல் மாத்திரை அகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்து முதலாவதாக அதாவது பிரதானமாக ஆகிறான்.
(ச.பா) ஜாக்கிரத் ஸ்தானத்தில் உள்ள எந்த வைச்வானரனோ அவன் ஓம்காரத்தின் முதல் மாத்திரை எதன் சமானத்தின் காரணம் முதல் மாத்திரை என்பதற்குக் கூறப்படுகிறது. எல்லாச் சொற்களிலும் வியாபித்திருக்கும் தன்மையால் அதாவது “अकारो वै सर्वा वाक्” (அகாரோ வை சர்வாவாக்- = அகாரமே எல்லா வாக்கிலும் (வியாபித்து இருக்கிறது) என்ற இந்த சுருதியை அனுசரித்து அகாரத்தால் எல்லா வாக்கும் வியாபித்திருக்கிறது. அவ்வாறே. “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः” (தஸ்யஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ ஸுதேஜா) என்ற இந்த சுருதியை அனுஸரித்து வைச்வானரால் எல்லா ஜகத்தும் வியாபித்திருக்கிறது.
अभिधानाभिधेययोरेकत्वं चावोचाम । आदिरस्य विद्यत इत्यादिमत् ; यथैव आदिमदकाराख्यमक्षरम् , तथा वैश्वानरः ; तस्माद्वा सामान्यादकारत्वं वैश्वानरस्य । तदेकत्वविदः फलमाह — आप्नोति ह वै सर्वान्कामान् , आदिः प्रथमश्च भवति महताम् , य एवं वेद, यथोक्तमेकत्वं वेदेत्यर्थः ॥ ९ ॥
(ச.பா) அபிதானமும் (வாசகமும்) அபிதேயமும் (வாச்சியமும்) ஒன்றே என்று கூறி இருக்கிறோம். எது முதலாவதோ (आदि ஆதியோ) அதை ஆதியுடன் கூடியது (आदिमत् ஆதிமத்) என்கிறோம். எவ்வாறு அகாரம் என்ற அக்ஷரம் முதலாவதோ அவ்வாறே வைச்வாநரனும் ஆகும். இரண்டும் சமானமாய் இருப்பதால் வைச்வாநரன் அகார ரூபமுடையவனாகிறான். அந்த இரண்டும் ஒன்றே என்று அறிந்தவனுடைய பலன் கூறப்படுகிறது - எந்த புருஷன் முற்கூறியவாறு ஏகத்துவத்தைக் காண்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்தவனாகின்றான். மஹாபுருஷர்கள் மத்தியில் முதன்மையானவன் ஆகிறான்.
स्वप्नस्थानस्तैजस उकारो द्वितीया मात्रोत्कर्षादुभयत्वाद्वोत्कर्षति ह वै ज्ञानसन्ततिं समानश्च भवति नास्याब्रह्मवित्कुले भवति य एवं वेद ॥ १० ॥
(मन्त्र अन्वयः) - यः स्वप्नस्थानः तैजसः सः उकारः द्वितीयामात्रा उत्कर्षात् उभयत्वात् वा ज्ञानसन्ततिं उत्कर्षति ह वै यः एवं वेद सः समानः च भवति अस्य कुले अब्रह्मवित् न भवति ।
(மந்திர அர்த்தம்) - ஸ்வப்னம் எதற்கு ஸ்தானமோ அது தைஜசன். அவ்வாறே உத்கர்ஷமானதும் மத்தியில் இருப்பதாலும் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரமாகும். இதை எந்த உபாசகன் அறிகிறானோ அவன் விக்ஞான சந்ததியை (விக்ஞான தொடரை) உத்கிருஷ்டமாய் செய்கிறான். எல்லாவற்றையும் சமானமாகப் பார்ப்பவனாகிறான். அவனுடைய வம்சத்தில் பிரஹ்ம ஞானமில்லாவதன் உண்டாகமாட்டன்.
स्वप्नस्थानः तैजसः यः, स ओङ्कारस्य उकारः द्वितीया मात्रा । केन सामान्येनेत्याह — उत्कर्षात् ; अकारादुत्कृष्ट इव ह्युकारः ; तथा तैजसो विश्वात् । उभयत्वाद्वा ; अकारमकारयोर्मध्यस्थ उकारः ; तथा विश्वप्राज्ञयोर्मध्ये तैजसः ; अत उभयभाक्त्वसामान्यात् ।
(ச.பா) ஸ்வப்ன ஸ்தானத்தை உடையவன் தைஜசன். அவன் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரம் ஆகும். எதை வைத்து அவன் இரண்டாவது மாத்திரை எனில் கூறுகிறார் உத்கிருஷ்டமாய் இருப்பதால். எவ்வாறு அகாரத்தைக் காட்டிலும். உகாரம் (उत्कृष्टम्) (உத்கிருஷ்டம் - உயர்வு.) உத்கிருஷ்டமானதோ அவ்வாறு விச்வனைக்காட்டிலும் தைஜசன் உத்கிருஷ்டமானது. நடுவில் இருப்பதால் அதாவது அகாரத்திற்கும், மகாரத்திற்கும் நடுவில் இருப்பது போல் விச்வனுக்கும், பிராக்ஞனுக்கும் நடுவில் தைஜசன் இருக்கிறான். ஆகையால் இவ்விருவகையிலும் சமானமான தர்மம் உள்ளது என்பது விளக்கப்படுகிறது.
विद्वत्फलमुच्यते — उत्कर्षति ह वै ज्ञानसन्ततिं विज्ञानसन्ततिं वर्धयतीत्यर्थः ; समानः तुल्यश्च, मित्रपक्षस्येव शत्रुपक्षाणामप्यप्रद्वेष्यो भवति ; अब्रह्मविच्च अस्य कुले न भवति, य एवं वेद ॥ १० ॥
(ச.பா) இவ்வாறு அறிந்த பிரஹ்மவித்திற்கு என்ன பலன் என்பதைக் கூறுகிறார். அவர்களுக்கு உத்கிருஷ்டமான (உயர்ந்ததான) ஞான சந்ததி விருத்தி அடையும். மித்திரனும் சத்துருவும் ஒரே சமானமாய் துவேஷம் அற்றவர்களாய் இருப்பர். அவ்வாறே அவர்களுடைய குலத்தில் பிரஹ்ம ஞானம் இல்லாதவர்கள் தோன்றமாட்டார்கள்.
सुषुप्तस्थानः प्राज्ञो मकारस्तृतीया मात्रा मितेरपीतेर्वा मिनोति ह वा इदं सर्वमपीतिश्च भवति य एवं वेद ॥ ११ ॥
सुषुप्तस्थानः प्राज्ञः मकारः तृतीयामात्रा मितेः अपीतेर्वा यः एवं वेद सः इदं सर्वं मिनोति ह वा अपीतिश्च भवति ।
(மந்திர அர்த்தம்) - சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அது பிராக்ஞன். பிரமாண லயத்திற்குக் காரணம் மூன்றாவது மாத்திரை மகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் அளப்பவனாகவும் கிரஹிப்பவனாகவும் ஆகிறான்.
सुषुप्तस्थानः प्राज्ञः यः, स ओङ्कारस्य मकारः तृतीया मात्रा । केन सामान्येनेत्याह — सामान्यमिदमत्र — मितेः ; मितिर्मानम् ; मीयेते इव हि विश्वतैजसौ प्राज्ञेन प्रलयोत्पत्त्योः प्रवेशनिर्गमाभ्यां प्रस्थेनेव यवाः ; तथा ओङ्कारसमाप्तौ पुनः प्रयोगे च प्रविश्य निर्गच्छत इव अकारोकारौ मकारे ।
(ச.பா) சுஷுப்திஸ்தானத்தை உடைய பிராக்ஞன் ஓம்காரத்தின் மூன்றாவது மாத்திரை மகாரம் ஆகும். எந்த சாமான்யத்திற்குக் காரணமாக எனில் இதில் என்ன சாமான்யம் என்றால் எவ்வாறு தானியத்தை அளக்கும் பொழுது அளவையின் உள்ளே சென்று வெளியேறுகிறதோ அவ்வாறு பிரளய உற்பத்தி காலங்களில் பிரவேசித்து வெளியில் வருதல் மூலமாய் பிராக்ஞனால் விச்வ தைஜசர்கள் வெளிப்படுவதால் அளக்கப்படுவது போல் மகாரத்தில் அகாரங்கள் உகாரங்கள் புகுந்து புறப்படுவது போல் இருக்கிறது.
अपीतेर्वा ; अपीतिरप्यय एकीभावः ; ओङ्कारोच्चारणे हि अन्त्येऽक्षरे एकीभूताविव अकारोकारौ ; तथा विश्वतैजसौ सुषुप्तकाले प्राज्ञे । अतो वा सामान्यादेकत्वं प्राज्ञमकारयोः ।
(ச.பா) ஒன்று படுவதாலும், அதாவது ஓம்கார உச்சாரண காலத்தில் கடைசி எழுத்தாகிய மகாரத்தில் அகார உகாரங்கள் ஒன்று பட்டது போல் ஓலிப்பதாலும், இவ்வாறு அகார உகாரங்கள் எவ்வாறு மகாரத்தில் ஒன்றி ஒடுங்குகின்றனவோ அவ்வாறே சுஷுப்தி காலத்தில் விச்வ, தைஜசர்கள் பிராக்ஞனில் ஒன்றி ஒடுங்குகின்றனர். ஆகையால் பிராக்ஞ மகாரங்களுக்கு ஏகத்துவம் என்று ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
विद्वत्फलमाह — मिनोति ह वै इदं सर्वम् , जगद्याथात्म्यं जानातीत्यर्थः ; अपीतिश्च जगत्कारणात्मा च भवतीत्यर्थः । अत्रावान्तरफलवचनं प्रधानसाधनस्तुत्यर्थम् ॥ ११ ॥
(ச.பா) இதை அறிந்த தத்துவவித்தின் பலனைக் கூறுகின்றார் எந்த ஒரு சாதகன் முற்கூறப்பட்டவாறு இவைகளை ஒன்றாய் அறிகின்றானோ அவன் இந்த ஜகத்தின் ஸம்பூர்ண உண்மை ஸ்வரூபத்தை அறிந்தவனாகிறான். ஜகத்காரணாத்மாமாகவும் ஆகிறான். இங்கு எந்த அவாந்தர பலம் சொல்லப்படுகிறதோ, அவை ப்ரதான ஸாதனத்தில் ஸ்துதிக்காக உண்டாகிறது.
अत्रैते श्लोका भवन्ति —
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.
विश्वस्यात्वविवक्षायामादिसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ स्यादाप्तिसामान्यमेव च ॥ १९ ॥
कारिका अन्वयः - विश्वस्य अत्वविवक्षायाम् आदिसामान्यम् उत्कटं मात्रासंप्रतिपत्तौ आप्तिसामान्यमेव च स्यात् ।
(காரிகா அர்த்தம்) - விச்வனுக்கு அகார மாத்திரையாய் இருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாய் இருக்கக்கூடிய சாமான்ய தர்மமானது அதிகமாய் காணப்படுகிறது. (விச்வனுக்கு) மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வியாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் சர்வவியாபகமாயுள்ள சாமான்ய தர்மமும் அதிகமாய் காணப்படுகிறது
विश्वस्य अत्वम् अकारमात्रत्वं यदा विवक्ष्यते, तदा आदित्वसामान्यम् उक्तन्यायेन उत्कटम् उद्भूतं दृश्यत इत्यर्थः । अत्वविवक्षायामित्यस्य व्याख्यानम् — मात्रासम्प्रतिपत्तौ इति । विश्वस्य अकारमात्रत्वं यदा सम्प्रतिपद्यते इत्यर्थः । आप्तिसामान्यमेव च, उत्कटमित्यनुवर्तते, च शब्दात् ॥ १९ ॥
(ச.பா) - விச்வனுக்கு அகார மாத்திரையாயிருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாயிருக்ககூடிய ஸாமான்ய தர்மமானது அதிகமாகக் காணப்படுகிறது. இங்கு “अत्वविवक्षायां” என்பதற்கு மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அதாவது விச்வனுக்கு அகாரமாத்திரைத் தன்மை எப்பொழுது அடையப்பட்டதோ அப்பொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வ்யாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் ஸர்வ வியாபகமாயுள்ள ஸாமான்ய தர்மமும் அதிகமாய்க் காணப்படுகிறது.
तैजसस्योत्वविज्ञान उत्कर्षो दृश्यते स्फुटम् ।
मात्रासम्प्रतिपत्तौ स्यादुभयत्वं तथाविधम् ॥ २० ॥
कारिका अन्वयः - तैजसस्य अत्वविज्ञान उत्कर्षः स्फुटं दृश्यते मात्रासम्प्रतिपत्तौ तथाविधम् उभयत्वं स्यात् ।
(காரிகா அர்த்தம்) - தைஜசன் உகாரரூப மாத்திரை என்று அறிவதால் அதன் உத்கர்ஷம் (உயர்வு) ஸ்பஷ்ட்டமாய் காணப்படுகிறது. அதனுடைய உபயத்துவம் ஸ்பஷ்ட்டமாய் இருக்கிறது.
तैजसस्य उत्वविज्ञाने उकारत्वविवक्षायाम् उत्कर्षो दृश्यते स्फुटं स्पष्टमित्यर्थः । उभयत्वं च स्फुटमेवेति । पूर्ववत्सर्वम् ॥ २० ॥
(ச.பா) தைஜசனின் உத்வ (उत्व) விக்ஞானத்தால் அதாவது அதன் உகாரரூபமாய் பிரதிபாதனம் செய்வதில் அதனுடைய உத்கர்ஷம் ஸ்பஷ்டமாய் காணப்படுகிறது. இவ்வாறு உபயத்துவமும் ஸ்பஷ்டமாய் விளங்குகிறது, மற்றவை முன்பு போல் ஆகும்.
मकारभावे प्राज्ञस्य मानसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥ २१ ॥
कारिका अन्वयः- प्राज्ञस्य मकारभावे मानसामान्यम् उत्कटं मात्रा संप्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் மகாரமாத்திரா ரூபம். அவ்வாறு அறிவதால் முற்கூறப்பட்ட அளக்கும் தர்மமானது இரண்டிற்கும் சமான தர்மமாகும். இவ்வாறு அவைகளில் ஸாமான்ய தர்மமானது லயத்தை அடையும் தன்மை ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.
मकारत्वे प्राज्ञस्य मितिलयावुत्कृष्टे सामान्ये इत्यर्थः ॥ २१ ॥
(ச.பா) பிராக்ஞன் மகாரரூபம் என்பதால் அளக்கும் தன்மையும் லயமடையும் தன்மையும் சமானமாய் இருத்தல் ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.
त्रिषु धामसु यस्तुल्यं सामान्यं वेत्ति निश्चितः ।
स पूज्यः सर्वभूतानां वन्द्यश्चैव महामुनिः ॥ २२ ॥
कारिका अन्वयः - यः त्रिषु धामसु तुल्यं सामान्यं निश्चितः वेत्ति सः सर्व भूतानां पूज्यः वन्द्यश्चैव महामुनिः।
(காரிகா அர்த்தம்) - எந்த ஒரு புருஷன் மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பானவைகளாயும், சமானமானதாயும் நிச்சயமாய் அறிகிறானோ அந்த மாமுனி எல்லா ஜீவர்களாலும் பூஜிக்கவும் வணங்கத்தக்கவனாகவுமாகிறான்.
यथोक्तस्थानत्रये यः तुल्यमुक्तं सामान्यं वेत्ति, एवमेवैतदिति निश्चितः सन् सः पूज्यः वन्द्यश्च ब्रह्मवित् लोके भवति ।
(ச.பா) - முன்பு கூறப்பட்ட மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பான ரூபத்தில் கூறப்பட்ட சமானமான தன்மையை அது இவ்வாறு இருக்கிறது என்று அறிந்த பிரஹ்மவித் உலகில் பூஜைக்கும், வந்தனத்திற்கும் உரியவனாகிறான்.
यथोक्तैः सामान्यैः आत्मपादानां मात्राभिः सह एकत्वं कृत्वा यथोक्तोङ्कारं प्रतिपद्यते यो ध्यायति तम् — ॥ २२ ॥
(ச.பா) (அ.கை) முன்பு கூறியவாறு சமானத்தன்மை உடையதாய் ஆத்மாவின் பாதங்களின் மாத்திரைகளுடன் ஏகத்துவமாய் முற்கூறப்பட்ட ஓம்காரத்தை எவன் த்யானம் செய்கின்றானோ அந்த ஜீவனை-
अकारो नयते विश्वमुकारश्चापि तैजसम् ।
मकारश्च पुनः प्राज्ञं नामात्रे विद्यते गतिः ॥ २३ ॥
कारिका अन्वयः - अकारः विश्वं नयते उकारश्चापि तैजसं पुनः मकारः प्राज्ञं नयते अमात्रे गतिः न विद्यते ।
(காரிகா அர்த்தம்) - அகாரமானது விச்வனை அடைவிக்கிறது அவ்வாறே உகாரம் தைஜசனை அடைவிக்கிறது. மேலும் மகாரம் பிராக்ஞனை அடைவிக்கிறது ஆனால் அமாத்திரைக்கு எந்த கதியும் கிடையாது.
अकारो नयते विश्वं प्रापयति । अकारालम्बनमोङ्कारं विद्वान्वैश्वानरो भवतीत्यर्थः । तथा उकारः तैजसम् ; मकारश्चापि पुनः प्राज्ञम् , च - शब्दान्नयत इत्यनुवर्तते । क्षीणे तु मकारे बीजभावक्षयात् अमात्रे ओङ्कारे गतिः न विद्यते क्वचिदित्यर्थः ॥ २३ ॥
(ச.பா) அகாரம் விச்வனை அடைவிக்கச் செய்கிறது. அகாரத்தை ஆஸ்ரயித்த ஓம்காரத்தை அறிந்தவன் வைச்வானரனாகிறான். அவ்வாறே உகாரம் தைஜசனையும், மகாரம் பிராக்ஞனையும் அடைவிக்கச் செய்கிறது. மகாரம் க்ஷயம் அடைந்தபின் பீஜ பாவத்தின் க்ஷயம் அடைவதை அறிந்ததால் மாத்திரை அற்ற ஓம்காரத்தில் வேறு கதி ஒன்றும் இல்லை என்பது இதன் தாத்பரியம்.
इति ।
अमात्रश्चतुर्थोऽव्यवहार्यः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत एवमोङ्कार आत्मैव संविशत्यात्मनात्मानं य एवं वेद ॥ १२ ॥
(मन्त्र अन्वयः) - अमात्रः चतुर्थः अव्यवहार्यः प्रपञ्चो-पशमः शिवः अद्वैतः एवम् ओङ्कारः आत्मैव यः एवं वेद सः आत्मना आत्मानं संविशति ।
(மந்திர அர்த்தம்) - மாத்திரை அற்ற ஓம்காரம் துரீய ஆத்மா. அது வியவஹாரம் அற்றது, பிரபஞ்சம் நீங்கியது, சிவம், அத்வைதம் அவ்வாறே ஓம்காரம் ஆத்மாவே என்று எவன் ஒருவன் அறிகிறானோ அவன் தானே ஆத்மாவில் பிரவேசிக்கிறான்.
अमात्रः मात्रा यस्य न सन्ति, सः अमात्रः ओङ्कारः चतुर्थः तुरीयः आत्मैव केवलः अभिधानाभिधेयरूपयोर्वाङ्मनसयोः क्षीणत्वात् अव्यवहार्यः ; प्रपञ्चोपशमः शिवः अद्वैतः संवृत्तः एवं यथोक्तविज्ञानवता प्रयुक्त ओङ्कारस्त्रिमात्रस्त्रिपाद आत्मैव ; संविशति आत्मना स्वेनैव स्वं पारमार्थिकमात्मानम् , य एवं वेद ; परमार्थदर्शनात् ब्रह्मवित् तृतीयं बीजभावं दग्ध्वा आत्मानं प्रविष्ट इति न पुनर्जायते, तुरीयस्याबीजत्वात् ।
(ச.பா) - அமாத்திரை என்பது மாத்திரை எதற்கு இல்லையோ அது அமாத்திரை ஓம்காரத்தின் நான்காவது அதாவது அது துரீயம். கேவலம் ஆத்மாவே. அபிதானரூபவாக், அபிதேய ரூபமனம் இவற்றின் க்ஷயத்தை அறிவதால் அவ்வியவகாரி. அவ்வாறே பிரபஞ்சத்தை நீக்கி இருப்பதால் நிஷ்பிரபஞ்சம், சிவம், அத்வைதம். இவ்வாறு கூறப்பட்ட விக்ஞானவான் உபாசனை மூலமாக பிரயோகம் செய்யப்பட்ட மூன்று மாத்திரைகளை உடைய ஆத்மாவாகும். எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் தானாகவே தன்னுடைய பாரமார்த்திக ஆத்மாவில் பிரவேசம் செய்கிறான். பரமார்த்ததர்சீ பிரஹ்மவித் மூன்றாவது பீஜ பாவத்தை தஹித்து ஆத்மாவில் பிரவேசிக்கின்றான். ஆகையால் அவனுக்கு மறுபடியும் பிறத்தல் என்பதில்லை. ஏனெனில் துரீய ஆத்மா பீஜமற்றதாய் இருப்பதால்.
न हि रज्जुसर्पयोर्विवेके रज्ज्वां प्रविष्टः सर्पः बुद्धिसंस्कारात्पुनः पूर्ववत्तद्विवेकिनामुत्थास्यति । मन्दमध्यमधियां तु प्रतिपन्नसाधकभावानां सन्मार्गगामिनां संन्यासिनां मात्राणां पादानां च क्लृप्तसामान्यविदां यथावदुपास्यमान ओङ्कारो ब्रह्मप्रतिपत्तये आलम्बनीभवति । तथा च वक्ष्यति —
‘आश्रमास्त्रिविधाः’ (मा. का. ३ । १६) इत्यादि ॥ १२ ॥
(ச.பா) ரஜ்ஜு, சர்ப்பத்தின் விவேகத்தை அறிந்தபின் ரஜ்ஜுவில் லீனமான சர்ப்ப சம்ஸ்காரத்திலிருந்து மறுபடியும் முன்பு போல் விவேகிகளுக்கு உண்டாவது இல்லை. மந்தமத்யம புத்தியுள்ளவர்களான சாதகர்களும் சன்மார்க்கத்தில் செல்லும் சந்நியாசிகளும் முன்பு கூறப்பட்ட மாத்திரை பாதங்களின் நிச்சயம் செய்யப்பட்ட சாமான்ய பாவனையை அறிந்தவர்களுக்கு விதிப்படி உபாசனை செய்வதற்கான ஓம்காரம் பிரஹ்மத்தை அடைவதற்கு ஆஸ்ரயமாகிறது. இவ்வாறு “आश्रमास्रिविधाः” “மூன்று விதமான ஆஸ்ரமம்” என்பது முதலியவைகளால் கூறப்போகிறார்.
पुर्ववत् —
முன்புபோல
इति माण्डूक्योपनिषत्समाप्ता ॥
अत्रैते श्लोका भवन्ति —
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.
ओङ्कारं पादशो विद्यात्पादा मात्रा न संशयः ।
ओङ्कारं पादशो ज्ञात्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २४ ॥
कारिका अन्वयः - पादशः ओङ्कारं विद्यात् पादाः मात्राः न संशयः ओङ्कारं पादशः ज्ञात्वा किञ्चिदपि न चिन्तयेत् ।
காரிகா அர்த்தம் - ஓம்காரம் ஒவ்வொரு பாதமாக அறியப்படும் பொழுது பாதமே மாத்திரை. இதில் சந்தேஹமில்லை. இவ்வாறு ஓம்காரத்தை பாதக்கிரமமாய் அறிந்தபின் ஒன்றும் சிந்திக்கக்கூடாது (எண்ணுதல் கூடாது).
यथोक्तैः सामान्यैः पादा एव मात्राः, मात्राश्च पादाः ; तस्मात् ओङ्कारं पादशः विद्यात् इत्यर्थः । एवमोङ्कारे ज्ञाते दृष्टार्थमदृष्टार्थं वा न किञ्चिदपि प्रयोजनं चिन्तयेत्कृतार्थत्वादित्यर्थः ॥ २४ ॥
(ச.பா) முன்பு கூறப்பட்ட சமானத்தன்மை காரணத்தால் பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். ஆகையால் ஓம்காரத்தை பாதக்கிரமத்தால் அறிய வேண்டும். இவ்வாறு ஓம்காரத்தின் ஞானம் உண்டானதால் கிருதார்த்தன் ஆனதால் எந்த ஒரு திருஷ்ட்டார்த்தத்தையோ (இந்த லோகத்தின்) அல்லது அதிருஷ்ட்டார்த்த (பரலோகத்தின்) பிரயோஜனத்தைக் குறித்து சிந்திக்க மாட்டான் என்பது பொருள்.
युञ्जीत प्रणवे चेतः प्रणवो ब्रह्म निर्भयम् ।
प्रणवे नित्ययुक्तस्य न भयं विद्यतेक्वचित् ॥ २५ ॥
कारिका अन्वयः - चेतः प्रणवे युञ्जीत प्रणवः निर्भयं ब्रह्म प्रणवे नित्ययुक्तस्य क्वचित् भयं न विद्यते ।
காரிகா அர்த்தம் - சித்தத்தை ஓம்காரத்தில் சேர்த்து விடு. ஓம்காரமே நிர்பய பிரஹ்மபதம். ஓம்காரத்தில் எப்பொழுதும் நிலைத்திருப்பவனுக்கு பயம் என்பது ஒருநாளும் உண்டாகாது.
(ச.பா) முன்பு வியாக்கியானம் செய்யப்பட்ட பரமார்த்த ஸ்வரூபமான ஓம்காரத்தில் சித்தத்தை நிலை நிறுத்து. ஏனெனில் ஓம்காரம் நிர்பயபிரஹ்மம். அதிலேயே சித்தத்தை நிலைநிறுத்தியவனுக்கு ஒரு நாளும் பயம் என்பது உண்டாகாது. “विद्वान्नबिभेतिकुतश्चन” (வித்வான்நபிபே திகுதஸ்ச்சன) வித்வான் ஒன்றினாலும் பயத்தை அடையமாட்டான்) என்ற சுருதியினாலும் அறிகிறோம்.
प्रणवो ह्यपरं ब्रह्म प्रणवश्च परं स्मृतः ।
अपूर्वोऽनन्तरोऽबाह्योऽनपरः प्रणवोऽव्ययः ॥ २६ ॥
कारिका अन्वयः - प्रणवो हि अपरं ब्रह्म प्रणवः परः स्मृतः प्रणवः अपूर्वः अनन्तरः अबाह्यः अनपरः अव्ययः ।
காரிகா அர்த்தம் - ஓம் காரமே அபர பிரஹ்மமும், பரப்பிரஹ்மமும் ஆகும். அந்த ஓம்காரம் அபூர்வம் (அகாரணம்) உள்வெளி அற்றது, காரியமற்றது அவ்வாறேஅவ்யயம்.
परापरे ब्रह्मणी प्रणवः ; परमार्थतः क्षीणेषु मात्रापादेषु पर एवात्मा ब्रह्म इति ; न पूर्वं कारणमस्य विद्यत इत्यपूर्वः ; नास्य अन्तरं भिन्नजातीयं किञ्चिद्विद्यत इति अनन्तरः, तथा बाह्यमन्यत् न विद्यत इत्यबाह्यः ; अपरं कार्यमस्य न विद्यत इत्यनपरः, सबाह्याभ्यन्तरो ह्यजः सैन्धवघनवत्प्रज्ञानघन इत्यर्थः ॥ २६ ॥
(ச.பா) பரம் மற்றும் அபர பிரஹ்மம் பிரணவம். உண்மையில் மாத்திராரூபமான பாதங்கள் நீங்கிய உடன் ஆத்மா பிரஹ்மமே. ஆகையால் இதற்கு காரணம் ஒன்றும் இல்லாதால் அபூர்வம், அதைக்காட்டிலும் வேறானது இல்லாததால் அனந்தரம், அவ்வாறே இதற்கு பாஹ்யம் இல்லாதால் அபாஹ்யம். இதைத் தவிர வேறு காரியம் இல்லாததால் அநபரம். தன் நிலையிலிருந்து மாறுபடாததால் அவ்யயம். அப்பிரணவமான பரம்பொருள் சைந்தவம் (உப்புப்) போல் உள்ளும், புறமும் எங்கும் ஏகமாய் கனரூபமாய் நிறைந்தது ஆகும்.
सर्वस्य प्रणवो ह्यादिर्मध्यमन्तस्तथैव च ।
एवं हि प्रणवं ज्ञात्वा व्यश्नुते तदनन्तरम् ॥ २७ ॥
कारिका अन्वयः - सर्वस्य आदिः मध्यं तथैव च अन्तः प्रणवः हि एवं हि प्रणवं ज्ञात्वा तदनन्तरं व्यश्नुते ।
காரிகா அர்த்தம் - பிரணவமே எல்லாவற்றிற்கும் ஆதி, மத்யம், முடிவு ஆகும். பிரணவத்தை இவ்வாறு அறிந்தபின் அந்த ரூபத்தை அடைகிறான்.
आदिमध्यान्ता उत्पत्तिस्थितिप्रलयाः सर्वस्य प्रणव एव । मायाहस्तिरज्जुसर्पमृगतृष्णिकास्वप्नादिवदुत्पद्यमानस्य वियदादिप्रपञ्चस्य यथा मायाव्यादयः, एवं हि प्रणवमात्मानं मायाव्यादिस्थानीयं ज्ञात्वा तत्क्षणादेव तदात्मभावं व्यश्नुत इत्यर्थः ॥ २७ ॥
(ச.பா) - எல்லாவற்றின் ஆதி, மத்யம், முடிவு அதாவது உத்பத்தி, ஸ்திதி பிரளயம் இவை பிரணவமேயாகும். எவ்வாறு மாயாமயமான யானை, ரஜ்ஜுவில் சர்ப்பம், கானல் நீர். ஸ்வப்னம், இவைகளைப் போல் உத்பத்தியான ஆகாச முதலிய ரூப பிரபஞ்சத்தின் காரணம் மாயாவி, இவ்விதமாக மாயாவிக்கு ஒப்பாக பிரணவ ரூப ஆத்மாவை அறிந்த வித்வான் அந்த க்ஷணத்திலேயே அந்த ரூபத்தை அடைகிறான் என்பது பொருள்.
प्रणवं हीश्वरं विद्यात्सर्वस्य हृदये स्थितम् ।
सर्वव्यापिनमोङ्कारं मत्वा धीरो न शोचति ॥ २८ ॥
कारिका अन्वयः- सर्वस्य ह्य्दि संस्थितं प्रणवं हि ईश्वर विद्यात् धीरः ओङ्कारं सर्वव्यापिनं मत्वा न शोचति ।
காரிகா அர்த்தம் - எல்லோருடைய ஹிருதயத்தில் இருக்கும் பிரணவமே ஈஸ்வரன் என்று அறிவாய், இவ்வாறு சர்வ வியாபியான ஓம்காரத்தை அறிந்த தீரன் சோகத்தை அடையமாட்டான்.
सर्वप्राणिजातस्य स्मृतिप्रत्ययास्पदे हृदये स्थितमीश्वरं प्रणवं विद्यात् सर्वव्यापिनं व्योमवत् ओङ्कारमात्मानमसंसारिणं धीरः धीमान्बुद्धिमान् आत्मतत्त्वं मत्वा ज्ञात्वा न शोचति, शोकनिमित्तानुपपत्तेः,
‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इत्यादि श्रुतिभ्यः ॥ २८ ॥
(ச.பா) - ஸமஸ்த பிராணி ஜாதங்களான ஜீவர்களுடைய ஹிருதயத்தில் அதாவது ஸ்மிருதி பிரத்தியயம் இவைகளுக்கு ஆஸ்பதமான ஹிருதயத்தில் நிலைபெற்றதான பிரணவத்தை ஈஸ்வரனாக அறிய வேண்டும். புத்திசாலியான விவேகமுடைய ஸாதகன் அசம்சாரியான,. ஆத்ம ஸ்வரூபமான ஓம்கார ஸ்வரூபத்தை ஆகாசம் போல் எங்கும் வியாபித்ததாக எண்ணி (தியானித்து) சோக மோஹங்களை அடைவது இல்லை. இதையே “तरति शोकमात्मवित्” (தரதி சோகமாத்மவித் ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான்) என்று சுருதி வாக்கியம் கூறுகிறது.
अमात्रोऽनन्तमात्रश्च द्वैतस्योपशमः शिवः ।
ओङ्कारो विदितो येन स मुनिर्नेतरो जनः ॥ २९ ॥
कारिका अन्वयः - येन अमात्रः अनन्तमात्रः च द्वेैतस्य उपशमः शिवः ओंकारः विदितः सः मुनिः इतरः जनः न ॥
காரிகா அர்த்தம் - எதில் மாத்திரை இல்லையோ அது அநந்தமாத்திரை, துவைதம் நீங்கிய இடம் மேலும் சிவ (மங்கள) மயமானது ஓம்காரம் என்று அறிந்தவன் முனி. வேறு புருஷன் அல்ல.
अमात्रस्तुरीय ओङ्कारः । मीयते अनयेति मात्रा परिच्छित्तिः, सा अनन्ता यस्य सः अनन्तमात्रः ; नैतावत्त्वमस्य परिच्छेत्तुं शक्यत इत्यर्थः । सर्वद्वैतोपशमत्वादेव शिवः । ओङ्कारो यथाव्याख्यातो विदितो येन, स एव परमार्थतत्त्वस्य मननान्मुनिः ; नेतरो जनः शास्त्रविदपीत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) - அமாத்திரை துரீய ஓம்காரம் ஆகும். எதனால் அளக்கிறோமோ அதை மாத்திரை அதாவது “परिच्छित्ति” எனப்படுகிறது. மாத்திரை எதற்கு அனந்தமாய் இருக்கிறதோ அது அனந்த மாத்திரை எனப்படுகிறது அதை இவ்வளவு தான் என்று பரிச்சேதம் செய்ய முடியாது. எல்லா துவைதங்களும் ஒடுங்குவதால் சிவம் (மங்கலமயம்) என்கிறோம். இவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்ட ஓம்காரத்தை எவன் அறிகிறானோ அவன் பரமார்த்த தத்துவத்தை மனனம் செய்வதால் முனி எனப்படுகிறான் மற்ற புருஷர்கள் சாஸ்திரம் படித்தவர்களானாலும் முனி அல்ல.
इति प्रथममागमप्रकरणं सम्पूर्णम् ॥