ओङ्कारनिर्णयद्वारेण आगमतः प्रतिज्ञातस्याद्वैतस्य बाह्यविषयभेदवैतथ्याच्च सिद्धस्य पुनरद्वैते शास्त्रयुक्तिभ्यां साक्षान्निर्धारितस्य एतदुत्तमं सत्यमित्युपसंहारः कृतोऽन्ते । तस्यैतस्यागमार्थस्य अद्वैतदर्शनस्य प्रतिपक्षभूता द्वैतिनो वैनाशिकाश्च । तेषां चान्योन्यविरोधाद्रागद्वेषादिक्लेशस्पदं दर्शनमिति मिथ्यादर्शनत्वं सूचितम् , क्लेशानास्पदत्वात्सम्यग्दर्शनमित्यद्वैतदर्शनस्तुतये । तदिह विस्तरेणान्योन्यविरुद्धतया असम्यग्दर्शनत्वं प्रदर्श्य तत्प्रतिषेधेनाद्वैतदर्शनसिद्धिरुपसंहर्तव्या आवीतन्यायेनेत्यलातशान्तिप्रकरणमारभ्यते ।
(ச.பா) (அ.கை) ஓம்காரத்தின் நிர்ணயவாயிலாய் ஆகம பிரகரணத்தில் அத்வைதம் பிரதிக்ஞை செய்யப்பட்டது. (வைதத்ய பிரகரணத்தில்) பாஹ்ய விஷயபேதங்கள் மித்யாத்வ வாயிலாய் சித்தம் செய்யப்பட்டது. அதன் பின் அத்வைத பிரகரணத்தில் சாஸ்த்திர யுக்திகளால் சாக்ஷாத்தாய் நிச்சயம் செய்யப்பட்டது. முடிவில் “இது உத்தம சத்தியம்” என்று கூறி உபசம்ஹாரம் செய்யப்பட்டது. வேத தாத்பர்ய பூதமான இந்த அத்வைத தர்சனத்தின் விரோதியாகிய துவைதவாதம் அவ்வாறே வைநாசிகம் முதலிய வாதங்கள் இருக்கின்றன. அவைகளின் தர்சனம் பரஸ்பரம் விரோதி ஆவதால் ராகதுவேஷங்கள் முதலிய க்லேசங்களை ஆஸ்ரயிக்கின்றன. ஆகையால் அவைகள் மித்திய தர்சனத்துவம் காண்பிக்கப்பட்டது. ராகதுவேஷ முதலிய க்லேசங்களை ஆசரியிக்காததால் அத்வைததர்சனம் சம்யக் தர்சனமாகும் இவ்வாறு அது போற்றப்படுகிறது. இப்பொழுது துவைதவாதி முதலிய தர்சனங்கள் பரஸ்பரம் விரோதியாய் இருத்தலால் அதை விஸ்தாரமாய் அதன் மித்யாத்துவத்தை காட்டி அதை நீக்குவதின் வாயிலாய் ஆவீதநியாயத்தால் (அன்வய, வியதிரேகபூர்வகமாய்) அத்வைத தர்சனத்தின் சித்தியை உபசம்ஹாரம் செய்ய வேண்டியதற்காக அலாதசாந்தி பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.
तत्राद्वैतदर्शनसम्प्रदायकर्तुरद्वैतस्वरूपेणैव नमस्कारार्थोऽयमाद्यश्लोकः । आचार्यपूजा हि अभिप्रेतार्थसिद्ध्यर्थेष्यते शास्त्रारम्भे ।
(ச.பா) இதில் அத்வைததர்சன கர்த்தாவை அத்வைத ரூபமாய் நமஸ்காரம் செய்வதற்காக முதல் ஸ்லோகம். ஏனெனில் சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ஆச்சாரியரின் பூஜையானது அதில் அடங்கிய அர்த்தத்தின் சித்தியின் பொருட்டாகும்.
ज्ञानेनाकाशकल्पेन धर्मान्यो गगनोपमान् ।
ज्ञेयाभिन्नेन सम्बुद्धस्तं वन्दे द्विपदां वरम् ॥ १ ॥
कारिका अन्वयः - यः आकाशकल्पेन ज्ञानेन गगनोपमान धर्मान् ज्ञेय अभिन्नेन सम्बद्धः तं द्विपदांवरं वन्दे ।
காரிகா அர்த்தம் - எந்த ஞேயத்தைக்காட்டிலும் (ஆத்மாவைக் காட்டிலும்) அபின்னமான ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் ஆகாசம் போன்று தர்மங்களை (ஜீவன்களை) அறிகிறானோ அந்த புருஷோத்தமனை நமஸ்காரம் செய்கிறேன்.
आकाशेन ईषदसमाप्तमाकाशकल्पमाकाशतुल्यमित्येतत् । तेन आकाशकल्पेन ज्ञानेन । किम् ? धर्मानात्मनः । किंविशिष्टान् ? गगनोपमान् गगनमुपमा येषां ते गगनोपमाः, तानात्मनो धर्मान् । ज्ञानस्यैव पुनर्विशेषणम् — ज्ञेयैर्धर्मैरात्मभिरभिन्नम् अग्न्युष्णवत् सवितृप्रकाशवच्च यत् ज्ञानम् , तेन ज्ञेयाभिन्नेन ज्ञानेन आकाशकल्पेन ज्ञेयात्मस्वरूपाव्यतिरिक्तेन, गगनोपमान्धर्मान्यः सम्बुद्धः सम्बुद्धवान्नित्यमेव ईश्वरो यो नारायणाख्यः, तं वन्दे अभिवादये । द्विपदां वरं द्विपदोपलक्षितानां पुरुषाणां वरं प्रधानम् , पुरुषोत्तममित्यभिप्रायः ।
(ச.பா) எது ஆகாசத்தை அபேக்ஷித்து சிறிது அசம்பூர்ணமாய் இருக்கிறதோ அதை ஆகாசத்திற்கு ஒப்பானது எனப்படுகிறது. அந்த ஆகாச கல்ப ஞானத்தினால் என்ன? ஆத்மாவின் தர்மங்கள் எவ்விதமானது? ககனம் ஆதாவது ஆகாசம் எதற்கு உபமானமாகிறதோ அதை ககன உபமா என்கிறோம். அவ்வாறே ஆத்மதர்மங்களும். ஞானத்திற்கு விசேஷணம் தரப்படுகிறது. அதாவது அக்னியில் சூடுபோலும். சூரியனில் பிரகாசம்போலும் எந்த ஞானஞேய தர்மம் அதாவது ஆத்மாவைக்காட்டிலும் அபின்னமானது. அந்த ஞேய அபின்ன அதாவது ஞேய ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறாகாத ஆகாசம் போன்ற ஞானத்தால் எவன் ஆகாச உபமகர்மத்தை எப்பொழுதும் நன்றாக அறிகின்றானோ அப்படிப்பட்ட நாராயணன் எனப்படும் ஈஸ்வரனாகும். அந்த த்விபதாம்வர இரண்டு பதங்களால் உபலக்ஷித புருஷர்களில் மிக ஸ்ரேஷ்ட அதாவது பிரதான புருஷோத்தமனை வந்தனம் செய்கின்றேன்.
उपदेष्टृनमस्कारमुखेन ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वदर्शनमिह प्रकरणे प्रतिपिपादयिषितं प्रतिपक्षप्रतिषेधद्वारेण प्रतिज्ञातं भवति ॥ १ ॥
(ச.பா) உபதேசம் செய்தவரை நமஸ்காரம் செய்வதால் ஞானஞேய, ஞாத்ரு பேதமற்ற பரமார்த்த தத்துவதர்சனம் இந்த பிரகரணத்தில் பிரதிபாதிக்கப்பட்டது பிரதிபக்ஷத்தை நிஷேதம் செய்வதின் வாயிலாய் பிரதிபாதனம் செய்யப்பட்டதாகிறது. (அறியப்பட வேண்டியதாகிறது.)
अधुना अद्वैतदर्शनयोगस्य नमस्कारः तत्स्तुतये —
(ச.பா) (அ.கை) இப்பொழுது அத்வைத தர்சனயோகத்தை ஸ்துதிப்பதின் பொருட்டு நமஸ்காரம் செய்யப்படுகிறது.
अस्पर्शयोगो वै नाम सर्वसत्त्वसुखो हितः ।
अविवादोऽविरुद्धश्च देशितस्तं नमाम्यहम् ॥ २ ॥
कारिका अन्वयः - अस्पर्श योगो नाम वै सर्वसत्त्व सुखः हितः अविवादः अविरुद्धः च देशितः तम् अहं नमामि ।
காரிகா அர்த்தம் - எல்லா பிராணிகளுக்கும் (ஜீவர்களுக்கும்) சுகத்தை, அளிப்பதும் ஹிதத்தை உண்டுபண்ணுவதும், விவாதத்திற்கு உரியதற்றதும், விரோதம் அற்றதான அஸ்பர்சயோகம் உபதேசம் செய்யப்பட்டது. அதை நமஸ்கரிக்கின்றேன்.
स्पर्शनं स्पर्शः सम्बन्धो न विद्यते यस्य योगस्य केनचित्कदाचिदपि, सः अस्पर्शयोगः ब्रह्मस्वभाव एव वै नामेति ; ब्रह्मविदामस्पर्शयोग इत्येवं प्रसिद्ध इत्यर्थः । स च सर्वसत्त्वसुखो भवति । कश्चिदत्यन्तसुखसाधनविशिष्टोऽपि दुःखस्वरूपः, यथा तपः । अयं तु न तथा । किं तर्हि ? सर्वसत्त्वानां सुखः ।
(ச.பா) எந்த யோகத்திற்கு எதனுடனும் எப்பொழுதும் ஸ்பர்சம் அதாவது சம்பந்தம் இல்லையோ அதை அஸ்பர்சயோகம் என்கிறோம். அது பிரஹ்ம ஸ்வபாவம், वै (வை) नाम (நாம) இந்த பதங்களின் தாத்பர்யம் என்னவெனில் “பிரஹ்ம வேத்தாக்களின் அஸ்பர்சயோகம்” என்ற நாமம் மிகப்பிரசித்தமானது. மேலும் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பது. மற்ற விஷயங்கள் மிகவும் சுக சாதனத்தோடு கூடியதாய் இருந்தாலும் துக்கரூபமே ஆகிறது எவ்வாறு தவமோ அவ்வாறு இது அவ்வாறு அல்ல. ஆனால் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பதாகும்.
तथा इह भवति कश्चिद्विषयोपभोगः सुखो न हितः ; अयं तु सुखो हितश्च, नित्यमप्रचलितस्वभावत्वात् । किं च अविवादः, विरुद्धं वदनं विवादः पक्षप्रतिपक्षपरिग्रहेण यस्मिन्न विद्यते सः अविवादः । कस्मात् ? यतः अविरुद्धश्च ; य ईदृशो योगः देशितः उपदिष्टः शास्त्रेण, तं नमाम्यहं प्रणमामीत्यर्थः ॥ २ ॥
(ச.பா) அவ்வாறே இங்கு எந்த ஒரு விஷயபோகமும் சுகத்தைத் தருவதாய் இருந்தாலும் ஹிதத்தைத்தராது. ஆனால் இந்த சுக ஹிதமோ நித்தியமானது. மாறுபடும் சுவபாவம் அற்றது. இது விவாதமற்றது. இங்கு பக்ஷம், பிரதிபக்ஷம் இவைகளால் விருத்தமாக கூறி விவாதம் செய்யமுடியாது. ஆகையால் இது விவாதமற்றது. எதனால் இவ்வாறு இருக்கிறது? எனில் எல்லாவற்றையும் விட அவிருத்தமானது. எந்த யோகசாஸ்திரத்தில் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளதோ அதை நமஸ்கரிக்கிறேன்.
कथं द्वैतिनः परस्परं विरुध्यन्त इति, उच्यते —
(ச.பா) (அ.கை) எவ்வாறு துவைதவாதிகளுக்குள் பரஸ்பரம் விரோதம் இருக்கிறது? எனில் கூறுகிறார்.
भूतस्य जातिमिच्छन्ति वादिनः केचिदेव हि ।
अभूतस्यापरे धीरा विवदन्तः परस्परम् ॥ ३ ॥
कारिका अन्वयः - केचिदेव वादिनः हि भूतस्य जातिम् इच्छन्ति अपरेधीराः अभूतस्य जातिमिच्छन्ति परस्परं विवदन्तः (वर्तन्ते)।
காரிகா அர்த்தம் - இதில் சில வாதிகள் உற்பத்தி அற்றசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள். வேறு சிலவாதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் வாதித்துக் கொண்டு அசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள்.
भूतस्य विद्यमानस्य वस्तुनः जातिम् उत्पत्तिम् इच्छन्ति वादिनः केचिदेव हि साङ्ख्याः ; न सर्व एव द्वैतिनः । यस्मात् अभूतस्य अविद्यमानस्य अपरे वैशेषिका नैयायिकाश्च धीराः धीमन्तः, प्राज्ञाभिमानिन इत्यर्थः । विवदन्तः विरुद्धं वदन्तो हि अन्योन्यमिच्छन्ति जेतुमित्यभिप्रायः ॥ ३ ॥
(ச.பா) சில வாதிகளோ எனில் இங்கு சாங்கியர்கள் மாத்திரமே. மற்றவாதிகள் அல்ல என்பது “ஏவ” காரத்தில் கூறப்பட்டது. இருக்கக்கூடிய வஸ்துவிற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். மற்றவைசேஷிக, நையாயிகர்களான புத்திசாலிகள், இவர்கள் புத்திதிறனிலேயே பற்றுடையவர்கள். இல்லாததான (வஸ்துவிற்கு) உற்பத்தியை விரும்புகின்றனர். இவ்வாறு ஒருவருக்கொருவர் ஜயிக்க விரும்பிவாதம் புரிபவர்களாய் உள்ளனர்.
तैरेवं विरुद्धवदनेन अन्योन्यपक्षप्रतिषेधं कुर्वद्भिः किं ख्यापितं भवतीति, उच्यते —
(ச.பா) (அ.கை) பரஸ்பரம் விவாதம் செய்து கொண்டு ஒருவர் மற்றொருவருடைய பக்ஷத்தை கண்டனம் செய்துகொண்டிருக்கும் அந்தவாதிகளின் மூலமாய் எந்த சித்தாந்தம் பிரகாசப்படுத்த முடியும். அதைக் கூறுகிறார்.
भूतं न जायते किञ्चिदभूतं नैव जायते ।
विवदन्तोऽद्वया ह्येवमजातिं ख्यापयन्ति ते ॥ ४ ॥
कारिका अन्वयः - भूतं किञ्चित् न जायते, अभूतं नैव जायते एवं विवदन्तः ते द्वयाः अजातिं ख्यापयन्ति ।
காரிகா அர்த்தம் - சில மதத்தவர்கள் “ஒரு வஸ்துவும் உத்பத்தி யாவதில்லை” மேலும் சிலர் அத்வைத வஸ்துவிற்கு ஜன்மமில்லை என்று இவ்வாறு பரஸ்பரம் விவாதம் செய்யும் வாதிகள் அஜாதி அதாவது அஜாதவாதத்தையே விளக்குகிறார்கள்.
भूतं विद्यमानं वस्तु न जायते किञ्चिद्विद्यमानत्वादेव आत्मवत् इत्येवं वदन् असद्वादी साङ्ख्यपक्षं प्रतिषेधति सज्जन्म । तथा अभूतम् अविद्यमानम् अविद्यमानत्वान्नैव जायते शशविषाणवत् इत्येवं वदन्साङ्ख्योऽपि असद्वादिपक्षमसज्जन्म प्रतिषेधति । विवदन्तः विरुद्धं वदन्तः अद्वयाः अद्वैतिनो ह्येते अन्योन्यस्य पक्षौ सदसतोर्जन्मनी प्रतिषेधन्तः अजातिम् अनुत्पत्तिमर्थात्ख्यापयन्ति प्रकाशयन्ति ते ॥ ४ ॥
(ச.பா) இருக்கும் வஸ்து எப்பொழுதும் சிறிதும் உண்டாவதில்லை. இது ஆன்மா போல் இருக்கும் வஸ்து, ஆதலால் அது மறுபடியும் உண்டாவதில்லை என்று அசத்வாதிகள் சாங்கியர்களின் கொள்கையை கண்டிக்கிறார்கள். அவ்வாறே இல்லாத வஸ்து ஒருபோதும் உண்டாவது இல்லை. முயல்கொம்பு போல் இல்லாத வஸ்து ஒரு நாளும் எந்நிலையிலும் உண்டாவது இல்லை என சாங்கியர்கள், அஸத்வாதியின் கொள்கையை நிராகரிக்கின்றனர். இம்மாதிரி ஸத்தாகவும் அஸத்தாகவும் உள்ள வஸ்துவைக்காட்டிலும் வேறு ஒரு வஸ்து இன்மையால் உண்மையில் உத்பத்தி இல்லை என்று வாதிட்டுக் கொள்கின்றனர். அந்த த்வைதிகள் (பிரஹ்மத்தின்) உத்பத்தி இன்மையை வெளிப்படுத்தி தெளிவு கொள்கின்றனர்.
ख्याप्यमानामजातिं तैरनुमोदामहे वयम् ।
विवदामो न तैः सार्धमविवादं निबोधत ॥ ५ ॥
कारिका अन्वयः - तै ख्याप्यमानाम् अजातिं वयम् अनुमोदामहे तैः सार्धं न विवदामः (हे शिष्याः) अविवादं निबोधत
காரிகா அர்த்தம் - அவர்கள் மூலமாய் வெளிப்பட்ட அஜாதியை நாமும் ஒப்புக்கொள்கிறோம். நாம் அவர்களுடன் விவாதம் செய்வதில்லை. ஆகையால் அந்த விவாதமற்றதை (பரமார்த்த தரிசனத்தை) நன்றாக அறிந்துகொள்.
तैरेवं ख्यप्यमानामजातिम् एवमस्तु इति अनुमोदामहे केवलम् , न तैः सार्धं विवदामः पक्षप्रतिपक्षपरिग्रहेण ; यथा ते अन्योन्यमित्यभिप्रायः । अतः तम् अविवादं विवादरहितं परमार्थदर्शनमनुज्ञातमस्माभिः निबोधत हे शिष्याः ॥ ५ ॥
(ச.பா) அந்த வாதிகளால் இம்மாதிரி தங்கள் வாதத்தால் நிலை நிறுத்தப்படும் (பிரஹ்மத்தின்) உற்பத்தியின்மையை அல்லது பிறப்பின்மையை அத்வைத வாதிகளான நாம் அது அவ்வாறே இருக்கட்டும் என்று அங்கீகாரம் செய்கின்றோம். அவர்களுடன் பிரதி பக்ஷியான வாதி சொன்னான் என்பதற்காக, நாம் வீண்வாதம் செய்வதில்லை என்பதனை ஹே சீடர்களே விவாதமற்றதாக, விவாதமற்ற பரமார்த்த தர்சனமாக அறிவீர்களாக.
अजातस्यैव धर्मस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो धर्मो मर्त्यतां कथमेष्यति ॥ ६ ॥
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव धर्मस्य जातिम् इच्छन्ति अजातः अमृतः कथं मर्त्यताम् एष्यति ।
காரிகா அர்த்தம் - சில வாதிகள் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதான ஆத்ம தத்துவத்திற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். உண்மையாகவே அவர்கள் முறைப்படி உண்டாகுமேயானால் அது மரண தர்மத்தை அடைந்தே தீரும் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மரணமற்றதாயும் உள்ள ஆத்ம ஸ்வரூபமானது எவ்வாறு மரண ஸ்வபாவ முடையதாக ஆகும்.
सदसद्वादिनः सर्वे । अयं तु पुरस्तात्कृतभाष्यः श्लोकः ॥
(ச.பா) (அ.கை) இங்குவாதிகள் என்றால் சத்வாதி, அசத்வாதி இருவரையும் குறிக்கும் என்பது அபிப்பிராயம். இந்த ஸ்லோகத்தின் பாஷ்யம் முன்பே செய்யப்பட்டதாகும்.
न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ ७ ॥
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - மரணதர்மமற்ற வஸ்து ஒருநாளும் மரணமுடையதாகாது. மரணமுடையது ஒருநாளும் மரண தர்மமற்றதாக ஆகாது. ஏன்எனில் ஒன்றின் சுவபாவம்மாறி ஒன்றின் தர்மமாகாது என்பதாகும்.
स्वभावेनामृतो यस्य धर्मो गच्छति मर्त्यतात् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ ८ ॥
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ।
காரிகா அர்த்தம் - எவருடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரண தர்மமற்றது மரணமுடையதாக ஆகும் என்ற அவர்களுடைய சித்தாந்தப்படி ஜன்மம் உடையதாய் இருப்பதால் அந்த அம்ருத பதார்த்தம் எப்படி நிச்சலமானதாக ஆகும்.
उक्तार्थानां श्लोकानामिहोपन्यासः परवादिपक्षाणामन्योन्यविरोधख्यापितानुत्पत्त्यामोदनप्रदर्शनार्थः ॥
(ச.பா) - எதனுடைய அர்த்தம் முன்பே கூறப்பட்டதோ அவ்வாறு இப்பொழுது கூறப்பட்ட முன்று ஸ்லோகங்களின் தாத்பர்யம் என்னவெனில் இங்கு விபக்ஷிவாதிகளின் பக்ஷங்களில் பரஸ்பரம் விரோதத்தை தெரியப்படுத்தி அஜாத வாதத்தை ஒப்புக்கொள்வதின் பொருட்டு ஆகும்.
यस्माल्लौकिक्यपि प्रकृतिर्न विपर्येति, कासावित्याह —
(ச.பா) (அ.கை) - பிரக்ருதிக்கு எந்நிலையிலும் மாறுபாடு கிடையாது என்று கூறப்பட்டது இக்காரிகையில் பிரகிருதி சப்தத்திற்கு பொருள் கூறுகிறார்.
सांसिद्धिकी स्वाभाविकी सहजा अकृता च या ।
प्रकृतिः सेति विज्ञेया स्वभावं न जहाति या ॥ ९ ॥
कारिका अन्वयः - सांसिद्धिकी स्वाभाविकी सहजा च अकृता च या स्वभावं न जहाति सा प्रकृतिः विज्ञेया ।
காரிகா அர்த்தம் - எந்த உத்தம சித்திவாயிலாய் அடைந்ததும் ஸ்வபாவ சித்தமானதும், சஹஜமானதும் மேலும் அக்ருதா (செய்யப்படாதது) வானதுமாய் இருக்கிறதும், அவ்வாறே தன்னுடைய ஸ்வபாவத்தை பரித்தியாகம் செய்யாமலும் இருக்கிறதோ அது பிரகிருதி என்று அறியவேண்டும்.
सम्यक्सिद्धिः संसिद्धिः, तत्र भवा सांसिद्धिकी ; यथा योगिनां सिद्धानामणिमाद्यैश्वर्यप्राप्तिः प्रकृतिः, सा भूतभविष्यत्कालयोरपि योगिनां न विपर्येति । तथैव सा । स्वाभाविकी द्रव्यस्वभावत एव सिद्धा, यथा अग्न्यादीनामुष्णप्रकाशादिलक्षणा । सापि न कालान्तरे व्यभिचरति देशान्तरे वा, तथा सहजा आत्मना सहैव जाता, यथा पक्ष्यादीनामाकाशगमनादिलक्षणा ।
(ச.பா) - உத்தம சித்தி என்பது சம்சித்தி (संसिद्धि) யாகும், அதை உடையவன் “सांसिद्धिकी” (சாம்சித்திகி) எனப்படுகிறான். இவ்வாறு சித்தி அடைந்த யோகிகளுக்கு அணிமாதி ஐஸ்வர்யங்களின் அடைவு அவர்களுக்கு ஸ்வபாவமாகும். (பிரக்ருதியாகும்). அந்த யோகிகளுக்கு பூத (இறந்த) பவிஷ்யத் (இனிவரும்) காலங்களிலும் மாறுபாடு (விபர்யயம்) ஆகாது. எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே இருக்கும். அவ்வாறே ஸ்வபாவ வஸ்துவிற்கு ஸ்வபாவமாகவே சித்திக்கிறது, எவ்வாறு அக்னி முதலியவைகளுக்கு உஷ்ணத்தன்மையும், பிரகாசமும் பிரகிருதி (ஸ்வபாவம்) ஆகிறதோ அவ்வாறு. அதற்கு காலாந்தரத்திலோ, தேசாந்தரத்திலோ மாறுபாடு (வியபிசாரம்) உண்டாகாது. அவ்வாறே “सहजा” (சஹஜா) தன்னுடனேயே உத்பத்தி ஆகிறது எவ்வாறு பறவை முதலியவைகளுக்கு ஆகாசத்தில் செல்லுதல் முதலியவை ஸ்வபாவமாகிறதோ அவ்வாறு.
अन्यापि या काचित् अकृता केनचिन्न कृता, यथा अपां निम्नदेशगमनादिलक्षणा । अन्यापि या काचित्स्वभावं न जहाति, सा सर्वा प्रकृतिरिति विज्ञेया लोके । मिथ्याकल्पितेषु लौकिकेष्वपि वस्तुषु प्रकृतिर्नान्यथा भवति ; किमुत अजस्वभावेषु परमार्थवस्तुषु ? अमृतत्वलक्षणा प्रकृतिर्नान्यथा भवेदित्यभिप्रायः ॥ ९ ॥
(ச.பா) மற்றவர்களால் செய்யப்படாத (अकृता) அதாவது எவ்வாறு தண்ணீருக்கு பள்ளத்தை நோக்கிச் செல்லல் என்பது அதன் இயற்கையோ, அது போன்றதும் மேலும் தம்தம் ஸ்வபாவத்தை விடுவதில்லையோ அவையாவும் அந்த ஸ்வபாவமானது பிரகிருதி என்று உலகில் அறியத்தக்கதாகும் பொய்யாகக் கல்பிக்கப்பட்ட லௌகிகமான வஸ்துக்களின் பிரகிருதியே (இயற்கையே) மாறுபடுவதில்லை. அவ்வாறு இருக்க பிறப்பற்றபரமார்த்த உண்மையின் அம்ருதத் தன்மை எவ்வாறு மாறுபடும்? என்பது அபிப்பிராயம். மாறுபடாது என்பது கருத்து.
किंविषया पुनः सा प्रकृतिः, यस्या अन्यथाभावो वादिभिः कल्प्यते ? कल्पनायां वा को दोष इत्याह-
(ச.பா) (அ.கை) வாதிகள் எந்த அன்யதா (வேறு) பாவத்தைக் கல்பனை செய்கிறார்களோ அந்த பிரகிருதியின் விஷயம் என்ன? மேலும் அந்த வாதிகளின் கல்பனையில் என்ன தோஷம்? என்பதைக் கூறுகிறார்-
जरामरणनिर्मुक्ताः सर्वे धर्माः स्वभावतः ।
जरामरणमिच्छन्तश्च्यवन्ते तन्मनीषया ॥ १० ॥
कारिका अन्वयः - (आत्मनः) सर्वे धर्माः स्वभावतः जरामरणनिर्मुक्ताः तन्मनीषया जरामरणमिच्छन्तश्च्यवन्ते ।
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவகமாகவே ஜராமரணம் அற்றவர்கள். அவர்களின் ஜரா, மரணம் இவற்றைஎடுத்துக் கொள்ளுபவர்கள் இவ்வாறு விசாரம் செய்வதால் ஸ்வபாவத்திலிருந்து நழுவுகிறார்கள்.
जरामरणनिर्मुक्ताः जरामरणादिसर्वविक्रियावर्जिता इत्यर्थः । के ? सर्वे धर्माः सर्वे आत्मान इत्येतत् । स्वभावतः प्रकृतित एव । अत एवंस्वभावाः सन्तो धर्मा जरामरणमिच्छन्त इवेच्छन्तः रज्ज्वामिव सर्पमात्मनि कल्पयन्तः च्यवन्ते, स्वभावतश्चलन्तीत्यर्थः । तन्मनीषया जरामरणचिन्तया तद्भावभावितत्वदोषेणेत्यर्थः ॥ १० ॥
(ச.பா) “जरामरणनिर्मुक्ताः” (ஜராமரண நிர்முக்தா: ) என்றால் ஜரை, மரணம் முதலிய எல்லா விகாரங்களும் அற்றது. யார்? “सर्वेधर्माः” (சர்வேதர்மா:) அதாவது எல்லா ஜீவாத்மாவும் ஸ்வபாவமாக பிரகிருதியிலிருந்தே ஆகும். அந்தப்ரகிருதி எந்த மாற்றமும் அற்றது அந்த ஜராமரண சிந்தையால், அந்த ஜராமரணாதி பாவங்களை பாவித்ததினால் உண்டான தோஷத்தால் ஜராமரணங்களை விரும்புபவர்களாகி ரஜ்ஜு சர்ப்பம் போல் ஆன்மாவில் ஜராமரணங்களைக் கற்பித்து நழுவி விடுகிறார்கள். அதாவது தங்களுடைய இயற்கையான தன்மையிலிருந்து நழுவி விடுகிறார்கள்.
कथं सज्जातिवादिभिः साङ्ख्यैरनुपपन्नमुच्यते इति, आह वैशेषिकः —
(ச.பா) (அ.கை) சஜாதியவாதிகளாகிய சாங்கியர்களால் சொல்லப்பட்டது எவ்வாறு அசங்கதமாகும்? என்பதை வைசேஷிக மதவாதிகள் கூறுகின்றனர்-
कारणं यस्य वै कार्यं कारणं तस्य जायते ।
जायमानं कथमजं भिन्नं नित्यं कथं च तत् ॥ ११ ॥
कारिका अन्वयः - यस्य वै कारणं कार्यं तस्य कारणं कार्यं जायते जायमानं कथम् अजं तत् भिन्नं कथं नित्यं भवेत् ।
காரிகா அர்த்தம் - சாங்கியர்கள் மதத்தில் காரணமே காரியம். அவர்களுடைய சித்தாந்தப்படி காரணம் உத்பத்தியாகிறது. ஆனால் எப்பொழுது ஜன்மம் எடுத்ததோ அப்பொழுது அது எவ்வாறு அஜன்மாவாகும். மேலும் பின்னமானதாய் இருப்பதாலும் எவ்வாறு நித்தியமாகும்.
कारणं मृद्वदुपादानलक्षणं यस्य वादिनः वै कार्यम् , कारणमेव कार्याकारेण परिणमते यस्य वादिन इत्यर्थः । तस्य अजमेव सत् प्रधानादि कारणं महदादिकार्यरूपेण जायत इत्यर्थः । महदाद्याकारेण चेज्जायमानं प्रधानम् , कथमजमुच्यते तैः ? विप्रतिषिद्धं चेदम् — जायते अजं चेति ।
(ச.பா) - சில வாதிகளின் மதத்தில் ம்ருத் (மண்) போல் உபாதான காரணமே காரியமாகும். அதாவது அவர்கள் மதப்படி காரணமே காரியரூபமாய் மாறுகிறது (பரிணமிக்கிறது). அந்த சித்தாந்தப்படி பிரதானம் முதலிய காரணங்கள் அஜன்மாவாக இருந்தாலும் மஹத் முதலிய காரியரூபமாய் உண்டாகிறது என்பது இதன் தாத்பர்யம். இவ்வாறு பிரதானம் மஹதாதி ரூபமாய் உண்டாவதால் அதை எவ்வாறு அஜன்மா என்று கூறமுடியும். உத்பன்னமாகிறது என்றும், அஜன்மா என்றும் கூறுவது பரஸ்பரம் விருத்தமாகும்.
नित्यं च तैरुच्यते । प्रधानं भिन्नं विदीर्णम् ; स्फुटितमेकदेशेन सत् कथं नित्यं भवेदित्यर्थः । न हि सावयवं घटादि एकदेशेन स्फुटनधर्मि नित्यं दृष्टं लोके इत्यर्थः । विदीर्णं च स्यादेकदेशेनाजं नित्यं चेत्येतत् विप्रतिषिद्धं तैरभिधीयत इत्यभिप्रायः ॥ ११ ॥
(ச.பா) இதைத் தவிர பிரதானத்தை நித்தியம் என்று கூறுகிறார்கள் ஆனால் அது பின்னமானதும், ஒரு சமயத்தில் தோன்றுவதாயும் இருந்து கொண்டு அது எவ்வாறு நித்தியமாகும்? தாத்பர்யம் என்னவெனில் கடம் முதலியவைகள் அவயவங்களோடு கூடிய பதார்த்தங்கள் ஏக தேசமாய் இருந்து கொண்டு நித்தியமாய் இருப்பதாய் உலகில் எங்கும் காணப்படவில்லை. அது ஒரு சமயம் தோன்றிக்கொண்டு அஜமாயும் நித்தியமாயும் இருக்கிறது என்று கூறுவது விருத்தமாகும் என்பது அபிப்பிராயம்.
उक्तस्यैवार्थस्य स्पष्टीकरणार्थमाह —
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட அபிப்பிராயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காகக் கூறுகிறார்-
कारणाद्यद्यनन्यत्वमतः कार्यमजं तव ।
जायमानाद्धि वै कार्यात्कारणं ते कथं ध्रुवम् ॥ १२ ॥
कारिका अन्वयः - कारणात् यदि यत् अनन्यत्वं ततः कार्यं अजम् (इति प्राप्तम्) यदि जायमानात् हि कार्यात् कारणं ध्रुवं ते कथं भवति ।
காரிகா அர்த்தம் - காரணத்தைக்காட்டிலும் காரியம் அபின்னம் என்றால் உன் மதத்தில் காரியமும் அஜன்மாவாகும். அவ்வாறு ஆனால் உத்பன்னமாகும் காரியத்துடன் அபின்னம் என்றால் காரணம் எவ்வாறு நிச்சலமாகும்?
कारणात् अजात् कार्यस्य यदि अनन्यत्वमिष्टं त्वया, ततः कार्यमप्यजमिति प्राप्तम् । इदं चान्यद्विप्रतिषिद्धं कार्यमजं चेति तव । किञ्चान्यत् , कार्यकारणयोरनन्यत्वे जायमानाद्धि वै कार्यात् कारणम् अनन्यन्नित्यं ध्रुवं च ते कथं भवेत् ? न हि कुक्कुट्या एकदेशः पच्यते, एकदेशः प्रसवाय कल्प्यते ॥ १२ ॥
(ச.பா) அஜன்மா காரணத்திற்கு காரியம் அனன்யத் தன்மை உனக்கு இஷ்டம் என்றால் காரியமும் அஜன்மா என்று சித்திக்கிறது. நீ காரியம் என்றும் அஜன்மா என்றும் கூறுவது ஒன்றுக்கொன்று முரண்படுகிறது (விரோதமாகிறது). மேலும் காரியமும், காரணமும் அனன்யமாய் இருந்தால் உத்பத்தி தன்மை உடைய காரியத்திற்கு அபின்னமான அதன் காரணம் நித்யமானதாயும், நிச்சலமற்றதாயும் எவ்வாறு ஆக முடியும்? அவ்வாறு ஒரு நாளும் ஏற்பட முடியாது. எவ்வாறு எனில் ஒரு கோழியின் பாதிபாகம் சமைப்பதற்கும், பாதிபாகம் முட்டை இடுவதற்கும் என்று கல்பிக்க முடியாது.
किञ्चान्यत्-
(ச.பா) (அ.கை) இதைத்தவிர மேலும் -
अजाद्वै जायते यस्य दृष्टान्तस्तस्य नास्ति वै ।
जाताच्च जायमानस्य न व्यवस्था प्रसज्यते ॥ १३ ॥
कारिका अन्वयः - यस्य अजाद्वै जायते तस्य दृष्टान्तः नास्ति वै जातात् जायमानस्य व्यवस्था न प्रसज्यते ।
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் அஜன்ம வஸ்துவிலிருந்து எதாவது காரியம் உத்பத்தியானால் அதனிடம் நிச்சயமாக அதற்கு ஒரு திருஷ்டாந்தமும் இல்லை. மேலும் உத்பத்தியாகும் பதார்த்தங்களில் இருந்தே காரியத்தின் உத்பத்தி என்று எடுத்துக் கொண்டால் அநவஸ்தா தோஷம் ஏறப்டும்.
यत् अजात् अनुत्पन्नाद्वस्तुनः जायते यस्य वादिनः कार्यम् , दृष्टान्तः तस्य नास्ति वै ; दृष्टान्ताभावे अर्थादजान्न किञ्चिज्जायते इति सिद्धं भवतीत्यर्थः । यदा पुनः जातात् जायमानस्य वस्तुनः अभ्युपगमः, तदपि अन्यस्माज्जातात्तदप्यन्यस्मादिति न व्यवस्था प्रसज्यते । अनवस्था स्यादित्यर्थः ॥ १३ ॥
(ச.பா) எந்த வாதிக்கு உத்பத்தி ஆகாத வஸ்துவினின்று காரியம் உண்டாகிறதோ அந்தவாதியின் அவ்வாறு உண்டான காரியத்திற்கு சுட்டிக்காட்டத்தக்க திருஷ்ட்டாந்தம் இல்லையன்றோ! இவ்வாறு திருஷ்டாந்தம் இல்லாததால் அஜம் எனப்படும் பிரதானத்தினின்று ஏதும் உண்டாகவில்லை என்று சித்திக்கிறது. ஏனெனில்? அது பிறப்பற்றது என்பதால் அவ்வாறு சித்திக்கிறது. அதனால் பிறந்ததினின்றே மற்றொரு காரியம் பிறக்கிறது என்று கூறுவாயேயானால் அதுவும் அபத்தமாகும். உண்டான காரியத்தினின்று மற்றொரு (உண்டாகின்ற) காரியத்திற்குத் தோற்றம் எனில் அது ஒரு காரியத்தின்று மற்றொரு காரியத்திற்குத் தோற்றம், அக்காரியத்தினின்று பிரிதொன்று என்றுக் கூறிக்கொண்டே போனால் முடிவு என்பதே ஏற்படாது. இதற்கு முடிவு இல்லாததால் இது அநவஸ்தா தோஷமாகும் என்று சாங்கியர்களை நிராகரித்தார்.
(ச.பா) (அ.கை) “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எந்த அவஸ்தையில் இந்த திருஷ்டியில் எல்லாமே ஆத்மாவாகிறது) இந்த சுருதியானது உண்மையில் துவைதத்தின் அபாவத்தைக் கூறியதோ அதை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்-
हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते ॥ १४ ॥
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य आदिः हेतुः तैः हेतोः फलस्य च अनादिः कथम् उपवर्ण्यते ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்கு காரணம் பலமோ அவ்வாறே பலத்திற்குக் காரணம் ஹேதுவோ அவர்கள் எவ்வாறு ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதித்துவத்தைக் கூறமுடியும்.
हेतोः धर्मादेः आदिः कारणं देहादिसङ्घातः फलं येषां वादिनाम् ; तथा आदिः कारणं हेतुर्धर्मादिः फलस्य च देहादिसङ्घातस्य ; एवं हेतुफलयोरितरेतरकार्यकारणत्वेन आदिमत्त्वं ब्रुवद्भिः एवं हेतोः फलस्य च अनादित्वं कथं तैरुपवर्ण्यते विप्रतिषिद्धमित्यर्थः । न हि नित्यस्य कूटस्थस्यात्मनो हेतुफलात्मकता सम्भवति ॥
(ச.பா) எந்த த்வைதவாதிகளுக்கு தர்ம அதர்மங்களுக்குக் காரணம் பஞ்சபூதங்களின் சேர்க்கைகளான சரீரம் முதலானவைகளாகும். அவ்வாறே சரீரம் முதலான பஞ்ச பூதங்களுக்கு (அவைகளைப் பெற) காரணம் தர்மா தர்மங்களே. இதன்படி மனுஷ்யாதி சரீரங்களை அடைவதற்குக் காரணம் தர்மாதர்மங்கள், அந்த தர்மாதர்மங்களை ஈட்டுவதற்குக் காரணம் சரீரம் முதலானவை, எனவே இவ்விரண்டும் ஒன்றே என்று காரணமாயும், காரியமாயும் கொண்டுள்ளது என்று, ஓன்றை மற்றொன்றிற்கு ஆரம்பமாகக் கூறும் வாதிகளால், அந்தக்காரண, காரியங்களுக்கு ஆரம்பம் இன்மை (अनादिमत्वम्) எவ்வாறு நிரூபிக்கமுடியும். ஆகவே அது முரண்பாடாகும். எனவே அவர்களால் காரணத்திற்கும், பலத்திற்கும் ஆரம்பம் இன்மை எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது. நித்தியமான கூடஸ்தனுக்கு ஹேது பலாத்மக பாவம் ஒரு போதும் சம்பவிப்பது இல்லை.
कथं तैर्विरुद्धमभ्युपगम्यत इति, उच्यते —
(ச.பா) (அ.கை) அவர்கள் எவ்வாறு விருத்தகொள்கையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறார்-
हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
तथा जन्म भवेत्तेषां पुत्राज्जन्म पितुर्यथा ॥ १५ ॥
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य च आदिः हेतुः तेषां यथा पुत्रात् पितुः जन्म तथा जन्म भवेत् ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்குக் காரணம் பலமும். பலத்திற்குக் காரணம் ஹேதுவாகிறதோ, அவற்றின் உத்பத்தி எவ்வாறு புத்திரனிடமிருந்து பிதாவின் ஜன்மம் உண்டாகுமோ அவ்வாறு ஆகும்.
हेतुजन्यादेव फलात् हेतोर्जन्माभ्युपगच्छतां तेषामीदृशो विरोध उक्तो भवति, यथा पुत्राज्जन्म पितुः ॥
(ச.பா) ஹேதுவிலிருந்து உத்பத்தியாகும் பலத்திலிருந்து ஹேது உத்பத்தி (ஜன்மம்) என்றகொள்கை உடையவர்கள் மதத்தில் உள்ள விரோதமானது புத்திரனிடத்திலிருந்து பிதாவிற்கு ஜன்மம் என்பது போல் ஆகும்.
यथोक्तो विरोधो न युक्तोऽभ्युपगन्तुमिति चेन्मन्यसे
(ச.பா) (அ.கை) பூர்வபக்ஷியான நீ ஸித்தாந்தியாகிய என்னால் உன்வாதத்தில் எடுத்துக் காட்டப்பட்ட முறைகேடு ஒப்புக்கொள்ள கூடியது அல்ல என்று கூறுவாயேயானால், மேலும் அதில் உள்ள முறைக் கேட்டைக் கூறுகிறேன் கேள் என்பதாகும்.
सम्भवे हेतुफलयोरेषितव्यः क्रमस्त्वया ।
युगपत्सम्भवे यस्मादसम्बन्धो विषाणवत् ॥ १६ ॥
कारिका अन्वयः - त्वया हेतुफलयोः सम्भवे क्रमः एषितव्यः यस्मात् युगपत्संभवे विषाणवत् असम्बन्धः भवेत् ।
காரிகா அர்த்தம் - வாதியாகிய நீ ஹேது, பலம் இவைகளின் உற்பத்தியில் கிரமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இரண்டும் ஒன்றாய் உத்பத்தியாவதை ஒப்புக்கொண்டால் (பசுவினுடைய இடது, வலது) கொம்பு போல் சம்பந்த மற்றதாகிவிடும்.
सम्भवे उत्पत्तौ हेतुफलयोः क्रमः एषितव्यः अन्वेष्टव्यः त्वया — हेतुः पूर्वं पश्चात्फलं चेति । इतश्च युगपत्सम्भवे यस्माद्धेतुफलयोः कार्यकारणत्वेन असम्बन्धः, यथा युगपत्सम्भवतोः सव्येतरगोविषाणयोः ॥
(ச.பா) உன்னால் ஹேது, பலன் இவைகளுடைய அல்லது காரியகாரணங்களுடைய தோற்றத்தில் ஒரு முறையானது தேடத்தக்கது ஆகும். அதாவது ஹேது என்பது பலத்திற்கு முன்நிலையில் நிச்சயம் இருக்க வேண்டியது என்பது ஹேதுவின் பின் நிலையில் நிச்சயம் உண்டாக வேண்டியது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறு ஏற்காவிடில் ஹேது பலன்கள் ஒரே சமயத்தில் தோன்றுமேயானால் அவைபசுவின் கொம்பைப்போல் அதாவது இடது வலது பாகங்களில் தோன்றும் பசுவின் கொம்பைப்போல் காரண, காரிய சம்பந்த மற்றவைகளாகும். எனவே ஒரேசமயத்தில் தோன்றும் இரண்டிற்கும் காரியகாரணத்துவம் என்பது இல்லை. பசுவின் கொம்பு போல் என்றவ்யாப்தி ஏற்பட்டதால் காரிய, காரணங்களுக்குள் ஓர் கிரமம் வேண்டும் என்பது உறுதிப்பட்டதாயிற்று.
कथमसम्बन्ध इत्याह —
(ச.பா) (அ.கை) எவ்வாறு சமபந்தம் அற்றதாகிறது? என்பதைக் கூறுகிறார்-
फलादुत्पद्यमानः सन्न ते हेतुः प्रसिध्यति ।
अप्रसिद्धः कथं हेतुः फलमुत्पादयिष्यति ॥ १७ ॥
कारिका अन्वयः - ते हेतुः फलात् उत्पद्यमानः सत् न प्रसिध्यति अप्रसिद्धः फलं कथम् उत्पादयिष्यति ।
காரிகா அர்த்தம் - உன்னுடைய மதத்தில் ஹேதுவானது பலத்திலிருந்து உண்டானது என்றால் அது சித்தமாகாது. மேலும் சித்தமாகாத ஹேதுவிலிருந்து எவ்வாறு பலம் உத்பத்தியாகும்?
जन्यात्स्वतोऽलब्धात्मकात् फलात् उत्पद्यमानः सन् शशविषाणादेरिवासतो न हेतुः प्रसिध्यति जन्म न लभते । अलब्धात्मकः अप्रसिद्धः सन् शशविषाणादिकल्पः तव स कथं फलमुत्पादयिष्यति ? न हि इतरेतरापेक्षसिद्ध्योः शशविषाणकल्पयोः कार्यकारणभावेन सम्बन्धः क्वचिद्दृष्टः अन्यथा वेत्यभिप्रायः ॥ १७ ॥
(ச.பா) ஜன்யம் அதாவது எது ஸ்வத சித்தமில்லையோ அது சசவிஷாணம் (முயல்கொம்பு) போல் அசத் பலத்திலிருந்து உண்டாவதால் அதற்கு ஹேதுவே இல்லை அதாவது அதற்கு ஜன்மமே இல்லை. இவ்வாறு முயற்கொம்பிற்கு சமமாய் எதற்கு ஸ்வதः அடையப்பட வில்லையோ அது அப்பிரசித்த ஹேதுவாகும். ஆகையால் உம்முடைய மதத்தில் எவ்வாறு பலன் உண்டாகும்? ஒன்று மற்றொன்றின் அபேக்ஷயைால் சித்திப்பதும், அவ்வாறே முயற்கொம்பு போல் எப்பொழுதும் அசத்தாய் இருப்பதுமான பதார்த்தத்திற்கு காரியகாரண பாவத்தாலோ அல்லது வேறுவகையாகவோ சம்பந்தம் காணப்படவில்லை என்பது இதன் அபிப்பிராயம்.
यदि हेतोः फलात्सिद्धिः फलसिद्धिश्च हेतुतः ।
कतरत्पूर्वनिष्पन्नं यस्य सिद्धिरपेक्षया ॥ १८ ॥
कारिका अन्वयः- हेतोः फलात् सिद्धिः फलसिद्धिः च हेतु-तः (इति) यदि कतरत् पूर्व निष्पन्नम् यस्य अपेक्षया सिद्धिः स्यात् ।
காரிகா அர்த்தம் - உங்களுடைய மதத்தில் முதலில் ஹேது சித்திக்கிறது மேலும் ஹேதுவிலிருந்து பலம் சித்திக்கிறது என்றால் முதலில் உண்டானது யார்? எதை அபேக்ஷித்து மற்றொன்று ஆவிர்பவித்தது (உண்டானது).
असम्बन्धतादोषेणापाकृतेऽपि हेतुफलयोः कार्यकारणभावे, यदि हेतुफलयोरन्योन्यसिद्धिरभ्युपगम्यत एव त्वया, कतरत्पूर्वनिष्पन्नं हेतुफलयोः ? यस्य पश्चाद्भाविनः सिद्धिः स्यात्पूर्वसिद्धापेक्षया, तद्ब्रूहीत्यर्थः ॥
(ச.பா) ஹேது, பலம் இவைகளின் காரியகாரண பாவத்தின் அசம்பந்த தோஷத்தை நிராகரணம் செய்ததை அறிந்தும் நீ ஹேது, பலன் இவை ஒன்று மற்றொன்றினால் சித்திக்கிறது என்று கருதுவாயாகில் ஹேது, பலன் இவைகளில் எது முதலில் உண்டாயிற்று என்பதைக்கூறு. எதனுடைய பூர்வ சித்தியின் அபேக்ஷயைால் பின்னால் தோன்றுவதின் சித்தி எவ்வாறு கொள்ளப்பட்டது? என்பதைக்கூறு. என்பது இதன் தாத்பர்யம்.
अथ एतन्न शक्यते वक्तुमिति मन्यस
(ச.பா) (அ.கை) நீ அவ்வாறு கருதுவாயானால் அதை கூறுவதற்கு முடியாததாகும்.
अशक्तिरपरिज्ञानं क्रमकोपोऽथ वा पुनः ।
एवं हि सर्वथा बुद्धैरजातिः परिदीपिता ॥ १९ ॥
कारिका अन्वयः - अशक्तिः पुनः अपरिज्ञानम् अथवा क्रम कोपः एवं हि बुद्धैःअजातिः सर्वथा परिदीपिता ।
காரிகா அர்த்தம் - அது அசக்தி அக்ஞானமாகும். மேலும் அதனால் முன்பு கூறப்பட்ட க்ரமமும் விபர்யயமாகும். இவ்வாறு அந்த புத்திமான்கள் எப்பொழுதும் அஜாதி (பரமார்த்த தத்துவம்)யையே விளக்குகின்றார்கள் (பிரகாசம் செய்கின்றார்கள்)
सेयमशक्तिः अपरिज्ञानं तत्त्वाविवेकः, मूढतेत्यर्थः । अथ वा, योऽयं त्वयोक्तः क्रमः हेतोः फलस्य सिद्धिः फलाच्च हेतोः सिद्धिरिति इतरेतरानन्तर्यलक्षणः, तस्य कोपः विपर्यासोऽन्यथाभावः स्यादित्यभिप्रायः । एवं हेतुफलयोः कार्यकारणभावानुपपत्तेः अजातिः सर्वस्यानुत्पत्तिः परिदीपिता प्रकाशिता अन्योन्यपक्षदोषं ब्रुवद्भिर्वादिभिः बुद्धैः पण्डितैरित्यर्थः ॥ १९ ॥
(ச.பா) இந்த அசக்தி - அபரிக்ஞானம் - தத்தவத்தின் அவிவேகம் அதாவது மூடத்தன்மை. அல்லது எது மற்றொன்றின் முன்பின் ரூப கிரமம் உன்னால் கூறப்பட்டதோ, அதாவது ஹேதுவினால் பலசித்தி உண்டாகிறது. பலத்திலிருந்து ஹேது என்பது அதன்கோபம் அதாவது விபர்யாசம் - அன்யதாபாவம் (வேறுபாவம்) உண்டாகும் என்பது இதன் அபிப்பிராயம். இவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் காரியகாரண பாவம் அசம்பவமாதலால் ஒன்று மற்றொன்றின் பக்ஷத்தின் தோஷத்தைக் கூறுகின்ற பிரதிபக்ஷ புத்திமான்கள் எல்லாவற்றின் அஜாதி அதாவது உத்பத்தி இன்மையை தெளிவுபடுத்துகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)
(ச.பா) (பூர்வ) - நாங்கள் கூறியது ஹேது, பலத்தை பரஸ்பரம் காரியகாரண பாவமாகும். நீங்கள் அதன் சப்தமாத்திரத்தைப் பற்றிக்கொண்டு நீர்கூறும் ஏமாற்று வாக்கியங்கள் புத்திரனிடமிருந்து ஜன்மம், பசுவின்கொம்புகள் இவை முதலியவைகள் போல் சம்பந்தம் அற்றதாய் இருக்கிறது. நாங்கள் அசித்தமான ஹேதுவினால் பலத்தின் சித்தியையோ அல்லது அசித்தமான பலத்திலிருந்து ஹேதுவின் சித்தியையோ ஏற்றுக் கொள்வதில்லை. நாங்கள் பீஜாங்குரம் போல் கேவல அதனுடைய காரியகாரணத்தை ஒப்புக்கொள்கிறோம்.
अत्रोच्यते —
(ச.பா) (சித்தாந்தி) - இதைக் குறித்து நாங்கள் கூறுகிறோம்.
बीजाङ्कुराख्यो दृष्टान्तः सदा साध्यसमो हि सः ।
न हि साध्यसमो हेतुः सिद्धौ साध्यस्य युज्यते ॥ २० ॥
कारिका अन्वयः - यः बीजाङ्कुराख्य दृष्टान्तः सः सदा साध्यसमः हि साध्यसमः हेतुः साध्यस्य सिद्धौ न हि युज्यते ॥ २० ॥
காரிகா அர்த்தம் - பீஜாங்குரம் என்னும் திருஷ்டாந்தம் எப்பொழுதும் சாத்தியத்திற்கு சமானமாகும். எந்த ஒரு ஹேது சாத்யம் போல் ஆகிறதோ அப்பொழுது சாத்தியத்தின் சித்திக்கு உபயோகம் அற்றதாகிறது.
बीजाङ्कुराख्यो दृष्टान्तो यः, स साध्येन समः तुल्यो ममेत्यभिप्रायः । ननु प्रत्यक्षः कार्यकारणभावो बीजाङ्कुरयोरनादिः ; न, पूर्वस्य पूर्वस्य अपरभावादादिमत्त्वाभ्युपगमात् । यथा इदानीमुत्पन्नोऽपरोऽङ्कुरो बीजादादिमान् बीजं चापरमन्यस्मादङ्कुरादिति क्रमेणोत्पन्नत्वादादिमत् । एवं पूर्वः पूर्वोऽङ्कुरो बीजं च पूर्वं पूर्वमादिमदेवेति प्रत्येकं सर्वस्य बीजाङ्कुरजातस्यादिमत्त्वात्कस्यचिदप्यनादित्वानुपपत्तिः । एवं हेतुफलयोः ।
(ச.பா) பீஜாங்குர திருஷ்டாந்தமானது சாத்யத்திற்கு சமானமாகும் என்பது என்னுடைய அபிப்பிராயம். பீஜம், அங்குரம் இவைகளின் காரியகாரண பாவம் பிரத்யக்ஷ அநாதி என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் அதில் பூர்வபூர்வ (அங்குரம், பலம்)த்தின் அபரத்துவம் ஆதிமத்துவம் ஒப்புக்கொள்வதால் ஆகும். எவ்வாறு இந்த சமயத்தில் பீஜத்திலிருந்து உத்பன்னமான வேறு அங்குரம் ஆதியாகிறதோ அவ்வாறு கிரமமாய் வேறு அங்குரத்திலிருந்து உண்டான வேறு பீஜமும் ஆதிமான் ஆகிறது. இவ்வாறு பூர்வபூர்வ அங்குரம் பூர்வபூர்வ பீஜமும் ஆதிமான் ஆகிறது. ஆகையால் எல்லா பீஜாங்குரவர்கத்தின் பீஜமும், அங்குரமும் ஆதிமான் ஆவதால் எதற்கும் அநாதி ஆவது சம்பவிக்காது. இந்த நியாயத்தை ஹேது பலம் ஆகிறவிஷயத்திலும் அறிந்து கொள்ளவேண்டும்.
अथ बीजाङ्कुरसन्ततेरनादिमत्त्वमिति चेत् ; न, एकत्वानुपपत्तेः ; न हि बीजाङ्कुरव्यतिरेकेण बीजाङ्कुरसन्ततिर्नामैका अभ्युपगम्यते हेतुफलसन्ततिर्वा तदनादित्ववादिभिः । तस्मात्सूक्तम् ‘हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते’ इति । तथा च अन्यदप्यनुपपत्तेर्न च्छलमित्यभिप्रायः । न च लोके साध्यसमो हेतुः साध्यस्य सिद्धौ सिद्धिनिमित्तं युज्यते प्रयुज्यते प्रमाणकुशलैरित्यर्थः । हेतुरिति दृष्टान्तोऽत्रभिप्रेतः, गमकत्वात् ; प्रकृतो हि दृष्टान्तः, न हेतुरिति ॥
(ச.பா) பீஜாங்குர பரம்பரையை அநாதி என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அதற்கு ஏகத்துவம் கிடையாது. ஹேது பலத்தின் அநாதித்துவத்தை கூறும் பீஜாங்குரத்தைக் காட்டிலும் வேறு பரம்பரையோ அல்லது ஹேது பரம்பரா என்று எந்த ஒரு ஸ்வதந்திர பதார்த்தமும் இல்லை. ஆகையால் அவர்கள் எவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் அநாதித்துவத்தை பிரதிபாதனம் செய்கிறார்கள் என்று கூறுவது மிகவும் சரியானது. இதைத் தவிர பொருந்தாததின் காரணத்தால் நாங்கள் கூறுவது சிறிது மாறுபட்டது (ஏமாற்றுவார்த்தை) அல்ல. என்பது இதன் தாத்பர்யம். இதன் அபிப்பிராயம் என்னவெனில் உலகில் பிரமாண குசலர்களால் சாத்யத்தின் சித்திக்காக சாத்யத்தைப் போன்றஹேதுவின் பிரயோகம் செய்யப்படவில்லை. இங்கு (ஹேது) சப்தமானது திருஷ்டாந்த அபிப்பிராயத்தில் வந்தது. ஏனெனில் அது அதன் ஞாபகப்படுத்துதல் ஆகும். இங்கு திருஷ்டாந்தத்தின் பிரகரணம் ஹேதுவிற்கு அல்ல.
कथं बुद्धैरजातिः परिदीपितेति, आह —
(ச.பா) (அ.கை) பண்டிதர்கள் அஜாதியை எவ்வாறு விளக்குகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)? என்பதை குறித்து கூறுகிறார்கள்.
पूर्वापरापरिज्ञानमजातेः परिदीपकम् ।
जायमानाद्धि वै धर्मात्कथं पूर्वं न गृह्यते ॥ २१ ॥
कारिका अन्वयः - पूर्वापर अपरिज्ञानम् अजाते परिदीपकम् जायमानात् हि धर्मात् वै पूर्वं कथं न गृह्यते ॥ २१ ॥
காரிகா அர்த்தம் - (ஹேதுவா, பலமா) இவைகளுள் எது முன்னையது, எது பிந்தியது என்பதின் அறியாமை பிறப்பின்மைக்கு விளக்கமாகும், ஏனெனில் காரியம் உத்பத்தி ஆனபின் அதன்காரணம் ஏன் கிரஹிக்கப்படவில்லை?
यदेतत् हेतुफलयोः पूर्वापरापरिज्ञानम् , तच्चैतत् अजातेः परिदीपकम् अवबोधकमित्यर्थः । जायमानो हि चेद्धर्मो गृह्यते, कथं तस्मात्पूर्वं कारणं न गृह्यते ? अवश्यं हि जायमानस्य ग्रहीत्रा तज्जनकं ग्रहीतव्यम् , जन्यजनकयोः सम्बन्धस्यानपेतत्वात् ; तस्मादजातिपरिदीपकं तदित्यर्थः ॥
(ச.பா) - ஹேதுவா, பலமா இவைகளுள் எது முன்னையது. எது பிந்தியது என்பதை அறியாதது பிறப்பின்மைக்கு விளக்கமாகும். காரிய உத்பன்னமாவதைக் கிரஹிக்கும் பொழுது அதனால் அதன் முந்தியதாகிய காரணம் ஏன் கிரஹிக்கப்படுவதில்லை? உத்பன்னமான வஸ்துவை கிரஹணம்செய்யும் புருஷன் அதன் உத்பத்திக்கு காரணமானதும் அவசியம் கிரஹிக்கப்பட வேண்டும் ஏனெனில் ஜன்ய, ஜனக பதார்த்தங்களின் சம்பந்தம் நீக்க முடியாதது ஆகும். ஆகையால் தாத்பரியம் என்னவெனில் அஜாதியைதான் பிரகாசிக்கச் செய்கிறது.
इतश्च न जायते किञ्चित् यज्जायमानं वस्तु
(அ.கை) ஆகையால் ஒருவஸ்துவும் உத்பன்னமாகாது ஏனெனில் உத்பத்தியாகும் வஸ்து-
स्वतो वा परतो वापि न किञ्चिद्वस्तु जायते ।
सदसत्सदसद्वापि न किञ्चिद्वस्तु जायते ॥ २२ ॥
कारिका अन्वयः - किञ्चिद्वस्तु स्वतोवा परतो वाऽपि सत् असत् सदसद्वा अपि न जायते ।
காரிகா அர்த்தம் - எந்த ஒரு வஸ்துவும் தானாகவோ பிறவற்றாலோ உத்பத்தியாவதில்லை. ஏனெனில் சத்தாகவோ, அசத்தாகவோ, சதசத்தாகவோ ஒரு வஸ்துவும் உத்பன்னமாவது இல்லை.
स्वतः परतः उभयतो वा सत् असत् सदसद्वा न जायते, न तस्य केनचिदपि प्रकारेण जन्म सम्भवति । न तावत्स्वयमेवापरिनिष्पन्नात्स्वतः स्वरूपात्स्वयमेव जायते, यथा घटस्तस्मादेव घटात् । नापि परतः अन्यस्मादन्यः, यथा घटात्पटः । तथा नोभयतः, विरोधात् , यथा घटपटाभ्यां घटः पटो वा न जायते ।
(ச.பா) தன்னாலோ, மற்றவராலோ அல்லது இந்த இருவராலோ சத், அசத் அல்லது சதசத்ரூபமாக உத்பத்தியாவதில்லை. எந்த விதமாகவும் அதன் ஜன்மம் சம்பவிக்காது. எவ்வாறு கடமானது அந்த கடத்திலிருந்து உத்பத்தி ஆகாதோ அவ்வாறே எந்த வஸ்துவும் தானாகவே பூர்ணமாய் தயாராகாத ஸ்வரூபத்தால் தானாகவே உத்பத்தி ஆக முடியாது வேறு ஒரு அந்ய பதார்த்தத்தால் வேறு பதார்த்தம் (அந்யபதார்த்தம்) உத்பன்னம் ஆக முடியாது. எவ்வாறு கடத்திலிருந்த படம் (துணி) உண்டாகாது மேலும் படத்திலிருந்து வேறுபடம் உண்டாகாது. இவ்வாறு விரோதம் உள்ளதால் இருவகையாலும் எந்த ஒன்றின் உத்பத்தியும் உண்டாகாது. எவ்வாறு கடம், படம் இவ்விரண்டிலிருந்தும் கடமோ படமோ எந்த ஒன்றும் உண்டாகமுடியாது.
ननु मृदो घटो जायते पितुश्च पुत्रः ; सत्यम् , अस्ति जायत इति प्रत्ययः शब्दश्च मूढानाम् । तावेव तु शब्दप्रत्ययौ विवेकिभिः परीक्ष्येते — किं सत्यमेव तौ, उत मृषा इति ; यावता परीक्ष्यमाणे शब्दप्रत्ययविषयं वस्तु घटपुत्रादिलक्षणं शब्दमात्रमेव तत् ,
‘वाचारम्भणम्’ (छा. उ. ६ । ४ । ४) इति श्रुतेः ।
(ச.பா) மண்ணிலிருந்து கடம் உத்பன்னமானது தந்தையிடமிருந்து மகன் உத்பன்னமானான் என்பது உண்மையே. ஆனால் “உத்பன்னம் ஆகிறது” என்ற பிரத்யயமும் சப்தமும் மூடர்களுக்கே ஏற்படுகிறது. ஆனால் விவேகிகளோ பிரதீதியையும் (தோன்றுவதையும்) சப்தத்தையும் உண்மையானதா? அல்லது மித்தையா? என்று பரீக்ஷை செய்கின்றனர். பரீக்ஷை செய்து அறிந்த பின் சப்தம், அந்த பிரதீதியின் விஷயமான கடம் அல்லது மகன் முதலிய வஸ்து கேவலம் சப்தமாத்திரமே என்பதை சுருதியில் கூறிய “वाचारम्भणम्” முதலிய பிரமாணங்களால் அறிகிறார்கள்.
सच्चेत् न जायते, सत्त्वात् , मृत्पित्रादिवत् । यद्यसत् , तथापि न जायते, असत्त्वादेव, शशविषाणादिवत् । अथ सदसत् , तथापि न जायते विरुद्धस्यैकस्यासम्भवात् । अतो न किञ्चिद्वस्तु जायत इति सिद्धम् ।
(ச.பா) வஸ்து சத்தாய் இருந்தால் மண், பிதா முதலியவைகளைப் போல் சத்தாய் இருப்பதால் உத்பன்னமாக முடியாது. அசத்தாய் இருந்தாலும் முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் உத்பன்னமாகாது. மேலும் சதசத்தாய் இருந்தாலும் உத்பன்னமாகாது. ஏனெனில் ஒரே வஸ்து விருத்த சுவபாவமுடையதாக இருப்பது சம்பவியாது. ஆகையால் ஒரு வஸ்துவும் உத்பன்னமாகவில்லை என்று சித்திக்கிறது.
येषां पुनर्जनिरेव जायत इति क्रियाकारकफलैकत्वमभ्युपगम्यते क्षणिकत्वं च वस्तुनः, ते दूरत एव न्यायापेताः । इदमित्थमित्यवधारणक्षणान्तरानवस्थानात् , अननुभूतस्य स्मृत्यनुपपत्तेश्च ॥
(ச.பா) எவர்களுடைய விபரீத மதத்தில் (பௌத்தமதத்தில்) ஜன்ம கிரியையினால் தான் ஜன்மம் உண்டாகிறது என்று இவ்வாறு கிரியா, காரகபலத்தை ஒன்றானதாயும் வஸ்துவிற்கு க்ஷணிகத் தன்மையையும் கற்பிக்கிறார்கள். அவர்கள் சரியான யுக்தியற்றவர்கள் ஏனெனில் அவர்கள் இவ்வாறு இருக்கிறது என்று நிச்சயம் செய்யும் க்ஷணத்தின் அடுத்த க்ஷணத்தில் அதன் ஸ்திதி இல்லாததாலும் அநுபவிக்கப்படாத பதார்த்தத்தின் ஸ்மிருதி உண்டாவது அசம்பவமாகும்.
किञ्च, हेतुफलयोरनादित्वमभ्युपगच्छता त्वया बलाद्धेतुफलयोरजन्मैवाभ्युपगतं स्यात् । कथम् ?
(ச.பா) (அ.கை) மேலும் ஹேது, பலத்தின் அநாதித்தன்மையை ஒப்புக்கொள்ளும் உன்மூலமாய் பலாத்காரமாய் ஹேது, பலத்தின் அனுத்பத்தி (உத்பத்தி இல்லாதது)யை ஒப்புக் கொண்டதாகும் அது எவ்வாறு?
हेतुर्न जायतेऽनादेः फलं चापि स्वभावतः ।
आदिर्न विद्यते यस्य तस्य ह्यादिर्न विद्यते ॥ २३ ॥
कारिका अन्वयः - अनादेः हेतुः न जायते फलं च स्वभा-वतः न जायते यस्य आदिः न विद्यते तस्य आदि न विद्यते हि ॥ २३ ॥
காரிகா அர்த்தம் - அநாதியான பலத்திலிருந்து எந்த ஒரு ஹேதுவும் உத்பன்னமாகாது. அவ்வாறே ஸ்வபாவத்திலிருந்து (அநாதி ஹேதுவிலிருந்து) பலமானது உத்பத்தி ஆகமுடியாது, ஏனெனில் எந்த ஒரு வஸ்துவிற்கு ஆதி (காரணம்) இல்லையோ அதற்கு ஆதி (ஜன்மமும்)யும் உண்டாகாது.
अनादेः आदिरहितात्फलात् हेतुः न जायते । न ह्यनुत्पन्नादनादेः फलाद्धेतोर्जन्मेष्यते त्वया, फलं चापि आदिरहितादनादेर्हेतोरजात्स्वभावत एव निर्निमित्तं जायत इति नाभ्युपगम्यते ।
(ச.பா) அநாதி (ஆதியற்ற) பலத்திலிருந்து ஹேது உத்பன்னமாகாது. எப்பொழுதும் உத்பத்தி இல்லாத அநாதி பலத்திலிருந்து நீ ஹேதுவின் உத்பத்தியை (ஜன்மத்தை) ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு ஒப்புக்கொள்ளாததால் அநாதி அதாவது அஜன்ம ஹேது இல்லாமல் எந்த ஒரு நிமித்தத்தாலும் ஸ்வபாவத்திலிருந்து (காரணத்திலிருந்து) பலத்தின் உத்பத்தி உண்டாகவே செய்யும்.
तस्मादनादित्वमभ्युपगच्छता त्वया हेतुफलयोरजन्मैवाभ्युपगम्यते । यस्मात् आदिः कारणं न विद्यते यस्य लोके, तस्य ह्यादिः पूर्वोक्ता जातिर्न विद्यते । कारणवत एव ह्यादिरभ्युपगम्यते, न अकारणवतः ॥ २३ ॥
(ச.பா) ஆகையால் ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதியை ஒப்புக்கொள்ளும் உங்கள் மூலமாய் அதன் அநுத்பத்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில் உலகில் எந்த வஸ்துவிற்கு ஆதி அதாவது காரணம் இல்லையோ அதற்கு ஆதி அதாவது ஜன்மமும் இல்லை. எதற்கு காரணம் இருக்கிறதோ அதற்கு ஜன்மத்தை ஒப்புக்கொள்கிறார்கள். காரணமற்ற பதார்த்தத்திற்கு அல்ல.
उक्तस्यैवार्थस्य दृढीकरणचिकीर्षया पुनराक्षिपति —
(ச.பா) (அ.கை) கூறிய அர்த்தத்தை திடப்படுத்துவதற்காக மறுபடியும் எடுத்துக்கூறுகிறார்-
प्रज्ञप्तेः सनिमित्तत्वमन्यथा द्वयनाशतः ।
सङ्क्लेशस्योपलब्धेश्च परतन्त्रास्तिता मता ॥ २४ ॥
कारिका अन्वयः - प्रज्ञप्तेः सनिमित्तत्वम् अन्यथा द्वय नाशतः संक्लेशस्य उपलब्धेः च परतन्त्रास्तिता मता ।
காரிகா அர்த்தம் - பிரக்ஞப்தி அதாவது சப்தஸ்பரிச முதலிய ஞானத்தை பாஹ்ய விஷயத்தோடு கூடியது என்று கொள்ள வேண்டும். இல்லையெனில் சப்தஸ்பர்சாதி துவைதத்திற்கு நாசம் உண்டாகும். இதைத்தவிர அக்னி தஹித்தல் முதலிய க்லேசங்களின் உபலப்தியால் மற்றமதவாதிகள் ஏற்றுக்கொள்ளும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட துவைதத்தின் சத்தையை (இருப்பை) ஏற்றுக்கொண்டதாகும்.
प्रज्ञानं प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः, तस्याः सनिमित्तत्वम् , निमित्तं कारणं विषय इत्येतत् ; सनिमित्तत्वं सविषयत्वं स्वात्मव्यतिरिक्तविषयतेत्येतत् , प्रतिजानीमहे । न हि निर्विषया प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः स्यात् , तस्याः सनिमित्तत्वात् । अन्यथा निर्विषयत्वे शब्दस्पर्शनीलपीतलोहितादिप्रत्ययवैचित्र्यस्य द्वयस्य नाशतः नाशोऽभावः प्रसज्येतेत्यर्थः । न च प्रत्ययवैचित्र्यस्य द्वयस्याभावोऽस्ति, प्रत्यक्षत्वात् । अतः प्रत्ययवैचित्र्यस्य द्वयस्य दर्शनात् , परेषां तन्त्रं परतन्त्रमित्यन्यशास्त्रम् , तस्य परतन्त्रस्य परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य प्रज्ञानव्यतिरिक्तस्य अस्तिता मता अभिप्रेता ।
(ச.பா) பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு, அதாவது சப்தாதி விஷயங்களை பிரதிபலிக்கும் தன்மைக்கு ज्ञानं - அறிவு, ज्ञप्तिः -அறியும் தன்மை, அல்லது அறிபவன் இங்கு प्रज्ञानम् என்றசொல் प्रज्ञप्तिः என்ற பொருளில் வந்துள்ளது. நிமித்தத்துடன் கூடி இருப்பதால் (காரணமாகும்). அதாவது निमित्तं - कारणम् - விஷயமாகும். सनिमित्तत्वम्- விஷயத்துடன் கூடியிருப்பதாகும். அதாவது தன்னிலும் வேறுபட்ட விஷயத்தின் தன்மையை (ஏற்றிருத்தல்) என்பதாயிற்று. எனவே प्रज्ञप्तिः என்ற அறியும்தன்மைக்கு தன்னிலும் வேறான விஷயத்தின் தன்மையுடன் கூடியிருத்தலை ஏற்கிறோம். அவ்வாறு ஏற்காவிடில் (நிர் விஷயமான) அவ்வறிவும், தன்மையான प्रज्ञप्ति யும் விஷயமற்றதாக ஆகும். அவ்வாறு ஆனால் சப்தம் முதலிய விஷயங்களின் அறிவே ஏற்படாது. உலகில் அனுபவம் அவ்வாறு இல்லாததால் அவ்வறியும் தன்மையை விஷயத்துடன் கூடியதாக ஏற்கிறோம் அவ்வாறு ஏற்காமல் போனால், அதாவது सनिमित्तप्रज्ञप्तिः (சன்நிமித்த பிரஞப்தி) என்று ஏற்காமல் போனால் அல்லது அவ்வறியும் தன்மை நிர்விஷயமானது என்று சொல்லுவேமேயானால் சப்தம், ஸ்பர்சம், நீலம், மஞ்சள், சிகப்புப் போன்ற பிரத்யயங்கள் எனப்படும் விஷய ஸ்புரணங்களான இரண்டாவதற்கு நாசம் ஏற்படும். மேலும் பிரத்யக்ஷம் சித்தியாவதால் பிரத்யய வைச்சித்திரியத்தின் துவைததிற்கு அபாவம் ஏற்படும். ஆகையால் பிரத்யய வைசித்திரிய ரூப துவைதத்தின் உபலப்தியினால் பரதந்திரமாகிய மற்றசாஸ்திரங்கள் அதாவது பரதந்திரத்தை ஆஸ்ரயித்த பிரக்ஞானத்தைக் காட்டிலும் வேறான பாஹ்ய பதார்த்தங்கள் இருக்கின்றனவோ அவைகளின் இருப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
न हि प्रज्ञप्तेः प्रकाशमात्रस्वरूपाया नीलपीतादिबाह्यालम्बनवैचित्र्यमन्तरेण स्वभावभेदेनैतद्वैचित्र्यं सम्भवति । स्फटिकस्येव नीलाद्युपाध्याश्रयैर्विना वैचित्र्यं न घटत इत्यभिप्रायः ।
(ச.பா) கேவல பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு இந்த விசித்திரமான நீலம், மஞ்சள் முதலிய பாஹ்யங்களை ஆலம்பனத்தின் விசித்திரத்தைக் காட்டிலும் கேவல ஸ்வபாவ பேதத்தால் விசித்திரமானது சம்பவிக்காது என்பது அபிப்பிராயம்.
इतश्च परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य ज्ञानव्यतिरिक्तस्यास्तिता । सङ्क्लेशनं सङ्क्लेशः, दुःखमित्यर्थः । उपलभ्यते हि अग्निदाहादिनिमित्तं दुःखम् । यद्यग्न्यादिबाह्यं दाहादिनिमित्तं विज्ञानव्यतिरिक्तं न स्यात् , ततो दाहादिदुःखं नोपलभ्येत । उपलभ्यते तु । अतः तेन मन्यामहे अस्ति बाह्योऽर्थ इति । न हि विज्ञानमात्रे सङ्क्लेशो युक्तः, अन्यत्रादर्शनादित्यभिप्रायः ॥ २४ ॥
(ச.பா) (மேலும் பிறசாஸ்திரங்களை அனுசரித்து ஞானத்தைக் காட்டிலும் வெளியில் இருக்ககூடிய இரண்டாவது பொருளின் இருக்கையை (तन्त्रं = शास्त्रं, परेषां तन्त्रं = परतन्त्रं) तस्य परतन्त्रस्य, तेन (அதனால்) परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य பரதந்திரத்தை ஆஸ்ரயிக்கும் பாஹ்ய பதார்த்தங்களின் (வெளிப்பொருள்களின்) கொள்கையளவில் ஏற்பட்டது. ஏனெனில் கேவல பிரகாச மாத்திர ஸ்வரூபமான प्रज्ञप्ति க்கு வெளி விஷயங்களின் ஆஸ்ரயம் இன்றி தன்னுடைய ரூபத்தால் நீலம், சிகப்பு, மஞ்சள் போன்ற விசித்திரங்கள் ஏற்படாது. எவ்வாறு கேவல சுத்தமான ஸ்படிகத்திற்கு நீல வஸ்திரம், செம்பரத்திப்பூ போன்ற உபாதிகளின்றி எவ்வாறு தன் சொரூபத்தில் வர்ண விசித்திரங்கள் ஏற்படாதோ, அது போல் வெளிவிஷயமான உபாதிகளின்றி प्रज्ञप्तिः யில் விஷய ஸ்புரணம் ஏற்படாது என்பது கருத்து). ஆகையால் பரதந்திரத்தை (பிற சாஸ்திரங்களை) ஆஸ்ரயித்த ஞானத்தைக் காட்டிலும் வேறான வெளிப் பதார்த்தங்களின் இருப்பை ஒப்புக் கொள்கிறோம். எவ்வாறு அக்னியின் சூடு முதலியவைகளால் துக்கம் உண்டாகிறது. விக்ஞானத்தைக் காட்டிலும் சூடு முதலியவைகளுக்குக் காரணமான அக்னி முதலிய பாஹ்ய (வெளி) பதார்த்தங்கள் இல்லை எனில் எரிக்கும் சூட்டினால் உண்டாகும் துக்கமானது ஏற்படமுடியாது. ஆனால் நம்மால் அடையப்படுகிறது. ஆகையால் நாம் நினைக்கிறோம் வெளிப் பதார்த்தங்கள் அவசியம் வேண்டும் என்று. கேவலம் விக்ஞான மாத்திரத்தால் க்லேசம் (துக்கம்) சம்பவிக்காது. ஏனெனில் வேறு இடத்தில் அவ்வாறு பார்க்கப்படவில்லை.
अत्रोच्यते —
(ச.பா) (அ.கை) இந்த விஷயத்தில் நாம் கூறுவது-
प्रज्ञप्तेः सनिमित्तत्वमिष्यते युक्तिदर्शनात् ।
निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात् ॥ २५ ॥
कारिका अन्वयः - प्रज्ञप्तेः युक्तिदर्शनात् सनिमित्तत्वं त्वया इष्यते भूतदर्शनात् निमित्तस्य अनिमित्तत्वं इष्यते ।
காரிகா அர்த்தம் - முன்பு கூறி யுக்தியை அனுசரித்து நீ பிரக்ஞ்ப்திக்கு (प्रज्ञप्ति) விஷயத்துடன் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாய், ஆனால் தத்துவ திருஷ்ட்டியினால் நாங்கள் அந்த விஷயத்தை அவிஷயமாய் கருதுகிறோம்.
बाढमेवं प्रज्ञप्तेः सनिमित्तत्वं द्वयसङ्क्लेशोपलब्धियुक्तिदर्शनादिष्यते त्वया । स्थिरीभव तावत्त्वं युक्तिदर्शनं वस्तुनस्तथात्वाभ्युपगमे कारणमित्यत्र ।
(ச.பா) சரியானதே, இவ்வாறு துக்கமயமான துவைதத்தின் அடைவு ரூபமான யுக்தியை அனுசரித்து நீ (பிரக்ஞப்தி)யை விஷயமாய் எடுத்துக் கொள்கிறாய். ஆனால் யுக்தி தர்சனமானது வஸ்துவின் யதார்த்த ஞானத்திற்குக் காரணமாகும் என்ற உன்னுடைய சித்தாந்தத்தில் ஸ்திரமாய் இரு.
ब्रूहि किं तत इति ।
(ச.பா) (பாஹ்யார்த்தவாதி) - அது என்ன என்று கூறு-
उच्यते — निमित्तस्य प्रज्ञप्त्यालम्बनाभिमतस्य तव घटादेरनिमित्तत्वमनालम्बनत्वं वैचित्र्याहेतुत्वमिष्यतेऽस्माभिः । कथम् ? भूतदर्शनात् परमार्थदर्शनादित्येतत् । न हि घटो यथाभूतमृद्रूपदर्शने सति तद्व्यतिरेकेणास्ति, यथा अश्वान्महिषः, पटो वा तन्तुव्यतिरेकेण तन्तवश्चांशुव्यतिरेकेण इत्येवमुत्तरोत्तरभूतदर्शन आ शब्दप्रत्ययनिरोधान्नैव निमित्तमुपलभामहे इत्यर्थः ।
(ச.பா) விக்ஞானவாதி - நாங்கள் கூறுவதாவது பிரக்ஞப்தியின் ஆஸ்ரிய ரூபத்தால் ஸ்வீகாரம் செய்யப்பட்ட (எடுத்துக் கொள்ளப்பட்ட) கடம் முதலிய விஷயங்களை நாங்கள் அவிஷயத்துவமாய் அதாவது பிரதீதியை ஆஸ்ரயிக்காததாய் அதாவது விசித்திரத்திற்கு ஹேது அற்றதன்மையாய் கருதுகிறோம். எவ்வாறு? பரமார்த்த திருஷ்டியினால். எவ்வாறு குதிரையும், எருமையும் வேறோ. அவ்வாறு மண்ணின் யதார்த்த ஸ்வரூபத்தின் ஞானம் உண்டான பின் கடம் அதைத் தவிர வேறாய் சித்திப்பதில்லை, அவ்வாறே நூ லிலிருந்து படமானது (துணி) வேறாக சித்திப்பதில்லை. இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு உத்தரோத்தர யதார்த்த தத்துவத்தைப் பார்க்கப்பார்க்க சப்தப்பிரதீதியின் நிரோதம் எற்பட்டபின் ஒரு விஷயத்தையும் காணமுடியாது.
अथ वा, अभूतदर्शनाद्बाह्यार्थस्य अनिमित्तत्वमिष्यते रज्ज्वादाविव सर्पादेरित्यर्थः । भ्रान्तिदर्शनविषयत्वाच्च निमित्तस्यानिमित्तत्वं भवेत् ; तदभावे अभानात् । न हि सुषुप्तसमाहितमुक्तानां भ्रान्तिदर्शनाभावे आत्मव्यतिरिक्तो बाह्योऽर्थ उपलभ्यते । न ह्युन्मत्तावगतं वस्त्वनुन्मत्तैरपि तथाभूतं गम्यते । एतेन द्वयदर्शनं सङ्क्लेशोपलब्धिश्च प्रत्युक्ता ॥ २५ ॥
(ச.பா) அல்லது முற்கூறப்பட்ட அபூத தர்சனத்தால் பாஹ்ய விஷயங்களுக்கு நிமித்தமின்மையே விரும்பப்படுகிறது. ரஜ்ஜு முதலானவைகளில் ஸர்ப்பம் போல் அதாவது கயிறு முதலானவைகளில் பாம்பு முதலிய காக்ஷிகளுடைய நிமித்தங்களின் அதன் முன்நிலையைக் காணும்கால் அவை நிமித்தமாக இல்லாதவை என்பதும், அவை விஷயங்களே அல்ல என்பதும், அவை பிராந்திதர்சனத்திற்கு விஷயமாய் இருப்பதால், அந்நிமித்தங்களுக்கு அநிமித்தத்துவம் ஏற்படுகிறது. அது இல்லாவிடில் அவையும் உண்டாவது இல்லை, ஸுஷுப்தியில் உள்ளவர்க்கும், சமாதியில் இருப்பவருக்கும் ஜீவன் முத்தர்களுக்கும் பிராந்தி ஞானம் ஏற்படுவது இல்லை. அவர்களுக்கு ஆத்மாவைத் தவிர வேறு வெளிவிஷயம் புலனாவதோ, அடையப்படுவதோ இல்லை. மேலும் பைத்தியகாரனால் உணரப்பட்ட வஸ்து, பைத்திய மற்றவர்களால், பைத்தியக்காரனால் உணரப்பட்டது போல் உணரப்படுவதில்லை. இம்மாதிரி द्वयदर्शनं (இரண்டாகப் பார்த்தல்) மற்றும் க்லேசம் (துக்கம்) ஆகியவையின் அடைவு நிராகரணம் செய்யப்பட்டது.
यस्मान्नास्ति बाह्यं निमित्तम्:-
(ச.பா) (அ.கை) ஏனெனில் பாஹ்ய விஷயமே இல்லை. ஆகையால்-
चित्तं न संस्पृशत्यर्थं नार्थाभासं तथैव च ।
अभूतो हि यतश्चार्थो नार्थाभासस्ततः पृथक् ॥ २६ ॥
कारिका अन्वयः - चित्तम् अर्थं न स्पृशति तथैव अर्थाभासं न स्पृशति यतः अर्थः अभूतो हि ततः न पृथक् अर्थाभासःन ॥
காரிகா அர்த்தம் - சித்தம் எந்த பதார்த்தத்தையும் ஸ்பர்சிக்காது. மேலும் எந்த ஒரு அர்த்தாபாசத்தையும் கிரஹிக்காது. ஏனெனில் அது பதார்த்தமே அல்ல. ஆகையால் அந்த பதார்த்த ஆபாசமும் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல.
अतः चित्तं न स्पृशत्यर्थं बाह्यालम्बनविषयम् , नाप्यर्थाभासम् , चित्तत्वात् , स्वप्नचित्तवत् । अभूतो हि जागरितेऽपि स्वप्नार्थवदेव बाह्यः शब्दाद्यर्थो यतः उक्तहेतुत्वाच्च । नाप्यर्थाभासश्चित्तात्पृथक् । चित्तमेव हि घटाद्यर्थवदवभासते यथा स्वप्ने ॥ २६ ॥
(ச.பா) சித்தம், சித்தமாய் இருப்பதால் ஸ்வப்ன சித்தம் போல் பாஹ்ய ஆலம்பனத்தின் விஷயமானது எந்த பதார்த்தத்தையும் ஸ்பரிசிப்பதில்லை, மேலும் அர்த்தாபாசத்தையை கிரஹிக்கிறது. ஏனெனில் முற்கூறிய காரணத்தினால் ஸ்வப்ன பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையிலும் சப்தம் முதலிய பாஹ்ய பதார்த்தங்கள் இல்லை. மேலும் சித்தத்தைக்காட்டிலும் வேறாக அர்த்தாபாசம் இல்லை. கடம் முதலிய பதார்த்தங்கள் போல் சித்தமும் தோன்றுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் தோற்றுகிறதோ அவ்வாறு
ननु विपर्यासस्तर्हि असति घटादौ घटाद्याभासता चित्तस्य ; तथा च सति अविपर्यासः क्वचिद्वक्तव्य इति ; अत्रोच्यते —
(ச.பா) (அ.கை) கடம் முதலியவைகள் இல்லாவிட்டாலும் சித்தத்திற்கு கட முதலியவைகள் தோன்றுவது விபரீத ஞானமாகும். அவ்வாறு இருக்கும் பொழுது விபரீத மற்ற(சம்யக்) ஞானம் எப்பொழுது உண்டாகும்? என்று கூறவேண்டியதால் அதைக்குறித்துக் கூறப்படுகிறது-
निमित्तं न सदा चित्तं संस्पृशत्यध्वसु त्रिषु ।
अनिमित्तो विपर्यासः कथं तस्य भविष्यति ॥ २७ ॥
कारिका अन्वयः - निमित्तम् अध्वसु त्रिषु चित्तं सदा न स्पृशति (खलु) तस्य अनिमित्तः विपर्यासः कथं भविष्यति ।
காரிகா அர்த்தம் - மூன்று அவஸ்தைகளிலும் சித்தம் எந்த ஒரு விஷயத்தையும் பற்றுவதில்லை (ஸ்பரிசிப்பது இல்லை). அவ்வாறு இருக்கும் பொழுது அது நிமித்தமில்லாமல் அதற்கு எவ்வாறு விபரீதஞானம் உண்டாகும்
निमित्तं विषयम् अतीतानागतवर्तमानाध्वसु त्रिष्वपि सदा चित्तं न संस्पृशेदेव हि । यदि हि क्वचित्संस्पृशेत् , सः अविपर्यासः परमार्थ इत्यतस्तदपेक्षया असति घटे घटाभासता विपर्यासः स्यात् ; न तु तदस्ति कदाचिदपि चित्तस्यार्थसंस्पर्शनम् । तस्मात् अनिमित्तः विपर्यासः कथं तस्य चित्तस्य भविष्यति ? न कथञ्चिद्विपर्यासोऽस्तीत्यभिप्रायः । अयमेव हि स्वभावश्चित्तस्य, यदुत असति निमित्ते घटादौ तद्वदवभासनम् ॥ २७ ॥
(ச.பா) விஷயமானது மூன்று வழிகளிலும், அதாவது கழிந்தது, வரப்போவது, நடைபெறுவது என்றமூன்று வழிகளிலும், சித்தத்தை எப்பொழுதும் பற்றுவதில்லை, அதை எப்பொழுதாவது ஸ்பரிசித்தால் அது பரமார்த்தமாகும் என்று கருதப்படும். ஆகையால் விஷயம் (நிமித்தம்) இல்லாவிடினும் அந்த சித்தத்திற்கு விபரீதஞானம் எவ்வாறு ஏற்படும்? இதன் தாத்பரியம் என்னவெனில் அதனால் எவ்விதமாகவும் விபரீத ஞானம் ஆகாது. சித்தத்தின் ஸ்வபாவம் கடம் முதலிய நிமித்தம் (விஷயம்) இல்லாவிடிலும் அதன் பிரதீதி (தோற்றம்) உண்டாகிறது.
(ச.பா) (அ.கை) இவ்வாறு வெளிப்பொருள் உண்டு என்று கூறும் வாதியை விக்ஞான வாதியான பௌத்தனின் வாயிலாக கண்டித்து, அந்த விக்ஞான வாதமும் தப்பானதே என்று இக்காரிகையால் விளக்குகிறார். सनिमित्त प्रज्ञप्तिः என்றவரை விக்ஞானவாதியின் வாதம் பாஹ்யார்த்தவாதியை நிராகரிப்பதற்காக ஏற்கப்பட்டது இப்போது அந்த விக்ஞானவாதி கூறிய வாதத்தைக் கொண்டே, அவன் கூற்று தவறு என்று ஆச்சாரியர் நிரூபிக்கிறார்.
तस्मान्न जायते चित्तं चित्तदृश्यं न जायते ।
तस्य पश्यन्ति ये जातिं खे वै पश्यन्ति ते पदम् ॥ २८ ॥
कारिका अन्वयः - तस्मात् चित्तं न जायते चित्त दृश्यं न जायते तस्य ये जातिं पश्यन्ति खे पदं पश्यन्ति वै ।
காரிகா அர்த்தம் - ஆகையால் சித்தம் உத்பத்தியாவதில்லை. சித்தத்தின் திருஷ்யமும் உத்பத்தியாவதில்லை. அதற்கு எவர்கள் உத்பத்தியை காண்கின்றனரோ அவர்கள் பறக்கும் பக்ஷியின் கால்தடத்தைக் காண்கின்றார்கள்.
तस्मादित्यादि । यस्मादसत्येव घटादौ घटाद्याभासता चित्तस्य विज्ञानवादिना अभ्युपगता, तदनुमोदितमस्माभिरपि भूतदर्शनात् ; तस्मात्तस्यापि चित्तस्य जायमानावभासता असत्येव जन्मनि युक्ता भवितुमिति अतो न जायते चित्तम् । यथा चित्तदृश्यं न जायते
(ச.பா) ஏனெனில் விக்ஞானவாதிகள் கடம் முதலியவைகள் இல்லாவிடினும் சித்தத்திற்கு கடம் முதலியவைகளின் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் யதார்த்த திருஷ்டி ஏற்பட்டதால் நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம். ஆகையால் அந்த சித்தத்திற்கு உண்டான தோற்றமாத்திர (அவபாசம்) மாகவே உத்பத்தியில் பொருந்தும். ஆகையால் சித்தம் உத்பத்தியாகவில்லை அவ்வாறே சித்த திருஷ்யமும் ஆகும்.
अतस्तस्य चित्तस्य ये जातिं पश्यन्ति विज्ञानवादिनः क्षणिकत्वदुःखित्वशून्यत्वानात्मत्वादि च ; तेनैव चित्तेन चित्तस्वरूपं द्रष्टुमशक्यं पश्यन्तः खे वै पश्यन्ति ते पदं पक्ष्यादीनाम् । अत इतरेभ्योऽपि द्वैतिभ्योऽत्यन्तसाहसिका इत्यर्थः । येऽपि शून्यवादिनः पश्यन्त एव सर्वशून्यतां स्वदर्शनस्यापि शून्यतां प्रतिजानते, ते ततोऽपि साहसिकतराः खं मुष्टिनापि जिघृक्षन्ति ॥ २८ ॥
(ச.பா) ஆகையால் அந்த விக்ஞானவாதி அந்த சித்தத்தின் உத்பத்தி அவ்வாறே க்ஷணிகத்துவம், துக்கித்துவம், சூன்யத்துவம், அநாத்மத்துவம், முதலியவைகளைக் காண்கிறான். அந்த சித்தத்தினால் பார்க்கப்படுவது என்பது எப்பொழுதும் அசம்பவமே, அவ்வாறேசித்தத்தின் சொரூபத்தைப் பார்ப்பதும். எவ்வாறு ஆகாசத்தில் பறக்கும் பறவையின் கால்தடம் தெரியாதோ அவ்வாறு ஆகும். ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் வேறு துவைதவாதிகளைக் காட்டிலும் மிகவும் கொடியது. மேலும் சூன்யவாதி எல்லாவற்றையும் சூன்யமாய் பார்க்கிறான், அதேபோல் தன்னுடைய தரிசனத்தையும் சூன்யம் என்று பிரதிக்ஞை செய்கின்றனர். ஆகையால் அவர்களைக் காட்டிலும் மிககொடூரமானது. இவர்கள் விண்ணை முஷ்டியால் குத்தும் தைரியசாலிகள்.
उक्तैर्हेतुभिरजमेकं ब्रह्मेति सिद्धम् , यत्पुनरादौ प्रतिज्ञातम् , तत्फलोपसंहारार्थोऽयं श्लोकः —
(ச.பா) (அ.கை) முன்பு கூறிய ஹேதுக்களினால் பிரஹ்மம் அஜன்மா என்று சித்திக்கிறது. இப்பொழுது முன்பு எது பிரதிக்ஞை செய்யப்பட்டதோ அதன் பலத்தை முடிப்பதற்காக இந்த ஸ்லோகம்-
अजातं जायते यस्मादजातिः प्रकृतिस्ततः ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥
कारिका अन्वयः - यस्मात् तस्य अजातिः प्रकृतिः ततः अजातं जायते प्रकृते अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - ஏனெனில் அஜன்மா (சித்தம்)விற்கு உத்பத்தி ஏற்படுகிறது ஆகையால் அஜாதி (உத்பன்னமற்றது)யே அதன் ஸ்வபாவம், மேலும் ஸ்வபாவமானது எவ்வகையிலும் விபரீதமாகாது.
अजातं यच्चित्तं ब्रह्मैव जायत इति वादिभिः परिकल्प्यते, तत् अजातं जायते यस्मात् अजातिः प्रकृतिः तस्य ; ततः तस्मात् अजातरूपायाः प्रकृतेरन्यथाभावो जन्म न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥
(ச.பா) அஜாதம் என்று எந்த பிரஹ்மரூப சித்தம் உத்பன்னமாகிறது என்று வாதிகள் கல்பனை செய்கிறார்கள். ஏனெனில் அந்த அஜாதிக்குத் தான் ஜன்மம் ஏற்படுகிறது ஆகையால் அஜாதி அதன் ஸ்வபாவம் என்றால் அந்த அஜாத ரூபஸ்வபாவத்திற்கு ஜன்மரூப விபரீதபாவனை எவ்வகையிலும் கிடையாது.
अयं चापर आत्मनः संसारमोक्षयोः परमार्थसद्भाववादिनां दोष उच्यते —
(ச.பா) (அ.கை) ஆத்மாவிற்கு சம்சாரம், மோக்ஷம் ஆகிய இரண்டிற்கும் பாரமார்த்திக இருப்பு இருப்பதாய் ஏற்றுக்கொள்ளும் வாதிகளின் பக்ஷத்தை ஒன்று மற்றொன்றின் தோஷத்தை கூறுகிறார்-
अनादेरन्तवत्त्वं च संसारस्य न सेत्स्यति ।
अनन्तता चादिमतो मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥
कारिका अन्वयः - अनादेः संसारस्य न अन्तवत्त्वं च सेत्स्यति (नसिद्धिं उपयास्यति) तथा अनन्तता च आदिमतः मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥
காரிகா அர்த்தம் - அநாதி சம்சாரத்திற்கு ஒருநாளும் அந்தத்துவம் (முடிவு) சித்திக்காது. அவ்வாறே ஆதியை உடைய மோக்ஷத்திற்கும் முடிவு அற்ற தன்மை சித்திக்காது.
अनादेः अतीतकोटिरहितस्य संसारस्य अन्तवत्त्वं समाप्तिः न सेत्स्यति युक्तितः सिद्धिं नोपयास्यति । न ह्यनादिः सन् अन्तवान्कश्चित्पदार्थो दृष्टो लोके । बीजाङ्कुरसम्बन्धनैरन्तर्यविच्छेदो दृष्ट इति चेत् ; न, एकवस्त्वभावेनापोदितत्वात् ।
(ச.பா) ஆரம்பத்தை அறிய முடியாததால் ஆரம்பமற்ற சம்சாரத்திற்கு முடிவு என்பது யுக்தியினால் சித்திக்காது. உலகில் எந்த பொருளும் அநாதியாய் இருந்துகொண்டு முடிவு உடையதாய் காணப்படவில்லை. பீஜாங்குர சம்பந்த தொடர்ச்சி எங்கும் தடைப்பட்டதாக கண்டதில்லை. அது போல் ஸம்சாரமும் முடிவு அற்றது என்று கூறுவாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பீஜாங்குரசந்ததி ஒரு பதார்த்தமாகாத காரணத்தால் அதற்கு அநாதித்துவம் நிராகரணம் செய்யப்பட்டது.
तथा अनन्ततापि विज्ञानप्राप्तिकालप्रभवस्य मोक्षस्य आदिमतो न भविष्यति, घटादिष्वदर्शनात् । घटादिविनाशवदवस्तुत्वाददोष इति चेत् , तथा च मोक्षस्य परमार्थसद्भावप्रतिज्ञाहानिः ; असत्त्वादेव शशविषाणस्येव आदिमत्त्वाभावश्च ॥
(ச.பா) இவ்வாறு விக்ஞானப் பிராப்தி காலத்தில் ஆதி உடைய மோக்ஷத்திற்கு அந்தத்துவம் இல்லை. ஏனெனில் கடம் முதலிய (ஜன்ம பதார்த்தத்தில்) இவ்வாறு காணப்படவில்லை. கடம் முதலியவைகள் போல் விநாசமுடையது போல் அவஸ்து ஆனதால் தோஷம் அற்றது என்றால் மோக்ஷத்திற்கு பரமார்த்த சத்பாவ பிரதிக்ஞைக்கு ஹானிவரும். முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் அதற்கு ஆதிமத்வ பாவத்திற்கு (ஆரம்பம் உடையது என்றபாவத்திற்கு) அபாவம் ஏற்படும்.
आदावन्ते च यन्नास्ति वर्तमानेऽपि तत्तथा ।
वितथैः सदृशाः सन्तोऽवितथा इव लक्षिताः ॥ ३१ ॥
காரிகா அர்த்தம் - ஆதியிலும் முடிவிலும் எது இல்லையோ அது வர்த்தமானத்திலும் இல்லை. எந்த பதார்த்த சமூகம் அசத்திற்கு சமானமாய் இருந்து கொண்டு சத்போல் காணப்படுகிறது.
सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ३२ ॥
कारिका अन्वयः - तेषां स्वप्ने सप्रयोजनता विप्रतिपद्यते. तस्मात् आदि अन्तवत्त्वेनमिथ्या एव खलु ते स्मृताः ॥ ३२ ॥
காரிகா அர்த்தம் - அந்த ஜாக்ரத் பதார்த்தங்களுக்கு ஸ்வப்னாவஸ்தையில் பிரயோஜனம் சித்திக்கிறதில்லை. ஆகையால் ஆதி அந்தத்துடன் கூடி இருப்பதால் அவைகள் நிச்சயமாக மித்தையே ஆகும்.
वैतथ्ये कृतव्याख्यानौ श्लोकाविह संसारमोक्षाभावप्रसङ्गेन पठितौ ॥ ३२ ॥
(ச.பா) வைதத்திய பிரகரணத்தில் இந்த இரண்டு ஸ்லோகங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சம்சாரம், மோக்ஷம் இவைகளில் அபாவபிரஸங்கமானது கூறப்பட்டுள்ளது.
सर्वे धर्मा मृषा स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् ।
संवृतेऽस्मिन्प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ॥ ३३ ॥
कारिका अन्वयः - स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् सर्वे धर्माः मृषा संवृतेऽस्मिन् प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ।
காரிகா அர்த்தம் - சரீரத்தின் உள்ள காக்ஷிகளைக் காண்பதால் ஸ்வப்னகாலத்துக் காக்ஷிகள் பொய்யானவை. இவ்வளவு சுருங்கிய இடத்தில (நிரவகாச பிரஹ்மத்தில்) பூதங்களின் தர்சனம் எவ்வாறு உண்டாகும்?
(ச.பா) இந்த ஸ்லோகத்தின் மூலமாய் “निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात्” என்ற ஸ்லோகத்தின் அர்த்தம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
न युक्तं दर्शनं गत्वा कालस्यानियमाद्गतौ ।
प्रतिबुद्धश्च वै सर्वस्तस्मिन्देशे न विद्यते ॥ ३४ ॥
कारिका अन्वयः - गतौ कालस्य अनियमात् गत्वा दर्शनं न युक्तं सर्वः वै यस्मिन्देशे तस्मिन्देशे प्रबुद्धः च न विद्यते ।
காரிகா அர்த்தம்- (ஸ்வப்னத்தில்) சென்று வருதலில் காலத்தினுடைய நியமம் இன்மையால் தூரத்தில் உள்ள அவ்விடத்தை அடைந்து பார்த்தல் பொருந்தாது. அவன் ஸ்வப்னத்தில் அவ்வேறு இடத்தையே அடைகிறான் என்றால் ஸ்வப்னம் காணும் எல்லோரும் எவ்விடத்திலிருந்து ஸ்வப்னம் காண்கிறானோ அவ்விடத்தில் விழித்தவனாக இருக்கமாட்டான்.
जागरिते गत्यागमनकालौ नियतौ, देशः प्रमाणतो यः, तस्य अनियमात् नियमस्याभावात् स्वप्ने न देशान्तरगमनमित्यर्थः ॥
(ச.பா) சென்று வருதலில் ஜாக்ரத் அவஸ்தையில் அவைகளின் இடையில் உள்ள தூரத்தைப் பொருத்து ஏற்படும் காலத்திற்கு ஒரு நியதி உள்ளது. அந்த நியன்ம் ஸ்வப்நாவஸ்தையில் இல்லாததால் வேறு தேசத்திற்கு செல்லுதல் கிடையாது என்பது இதன் அபிப்பிராயம்.
मित्राद्यैः सह संमन्त्र्य सम्बुद्धो न प्रपद्यते ।
गृहीतं चापि यत्किञ्चित्प्रतिबुद्धो न पश्यति ॥ ३५ ॥
कारिका अन्वयः - मित्राद्यैः सह संमन्त्र्य संबद्धः न प्रपद्यते गृहीतं यकिञ्चित् अपि प्रबुद्धः न पश्यति ॥ ३५ ॥
காரிகா அர்த்தம்- (ஸ்வப்ன அவஸ்தையில்) நண்பர்கள் முதலியோருடன் செய்த ஆலோசனை விழித்தபின் அந்த ஆலோசனை அடைவதில்லை. அவ்வாறே அந்த அவஸ்தையில் கிரஹிக்கபட்ட வஸ்து ஒன்றும் விழித்த பின் காண்பதில்லை
मित्राद्यैः सह संमन्त्र्य तदेव मन्त्रणं प्रतिबुद्धो न प्रपद्यते, गृहीतं च यत्किञ्चिद्धिरण्यादि न प्राप्नोति ; ततश्च न देशान्तरं गच्छति स्वप्ने ॥ ३५ ॥
(ச.பா) ஸ்வப்னத்தில் நண்பர்கள் முதலியவர்களுடன் ஆலோசனை செய்தது விழித்த உடன் அந்த ஆலோசனைகளை அடைவதில்லை. அவ்வாறே தங்கம் போன்ற எந்த ஒரு சிறு வஸ்துவையும் கூட விழிப்பு ஏற்பட்டவுடன் அடைவதில்லை. ஆகையால் ஸ்வப்னாவஸ்தையில் எந்த தேசாந்தரமும் இல்லை.
स्वप्ने चावस्तुकः कायः पृथगन्यस्य दर्शनात् ।
यथा कायस्तथा सर्वं चित्तदृश्यमवस्तुकम् ॥ ३६ ॥
कारिका अन्वयः - स्वप्ने कायः च पृथक् अन्यस्य दर्शनात् यथा अवस्तुकः तथा चित्तदृश्यं सर्वं अवस्तुकम् ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் எந்த சரீரம் உள்ளதோ அதுவும் அவஸ்து. ஏனெனில் அதை விட வேறான சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு அந்த சரீரமோ அவ்வாறே சித்த திருஷ்ய வஸ்துக்கள் எல்லாம் அவஸ்து ரூபமாய் இருக்கின்றன.
स्वप्ने च अटन्दृश्यते यः कायः, सः अवस्तुकः ततोऽन्यस्य स्वापदेशस्थस्य पृथक्कायान्तरस्य दर्शनात् । यथा स्वप्नदृश्यः कायः असन् , तथा सर्वं चित्तदृश्यम् अवस्तुकं जागरितेऽपि चित्तदृश्यत्वादित्यर्थः । स्वप्नसमत्वादसज्जागरितमपीति प्रकरणार्थः ॥ ३६ ॥
(ச.பா) ஸ்வப்னத்தில் நடமாடுவதாய் எந்த சரீரம் பார்க்கப்படுகிறதோ அது அவஸ்து (வஸ்து அல்ல) என்பதாகும். ஏனெனில் அந்த ஸ்வப்ன பிரதேசத்தில் இருக்கும் சரீரத்தை விட வேறு ஒரு சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் காணப்படும் சரீரம் அசத்தோ அவ்வாறே ஜாக்கிரத்தில் எல்லா சித்த திருஷ்யங்களும். சித்தத்தின் திருஷ்யங்களாய் இருப்பதால் அசத் என்பது தாத்பரியம். இந்தப் பிரகரணத்தின் அர்த்தம் என்னவெனில் ஸ்வப்னத்திற்கு சமமாய் இருப்பதால் ஜாக்ரத் அவஸ்தையும் அசத் ஆகும்.
इतश्च असत्त्वं जाग्रद्वस्तुनः जागरितवत
(ச.பா) (அ.கை) ஆகவே ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத்துவமே ஆகிறது.
ग्रहणाज्जागरितवत्तद्धेतुः स्वप्न इष्यते ।
तद्धेतुत्वात्तु तस्यैव सज्जागरितमिष्यते ॥ ३७ ॥
कारिका अन्वयः - स्वप्ने जागरितवत् ग्रहणात् तद्धेतुः इष्यते तद्धेतुत्वात् तु तस्यैव जागरितं सत् इष्यते ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத்திற்கு சமானமாய் ஸ்வப்னத்தை கிரஹித்ததினால் அதற்கு (ஜாக்ரதிற்கு) காரியம் என்று கருதப்படுகிறது. ஆனால் ஜாக்ரதத்தின் காரியமாவதால் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்யமாய் காணப்படுகிறது.
जागरितस्येव ग्रहणात् ग्राह्यग्राहकरूपेण स्वप्नस्य, तज्जागरितं हेतुः अस्य स्वप्नस्य स स्वप्नः तद्धेतुः जागरितकार्यम् इष्यते । तद्धेतुत्वात् जागरितकार्यत्वात् तस्यैव स्वप्नदृश एव सज्जागरितम् , न त्वन्येषाम् ; यथा स्वप्न इत्यभिप्रायः ।
(ச.பா) ஜாக்கிரதத்திற்கு சமானமாய் கிராஹ்ய கிராஹக ரூபமாய் ஸ்வப்னம் கிரஹிக்கப்படுவதால் இந்த ஸ்வப்ன அவஸ்தைக்கு ஜாக்ரம் காரணமாகிறது. ஆகையால் ஸ்வப்னம் அதன் ஹேதுவாகிய ஜாக்ரதத்தின் காரியமாகும். அந்த ஹேதுவாகிய ஜாக்ரத்திற்கு காரியமாய் இருப்பதால் அந்த ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்தியமாகும் மற்றவர்களுக்கு அல்ல. ஸ்வப்னம் இவ்வாறு இருக்கிறது என்று அபிப்பிராயம்.
यथा स्वप्नः स्वप्नदृश एव सन् साधारणविद्यमानवस्तुवदवभासते, तथा तत्कारणत्वात्साधारणविद्यमानवस्तुवदवभासनम् , न तु साधारणं विद्यमानवस्तु स्वप्नवदेवेत्यभिप्रायः ॥ ३७ ॥
(ச.பா) எவ்வாறு ஸ்வப்னம் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு சத் அதாவது சாதாரணமாய் இருக்கும் வஸ்துவிற்கு சமானமாய் விளங்குகிறதோ. அவ்வாறு அதற்கு காரணமாய் இருப்பதால் ஜாக்ரத்தும் சாதாரணமாய் இருக்கும் (விளங்கும்) வஸ்துவிற்கு சமானமாய் பிரதீதி ஆகிறது. ஆனால் உண்மையில் ஸ்வப்னத்திற்கு சமானமே அந்த சாதாரணமாய் விளங்கும் வஸ்து அல்ல என்பது இதன் அபிப்பிராயமாகும்.
ननु स्वप्नकारणत्वेऽपि जागरितवस्तुनो न स्वप्नवदवस्तुत्वम् । अत्यन्तचलो हि स्वप्नः जागरितं तु स्थिरं लक्ष्यते ।
(அ.கை) சங்கை - ஸ்வப்னத்தின் காரணமாய் இருந்தாலும். ஜாக்ரத் பதார்த்தங்கள் ஸ்வப்னத்தைப் போல் அவஸ்துவல்ல. ஏனெனில் ஸ்வப்னம் மிகவும் சஞ்சலமாய் இருக்கிறது. ஆனால் ஜாக்ரத் அவஸ்தா ஸ்திரமாய் காணப்படுகிறது.
सत्यमेवमविवेकिनां स्यात् । विवेकिनां तु न कस्यचिद्वस्तुन उत्पादः प्रसिद्धः । अतः
(ச.பா) (சமாதானம்) - சரியே, அவிவேகிகளுக்கு இவ்வாறு இருக்கலாம் ஆனால் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் உத்பத்தி சித்திக்கவில்லை.
उत्पादस्याप्रसिद्धत्वादजं सर्वमुदाहृतम् ।
न च भूतादभूतस्य सम्भवोऽस्ति कथञ्चन ॥ ३८ ॥
कारिका अन्वयः - उत्पादस्य अप्रसिद्धत्वात् सर्वं अजं उदाह्य्तम् भूतात् अभूतस्य सम्भवः कथञ्चन न अस्ति ।
காரிகா அர்த்தம் - உத்பத்தி பிரசித்தமாய் இல்லாததால் எல்லாம் அஜம் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர சத் வஸ்துவிலிருந்து அசத் வஸ்துவிற்கு உத்பத்தி எந்த வகையிலும் கிடையாது.
अप्रसिद्धत्वात् उत्पादस्य आत्मैव सर्वमिति अजं सर्वम् उदाहृतं वेदान्तेषु
‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति । यदपि मन्यसे जागरितात्सतः असन्स्वप्नो जायत इति, तदसत् । न भूतात् विद्यमानात् अभूतस्य असतः सम्भवोऽस्ति लोके । न ह्यसतः शशविषाणादेः सम्भवो दृष्टः कथञ्चिदपि ॥ ३८ ॥
(ச.பா) உத்பத்தியே இல்லாததால் எல்லாம் ஆத்மாவே ஆகையால் வேதாந்தங்களில் “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ:) எல்லாம் அஜம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சத் ஜாக்ரதத்திலிருந்து அசத் ஸ்வப்னத்தின் உத்பத்தி என்று நீ கருதினால் அது சரியானது அல்ல. ஏனெனில் உலகில் இருக்கும் வஸ்துவிலிருந்து இல்லாத வஸ்து (அசத்) உண்டாவது இல்லை. முயற்கொம்பு முதலிய அசத் பதார்த்தங்களின் உத்பத்தி எவ்வகையிலும் காணப்படவில்லை.
ननु उक्तं त्वयैव स्वप्नो जागरितकार्यमिति ; तत्कथमुत्पादोऽप्रसिद्ध इति उच्यते ?
(ச.பா) (அ.கை) உன்னால் ஸ்வப்னம் ஜாகிரத் காரியம் என்று கூறப்பட்டது இவ்வாறு இருக்கும்பொழுது உத்பத்தியே இல்லை என்று எவ்வாறு சித்திக்கும்?
शृणु तत्र यथा कार्यकारणभावोऽस्माभिरभिप्रेत इति ।
(ச.பா) (சமாதானம்) - கேள் எவ்வாறு நாங்கள் காரியகாரண பாவத்தை எந்த அபிப்ராயத்தில் கொள்கிறோமென்று-
असज्जागरिते दृष्ट्वा स्वप्ने पश्यति तन्मयः ।
असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति ॥ ३९ ॥
कारिका अन्वयः - जागरिते असत् दृष्ट्वा तन्मयः स्वप्ने पश्यति तथा स्वप्नेऽपि असत् दृष्ट्वा च प्रतिबुद्धः न पश्यति ॥ ३९ ॥
காரிகா அர்த்தம் - ஜாக்ரதவஸ்தையில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து அதன் சம்ஸ்காரத்தால் அதை ஸ்வப்னத்தில் காண்கிறான். ஆனால் ஸ்வப்னாவஸ்தையில் அசத் பதார்த்தங்களைக் பார்த்தும் ஜாக்ரதத்தில் அதைப் பார்ப்பதில்லை.
असत् अविद्यमानं रज्जुसर्पवद्विकल्पितं वस्तु जागरिते दृष्ट्वा तद्भावभावितस्तन्मयः स्वप्नेऽपि जागरितवत् ग्राह्यग्राहकरूपेण विकल्पयन्पश्यति, तथा असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति अविकल्पयन् , च - शब्दात् । तथा जागरितेऽपि दृष्ट्वा स्वप्ने न पश्यति कदाचिदित्यर्थः । तस्माज्जागरितं स्वप्नहेतुरित्युच्यते, न तु परमार्थसदिति कृत्वा ॥ ३९ ॥
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் அசத் அதாவது ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனை செய்யப்பட்ட இல்லாத பதார்த்தங்களைப் பார்த்து அதன் பாவத்தால் பாவிக்கப்பட்ட ஸ்வப்னத்திலும் அத்தன்மைபாவத்தல் ஜாக்ரதத்திற்கு சமானமாய் கிராஹ்யகிராஹக ரூபமாய் விகல்பிக்கப்பட்டது காணப்படுகிறது. அவ்வாறே ஸ்வப்னத்தில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து விழித்தவுடன் விகல்பம் செய்யப்படாததால் அவைகள் காணப்படவில்லை “च” சப்தத்தின் அபிப்பிராயம் இவ்வாறு எப்பொழுதும் ஜாக்ரதத்தில் பார்த்தும் அந்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் ஜாக்ரத் அவஸ்தை ஸ்வப்னத்தின் காரணம் என்பதால் அதை பரமார்த்த சத் என்று கூறமுடியாது.
परमार्थतस्तु न कस्यचित्केनचिदपि प्रकारेण कार्यकारणभाव उपपद्यते । कथम् ?
(ச.பா) (அ.கை) உண்மையில் எதனுடையதும் எதனாலும், எவ்வகையாலும் காரண காரிய பாவம் சம்பவியாது. எவ்வாறு?-
नास्त्यसद्धेतुकमसत्सदसद्धेतुकं तथा ।
सच्च सद्धेतुकं नास्ति सद्धेतुकमसत्कुतः ॥ ४० ॥
कारिका अन्वयः - असद्धेतुकम्असत् नास्ति तथा सद्धेतुकम् असत् नास्ति तथा सद्धेतुकम् सच्च नास्ति सद्धेतुकम् असत् कुतः ॥ ४० ॥
காரிகா அர்த்தம் - அசத்பதார்த்தம் அசத்திற்கு காரணமாகாது. சத் பதார்த்தமும் அசத்திற்குக் காரணமாகாது. இவ்வாறு சத் பதார்த்தமும் சத் காரணமாகாது. இவ்வாறு இருக்கும் பொழுது அசத் பதார்த்தம் சத்திற்கு எவ்வாறு காரணமாக முடியும்.
नास्ति असद्धेतुकम् असत् शशविषाणादि हेतुः कारणं यस्य असत एव खपुष्पादेः, तत् असद्धेतुकम् असत् न विद्यते । तथा सदपि घटादिवस्तु असद्धेतुकम् शशविषाणादिकार्यं नास्ति । तथा सच्च विद्यमानं घटादि वस्त्वन्तरकार्यं नास्ति । सत्कार्यम् असत् कुत एव सम्भवति ? न चान्यः कार्यकारणभावः सम्भवति शक्यो वा कल्पयितुम् । अतो विवेकिनामसिद्ध एव कार्यकारणभावः कस्यचिदित्यभिप्रायः ॥
(ச.பா) அசத்தை காரணமாக உடையது அசத் பதார்த்தமும் அல்ல. ஆகாச புஷ்பம் முதலிய அசத் பதார்த்தங்கள் எந்த ஒரு முயற்கொம்பு முதலிய அசத்திற்கு காரணம் என்றால் அசத்தை காரணமாக உடைய அசத் பதார்த்தம் இருப்பது இல்லை. அவ்வாறே கடம் முதலிய சத் வஸ்துவும் முயற்கொம்பு போன்ற அசத் பதார்த்தத்திற்குக் காரியமாகாது. இவ்வாறு சத் அதாவது விளங்குகின்ற கடம் முதலியவை எந்த வேறு சத் வஸ்துவிற்கும் காரியமாகாது. இவ்வாறானால் சத்தினுடைய காரியமும் எவ்வாறு அசத்தாக முடியும்? இதைத் தவிர எந்த ஒரு அந்நிய காரியகாரண பாவமானது சம்பவிக்காது. கல்பனையும் செய்ய முடியாது. ஆகையால் தாத்பரியம் என்னவெனில் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் காரியகாரண பாவம் சித்திக்காது.
पुनरपि जाग्रत्स्वप्नयोरसतोरपि कार्यकारणभावाशङ्कामपनयन्नाह —
(ச.பா) ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் அசத்தாக இருந்தாலும் அதன் கார்ய காரண பாவ சம்பந்தத்தில் எந்த சங்கை உண்டாகிறதோ அதை நிவிருத்தி செய்யவே மீண்டும் கூறுகிறார்.
विपर्यासाद्यथा जाग्रदचिन्त्यान्भूतवत्स्पृशेत् ।
तथा स्वप्ने विपर्यासाद्धर्मांस्तत्रैव पश्यति ॥ ४१ ॥
कारिका अन्वयः - यथा विपर्यासात् जाग्रदि अचिन्त्यान् भूतवत् स्पृशेत् तथा स्वप्ने विपर्यासात् धर्मान् तत्रैव पश्यति ॥ ४१ ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு அவிவேகத்தால் ஜாக்ரதாவஸ்தையில் சிந்திக்க முடியாத பதார்த்தங்களை உண்மையானதாக க்ரஹிக்கிறானோ (கல்பனை செய்கிறானோ) அவ்வாறே ஸ்வப்னத்திலும் அவிவேகத்தால் (யானைமுதலிய) அசத்ய பதார்த்தங்களை அவ்வவஸ்தையிலேயே பார்க்கிறான்.
विपर्यासात् अविवेकतः यथा जाग्रत् जागरिते अचिन्त्यान्भावान् अशक्यचिन्तनान् रज्जुसर्पादीन् भूतवत् परमार्थवत् स्पृशेत् ; स्पृशन्निव विकल्पयेदित्यर्थः, कश्चिद्यथा, तथा स्वप्ने विपर्यासात् हस्त्यादीन्पश्यन्निव विकल्पयति । तत्रैव पश्यति, न तु जागरितादुत्पद्यमानानित्यर्थः ॥ ४१ ॥
(ச.பா) எவ்வாறு ஜாக்ரத அவஸ்தையில் அவிவேகி புருஷன் அவிவேகத்தால் ரஜ்ஜு சர்ப்பமுதலிய சிந்திக்க முடியாத பதார்த்தங்களை பரமார்த்தமாய் ஸ்பரிசித்து (பார்த்து) கல்பனை செய்கிறானோ அவ்வாறு ஸ்வப்னத்தில் அவிவேகத்தின் காரணமாய் யானை முதலியவைகளைப் பார்த்து கல்பனை செய்கிறான். அதாவது அவன் அந்த அவஸ்தையில் பார்க்கின்றான் அது ஜாக்ரத்தில் உத்பன்னமாவதில்லை.
उपलम्भात्समाचारादस्तिवस्तुत्ववादिनाम् ।
जातिस्तु देशिता बुद्धैरजातेस्त्रसतां सदा ॥ ४२ ॥
कारिका अन्वयः - उपलम्भात् समाचारात् अस्ति वस्तुत्व वादिनां सदा अजाते स्त्रसतां बुद्धैः जाति देशिता तु ॥ ४२ ॥
காரிகா அர்த்தம் - (வஸ்துக்களின்) உபலப்தி (ஞானம்). (வர்ணாஸ்ரம முதலியவைகளின்) ஆசாரம் இவைகளின் காரணமாய் எந்த பதார்த்தங்கள் சத்தாகக் கொள்ளப்படுகிறதோ அவ்வாறே அஜாதியினிடம் பயத்தை அடைகிறார்கள். வித்வான்கள் அவர்களின் பொருட்டு எப்பொழுதும் ஜாதியை உபதேசிக்கின்றார்கள்.
यापि बुद्धैः अद्वैतवादिभिः जातिः देशिता उपदिष्टा, उपलम्भनमुपलम्भः, तस्मात् उपलब्धेरित्यर्थः । समाचारात् वर्णाश्रमादिधर्मसमाचरणाच्च ताभ्यां हेतुभ्याम् अस्तिवस्तुत्ववादिनाम् अस्ति वस्तुभाव इत्येवंवदनशीलानां दृढाग्रहवतां श्रद्दधानां मन्दविवेकिनामर्थोपायत्वेन सा देशिता जातिः तां गृह्णन्तु तावत् । वेदान्ताभ्यासिनां तु स्वयमेव अजाद्वयात्मविषयो विवेको भविष्यतीति ; न तु परमार्थबुद्ध्या । ते हि श्रोत्रियाः स्थूलबुद्धित्वात् अजातेः अजातिवस्तुनः सदा त्रस्यन्ति आत्मनाशं मन्यमाना अविवेकिन इत्यर्थः ।
‘उपायः सोऽवताराय’ (मा. का. ३ । १५) इत्युक्तम् ॥ ४२ ॥
(ச.பா) அவ்வாறே அறிந்த அத்வைத வாதிகளாகிய வித்வான்கள் (ஜகத்தின்) உத்பத்தியை உபதேசம் செய்திருக்கின்றார்கள் (அதற்கு காரணம் என்னவெனில்). உபலம்பம் அதாவது ஞானத்தாலும், வர்ணாஸ்ரம முதலிய தர்மங்களை நன்கு கடைபிடித்தலும் ஆகிய காரணங்களால் வஸ்துக்களின் அஸ்தித்துவத்தை (இருப்பை) ஒப்புக்கொள்பவன் அதாவது துவைத பதார்த்தங்கள் வஸ்து என்று கூறுபவர்களுக்கும், திரமான அக்ரஹம் உடையவர்களுக்கும், சிரத்தை உள்ளவர்களுக்கும், மந்த விவேகமுடையவர்களுக்கும் (பிரஹ்மாத்மைக்ய ஞானத்தை அடைவதற்கான) உபாயமாய் அந்த ஜாதியின் (உத்பத்தியின்) உபதேசம் செய்யப்பட்டது. (இதன் தாத்பரியம் என்னவெனில்) இப்பொழுது இதை ஏற்றுக்கொண்டால் வேதாந்த அப்பியாசம் செய்யச்செய்ய அவர்களுக்கு தானாகவே அஜமாயும், அத்வைதமாயும் உள்ள ஆத்மசம்பந்தி விவேகம் உண்டாகும், என்பதால் அவர்களுக்கு பரமார்த்த புத்தியினால் அவர்களுக்கு உபதேசிக்கவில்லை. ஏனெனில் கேவலம் சுருதி பராயணர்களான அவிவேகிகளுக்கு ஸ்தூல புத்தி உடையதின் காரணமாய் தனக்கு நாசம் உண்டாகும் என்று அஜாதியைக் குறித்து (ஜன்மற்றதைக் குறித்து) எப்பொழுதும் பயத்தை அடைகிறார்கள் “उपायः सोऽवतारायेत्” (अद्वैतप्रकरणम्) என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டுள்ளது.
अजातेस्त्रसतां तेषामुपलम्भाद्वियन्ति ये ।
जातिदोषा न सेत्स्यन्ति दोषोऽप्यल्पो भविष्यति ॥ ४३ ॥
कारिका अन्वयः - ये अजातेः उपलम्भात् स्रसतां वियन्ति तेषां जातिदोषाः न सेत्स्यन्ति दोषोऽपि अल्पः भविष्यति ॥ ४३ ॥
காரிகா அர்த்தம் - துவைத ஞானத்தின் காரணமாய் விபரீத மார்க்கத்தில் பிரவிர்த்திக்கின்றான். அஜாதியினிடத்தில் பஸ்ம் உள்ளவன் (நல்மார்கத்தில் செல்வதால்) சிறிதுதோஷமே உள்ளது.
ये च एवमुपलम्भात्समाचाराच्च अजातेः अजातिवस्तुनः त्रसन्तः अस्ति वस्त्विति अद्वयादात्मनः, वियन्ति विरुद्धं यन्ति द्वैतं प्रतिपद्यन्त इत्यर्थः । तेषाम् अजातेः त्रसतां श्रद्दधानानां सन्मार्गावलम्बिनां जातिदोषाः जात्युपलम्भकृता दोषाः न सेत्स्यन्ति सिद्धिं नोपयास्यन्ति, विवेकमार्गप्रवृत्तत्वात् । यद्यपि कश्चिद्दोषः स्यात् , सोऽप्यल्प एव भविष्यति, सम्यग्दर्शनाप्रतिपत्तिहेतुक इत्यर्थः ॥ ४३ ॥
(ச.பா) எவர்கள் இவ்வாறு (பதார்த்தங்களை) அறிவதும் (உபலப்தி) வர்ணாச்ரமங்களின் படி ஆசாரங்களாகிய காரணங்களால் அஜன்ம வஸ்துவைக் குறித்து பயப்படுதலும், துவைத பதார்த்தம் இருக்கிறது என்று நினைத்து அத்வைத ஆத்மாவைக் காட்டிலும் விருத்தமான துவைதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அஜாதிக்குப் பயமுடைய சிரத்தை உடையவனும் சன்மார்க்கத்தை அனுசரிக்கும் புருஷர்களுக்கு ஜாதிதோஷம் அதாவது ஜாதியின் உபலப்தி காரணமாய் ஏற்படும் தோஷம் சித்திக்காது. ஏனெனில் அவர்கள் சந்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்களாய் இருக்கின்றனர். ஏதாவது ஒரு தோஷம் ஏற்பட்டாலும் அது அல்பமேயாகும். அதாவது சம்யக் தர்சனம் கிடைக்காததின் காரணமாய் ஏற்படும் தோஷமே சித்திக்கும்.
ननु उपलम्भसमाचारयोः प्रमाणत्वादस्त्येव द्वैतं वस्त्विति ; न, उपलम्भसमाचारयोर्व्यभिचारात् । कथं व्यभिचार इति, उच्यते —
(ச.பா) (அ,கை) உபலப்தியும், ஆசரணமும் (நல்மார்க்கத்தைக் கடைப்பிடித்தல்) பிரமாணம் ஆகையால் துவைத வஸ்துவே இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் உபலப்தியும், ஆசரணமும் மாறுபாடு (வியபசாரம்) ஏற்படும். எவ்வாறு வியபிசாரம் ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது-
उपलम्भात्समाचारान्मायाहस्ती यथोच्यते ।
उपलम्भात्समाचारादस्ति वस्तु तथोच्यते ॥ ४४ ॥
कारिका अन्वयः - यथा मायाहस्ती उपलम्भात् समाचारात् उच्यते तथा उपलम्भात् समाचारात् अस्ति वस्तु (इति) उच्यते ।
காரிகா அர்த்தம் - உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் எவ்வாறு மாயையால் உண்டான யானை (இருக்கிறது) என்று கூறுகிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் வஸ்து இருக்கிறது என்கிறோம்.
उपलभ्यते हि मायाहस्ती हस्तीव, हस्तिनमिवात्र समाचरन्ति बन्धनारोहणादिहस्तिसम्बन्धिभिर्धर्मैः, हस्तीति चोच्यते असन्नपि यथा, तथैव उपलम्भात्समाचारात् द्वैतं भेदरूपं अस्ति वस्तु इत्युच्यते । तस्मान्नोपलम्भसमाचारौ द्वैतवस्तुसद्भावे हेतू भवत इत्यभिप्रायः ॥ ४४ ॥
(ச.பா) யானைக்கு சமானமாய் மாயையினால் உண்டான யானையும் காணப்படுகிறது. யானையைப் போலவே (மாயா யானையிலும்) கட்டுதல், ஏறுதல் முதலியயானைக்கு சம்பந்தப்பட்ட தர்மங்கள் மூலமாய் வியவஹாரங்கள் நடக்கின்றன. எவ்வாறு அசத்தாய் இருந்தாலும் யானை என்கிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரண காரணத்தால் பேத ரூப துவைத வஸ்து என்று கூறப்படுகிறது. ஆகையால் உபலப்தி, ஆசரணம், த்வைத வஸ்துவின் சத்பாவத்திற்குக் காரணமாகாது என்பது அபிப்ராயம்.
किं पुनः परमार्थसद्वस्तु, यदास्पदा जात्याद्यसद्बुद्धय इत्याह —
(ச.பா) (அ.கை) மேலும் எதன் ஆஸ்ரயத்தால் ஜாதி முதலிய அசத் புத்தி ஏற்படுகிறதே அது பரமார்த்த வஸ்துவா? என்ன என்பதைக் குறித்து கூறுகிறார்-
जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव च ।
अजाचलमवस्तुत्वं विज्ञानं शान्तमद्वयम् ॥ ४५ ॥
कारिका अन्वयः - यथा जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव अजम् अचलम् अवस्तुत्वं विज्ञानं शान्तं अद्वयम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஜாதிக்கு (உத்பத்திக்கு) சமானமாய் தோற்றமளிப்பதாயும் சலிப்பது போல் தோன்றுவதாயும் வஸ்துவைப் போல் தோன்றுவதாயும் இருப்பது அந்த அஜமாயும், அசலமாயும், அவஸ்து ரூபமாயும், சாந்தமாயும், அத்வதீய விக்ஞானமாயும் இருக்கிறது.
अजाति सत् जातिवदवभासत इति जात्याभासम् , तद्यथा देवदत्तो जायत इति । चलाभासं चलमिवाभासत इति, यथा स एव देवदत्तो गच्छतीति । वस्त्वाभासं वस्तु द्रव्यं धर्मि, तद्वदवभासत इति वस्त्वाभासम् , यथा स एव देवदत्तो गौरो दीर्घ इति । जायते देवदत्तः स्पन्दते दीर्घो गौर इत्येवमवभासते । परमार्थतस्तु अजमचलमवस्तुत्वमद्रव्यं च । किं तदेवंप्रकारम् ? विज्ञानं विज्ञप्तिः, जात्यादिरहितत्वाच्छान्तम् अत एव अद्वयं च तदित्यर्थः ॥ ४५ ॥
(ச.பா) - எது அஜாதியாய் இருந்து கொண்டு ஜாதி போல் தோன்றுகிறதோ அதை ஜாதி ஆபாசம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு தேவதத்தன் உத்பன்னமானானோ அவ்வாறு ஆகும். அசைவற்றிருப்பினும் அசைவது போல் தோன்றுவது சலாபாசம். அது தேவதத்தன் செல்கிறான் என்பது. (वस्तु आभासम्) வஸ்து ஆபாசம் = வஸ்து தர்மமுடைய திரவ்யம் என்று கூறுகிறோம். அது போன்று தோன்றுவதை வஸ்து ஆபாசம் என்கிறோம். எவ்வாறு எனில் தேவதத்தன் வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்பதுபோல் ஆகும். தேவதத்தன் உத்பன்னமாகின்றான், நடக்கின்றான், அவ்வாறே வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்று இவ்வாறு தோன்றுகின்றான். ஆனால் உண்மையில் (பரமார்த்தமாக) அவன் அஜன் (பிறப்பற்றவன்), சலனமற்றவன், அவஸ்து, அதிரவ்யம் ஆக இருக்கின்றான். விக்ஞானம் அதாவது விக்ஞப்தி (विज्ञप्ति) க்கு ஜாதி (உத்பன்னம்) முதலியவைகள் இல்லாததால் சாந்தம். ஆகையால் அத்வயம் (இரண்டற்றது) என்பது தாத்பர்யம்.
एवं न जायते चित्तमेवं धर्मा अजाः स्मृताः ।
एवमेव विजानन्तो न पतन्ति विपर्यये ॥ ४६ ॥
कारिका अन्वयः - एवं चित्तं न जायते एवं धर्माः अजाः स्मृताः एवमेव विजानन्तः विपर्यये न पतन्ति ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தம் உற்பத்தியாவதில்லை. ஆகையால் ஆத்மா அஜன்மா (உத்பத்தி அற்றது). இவ்வாறு அறிந்தவன் பிரமத்தை (भ्रमम्) அடைவதில்லை.
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः न जायते चित्तम् । एवं धर्माः आत्मानः अजाः स्मृताः ब्रह्मविद्भिः । धर्मा इति बहुवचनं देहभेदानुविधायित्वादद्वयस्यैव उपचारतः ।
(ச.பா) - இவ்வாறு முற்கூறப்பட்டக் காரணங்களால் சித்தத்திற்கு ஜன்மம் (உத்பத்தி) ஏற்படாது. மேலும் இதனால் பிரஹ்மவேத்தாக்கள் தர்மங்களுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு அஜன்மம் (உத்பத்தி அற்றது) என்று நினைக்கிறார்கள். வேறுவேறு தேஹங்களைத் தொடர்ந்து ஊடுருவி இருப்பதால் ஒரே அத்விதீய ஆத்மாவை உபசாரமாக தர்மா: (धर्माः) என்று பஹுவசனம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட விக்ஞானத்தை அதாவது ஜாதி (பிறப்பு) முதலியவை அற்றஅத்விதீய ஆத்மதத்வத்தை அறிந்தவர் பாஹ்ய ஏஷணைகளிலிருந்து விடுபட்டவர்கள் மறுபடியும் அவித்யா ரூப அந்த காரமாகிய சமுத்திரத்தில் விழமாட்டார்கள், “तत्रको मोहः कः शोकएकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ: க: சோகஏகத் வமனுபச்யத: = அங்கு மோஹமேது, சோகமேது ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு) என்பது முதலிய மந்திர வர்ணங்களால் அறிகிறோம்.
यथोक्तं परमार्थदर्शनं प्रपञ्चयिष्यन्नाह —
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட பரமார்த்த ஞானத்தை விஸ்தாரமாய் நிரூபிப்பதற்காகக் கூறுகிறார்-
ऋजुवक्रादिकाभासमलातस्पन्दितं यथा ।
ग्रहणग्राहकाभासं विज्ञानस्पन्दितं तथा ॥ ४७ ॥
कारिका अन्वयः - यथा अलातस्पन्दितं ऋजुवक्रादिका-भासं तथा विज्ञान स्पन्दितं ग्रहणग्राहाकाभासम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு கொள்ளிக்கட்டையின் சுழற்சி நேராகவும், கோணலாகவும், இன்னும் பல வாறாக ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறே விக்ஞான ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தின் ஸ்புரணமும் விஷயத்தை கிரஹிப்பதாயும் கிரஹிக்கப்பட்டதாயும் தோற்றமளிக்கிறது.
यथा हि लोके ऋजुवक्रादिप्रकाराभासम् अलातस्पन्दितम् उल्काचलनम् , तथा ग्रहणग्राहकाभासं विषयिविषयाभासमित्यर्थः । किं तत् ? विज्ञानस्पन्दितं स्पन्दितमिव स्पन्दितमविद्यया । न ह्यचलस्य विज्ञानस्य स्पन्दनमस्ति,
‘अजाचलम्’ (मा. का. ४ । ४५) इति ह्युक्तम् ॥ ४७ ॥
(ச.பா) - எவ்வாறு உலகில் கொள்ளிக் கட்டையின் சுழற்சி நேராகவும் கோணலாகவும் இன்னும் பலவாறாகவும் ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறு கிரஹிப்பது, கிரஹிக்கப்பட்டது ஆகிய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கும், அதாவது இந்திரிய விஷய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கிறது. அது யார்? விக்ஞானத்தின் ஸ்பந்தனம் அதாவது அவித்தையின் காரணமாய் ஸ்பந்தனமாவது போல் ஸ்பந்தனம் தோற்றமளிக்கிறது. உண்மையில் அசலமான விக்ஞானத்திற்கு ஸ்பந்தனம் ஏற்பட முடியாது. ஏனெனில் அது அஜம், அசலமானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
अस्पन्दमानमलातमनाभासमजं यथा ।
अस्पन्दमानं विज्ञानमनाभासमजं तथा ॥ ४८ ॥
कारिका अन्वयः - यथा अस्पन्दमानम् अलातम् अनाभासम् अजम् तथा अस्पन्दमानं अनाभासं विज्ञानं अजं भविष्यति ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு சுழற்சி அற்ற அதே கொள்ளிக்கட்டையானது நேர், வளைவு போன்ற ஆபாசத் தோற்றம் அற்றதாயும், அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே சுழற்ச்சி (ஸ்பந்தனம்) அற்றவிக்ஞானமும் ஆபாசமற்றதாயும் அஜமாயும் இருக்கிறது.
अस्पन्दमानं स्पन्दनवर्जितं तदेव अलातम् ऋज्वाद्याकारेणाजायमानम् अनाभासम् अजं यथा, तथा अविद्यया स्पन्दमानम् अविद्योपरमे अस्पन्दमानं जात्याद्याकारेण अनाभासम् अजम् अचलं भविष्यतीत्यर्थः ॥
(ச.பா) - எவ்வாறு கொள்ளிக்கட்டை ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத பொழுது நேர் முதலிய ஆகாரங்களாய் தோன்றுவது இல்லாததால் அநாபாசமாயும் (தோன்றுதல் அற்றது) அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே அவித்தையினால் ஸ்பந்திக்கும் விக்ஞானம் அவித்தை நிவிர்த்தியான பின் ஜாதி (உத்பத்தி) முதலிய ரூபத்தால் ஸ்பந்தனம் இல்லாததால் அநாபாசம், அஜம், அசலம் ஆகும் என்பது இதன் தாத்பர்யம்.
किं च-
(ச.பா) (அ,கை) மேலும்-
अलाते स्पन्दमाने वै नाभासा अन्यतोभुवः ।
न ततोऽन्यत्र निःस्पन्दान्नालातं प्रविशन्ति ते ॥ ४९ ॥
कारिका अन्वयः - स्पन्दमाने अलाते वै आभासाः अन्यतोभुवः न ते निस्पन्दात् ततः अन्यत्र न निर्गताः अलातं न प्रविशन्ति ॥
காரிகா அர்த்தம் - கொள்ளிக்கட்டைக்கு ஸ்பந்தனம் (அசைவு) இருந்தாலும் அந்த ஆபாசம் வேறு எந்த காரணத்தினாலும் அல்ல. அவ்வாறே அதற்கு ஸ்பந்தனம் இல்லாத போதும் வேறு எங்கும் செல்வதில்லை. மேலும் அந்த கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதில்லை.
तस्मिन्नेव अलाते स्पन्दमाने ऋजुवक्राद्याभासाः अलातादन्यतः कुतश्चिदागत्यालाते नैव भवन्तीति नान्यतोभुवः । न च तस्मान्निःस्पन्दादलातादन्यत्र निर्गताः । न च निःस्पन्दमलातमेव प्रविशन्ति ते ॥
(ச.பா) - சுழல்கின்ற கொள்ளிக்கட்டையில் தோன்றும் நேர், கோணல், வட்டம் போன்ற ஆபாசத்தோற்றங்கள் அந்தக் கொள்ளிக்கட்டையைக்காட்டிலும் வேறான இடத்திலிருந்து தோன்றியவைகளோ உண்மையானவைகளோ அல்ல. அந்த ஆபாசத் தோற்றங்கள். சுழற்சி அற்ற அந்தக் கொள்ளிக்கட்டையினைக் காட்டிலும் வேறு இடத்திற்கு செல்வதுமில்லை, மேலும் அந்த ஆபாசத்தோற்றங்கள் அதே கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதும் இல்லை.
किं च-
(ச.பா) (அ,கை) மேலும்-
न निर्गता अलातात्ते द्रव्यत्वाभावयोगतः ।
विज्ञानेऽपि तथैव स्युराभासस्याविशेषतः ॥ ५० ॥
कारिका अन्वयः - ते द्रव्यत्वाभावयोगतः अलातात् न निर्गताः आभासस्य अविशेषतः विज्ञानेऽपि तथैव स्युः ॥
காரிகா அர்த்தம் - திரவ்யத்துவம் அபாவமாய் இருப்பதால் கொள்ளிக்கட்டையிலிருந்து வெளியில் வருவது இல்லை மறுபடியும் நுழைவதும் இல்லை. இவ்வாறு ஆபாசத்தில் சமானத்தன்மை இருத்தலால் விக்ஞான ரூபமான ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆபாசங்கள் அவ்வாறே இருக்கின்றது. என்று அறிய வேண்டும்.
न निर्गता अलातात् ते आभासाः गृहादिव, द्रव्यत्वाभावयोगतः, द्रव्यस्य भावो द्रव्यत्वम् , तदभावः द्रव्यत्वाभावः, द्रव्यत्वाभावयोगतः द्रव्यत्वाभावयुक्तेः वस्तुत्वाभावादित्यर्थः । वस्तुनो हि प्रवेशादि सम्भवति, नावस्तुनः । विज्ञानेऽपि जात्याद्याभासाः तथैव स्युः, आभासस्य अविशेषतः तुल्यत्वात् ॥ ५० ॥
(ச.பா) - திரவ்யத்தின் பாவம் என்பது திரவ்யத்துவம். அதன் அபாவம் திரவ்யத்துவ அபாவம் எனக் கூறப்படுகிறது. திரவ்யத்துவ அபாவ ரூப யுக்தியினால் வஸ்துத்துவத்தின் அபாவம் ஆவதால் அது ஆபாசம் ஆகும். ஆபாச வீடு முதலியவைகளில் உள்ள பிரவேசம் போல் கொள்ளிக்கட்டையிலும் நிகழாது. ஏனெனில் பிரவேசம் முதலியவைகள் வஸ்துவிற்கே சம்பவிக்கும் அவஸ்துவிற்கு சம்பவிக்காது. அவ்வாறே விக்ஞானத்திலும் ஜாதி (உத்பன்னம்) முதலிய ஆபாசமும் அவ்வாறே என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆபாச விஷயத்தில் சமானமாய் இருப்பதால் ஆகும்.
कथं तुल्यत्वमित्याह —
(ச.பா) (அ.கை) - அதன் ஒற்றுமை எவ்வாறு என்பதைக் கூறுகிறார்-
विज्ञाने स्पन्दमाने वै नाभासा अन्यतोभुवः ।
न ततोऽन्यत्र निःस्पन्दान्न विज्ञानं विशन्ति ते ॥ ५१ ॥
कारिका अन्वयः - विज्ञाने स्पन्दमाने वै अन्यतोभुवः आभासाः न निस्पन्दात् ततः अन्यत्र न ते विज्ञानं न विशन्ति ।
காரிகா அர்த்தம் - விக்ஞானத்திற்கு ஸ்பந்தனம் இருந்தாலும் அதன் ஆபாசம் வேறு காரணத்தால் உண்டாகாது. அவ்வாறே அதற்கு ஸ்பந்தனம் இல்லாவிட்டாலும் வேறு எங்கும் செல்லாது மேலும் விக்ஞானத்தில் பிரவேசிக்காது.
न निर्गतास्ते विज्ञानाद्द्रव्यत्वाभावयोगतः ।
कार्यकारणताभावाद्यतोऽचिन्त्याः सदैव ते ॥ ५२ ॥
कारिका अन्वयः - ते द्रव्यत्व अभाव योगतः विज्ञानात् न निर्गता, यतः कार्यकारणता अभावात् ते सदैव अचिन्त्याः ।
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்கு அபாவம் இருப்பதால் அது விக்ஞானத்திலும் பிரவேசிக்காது. ஏனெனில் காரியகாரணம் அபாவமாய் இருப்பதால் அவை எப்பொழுதும் அசிந்தியமாய் இருக்கிறது.
अलातेन समानं सर्वं विज्ञानस्य ; सदा अचलत्वं तु विज्ञानस्य विशेषः । जात्याद्याभासा विज्ञाने अचले किङ्कृता इत्याह — कार्यकारणताभावात् जन्यजनकत्वानुपपत्तेरभावरूपत्वात् अचिन्त्याः ते यतः सदैव ।
(ச.பா) கொள்ளிக்கட்டைக்கு சமானம் விக்ஞான விஷயம். எப்பொழுதும் அசலமாய் இருப்பது விக்ஞானத்தின் விசேஷம். ஜாதி (உத்பத்தி) முதலிய ஆபாசம் அசலமான விக்ஞானத்தில் எவ்வாறு தோன்றியது? என்பதைக் கூறுகிறார். காரியகாரணத்தின் அபாவத்தால் ஜன்ய ஜனகத்துவம் இல்லாததால் அபாவமாய் இருப்பதால் அசிந்தியமாய் எப்பொழுதும் இருக்கிறது.
यथा असत्सु ऋज्वाद्याभासेषु ऋज्वादिबुद्धिर्दृष्टा अलातमात्रे, तथा असत्स्वेव जात्यादिषु विज्ञानमात्रे जात्यादिबुद्धिर्मृषैवेति समुदायार्थः ॥
(ச.பா) எவ்வாறு நேர் முதலிய ஆபாசங்கள் இல்லாவிடினும் கொள்ளிக்கட்டையில் நேர் முதலிய புத்தி உண்டாகிறதோ அவ்வாறே ஜாதி (உத்பத்தி) முதலியவை இல்லாவிடினும் கேவல விக்ஞானத்தில் ஜாதி முதலிய புத்தி தோன்றுவது மித்தையாகும்.
अजमेकमात्मतत्त्वमिति स्थितम् । तत्र यैरपि कार्यकारणभावः कल्प्यते, तेषां
(ச.பா) (அ.கை) அஜமாயும், ஏகமாயும் இருக்கும். ஆத்ம தத்துவத்தில் எவர்களால் காரியகாரணபாவம் கல்பிக்கப்படுகிறது அவர்களுடைய மதத்திலும்-
द्रव्यं द्रव्यस्य हेतुः स्यादन्यदन्यस्य चैव हि ।
द्रव्यत्वमन्यभावो वा धर्माणां नोपपद्यते ॥ ५३ ॥
कारिका अन्वयः - अन्यस्य द्रव्यस्य अन्यत् द्रव्यं चैव हेतुः स्यात् हि धर्माणां द्रव्यत्वं अन्यभावो वा न उपपद्यते ॥ ५३ ॥
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்குக் காரணம் திரவ்யமாகும். மேலும் வேறு திரவ்யத்திற்கு வேறு திரவியம் காரணமாக வேண்டும். ஆனால் ஆத்மாவிடத்தில் திரவியத்துவமும் அதிரவியத்துவமும் சம்பவிக்கவில்லை.
द्रव्यं द्रव्यस्यान्यस्यान्यत् हेतुः कारणं स्यात् , न तु तस्यैव तत् । नाप्यद्रव्यं कस्यचित्कारणं स्वतन्त्रं दृष्टं लोके । न च द्रव्यत्वं धर्माणाम् आत्मनाम् उपपद्यते अन्यत्वं वा कुतश्चित् , येन अन्यस्य कारणत्वं कार्यत्वं वा प्रतिपद्येत । अतः अद्रव्यत्वादनन्यत्वाच्च न कस्यचित्कार्यं कारणं वा आत्मेत्यर्थः ॥ ५३ ॥
(ச.பா) வேறு திரவியம்வேறு திரவியத்திற்குக் காரணமாகலாம். ஆனால் அந்த திரவியமே அதற்குக் காரணமாகாது. திரவியம் அல்லாததை உலகில் எதற்கும் ஸ்வதந்திரமாய் காரணம் என காணப்படவில்லை அவ்வாறு தர்மங்களாகிய ஆத்மாக்களிடத்தில் திரவியத்துவமோ, அன்யத்துவமோ எவ்வகையிலும் சம்பவிக்கவில்லை. இதிலிருந்து. எந்த ஒரு வேறு திரவியத்தின் காரணத்துவம், அல்லது காரியத்துவம் அடையலாம். ஆகையால் அதிரவ்யமாயும், அனன்யத்துவமாயும் இருப்பதால் ஆத்மா எதற்கும் காரியமாகவோ காரணமாகவோ ஆக முடியாது.
एवं न चित्तजा धर्माश्चित्तं वापि न धर्मजम् ।
एवं हेतुफलाजातिं प्रविशन्ति मनीषिणः ॥ ५४ ॥
कारिका अन्वयः - एवं धर्माः चित्तजाः न चित्तं वाऽपि धर्मजं एवं मनीषिणः न हेतु फलाजातिं प्रविशन्ति ॥
காரிகா அர்த்தம் - இவ்வாறு பாஹ்ய பதார்த்தம் சித்தத்திலிருந்து உண்டாகவில்லை. சித்தமும் பாஹ்ய பதார்த்தங்களிலிருந்து உத்பன்னமாகவில்லை. ஆகையால் ஆத்ம ஞானிகள் (மநீஷிகள்) காரிய, காரணத்திற்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள்.
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः आत्मविज्ञानस्वरूपमेव चित्तमिति, न चित्तजाः बाह्यधर्माः, नापि बाह्यधर्मजं चित्तम् , विज्ञानस्वरूपाभासमात्रत्वात्सर्वधर्माणाम् । एवं न हेतोः फलं जायते, नापि फलाद्धेतुरिति हेतुफलयोरजातिं हेतुफलाजातिं प्रविशन्ति अध्यवस्यन्ति । आत्मनि हेतुफलयोरभावमेव प्रतिपद्यन्ते ब्रह्मविद इत्यर्थः ॥
(ச.பா) இவ்வாறு முன் கூறப்பட்டக் காரணங்களால் சித்தம் ஆத்ம விக்ஞான ரூபமேயாகும். சித்தத்திலிருந்து பாஹ்ய பதார்த்தங்கள் உத்பன்னமாகவில்லை. ஏனெனில் எல்லா தர்மங்களும் விக்ஞான ஸ்வரூப ஆபாசங்களே. இவ்வாறு ஹேதுவிலிருந்து பலத்தின் உத்பத்தியும், பலத்திலிருந்து ஹேதுவின் உத்பத்தியும் இல்லை. ஆகையால் பிரஹ்ம ஞானிகள் ஹேது, பலம் இவைகளுக்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள். இதன் தாத்பரியம் என்னவெனில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் ஹேது, பலன் இவைகளின் அபாவத்தையே காண்கின்றனர் என்பதாகும்.
ये पुनर्हेतुफलयोरभिनिविष्टाः, तेषां किं स्यादिति, उच्यते — धर्माधर्माख्यस्य हेतोः अहं कर्ता मम धर्माधर्मौ तत्फलं कालान्तरे क्वचित्प्राणिनिकाये जातो भोक्ष्ये इति
(ச.பா) (அ.கை) எவர்களுக்கு ஹேது, பலன்களில் அபிநிவேசம் இருக்கிறதோ அவர்களுக்கு என்ன நேரும் - தர்மாதர்மங்கள் எனப்படும் ஹேதுவிற்கு நான் கர்த்தாவாய் இருக்கிறேன். தர்மம், அதர்மங்கள் என்னுடையது. காலாந்தரத்தில் எந்த பிராணி சரீரத்திலாவது உத்பன்னமாகி அதன்பலனை அனுபவிப்பேன் என்று இவ்வாறு கூறுகிறார்.
यावद्धेतुफलावेशस्तावद्धेतुफलोद्भवः ।
क्षीणे हेतुफलावेशे नास्ति हेतुफलोद्भवः ॥ ५५ ॥
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् हेतुफलोद्भवः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலத்தில் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையில் ஹேது, பலன்களின் உத்பத்தி இருக்கிறது. ஹேது, பலன்களின் ஆக்ரஹம் நீங்கியபின் ஹேது, பலரூப சம்சாரத்தின் உத்பத்தி இல்லை.
यावद्धेतुफलयोरावेशः हेतुफलाग्रह आत्मन्यध्यारोपणम् , तच्चित्ततेत्यर्थः ; तावद्धेतुफलयोरुद्भवः धर्माधर्मयोस्तत्फलस्य चानुच्छेदेन प्रवृत्तिरित्यर्थः । यदा पुनर्मन्त्रौषधिवीर्येणेव ग्रहावेशो यथोक्ताद्वैतदर्शनेन अविद्योद्भूतहेतुफलावेशोपनीतो भवति, तदा तस्मिन्क्षीणे नास्ति हेतुफलोद्भवः ॥
(ச.பா) எது வரையிலும் ஹேது, பலம் இவைகளில் ஆக்ரஹம் இருக்கிறதோ அவை ஆத்மாவில் ஆரோபம் செய்தல் அது சித்தததன்மையாகும். அது வரையிலும் ஹேது, பலன் இவைகளின் உத்பத்தி இருக்கும். அதாவது அது வரையில் தர்மாதர்மம், அவைகளின் பலன்களும் அவிச்சின்னமாய் பிரவிர்த்திக்கும். ஆனால் எப்பொழுது மந்திரம், மருந்து இவைகளின் சாமர்த்தியத்தால் பீடையானது நீங்குகிறதோ அதைப் போல் முன்பு கூறப்பட்ட அத்வைத போதத்தால் அவித்தையினால் உண்டான ஹேது, பலன்கள் நிவர்த்தியாகிறது. அது க்ஷீணமானவுடன் ஹேது பலன்களின் உத்பத்தி உண்டாகாது.
यदि हेतुफलोद्भवः, तदा को दोष इति, उच्यते —
(ச.பா) (அ.கை) ஹேது, பலன்களின் உத்பத்தியினால் என்ன தோஷம்? அதைக் கூறுகிறார்.
यावद्धेतुफलावेशः संसारस्तावदायतः ।
क्षीणे हेतुफलावेशे संसारं न प्रपद्यते ॥ ५६ ॥
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् संसारः आयतः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலன்களின் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையிலும் சம்சாரம் பெறுகுகிறது. எப்பொழுது ஹேது, பலன்களின் ஆவேசம் நஷ்டமாகின்றதோ அப்பொழுது வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
यावत् सम्यग्दर्शनेन हेतुफलावेशः न निवर्तते, अक्षीणः संसारः तावत् आयातः दीर्घो भवतीत्यर्थः । क्षीणे पुनः हेतुफलावेशे संसारं न प्रपद्यते, कारणाभावात् ॥ ५६ ॥
(ச.பா) எது வரையிலும் சம்யக்ஞானத்தால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் நீங்கவில்லையோ அது வரையிலும் சம்சாரம் க்ஷீணமாகாததால் பெறுகுகிறது. ஆனால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் க்ஷீணமடைந்ததும் காரணம் ஒன்றும் இல்லாததால் வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
ननु अजादात्मनोऽन्यन्नास्त्येव ; तत्कथं हेतुफलयोः संसारस्य च उत्पत्तिविनाशावुच्येते त्वया ?
(ச.பா) (அ.கை) அஜன்மா ஆத்மாவைக் காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. பின் எவ்வாறு ஹேது, பலம் அவ்வாறே சம்சாரத்தின் விநாசம், உத்பத்தியை வர்ணிக்கின்றீர்கள்?
शृणु -
(ச.பா) (சமாதானம்) - கேள் -
संवृत्या जायते सर्वं शाश्वतं नास्ति तेन वै ।
सद्भावेन ह्यजं सर्वमुच्छेदस्तेन नास्ति वै ॥ ५७ ॥
कारिका अन्वयः - संवृत्या सर्वं जायते तेन शाश्वतं नास्ति वै सद्भावेन सर्वं अजं तेन उच्छेदः नास्ति वै ।
காரிகா அர்த்தம் - எல்லா பதார்த்தங்களும் வியவஹார திருஷ்டியினால் உண்டானவை. ஆகையால் நித்தியமல்ல. பரமார்த்த திருஷ்டியில் எவை எல்லாம் உண்டோ அவை அஜம். ஆகையால் எதற்கும் விநாசம் இல்லை.
संवृत्या संवरणं संवृतिः अविद्याविषयो लौकिकव्यवहारः ; तया संवृत्या जायते सर्वम् । तेन अविद्याविषये शाश्वतं नित्यं नास्ति वै । अतः उत्पत्तिविनाशलक्षणः संसारः आयत इत्युच्यते । परमार्थसद्भावेन तु अजं सर्वम् आत्मैव यस्मात् ; अतो जात्यभावात् उच्छेदः तेन नास्ति वै कस्यचिद्धेतुफलादेरित्यर्थः ॥ ५७ ॥
(ச.பா) அவித்யா விஷயமான லௌகிக வியவஹாரத்தின் பெயர் சம்விருத்தி (संवृति). அந்த சம்விருத்தியிலிருந்து எல்லாவற்றின் உத்பத்தியும் உண்டாகிறது, ஆகையால் அந்த அவித்யா விஷயத்தில் எந்த ஒரு வஸ்துவும் சாஸ்வதம் அதாவது நித்யம் இல்லை. ஆகையால் உத்பத்தி விநாசமுடைய சம்சாரம் விஸ்தாரம் அடைகிறது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பரமார்த்த சத்தையில் எல்லாம் அஜன்மா ஆத்மாவே. ஆகையால் ஜன்மத்தின் அபாவம் இருப்பதால் எந்த ஒரு ஹேது, பலனும் உச்சேதம் (சேதம்) அடைவதில்லை என்பது தாத்பர்யம்.
धर्मा य इति जायन्ते जायन्ते ते न तत्त्वतः ।
जन्म मायोपमं तेषां सा च माया न विद्यते ॥ ५८ ॥
कारिका अन्वयः - ये धर्माः इति जायन्ते ते तत्त्वतः न जायन्ते तेषां जन्म मायोपमं सा च माया न विद्यते ।
காரிகா அர்த்தம் - தர்மம் (ஜீவன்) உத்பன்னம் ஆகிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் அவை உத்பன்னமாவதில்லை. அதன் ஜன்மம் மாயைக்கு ஒப்பானது. மேலும் அந்தமாயை (உண்மையில்) இல்லை.
येऽप्यात्मानोऽन्ये च धर्मा जायन्त इति कल्प्यन्ते, ते इति एवंप्रकारा यथोक्ता संवृतिर्निर्दिश्यत इति संवृत्यैव धर्मा जायन्ते । न ते तत्त्वतः परमार्थतः जायन्ते । यत्पुनस्तत्संवृत्या जन्म तेषां धर्माणां यथोक्तानां यथा मायया जन्म तथा तत् मायोपमं प्रत्येतव्यम् ।
(ச.பா) எவர்கள் ஆத்மா அவ்வாறே, (धर्मा) ஜீவன்கள் வேறு இவ்வாறு கல்பனை செய்கிறார்களோ அவர்கள் இவ்வாறு எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) சம்விருத்தியினால் உத்பன்னமாகிறது. இங்கு इति என்ற சப்தத்தினால் இதற்கு முன் ஸ்லோகத்தில் சம்விருத்தி நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அவைகள் பரமார்த்தமாக (உண்மையாக) உத்பன்னமாகவில்லை. ஏனெனில் அந்த முன்கூறப்பட்ட தர்மங்களுக்கு எந்த சம்விருத்தியினால் உண்டானது ஜன்மம், அது எவ்வாறோ அவ்வாறு மாயையினால் ஜன்மம் உண்டாகிறது. ஆகையால் அதை மாயைக்கு ஒப்பாக அறியப்பட வேண்டும்.
माया नाम वस्तु तर्हि ; नैवम् , सा च माया न विद्यते । मायेत्यविद्यमानस्याख्येत्यभिप्रायः ॥ ५८ ॥
(ச.பா) அவ்வாறானால் மாயை சத் வஸ்துவா? அவ்வாறு அல்ல, அந்த மாயை இல்லை. மாயை என்பது இல்லாத வஸ்துவின் பெயர் என்றது அபிப்பிராயம்.
कथं मायोपमं तेषां धर्माणां जन्मेति, आह —
(ச.பா) (அ.கை) எவ்வாறு அந்த தர்மங்களின் ஜன்மம் மாயைக்கு சமானமாகும்? அது கூறப்படுகிறது-
यथा मायामयाद्बीजाज्जायते तन्मयोऽङ्कुरः ।
नासौ नित्यो न चोच्छेदी तद्वद्धर्मेषु योजना ॥ ५९ ॥
कारिका अन्वयः - यथा मायामयात् बीजात् तन्मयः अङ्कुरः जायते असौ न नित्यः न उच्छेदी च तद्वत् धर्मेषु योजना ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு மாயாமய பீஜத்திலிருந்து அங்குரம் உத்பத்தியாகிறது. மேலும் அது நித்யமும் ஆகாது நாசமுடையதும் ஆகாது. அவ்வாறே தர்ம விஷயத்திலும் இந்த யுக்தியை அறியவேண்டும்.
यथा मायामयात् आम्रादिबीजात् जायते तन्मयः मायामयः अङ्कुरः, नासावङ्कुरो नित्यः, न च उच्छेदी विनाशी वा । अभूतत्वादेव धर्मेषु जन्मनाशादियोजना युक्तिः, न तु परमार्थतो धर्माणां जन्म नाशो वा युज्यत इत्यर्थः ॥ ५९ ॥
(ச.பா) எவ்வாறு மாயாமயமான மாம்பழம் முதலியவை பீஜத்திலிருந்து உத்பன்னமாகிறது. அந்த அங்குரம் நித்யமானதோ, நாசமுடையதோ ஆகாது. அவ்வாறு தர்மங்கள் அசத்தியமாய் இருப்பதால் ஜன்ம, நாசம் முதலியவைகளின் யோஜனையானது யுக்தியுடன் கூடியதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் உண்மையில் தர்மங்களுக்கு ஜன்மமோ நாசமோ சம்பவிக்காது.
नाजेषु सर्वधर्मेषु शाश्वताशाश्वताभिधा ।
यत्र वर्णा न वर्तन्ते विवेकस्तत्र नोच्यते ॥ ६० ॥
कारिका अन्वयः - अजेषु सर्व धर्मेषु शाश्वत अशाश्वत अभिधा न यत्र वर्णाः न वर्तन्ते तत्र विवेकः नोच्यते ॥
காரிகா அர்த்தம் - இந்த சம்பூர்ண அஜன்ம ஆத்மா தர்மங்களில் நித்திய அநித்திய என்பதில் பிரவிர்த்தி இல்லை. எங்கு சப்தம் இல்லை. அந்த ஆத்ம தத்வத்தில் (நித்ய அநித்திய) விவேகத்தையும் சொல்ல முடியாது.
परमार्थतस्त्वात्मस्वजेषु नित्यैकरसविज्ञप्तिमात्रसत्ताकेषु शाश्वतः अशाश्वतः इति वा न अभिधा, नाभिधानं प्रवर्तत इत्यर्थः । यत्र येषु वर्ण्यन्ते यैरर्थाः, ते वर्णाः शब्दा न वर्तन्ते अभिधातुं प्रकाशयितुं न प्रवर्तन्त इत्यर्थः । इदमेवमिति विवेकः विविक्तता तत्र नित्योऽनित्य इति नोच्यते,
‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इति श्रुतेः ॥
(ச.பா) உண்மையில் நித்திய ஏகரச விக்ஞானமாத்திர சத் ஸ்வரூப அஜன்மா ஆத்மாவிடத்தில் நித்திய அநித்திய என்ற பெயர் பிரவிர்த்திக்காது. எந்த பதார்த்தங்கள் வர்ணனை செய்யப்பட்டனவோ அந்த வர்ணம் சப்தமும் ஆகாது. அதாவது அதை வர்ணனை செய்வதற்கு பிரவிர்த்திப்பதில்லை. அதில் நித்யம் அல்லது அநித்தியம் என்ற பிரகாரமாகவும் விவேகமானது சொல்லப்படவில்லை. எவ்வாறு “வாக்கானது எங்கு நிவர்த்திக்கிறதோ” என்றசுருதி வாக்கியத்தினாலும் அறியப்படுகிறது.
यथा स्वप्ने द्वयाभासं चित्तं चलति मायया ।
तथा जाग्रद्द्वयाभासं चित्तं चलति मायया ॥ ६१ ॥
कारिका अन्वयः - यथा स्वप्ने द्वयाभासं चित्तं मायया चलति तथा-जाग्रद्द्वयाभासं चित्तं मायया चलति ॥
कகாரிகா அர்த்தம் - எவ்வாறு சித்தமானது ஸ்வப்னத்தில் மாயையினால் துவைத ஆபாசரூபமாய் விளங்குகிறதோ அவ்வாறு ஜாக்ரத்காலத்திலும் சித்தம் மாயையினால் துவைத ஆபாசரூபமாய் விளங்குகிறது.
अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ६२ ॥
कारिका अन्वयः - अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्नेन संशयः तथा अद्वयं च द्वयाभासं जाग्रत न संशयः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் அத்வைத சித்தமே துவைத ரூபமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அத்வைத சித்தம் துவைதமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை.
यत्पुनर्वाग्गोचरत्वं परमार्थतः अद्वयस्य विज्ञानमात्रस्य, तन्मनसः स्पन्दनमात्रम् , न परमार्थतः इत्युक्तार्थौ श्लोकौ ॥ ६१-६२ ॥
(ச.பா) உண்மையில் அத்வய விக்ஞான மாத்திரம் வாணிக்கு (வார்த்தைகளுக்கு) விஷயமாதல் மனதின் ஸ்புரண மாத்திரமே. அது பரமார்த்தமாக இல்லை. இவ்வாறு இந்த ஸ்லோகங்களின் வியாக்கியானம் ஆகும்.
इतश्च वाग्गोचरस्याभावो द्वैतस्य —
(ச.பா) (அ.கை) வாக்கின் விஷய பூதமானதாய் துவைதம் இருப்பதாலும் அது அபாவமாகும்-
स्वप्नदृक्प्रचरन्स्वप्ने दिक्षु वै दशसु स्थितान् ।
अण्डजान्स्वेदजान्वापि जीवान्पश्यति यान्सदा ॥ ६३ ॥
कारिका अन्वयः - स्वप्नदृक् स्वप्ने दशसु दिक्षु प्रचरन् सन् तत्र स्थितान् अण्डजान् स्वेदजान् वापि यान् जीवान् सदा पश्यति ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன திருஷ்டா பத்து திக்குகளிலும் அலைந்து அலைந்து அங்கு இருக்கின்ற அண்டஜ (முட்டையிலிருந்து உண்டாகும் (ஸ்வேதஜ) வேர்வையிலிருந்து உண்டாகும் ஜீவன்களை எப்பொழுதும் பார்கின்றான்.
स्वप्नान्पश्यतीति स्वप्नदृक् प्रचरन् पर्यटन्स्वप्ने स्वप्नस्थाने दिक्षु वै दशसु स्थितान् वर्तमानान् जीवान्प्राणिनः अण्डजान्स्वेदजान्वा यान् सदा पश्यतीति ॥ ६३ ॥
(ச.பா) ஸ்வப்னங்களைக் காண்கிறான் என்பதால் ஸ்வப்னதிருக். ஸ்வப்ன ஸ்தானத்தில் அலைந்து பத்து திக்குகளிலும் இருக்கும் அண்டஜம், ஸ்வேதஜம் ஆகிய பிராணிகளை எப்பொழுதும் பார்க்கிறான். (உண்மையில் அதைக்காட்டிலும் வேறு அல்ல).
यद्येवम् , ततः किम् ? उच्यते —
(ச.பா) (அ.கை) இவ்வாறு இருப்பதால் அதனால் என்ன சித்திக்கிறது - என்பது கூறப்படுகிறது.
स्वप्नदृक्चित्तदृश्यास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं स्वप्नदृक्चित्तमिष्यते ॥ ६४ ॥
कारिका अन्वयः - स्वप्नदृक् चित्त दृश्याः ते ततः पृथक् न विद्यन्ते तथा इदं स्वप्नदृक् चित्तं तत् दृश्यमेव इष्यते ।
காரிகா அர்த்தம் - எந்த எல்லா ஸ்வப்ன திருக்கின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாக இல்லை. இவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமாகும்.
स्वप्नदृशश्चित्तं स्वप्नदृक्चित्तम् , तेन दृश्याः ते जीवाः ; ततः तस्मात् स्वप्नदृक्चित्तात् पृथक् न विद्यन्ते न सन्तीत्यर्थः । चित्तमेव ह्यनेकजीवादिभेदाकारेण विकल्प्यते । तथा तदपि स्वप्नदृक्चित्तमिदं तद्दृश्यमेव, तेन स्वप्नदृशा दृश्यं तद्दृश्यम् । अतः स्वप्नदृग्व्यतिरेकेण चित्तं नाम नास्तीत्यर्थः ॥
(ச.பா) ஸ்வப்ன திருஷ்டாவின் “சித்தம் ஸ்வப்ன திருக் சித்தம்” எனப்படுகிறது. அதனால் பார்க்கப்படும் ஜீவன் அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்பது தாத்பரியம். சித்தத்தாலேயே அநேக ஜீவாதி பேத ரூபமாய் கல்பிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமே. அந்த ஸ்வப்ன திருஷ்டாவால் பார்க்கப்படுவதால் அதன் திருஷ்யமாகும். ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாவைக் காட்டிலும் வேறாய் சித்தம் இல்லை என்பது தாத்பரியம்.
चरञ्जागरिते जाग्रद्दिक्षु वै दशसु स्थितान् ।
अण्डजान्स्वेदजान्वापि जीवान्पश्यति यान्सदा ॥ ६५ ॥
कारिका अन्वयः - जागरिते जाग्रत् दशसु दिक्षु चरन् सन् तत्र स्थितान् अण्डजान् स्वेदजान् यान् जीवान् सदा पश्यति ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத் அவஸ்தையில் அலைந்து அலைந்து ஜாக்ரத் அவஸ்தையின் சாக்ஷியாய் இருந்து கொண்டு பத்து திக்குகளிலும் இருக்கும் அண்டஜ, ஸ்வேதஜ ஜீவர்களை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கும்.
जाग्रच्चित्तेक्षणीयास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं जाग्रतश्चित्तमिष्यते ॥ ६६ ॥
कारिका अन्वयः - ते जाग्रत् चित्तेक्षणीयाः ततः पृथक् न विद्यन्ते तत् दृश्यमेव इदं जाग्रतः चित्तं इष्यते ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத் சித்தத்தின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாய் இல்லை. அதேபோல் ஜாக்ரத் சித்தமும் அதன் திருஷ்யமாகக் கொள்ளப்படுகிறது.
जाग्रतो दृश्या जीवाः तच्चित्ताव्यतिरिक्ताः, चित्तेक्षणीयत्वात् , स्वप्नदृक्चित्तेक्षणीयजीववत् । तच्च जीवेक्षणात्मकं चित्तं द्रष्टुरव्यतिरिक्तं द्रष्टृदृश्यत्वात् स्वप्नचित्तवत् । उक्तार्थमन्यत् ॥
(ச.பா) - விழித்துக் கொண்டிருப்பவனால் காணப்படும் திருஷ்யங்களான ஜீவர்கள் அந்த சித்தத்தை விட வேறானவைகள் அல்ல. ஏனெனில் ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தினால் பார்க்கப்படும் ஜீவர்களுக்கு சமானமாய் அவர்கள் அந்த சித்தத்தால் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே ஜீவன்களைப் பார்க்கும் அந்த சித்தமும் திருஷ்டாவைக் காட்டிலும் அபின்னம் ஏனெனில் ஸ்வப்ன சித்தத்திற்குச் சமானமாய் அந்த ஜாக்ரத் திருஷ்டாவின் திருஷ்யமும் இருக்கிறது. சேஷ(மீதி) அர்த்தம் முன்பே கூறப்பட்டிருக்கிறது.
उभे ह्यन्योन्यदृश्ये ते किं तदस्तीति चोच्यते ।
लक्षणाशून्यमुभयं तन्मते नैव गृह्यते ॥ ६७ ॥
कारिका अन्वयः - ते उभे अन्योन्य दृश्ये हि किं तत् अस्तीति नोच्यते उभयं लक्षणाशून्यं तन्मतेनैव गृह्यते ।
காரிகா அர்த்தம் - அவை (ஜீவ. சித்தம்) இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாய் இருக்கின்றன. அவைகள் வஸ்துவா? அதைக் கூறமுடியாது. அவை இரண்டும் பிரமாண சூன்யம் மேலும் அவைகள் சித்தத்தின் காரணத்தால் கிரஹிக்கப்படுகிறது.
जीवचित्ते उभे चित्तचैत्त्ये ते अन्योन्यदृश्ये इतरेतरगम्ये । जीवादिविषयापेक्षं हि चित्तं नाम भवति । चित्तापेक्षं हि जीवादि दृश्यम् । अतस्ते अन्योन्यदृश्ये । तस्मान्न किञ्चिदस्तीति चोच्यते चित्तं वा चित्तेक्षणीयं वा । किं तदस्तीति विवेकिनोच्यते । न हि स्वप्ने हस्ती हस्तिचित्तं वा विद्यते ; तथा इहापि विवेकिनामित्यभिप्रायः ।
(ச.பா) அவ்விரண்டும் அதாவது சித்தமும், சித்த திருஷ்யம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. ஜீவன் முதலிய விஷயங்களின் அபேக்ஷயைினால் சித்தம். மேலும் சித்தத்தின் அபேக்ஷயைால் ஜீவன் முதலிய திருஷ்யங்கள். ஆகையால் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. விவேகிகள் சித்தம், சித்தத்தின் திருஷ்யம் ஆகிய இவைகளில் ஒரு வஸ்துவும் இல்லை. இதிலிருந்து விவேகிகளின் அபிப்பிராயம் என்னவெனில் எவ்வாறு ஸ்வப்னத்தில் யானை அதனை கிரஹிக்கும் சித்தம் இல்லையோ அவ்வாறே (ஜாக்ரத் அவஸ்தையிலும்) அவைகள் இல்லை
कथम् ? लक्षणाशून्यं लक्ष्यते अनयेति लक्षणा प्रमाणम् ; प्रमाणशून्यमुभयं चित्तं चैत्त्यं द्वयं यतः, तन्मतेनैव तच्चित्ततयैव तत् गृह्यते । न हि घटमतिं प्रत्याख्याय घटो गृह्यते, नापि घटं प्रत्याख्याय घटमतिः । न हि तत्र प्रमाणप्रमेयभेदः शक्यते कल्पयितुमित्यभिप्रायः ॥
(ச.பா) எவ்வாறு இல்லை? ஏனெனில் சித்தமும், சைத்தியமும் (திருஷ்யமும்) லக்ஷண சூன்யம் அதாவது பிரமாணம் அற்றது. எதனால் ஒரு பதார்த்தம் லக்ஷியம் செய்யப்படுகிறதோ லக்ஷணா அதாவது பிரமாணம் என்கிறோம். மேலும் அவை அதன் சித்ததின் வாயிலாகவே அறியப்படுகிறது. ஏனெனில் கடத்தை நிராகரித்து விட்டுகடத்தை கிரஹிக்க முடியாது. அது போல் கடத்தை நிராகரித்து கட புத்தி ஏற்படாது. குடத்தைப் பற்றிய அறிவு இல்லையெனில் குடத்தை அறியமுடியாது. (குடத்தை அறியாமல் குடத்தைப் பற்றிய அறிவு ஏற்பட முடியாது.) எனவே இவைகளில் எது பிரமாணம், எது பிரமாணத்தால் அறியத்தக்க பிரமேயம் என்று கல்பிக்க முடியாது. அது போன்றே இதுவும் என்பது அபிப்பிராயம்.
यथा स्वप्नमयो जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ६८ ॥
कारिका अन्वयः - यथा स्वप्नमयः जीवः जायते म्रियतेऽपि च तथा अमी सर्वे जीवाः भवन्ति न भवन्ति ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்ன மய ஜீவன் உத்பன்னமாகிறான் மேலும் மரிக்கிறானோ அவ்வாறே எல்லா ஜீவர்களும் உத்பன்னமாகிறார்கள் மரிக்கின்றார்கள்.
यथा मायामयो जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ६९ ॥
कारिका अन्वयः - यथा मायामयः जीवः जायते म्रियतेऽपि च तथा अमीसर्वे जीवाः भवन्ति न भवन्ति च ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மாயாமயமான ஜீவன் உத்பன்னமாகி மரிக்கிறதோ அவ்வாறே இந்த எல்லா ஜீவர்களும் உத்பன்னமாகிறார்கள் மரிக்கின்றனர்.
यथा निर्मितको जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ७० ॥
कारिका अन्वयः - यथा निर्मितकः जीवः जायते म्रियतेऽपिच तथा अमी सर्वे जीवाः भवन्ति न भवन्ति च ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மணிமந்திர ஒளஷதங்களால் உண்டான ஜீவன் உத்பன்னமாகிறது மரிக்கிறது. அதுபோல் இந்த ஜீவன்களும் உண்டாகின்றன மரிக்கின்றன.
मायामयः मायाविना यः कृतो निर्मितकः मन्त्रौषध्यादिभिर्निष्पादितः । स्वप्नमायानिर्मितका अण्डजादयो जीवा यथा जायन्ते म्रियन्ते च, तथा मनुष्यादिलक्षणा अविद्यमाना एव चित्तविकल्पनामात्रा इत्यर्थः ॥
(ச.பா) மாயாவியினால் மந்தர ஒளஷதங்களால் உண்டாக்கப்பட்டது மாயாமயம். ஸ்வப்னம், மாயா, மந்திரம் முதலியவைகளால் உண்டான அண்டஜம் (முட்டையிலிருந்து உண்டாவது) முதலிய ஜீவன்கள் எவ்வாறு உத்பன்ன மாகின்றனவோ, மரிக்கின்றனவோ அவ்வாறே மனுஷ்ய முதலிய ஜீவன்கள் சித்தத்தின் விகல்பமாத்திரமே என்பதுபொருள்.
न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ७१ ॥
कारिका अन्वयः - कश्चित् जीवः न जायते अस्य संभवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ॥ ७१ ॥
காரிகா அர்த்தம் - (உண்மையில்) ஒரு ஜீவனும் உத்பன்னமாகவில்லை. அதற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது. இது உத்தம சத்தியம். இதில் எந்த ஒரு வஸ்துவின் உத்பத்தியும் உண்டாகாது.
व्यवहारसत्यविषये जीवानां जन्ममरणादिः स्वप्नादिजीववदित्युक्तम् । उत्तमं तु परमार्थसत्यं न कश्चिज्जायते जीव इति । उक्तार्थमन्यत् ॥
(ச.பா) வ்யவஹாரிக சத்தையில் ஜீவனுக்குள்ள ஜன்ம மரண முதலியவை ஸ்வப்ன ஜீவனுக்குச் சமானமாகும் என்று முதலிலேயே கூறப்பட்டது. எந்த ஜீவனும் உத்பத்தியாகவில்லை என்பதே உத்தம சத்தியம், மீதி அம்சம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டு விட்டது.
चित्तस्पन्दितमेवेदं ग्राह्यग्राहकवद्द्वयम् ।
चित्तं निर्विषयं नित्यमसङ्गं तेन कीर्तितम् ॥ ७२ ॥
कारिका अन्वयः - ग्राह ग्राहकवत् इदं द्वयं चित्त स्पन्दितमेव चित्तं निर्विषयं तेन नित्यं असङ्गं कीर्तितम् ।
காரிகா அர்த்தம் - விஷயம், இந்திரியங்களுடன் கூடிய எல்லா துவைதமும் சித்தத்தின் விளக்கமே, ஆனால் சித்தம் விஷய மற்றது. ஆகையால் அதை நித்தியம், அசங்கம் என்று கூறப்படுகிறது.
सर्वं ग्राह्यग्राहकवच्चित्तस्पन्दितमेव द्वयम् । चित्तं परमार्थत आत्मैवेति निर्विषयम् । तेन निर्विषयत्वेन नित्यम् असङ्गं कीर्तितम् ।
‘असङ्गो ह्ययं पुरुषः’ (बृ. उ. ४ । ३ । १५) इति श्रुतेः । सविषयस्य हि विषये सङ्गः । निर्विषयत्वाच्चित्तमसङ्गमित्यर्थः ॥ ७२ ॥
(ச.பா) விஷயம், இந்திரியங்களுடன் கூடிய சம்பூர்ண த்வைதம் சித்தத்தின் விளக்கமே. ஆனால் உண்மையில் ஆத்மாவே, ஆகையால் நிர்விஷயம் அது நிர்விஷயமாய் இருப்பதால் அதை எப்பொழுதும் அசங்கம் எனப்படுகிறது. “असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோஹ்யம் புருஷ: - இந்த புருஷன் அசங்கன்) என்ற சுருதி வாக்கியம் பிரமாணமாகும். எது விஷயத்துடன் இருக்கிறதோ அதற்கு சங்கம் ஏற்படும் ஆகையால் நிர்விஷயமாய் இருப்பதால் சித்தம் அசங்கம் என்பது தாத்பர்யமாகும்.
ननु निर्विषयत्वेन चेदसङ्गत्वम् , चित्तस्य न निःसङ्गता भवति, यस्मात् शास्ता शास्त्रं शिष्यश्चेत्येवमादेर्विषयस्य विद्यमानत्वात् ;
(ச.பா) (அ.கை) (சங்கை) நிர்விஷயத்தினால் அசங்கம் என்றால் சித்தத்திற்கு அசங்கம் என்பது பொருந்தாது. ஏனெனில் அதற்கு சாஸ்தா (குரு) சாஸ்திரம், சிஷ்யன் முதலிய விஷயங்கள் இருப்பதால்.
नैष दोषः । कस्मात् ?
(ச.பா) (சமாதானம்) - இது தோஷம் இல்லை. ஏனெனில் -
योऽस्ति कल्पितसंवृत्या परमार्थेन नास्त्यसौ ।
परतन्त्राभिसंवृत्या स्यान्नास्ति परमार्थतः ॥ ७३ ॥
कारिका अन्वयः - यः अस्ति सः संवृत्या कल्पितः परमार्थेन असौ नास्ति यत् परतन्त्रभि संवृत्या स्यात् परमार्थतः नास्ति ॥ ७३ ॥
காரிகா அர்த்தம் - எந்த பதார்த்தம் கல்பித வியவஹாரத்தால் உண்டாகிறதோ அது உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை, மேலும் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திரங்களின் பரிபாஷையை அனுசரித்து உண்டாகிறதோ அதுவும் உண்மையில் இல்லை.
(ச.பா) எந்த சாஸ்திரம் முதலிய பதார்த்தங்கள் உண்டோ அவை கல்பித வியவஹாரங்களால் தோன்றியவை. அந்த வியவஹாரம் பரமார்த்த தத்துவத்தை அறிவதற்கான உபாய ரூபமாய் கல்பனை செய்யப்பட்டவைகளாகும். அதனால் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அது உண்மையில் இல்லை. ஞானம் உண்டானபின் துவைதம் இருக்காது என்று கூறப்பட்டது.
(ச.பா) இதைத்தவிர எந்த பதார்த்தம் பரதந்திர முதலிய சம்விருத்தியினால் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திர வியவஹாரத்தால் உண்மையாக நிரூபணம் செய்யப்பட்டதை அறிந்தபின் இல்லை என்பது சித்திக்கிறது. ஆகவே ஆன்மஸ்வரூபம் அஸங்கமானது என்று கூறப்பட்டது முற்றிலும் பொருத்தமானதே.
ननु शास्त्रादीनां संवृतित्वे अज इतीयमपि कल्पना संवृतिः स्यात् ।
(ச.பா) (அ.கை) சங்கை - சாஸ்திரம் முதலியவைகளை வியவஹாரிகமாய் ஏற்றுக்கொண்டால் “இது அஜம்” என்று கல்பனையும் வியவஹாரிகம் ஆகுமே?
सत्यमेवम् ।
(ச.பா) (சாமதானம்) - அவ்வாறு சத்யமே.
अजः कल्पितसंवृत्या परमार्थेन नाप्यजः ।
परतन्त्राभिनिष्पत्त्या संवृत्या जायते तु सः ॥ ७४ ॥
कारिका अन्वयः - कल्पित संवृत्या अजः परमार्थेन अजः अपि न (यः) परतन्त्राभिनिष्पत्त्या सः संवृत्यातु जायते ।
காரிகா அர்த்தம் - ஆத்மா “அஜம்” என்பதும் வியவஹாரத்தின் காரணமாகவே சொல்லப்படுகிறது. உண்மையில் “அஜம்” என்பது இல்லை. மற்றமதங்களை அனுசரிக்கும் சாஸ்திரங்களில் இருக்கும் சம்விருத்தி (பிரமத்தினால் உண்டாகும் வியவஹாரம்) யை அனுசரித்து அதற்கு ஜன்மம் உண்டாகிறது. - (அதை நிஷேதம் செய்வதற்காக அஜம் என்கிறோம்)
शास्त्रादिकल्पितसंवृत्यैव अज इत्युच्यते । परमार्थेन नाप्यजः, यस्मात् परतन्त्राभिनिष्पत्त्या परशास्त्रसिद्धिमपेक्ष्य यः अज इत्युक्तः, स संवृत्या जायते । अतः अज इतीयमपि कल्पना परमार्थविषये नैव क्रमत इत्यर्थः ॥
(ச.பா) சாஸ்திரம் முதலியவைகளால் கல்பிக்கப்பட்ட காரணத்தால் அதை (ஆத்மாவை) “அஜம்” என்கின்றோம், உண்மையில் அது அஜமும் அல்ல. ஏனெனில் மற்ற சாஸ்திரங்களின் சித்திப்பதை அபேக்ஷித்து “அஜம்” என்கிறோம். அது சம்விருத்தியினால் ஜன்மத்தை அடைகிறது. ஆகையால் “அது அஜம்” என்ற கல்பனையும் பரமார்த்த விஷயத்தில் பிரவேசிக்காது.
यस्मादसद्विषयः, तस्मात्-
(ச.பா) (அ.கை) - ஏனெனில் விஷயம் அசத், அதனால்-
अभूताभिनिवेशोऽस्ति द्वयं तत्र न विद्यते ।
द्वयाभावं स बुद्ध्वैव निर्निमित्तो न जायते ॥ ७५ ॥
कारिका अन्वयः - अभूतः अभिनिवेश अस्ति द्वयं न विद्यते यः बुद्ध्वैव द्वयाभावं निर्मिमितः सः न जायते ॥ ७५ ॥
காரிகா அர்த்தம் - உலகில் அசத்திய (த்வைத) விஷயத்தில் கேவலம் ஆக்ரஹம் இருக்கின்றது. அங்கு (பரமார்த்த தத்துவத்தில்) துவைதமே இல்லை. ஜீவன் துவைத அபாவத்தின் ஞானம் அடைந்து காரணம் ஏதும் இல்லாததால் ஜன்மம் எடுப்பதில்லை.
असत्यभूते द्वैते अभिनिवेशोऽस्ति केवलम् । अभिनिवेशः आग्रहमात्रम् । द्वयं तत्र न विद्यते मिथ्याभिनिवेशमात्रं च जन्मनः कारणं यस्मात् , तस्मात् द्वयाभावं बुद्ध्वा निर्निमित्तः निवृत्तमिथ्याद्वयाभिनिवेशः यः, सः न जायते ॥
(ச.பா) உலகோருக்கு அசத்தியமான த்வைதத்தில் ஆக்ரஹம் இருக்கிறது. ஆக்ரஹம் என்பது அபிநிவேஷம். உண்மையில் துவைதமே இல்லை. ஏனெனில் மித்தையான அபிநிவேஷமே ஜன்மத்திற்கு காரணமாகிறது. ஆகையால் துவைத அபாவத்தை அறிந்து நிமித்தம் அற்றதாகிறதோ அதாவது எவருக்கு மித்தையான துவைத விஷயத்தில் ஆக்ரஹம் நிவிர்த்தி ஆகிறதோ அந்த அதிகாரி மறுபடியும் ஜன்மத்தை அடைவதில்லை.
यदा न लभते हेतूनुत्तमाधममध्यमान् ।
तदा न जायते चित्तं हेत्वभावे फलं कुतः ॥ ७६ ॥
कारिका अन्वयः - उत्तमाधममध्यमान् यदा न लभते तदा चित्तं न जायते हेत्वभावे फलं कुतः ॥
காரிகா அர்த்தம் - எப்பொழுது சித்தம் உத்தம, மத்யம அதம ஹேதுக்களை அடையவில்லையோ அப்பொழுது அதற்கு ஜன்மம் இல்லை. ஏனெனில் ஹேதுவின் அபாவம் ஏற்படும் பொழுது பலம் எங்கு இருந்து உண்டாகும்?
जात्याश्रमविहिता आशीर्वर्जितैरनुष्ठीयमाना धर्मा देवत्वादिप्राप्तिहेतव उत्तमाः केवलाश्च । धर्माः अधर्मव्यामिश्रामनुष्यत्वादिप्राप्त्यर्था मध्यमाः । तिर्यगादिप्राप्तिनिमित्ता अधर्मलक्षणाः प्रवृत्तिविशेषाश्चाधमाः । तानुत्तममध्यमाधमानविद्यापरिकल्पितान् यदा एकमेवाद्वितीयमात्मतत्त्वं सर्वकल्पनावर्जितं जानन् न लभते न पश्यति, यथा बालैर्दृश्यमानं गगने मलं विवेकी न पश्यति, तद्वत् , तदा न जायते नोत्पद्यते चित्तं देवाद्याकारैः उत्तमाधममध्यमफलरूपेण । न ह्यसति हेतौ फलमुत्पद्यते बीजाद्यभाव इव सस्यादि ॥ ७६ ॥
(ச.பா) நிஷ்காம மனிதர்களால் அனுஷ்டிக்கப்படும் தேவத்துவத்தை அடைவதற்கு ஹேதுவாய் இருக்கும் வர்ணாஸ்ரம விஹித தர்மம் உத்தம ஹேதுவாகும். மனுஷ்யத்துவம் முதலியவை அடைவதற்கு ஹேதுவான அதர்மம் கலந்த தர்மம் மத்தியமஹேதுவாகும். அவ்வாறே திர்யக் முதலிய யோனிகளின் பிராப்திக்கு ஹேதுவான அதர்மமானதில் பிரவிர்த்திப்பது அதம ஹேதுவாகும். எப்பொழுது எல்லா கல்பனைகளும் அற்ற ஏகமாத்திர அத்விதீய ஆத்ம தத்துவத்தின் ஞானம் ஏற்பட்டவுடன் அந்த உத்தம, மத்யம, அதம ஹேதுக்களை இவ்வாறு மனிதன் அடைவதில்லை. எவ்வாறு எனில் விவேகி புருஷன் ஆகாயத்தில் மூடர்களால் பார்க்கப்படும் மலினம் முதலியவைகளைப் பார்ப்பது இல்லையோ அவ்வாறு அந்தசமயம் சித்தம் உத்தம, மத்யம, அதம பல ரூபமாய் தேவதாதி சரீரங்களில் உத்பன்னமாவதில்லை. எவ்வாறு பீஜம் முதலியவைகள் இல்லாமல் அன்னம் முதலியவைகள் உத்பன்னமாகாதோ அவ்வாறு ஹேது இல்லாததினால் பலத்தின் உத்பத்தி இல்லை.
हेत्वभावे चित्तं नोत्पद्यत इति हि उक्तम् । सा पुनरनुत्पत्तिश्चित्तस्य कीदृशीत्युच्यते —
(ச.பா) (அகை) - ஹேதுவின் அபாவத்தால் சித்தம் உத்பன்னமாவதில்லை என்பது கூறப்பட்டது. ஆனால் அந்த சித்தத்தின் உத்பத்தியின்மை எவ்வாறு சித்திக்கிறது? என்பது கூறப்படுகிறது.
अनिमित्तस्य चित्तस्य यानुत्पत्तिः समाद्वया ।
अजातस्यैव सर्वस्य चित्तदृश्यं हि तद्यतः ॥ ७७ ॥
कारिका अन्वयः - अनिमित्तस्य चित्तस्य या अनुत्पत्तिः समा अद्वया च यतः तत् चित्तदृश्यं हि अजातस्यैव सर्वस्य ।
காரிகா அர்த்தம் - (இவ்வாறு) நிமித்தமின்றிய சித்தத்திற்கு உத்பத்தி இல்லை. அது எவ்வகையிலும் விசேஷமும், அத்விதீயமாய் இருக்கிறது. (ஏனெனில்) அது எப்பொழுதும் அஜாத சித்தமாய் இருக்கிறது. ஏனெனில் தோன்றுகின்ற வஸ்து எல்லாம் சித்தத்தின் திருஷ்யமே.
परमार्थदर्शनेन निरस्तधर्माधर्माख्योत्पत्तिनिमित्तस्य अनिमित्तस्य चित्तस्येति या मोक्षाख्या अनुत्पत्तिः, सा सर्वदा सर्वावस्थासु समा निर्विशेषा अद्वया च ; पूर्वमपि अजातस्यैव अनुत्पन्नस्य चित्तस्य सर्वस्याद्वयस्येत्यर्थः । यस्मात्प्रागपि विज्ञानात् चित्तं दृश्यं तद्द्वयं जन्म च, तस्मादजातस्य सर्वस्य सर्वदा चित्तस्य समा अद्वयैव अनुत्पत्तिः न पुनः कदाचिद्भवति, कदाचिद्वा न भवति । सर्वदा एकरूपैवेत्यर्थः ॥ ७७ ॥
(ச.பா) பரமார்த்த ஞானத்தால் எதற்கு தர்மாதர்ம ரூபமான உத்பத்தியின் ஹேது நிவிர்த்தியாகிறதோ அந்த ஹேது அற்ற சித்தத்திற்கு மோக்ஷம் எனப்படும் அனுத்பத்தி (உத்பத்தி அற்றது) இருக்கிறதோ அது எப்பொழுதும் எல்லா அவஸ்தைகளிலும் சமானமாய் அதாவது நிர்விசேஷமாயும் அத்விதீயமாயும் இருக்கிறது. அது முன்பே (பூர்வமே) அஜமாயும், அதாவது உத்பன்னமற்றதாயும், அத்வயமாயும் அந்த சித்தம் இருக்கிறது. ஏனெனில் ஞானம் உண்டாவதற்கு முன்பே துவைதமும், ஜன்மும் சித்தத்தின் திருஷ்யமே. ஆகையால் அஜாத சித்தத்தின் உத்பத்தி இன்மை எப்பொழுதும் எவ்விதமாகவும் சமானமாகவும் அத்வயமாகவும். இருக்கிறது. அது எப்பொழுதும் உத்பன்னமாவதும் இல்லை, இல்லாமலும் இல்லை. அது எப்பொழுதும் ஒரே ரூபமாகவே இருக்கிறது.
यथोक्तेन न्यायेन जन्मनिमित्तस्य द्वयस्यभावाद-
(ச.பா) (அகை) - கூறப்பட்ட நியாயத்தால் ஹேது பூதமான துவைத்தின் அபாவம் ஆவதின் காரணம்-
बुद्ध्वानिमित्ततां सत्यां हेतुं पृथगनाप्नुवन् ।
वीतशोकं तथा काममभयं पदमश्नुते ॥ ७८ ॥
कारिका अन्वयः - अनिमित्तताम् सत्यां बुध्वा हेतुं पृथक् अनाप्नुवन् वीतशोकं तथा वीतकामम् अभयं पदं अश्नुते ॥
காரிகா அர்த்தம் - அநிமித்தத்தை சத்தியம் என்று அறிந்து வேறு எந்த ஹேதுவையும் எடுத்துக்கொள்ளாமல் வித்வான் சோகமும், காமமும் அற்றஅபயபதத்தை அடைகிறான்.
अनिमित्ततां च सत्यां परमार्थरूपां बुद्ध्वा हेतुं धर्मादिकारणं देवादियोनिप्राप्तये पृथगनाप्नुवन् अनुपाददानः त्यक्तबाह्यैषणः सन् कामशोकादिवर्जितम् अविद्यादिरहितम् अभयं पदम् अश्नुते, पुनर्न जायत इत्यर्थः ॥ ७८ ॥
(ச.பா) அநிமித்தத்வத்தையும் சத்ய பரமார்த்த ரூபத்தை அறிந்து அவ்வாறே தேவாதி யோநிகளின் பிராப்திக்காக வேறு தர்மாதி ஹேதுக்களை எடுத்துக் கொள்ளாமல் பாஹ்ய ஈஷணைகளிலிருந்து விட்டொழிந்தவனாகி காமனை அவ்வாறே சோக முதலியவைகள் அற்ற அவித்யா சூன்ய அபய பதத்தை அடைகிறான். மறு ஜன்மம் எடுப்பதில்லை என்பது பொருள்.
अभूताभिनिवेशाद्धि सदृशे तत्प्रवर्तते ।
वस्त्वभावं स बुद्ध्वैव निःसङ्गं विनिवर्तते ॥ ७९ ॥
कारिका अन्वयः - तत् अभूताभिनिवेशाद्धि सदृशे प्रवर्तते वस्त्वभावं यदा बुद्ध्वैव सः निःसङ्गं विनिवर्तते ॥
காரிகா அர்த்தம் - சித்தம் அசத்யத்தின் (துவைதத்தின்) அபிநிவேசத்தால் அதன் அனு ரூபவிஷயத்தில் பிரவிர்த்திக்கிறது. அவ்வாறே வஸ்துவின் அபாவ ஞானம் ஏற்பட்டவுடன் அது அதில் நிஸ்சங்கத்தை அடைந்து அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.
यस्मात् अभूताभिनिवेशात् असति द्वये द्वयास्तित्वनिश्चयः अभूताभिनिवेशः, तस्मात् अविद्याव्यामोहरूपाद्धि सदृशे तदनुरूपे तत् चित्तं प्रवर्तते । तस्य द्वयस्य वस्तुनः अभावं यदा बुद्धवान् , तदा तस्मात् निःसङ्गं निरपेक्षं सत् विनिवर्तते अभूताभिनिवेशविषयात् ॥ ७९ ॥
(ச.பா) ஏன்எனில் அபூதாபிநிவேசத்தால் எந்த துவைதமானது உண்மையில் அசத்தோ அதற்கு அஸ்தித்துவத்தின் (இருப்பின்) நிச்சயம் செய்தல் अभूताभिनिवेश (அபூதாபிநிவேஷ) அவித்தையினால் உண்டான மோஹ ரூப அசத்திய அபிநிவேஷத்தின் காரணத்தால் சித்தம் அதற்கு அனுரூபமாய் விஷயங்களில் பிரவிர்த்திக்கிறது. எப்பொழுது அந்த துவைத வஸ்துவின் அபாவம் அறியப்படுகிறதோ அப்பொழுது அந்த மித்யா அபிநிவேசத்தால் உண்டான விஷயத்தில் சங்கமற்று அதாவது நிரபேக்ஷை ஆகி அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.
निवृत्तस्याप्रवृत्तस्य निश्चला हि तदा स्थितिः ।
विषयः स हि बुद्धानां तत्साम्यमजमद्वयम् ॥ ८० ॥
कारिका अन्वयः - निवृत्तस्य अप्रवृत्तस्य निश्चला तदा स्थितिः स हि यस्मात् बुद्धानां विषयः (तस्मात्)तत् साम्यम् अजम् अद्वयम् ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தமானது (துவைதத்திலிருந்து) நிவிர்த்தியாகி (வேறு விஷயங்களில்) பிரவிர்த்திக்காமல் இருக்கிறதோ, அந்த சமயத்தில் நிச்சல ஸ்திதியில் இருக்கிறது. அது பரமார்த்த தர்சிகளின் விஷயமாகும். மேலும் அது பரமசாம்யம், அஜம் அத்வயமாகும்.
निवृत्तस्य द्वैतविषयात् , विषयान्तरे च अप्रवृत्तस्य अभावदर्शनेन चित्तस्य निश्चला चलनवर्जिता ब्रह्मस्वरूपैव तदा स्थितिः, यैषा ब्रह्मस्वरूपा स्थितिः चित्तस्य अद्वयविज्ञानैकरसघनलक्षणा । स हि यस्मात् विषयः गोचरः परमार्थदर्शिनां बुद्धानाम् , तस्मात् तत्साम्यं परं निर्विशेषमजमद्वयं च ॥
(ச.பா) அந்த சமயத்தில் துவைத விஷயத்தில் நிவிர்த்தியாகி வேறு விஷயத்தில் பிரவிர்த்திக்காத சித்தம் அபாவ தர்சனத்தின் காரணமாய் சலனமற்ற அதாவது பிரஹ்ம ஸ்வரூபஸ்திதியில் இருக்கிறது. சித்தத்தின் அந்த அத்வய விக்ஞான ஏகரச கனஸ்வரூபமான பிரஹ்மமயமான ஸ்திதி ஆகும். ஏனெனில் அது பரமார்த்த தர்சிகளாகிய ஞானிகளின் விஷயம் அதாவது கோசரம். ஆகையால் பரமசாம்யம் அதாவது நிர்விசேஷம், அஜம், அத்வயமாகும்.
पुनरपि कीदृशश्चासौ बुद्धानां विषय इत्याह —
(ச.பா) (அகை) - மறுபடியும் அந்த ஞானிகளின் விஷயம் எவ்வாறு உள்ளது? என்பதற்கு மறுபடியும் கூறுகிறார்-
अजमनिद्रमस्वप्नं प्रभातं भवति स्वयम् ।
सकृद्विभातो ह्येवैष धर्मो धातुस्वभावतः ॥ ८१ ॥
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नं स्वयं प्रभातं भवति एषः धर्मः धातुस्वभावतः सकृद्विभातः हि ।
காரிகா அர்த்தம் - அது அஜம், அநித்ரம், அஸ்வப்னம் மேலும் ஸ்வயம் பிரகாசம். அது (ஆத்மா எனப்படும்) தர்மம் தன்னுடைய வஸ்து ஸ்வபாவத்தால் நித்யம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
स्वयमेव तत् प्रभातं भवति न आदित्याद्यपेक्षम् ; स्वयं ज्योतिःस्वभावमित्यर्थः । सकृद्विभातः सदैव विभात इत्येतत् । एषः एवंलक्षणः आत्माख्यो धर्मः धातुस्वभावतः वस्तुस्वभावत इत्यर्थः ॥
(ச.பா) அது ஸ்வயமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் முதலியவைகளை அபேக்ஷித்து அல்ல. அது ஸ்வயம்பிரகாச ஸ்வபாவம். இந்த லக்ஷணமுடைய ஆத்மா எனப்படும் தர்மம் வஸ்துஸ்வபாவத்தால் அது எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
एवं बहुश उच्यमानमपि परमार्थतत्त्वं कस्माल्लौकिकैर्न गृह्यत इत्युच्यते —
(ச.பா) (அகை) - இவ்வாறு கூறப்பட்ட பின்பும் லௌகிகர்கள் இந்த பரமார்த்ததத்வத்தின் போதத்தை (ஞானத்தை) ஏன் அடையவில்லை? இதைக் குறித்து கூறுகிறார்-
सुखमाव्रियते नित्यं दुःखं विव्रियते सदा ।
यस्य कस्य च धर्मस्य ग्रहेण भगवानसौ ॥ ८२ ॥
कारिका अन्वयः - असौ भगवान् यस्य कस्य च धर्मस्य ग्रहेण नित्यं सुखम् आव्रियते सदा दुःखं विव्रियते ॥
காரிகா அர்த்தம் - இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவை பற்றும் பொய்யான அபிநிவேசத்தால் சாஸ்வதமான சுகத்தை மறைத்து எப்பொழுதும் துக்கத்தை பிரகடனம் செய்கிறான்.
यस्मात् यस्य कस्यचित् द्वयवस्तुनो धर्मस्य ग्रहेण ग्रहणावेशेन मिथ्याभिनिविष्टतया सुखमाव्रियते अनायासेन आच्छाद्यत इत्यर्थः । द्वयोपलब्धिनिमित्तं हि तत्रावरणं न यत्नान्तरमपेक्षते । दुःखं च विव्रियते प्रकटीक्रियते, परमार्थज्ञानस्य दुर्लभत्वात् । भगवानसौ आत्माद्वयो देव इत्यर्थः । अतो वेदान्तैराचार्यैश्च बहुश उच्यमानोऽपि नैव ज्ञातुं शक्य इत्यर्थः,
‘आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा’ (क. उ. १ । २ । ७) इति श्रुतेः ॥
(ச.பா) இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவைப் பற்றும் ஆவேசத்தால். இத்தகைய பொய்யான அபினிவேசத்தால் சுகமானது மூடப்படுகிறது. அதாவது அநாயாசமாக மூடப்படுகிறது என்பது பொருள். துவைத உபலப்தியின் பொருட்டு அங்கு ஆவரணம் வேறு யத்தனத்தை ஆபேக்ஷிப்பது இல்லை. பரமார்த்த ஞானம் துர்லபமாய் இருப்பதால் துக்கரூபமாய் பிரகடனம் செய்கிறது. ஆகையால் வேதாந்த ஆசாரியர்களால் அநேக விதமாக நிருபணம் செய்தும் அதை அறிய முடியாது என்பது பொருள் “आश्चर्यो वक्ताकुशलोेस्य लब्धा” (ஆச்சர்யோ வக்தா குசலோஅஸ்ய லப்தா = இதை வர்ணிக்கும் ஆசாரியர் ஆச்சரியரூபம், அவ்வாறே அதை கிரஹணம் செய்பவன் நிபுணபுருஷன்) என்று சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
अस्ति नास्तीत्यादि सूक्ष्मविषया अपि पण्डितानां ग्रहाः भगवतः परमात्मन आवरणा एव ; किमुत मूढजनानां बुद्धिलक्षणा इत्येवमर्थं प्रदर्शयन्नाह —
(ச.பா) (அை.க) - ஆத்மா என்று ஒன்று இருக்கிறது அல்லது இல்லை என்று மிக சூக்ஷ்ம விஷயங்களை விவாதித்து பரீக்ஷித்து வாதிடும் பண்டிதர்களின் ஆக்ரஹம் கூட அந்த பகவானான பரமாத்மாவை மறைக்கும் ஆவரணமாகும். பண்டிதர்களின் நிலையே இவ்வாறானால், சாமான்ய லௌகிக புத்தியை உடைய பாமரர்களைப்பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது என்று காண்பித்துக் கூறுகிறார்.
अस्ति नास्त्यस्ति नास्तीति नास्ति नास्तीति वा पुनः ।
चलस्थिरोभयाभावैरावृणोत्येव बालिशः ॥ ८३ ॥
कारिका अन्वयः - बालिशः अस्ति नास्ति अस्ति नास्तीति पुनः नास्ति नास्तीति वा चलः स्थिरः उभयाभावै आवृणोत्येव ॥
காரிகா அர்த்தம் - ஆத்மா இருக்கிறது, இல்லை, இருக்கிறது இல்லை, இல்லை இல்லை என்று இவ்வாறு கிரமமாக சலம், ஸ்திரம், இரண்டு ரூபமும், அபாவரூபம் என்ற (நான்கு) கோடிகளால் (அபிப்ராயத்தால்) மூடர்கள் பரமாத்மாவை மறைக்கிறார்கள்.
अस्तीति । अस्त्यात्मेति कश्चिद्वादी प्रतिपद्यते । नास्तीत्यपरो वैनाशिकः । अस्ति नास्तीत्यपरोऽर्धवैनाशिकः सदसद्वादी दिग्वासाः । नास्ति नास्तीत्यत्यन्तशून्यवादी । तत्रास्तिभावश्चलः, घटाद्यनित्यविलक्षणत्वात् । नास्तिभावः स्थिरः, सदाविशेषत्वात् । उभयं चलस्थिरविषयत्वात् सदसद्भावः । अभावोऽत्यन्ताभावः ।
(ச.பா) ஒரு வாதி ஆத்மா இருக்கிறது என்கிறான். வேறு வைநாசிகவாதி இல்லை என்கிறான். மூன்றாவதாக அர்த்த வைநாசிக சதசத்வாதி திகம்பரர் கூறுகிறார்கள் இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது என்று. அவ்வாறே அத்யந்த சூன்யவாதிகள் இல்லவே இல்லை என்கிறார்கள். இதில் அஸ்தி(இருக்கிறது) என்ற பாவம் சலமானது. ஏனெனில் கடம் முதலிய அநித்திய பதார்த்தத்தைக் காட்டிலும் வேறானது. எப்பொழுதும் அவிசேஷ ரூபமாய் இருப்பதால் “ஸ்திரம்” ஆகும். சலம், ஸ்திரம் விஷயமாக இருப்பதால் சதசத்பாவம் உபயரூபமாகும், அவ்வாறே அபாவமானது அத்யந்த அபாவரூபமாகும்.
प्रकारचतुष्टयस्यापि तैरेतैश्चलस्थिरोभयाभावैः सदसदादिवादी सर्वोऽपि भगवन्तमावृणोत्येव बालिशोऽविवेकी । यद्यपि पण्डितो बालिश एव परमार्थतत्त्वानवबोधात् , किमु स्वभावमूढो जन इत्यभिप्रायः ॥ ८३ ॥
(ச.பா) இந்த சலம், ஸ்திரம், சலஸ்திரம், அபாவரூபம் ஆகிய இந்த நான்கு வகையான பாவங்களால் எல்லா விவேகமற்ற சதசத் முதலிய வாதிகணங்களாகிய மூடர்கள் பகவானை மறைக்கின்றார்கள், அவர்கள் பண்டிதர்களாய் இருந்தாலும் பரமார்த்த தத்துவத்தின் ஞானம் இன்மையால் மூடர்களே, ஆகையால் இவ்வாறு இருக்கும் பொழுது மூடர்களுடைய ஸ்வபாவத்தைப்பற்றி என்ன கூறுவது? என்பது அபிப்பிராயம்.
कीदृक्पुनः परमार्थतत्त्वम् , यदवबोधादबालिशः पण्डितो भवतीत्याह —
(ச.பா) (அகை) - மேலும் அந்த பரமார்த்த தத்துவம் எத்தகையது? என்றும் எதை அறிவதால் பண்டிதன் மூடனாய் இருந்தாலும், உண்மையான பண்டிதன் ஆவான் என்பதைக் கூறுகிறார்-
कोट्यश्चतस्र एतास्तु ग्रहैर्यासां सदावृतः ।
भगवानाभिरस्पृष्टो येन दृष्टः स सर्वदृक् ॥ ८४ ॥
कारिका अन्वयः - एताः चतस्रः कोटः यासां ग्रहैः सदा आवृतः येन आभिः अस्पृष्टः भगवान् दृष्टः सः सर्वदृक् ॥
காரிகா அர்த்தம் - எவைகளின் அபினிவேசத்தால் ஆத்மா எப்பொழுதும் மறைக்கப்பட்டுள்ளதோ அவைகள் இந்த நான்கு கோடிகள் (வாத முடிவுகள்). அவைகளால் தீண்டப்படாத ஆத்மாவை எவன் பார்க்கிறானோ அவன் சர்வக்ஞன்.
कोट्यः प्रावादुकशास्त्रनिर्णयान्ताः एताः उक्ता अस्ति नास्तीत्याद्याः चतस्रः, यासां कोटीनां ग्रहैः ग्रहणैः उपलब्धिनिश्चयैः सदा सर्वदा आवृतः आच्छादितः तेषामेव प्रावादुकानां यः, स भगवान् आभिः अस्ति नास्तीत्यादिकोटिभिः चतसृभिरपि अस्पृष्टः अस्त्यादिविकल्पनावर्जित इत्येतत् । येन मुनिना दृष्टो ज्ञातः वेदान्तेष्वौपनिषदः पुरुषः, स सर्वदृक् सर्वज्ञः ; परमार्थपण्डित इत्यर्थः ॥
(ச.பா) வாதத்திறம் படைத்த பேச்சில் வல்லுணர்களான இந்த சாஸ்திரக்காரர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்தி நாஸ்தி முதலிய நான்கு கோடிகள் உள்ளன. இந்தக் கோடிகளைக் கிரஹித்து அதாவது பிரதிவாதிகள் இந்த உபலப்தியால் கிடைத்த நிச்சயத்தால் அந்த பகவான் (ஆத்மா) எப்பொழுதும் மறைக்கிறது. எந்த மனனசீலனானவன் அஸ்தி, நாஸ்தி முதலிய நான்கு கோடிகளால் தீண்டப்படாமல் இருக்கும் ஆத்மாவைக் காண்கின்றானோ அஹ்ன் வேதாந்தங்களாகிய உபநிஷத்துக்களில் விளக்கப்படும் பரம புருஷனைப் பார்க்கிறானோ அவன் பரமார்த்த பண்டிதன்(சர்வக்ஞன் ஆவான்)
प्राप्य सर्वज्ञतां कृत्स्नां ब्राह्मण्यं पदमद्वयम् ।
अनापन्नादिमध्यान्तं किमतः परमीहते ॥ ८५ ॥
कारिका अन्वयः - कृत्स्नां, सर्वज्ञतां प्राप्य अनापन्नादिमध्यान्तम् अद्वयं ब्राह्मण्यं पदम् अतः परं किम् ईहते?
காரிகா அர்த்தம் - இவ்வாறு பூர்ண சர்வக்ஞத்வமாயும், ஆதி மத்தியம அந்தமில்லாத அத்விதீய பிராஹ்மண்ய பதத்தை அடைந்தபின் எதைச் செய்ய விரும்புவான்.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட முழுமையான பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதாவது “स ब्राह्मणः” (அவன் பிராஹ்மணன்), “एष नित्यो महिमा ब्राह्मणस्य” (ஏஷ நித்யோ மஹிமா ப்ராஹ்மணஸ்ய = அந்த பிராஹ்மணத்தின் நித்யமஹிமை) என்பது முதலிய ஸ்ருதி வாக்கியங்களை அனுசரித்து பிராஹ்மண்ய பதத்தை அடைந்து ஆதிமத்யம, அந்தா அதாவது உத்பத்தி ஸ்திதி லயமற்ற பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதன்பின் அதாவது ஆத்ம லாபத்தைக் காட்டிலும், வேறு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது எதைச் செய்வான்? பிரயோஜனம் அற்றது என்பது பொருள். “नैव तस्य कृतेनार्थः” (நைவ தஸ்ய கிருதேனார்த்த:) = அவனுக்கு எந்த காரியத்தினாலும் பிரயோஜனமில்லை) முதலிய ஸ்மிருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
विप्राणां विनयो ह्येष शमः प्राकृत उच्यते ।
दमः प्रकृतिदान्तत्वादेवं विद्वाञ्शमं व्रजेत् ॥ ८६ ॥
कारिका अन्वयः - विप्राणाम् एषविनयः शमः प्राकृतः उच्यते प्रकृतिदान्तत्वात् दमः एवं विद्वान् शमं व्रजेत् ।
காரிகா அர்த்தம் - (ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பது) அந்த பிராஹ்மணர்களின் வினயம் (பணிவு). அது அவனுடைய ஸ்வாபாவிக சமம்(மன அடக்கம்) எனக்கூறப்படுகிறது. அவ்வாறே இயற்கையாக (இந்திரிய அடக்கமும்) உண்டாவதால் தமம் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு வித்வான் சாந்தியை அடைகிறான்.
विप्राणां ब्राह्मणानां विनयः विनीतत्वं स्वाभाविकं यदेतदात्मस्वरूपेणावस्थानम् । एष विनयः शमोऽप्येष एव प्राकृतः स्वाभाविकः अकृतकः उच्यते । दमोऽप्येष एव प्रकृतिदान्तत्वात् स्वभावत एव चोपशान्तरूपत्वाद्ब्रह्मणः । एवं यथोक्तं स्वभावोपशान्तं ब्रह्म विद्वान् शमम् उपशान्तिं स्वाभाविकीं ब्रह्मस्वरूपां व्रजेत् ब्रह्मस्वरूपेणावतिष्ठत इत्यर्थः ॥ ८६ ॥
(ச.பா) இந்த பிரஹ்ம நிஷ்டர்களான பிராஹ்மணர்களுக்கு வினயம் (பணிவு) இயற்கையானது. இந்த வினயத்தால் சமம் (மன அடக்கம்) ஸ்வபாவமானவன் என்று கூறப்படுகிறது. இயற்கையாகவே சாந்தமானவன் ஆனதால் தமம் (புலன் அடக்கமும்) இயற்கையே. இவ்வாறு பிரஹ்மமாய் இருக்கும் பிரஹ்ம ஞானி இயற்கையாகவே உபசாந்தியை அடைகிறான் என்பது பொருள்.
एवमन्योन्यविरुद्धत्वात् संसारकारणरागद्वेषदोषास्पदानि प्रावादुकानां दर्शनानि । अतो मिथ्यादर्शनानि तानीति तद्युक्तिभिरेव दर्शयित्वा चतुष्कोटिवर्जितत्वात् रागादिदोषानास्पदं स्वभावशान्तमद्वैतदर्शनमेव सम्यग्दर्शनमित्युपसंहृतम् । अथेदानीं स्वप्रक्रियाप्रदर्शनार्थ आरम्भः —
(ச.பா) (அ-கை) - இவ்வாறு ஒன்று மற்றொன்றிற்கு விருத்தமாய் இருப்பதால் வாதிகளின் தர்சனமானது சம்சாரத்திற்குக் காரணரூபமான ராக துவேஷாதிகளுக்கு ஆஸ்ரயம் ஆகும். ஆகையால் அவைகள் மித்யா தர்சனங்கள். இதை யுக்தியினால் காட்டி நான்கு கோடிகளும் அற்றதால் ராகமுதலிய தோஷங்களால் ஆஸ்ரியக்கப்படாத இயற்கையாய் சாந்த அத்வைத தர்சனமே சம்யக் தர்சனம் என்று உபசம்ஹாரம் செய்கிறார். இப்பொழுது தன்னுடைய பிரக்கிரியையை காண்பிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்-
सवस्तु सोपलम्भं च द्वयं लौकिकमिष्यते ।
अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकमिष्यते ॥ ८७ ॥
कारिका अन्वयः - सवस्तु सोपालम्भं च द्वयं लौकिकम् इष्यते अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकम् इष्यते ॥
காரிகா அர்த்தம் - வஸ்து, உபலப்தி இரண்டுடன் கூடிய எந்த துவைதம் இருக்கிறதோ அதை லௌகிகம்(ஜாக்ரத்) எனப்படுகிறது. வஸ்து இல்லாமல் கேவலம் உபலப்தியுடன் கூடியதை சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) எனப்படுகிறது.
सवस्तु संवृतिसता वस्तुना सह वर्तत इति सवस्तु, तथा च उपलब्धिरुपलम्भः, तेन सह वर्तत इति सोपलम्भं च शास्त्रादिसर्वव्यवहारास्पदं ग्राह्यग्रहणलक्षणं द्वयं लोकादनपेतं लौकिकं जागरितमित्येतत् । एवंलक्षणं जागरितमिष्यते वेदान्तेषु ।
(ச.பா) சவஸ்து (सवस्तु) என்பது அத்தியாசத்தால் தோன்றும் வியவஹாரிக வஸ்துவுடன் இருப்பது. சோபலம்பம் (सोपलम्भम्) என்பது உபலப்தியுடன் இருப்பது. அவ்வாறு சாஸ்திர முதலிய எல்லா வியவஹாரங்களின் ஆஸ்ரியமான க்ராஹ்ய க்ராஹகரூபமாய் எந்த த்வைத வஸ்து இருக்கிறதோ அது “लौकिक” அதாவது லோகத்தை விட தூரமானது அல்ல அதாவது ஜாக்ரத் எனப்படுகிறது. வேதாந்தத்தில் ஜாக்ரதத்திற்கு இவ்வாறு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.
अवस्तु संवृतेरप्यभावात् । सोपलम्भं वस्तुवदुपलम्भनमुपलम्भः असत्यपि वस्तुनि, तेन सह वर्तत इति सोपलम्भं च । शुद्धं केवलं प्रविभक्तं जागरितात्स्थूलाल्लौकिकं सर्वप्राणिसाधारणत्वात् इष्यते स्वप्न इत्यर्थः ॥
(ச.பா) அவஸ்து (अवस्तु) சம்விருத்தி (வியவஹாரிக வஸ்து) இல்லாததால் அவஸ்து. ஆனால் (सोपलम्भ) (உபலப்தி உடையது) எனப்படுகிறது. வஸ்து இல்லாவிடினும் வஸ்துவைப் போல் உபலப்தி ஏற்படுவது உபலம்பம் எனப்படுகிறது. அதனுடன் இருப்பதின் காரணத்தால் உபலம்பமாய் இருக்கிறது. அது எல்லா பிராணிகளிடத்தும் சாதாரணமாய் விளங்குவதால் சுத்த அதாவது ஜாகரிதரூபமான ஸ்தூல லௌகிகத்திலிருந்து வேறான லௌகிகம் எனக் கருதப்படுகிறது. அதாவது அது ஸ்வப்னாவஸ்தை ஆகும்.
अवस्त्वनुपलम्भं च लोकोत्तरमिति स्मृतम् ।
ज्ञानं ज्ञेयं च विज्ञेयं सदा बुद्धैः प्रकीर्तितम् ॥ ८८ ॥
कारिका अन्वयः - अवस्तु अनुपलम्भं च लोकोत्तरं इति स्मृतम् बुद्धैः ज्ञानं ज्ञेयंं सदा विज्ञेयं प्रकीर्तितम् ।
காரிகா அர்த்தம் - எது வஸ்து, உபலப்தி இரண்டும் அற்றிருக்கிறதோ அந்த அவஸ்தா லோகோத்தரம் (சுஷுப்தி) எனப்படுகிறது. இவ்வாறு வித்வான்கள் எப்பொழுதும் ஞான, ஞேய அவ்வாறே விக்ஞானம் இவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்கள்.
अवस्त्वनुपलम्भं च ग्राह्यग्रहणवर्जितमित्येतत् ; लोकोत्तरम् , अत एव लोकातीतम् । ग्राह्यग्रहणविषयो हि लोकः, तदभावात् सर्वप्रवृत्तिबीजं सुषुप्तमित्येतत् । एवं स्मृतं ।
(ச.பா) அவஸ்து, அனுபலம்பம் அதாவது க்ராஹ்ய மற்றும் கிரஹணமற்ற அவஸ்தை. அது “லோகோத்தர” (लोकोत्तर) அதனால் லோகாதீதம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் கிராஹ்ய, கிரஹண விஷயமே லோகம் அதன் அபாவத்தின் காரணத்தால் அந்த சுஷுப்தி அவஸ்தை எல்லா பிரவிர்த்திகளுக்கு பீஜபூதமாய் இருக்கிறது என்பதாகும்.
सोपायं परमार्थतत्त्वं लौकिकं शुद्धलौकिकं लोकोत्तरं च क्रमेण येन ज्ञानेन ज्ञायते, तत् ज्ञानं ज्ञेयम् एतान्येव त्रीणि, एतद्व्यतिरेकेण ज्ञेयानुपपत्तेः । सर्वप्रावादुककल्पितवस्तुनोऽत्रैवान्तर्भावात् ; विज्ञेयं यत्परमार्थसत्यं तुर्याख्यमद्वयमजमात्मतत्त्वमित्यरथः ; सदा सर्वदैव, तल्लौकिकादि विज्ञेयान्तं बुद्धैः परमार्थदर्शिभिर्ब्रह्मविद्भिः प्रकीर्तितम् ॥
(ச.பா) உபாயத்துடன் கூடிய பரமார்த்த தத்துவம் அவ்வாறே லௌகிகம் (ஜாக்ரத்) சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) லோகோத்தரம் (சுஷுப்தி) ஆகிய அவஸ்தைகளின் எந்த ஞானத்தினால் கிரமமாய் அறியப்படுகிறதோ அதை ஞானம் என்று கூறுகிறார்கள். அவ்வாறேஅந்த மூன்று அவஸ்தைகளுக்கும் ஞேயம், ஏனெனில் எல்லா வாதிகளாலும் கல்பனை செய்யப்பட்ட வஸ்துக்கள் இவைகளில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் இதைத்தவிர வேறு ஞேய வஸ்து சம்பவிக்காது. எந்த பரமார்த்த சத்யம், துரீயம் எனப்படும் அத்வய, அஜன்மா, ஆத்மதத்துவமோ அதுவே விக்ஞேயம் (विज्ञेयं) என்பது பொருள், எப்பொழுதும் பரமார்த்த தர்சிகளான பிரஹ்ம வித்துக்களால் இந்த லௌகிகம் ஆரம்பித்து விக்ஞேயம் முடிய நிரூபணம் செய்யப்பட்டது.
ज्ञाने च त्रिविधे ज्ञेये क्रमेण विदिते स्वयम् ।
सर्वज्ञता हि सर्वत्र भवतीह महाधियः ॥ ८९ ॥
कारिका अन्वयः - ज्ञाने क्रमेण त्रिविधे ज्ञेये च स्वयं विदिते महाधियः इह सर्वज्ञता भवति सर्वत्र भवति ।
காரிகா அர்த்தம் - ஞானம் மேலும் மூன்று பிரகாரமான ஞேயத்தை கிரமமாக அறிந்தால் இந்த உலகில் அந்த மஹாபுத்திமானுக்கு ஸ்வயமாகவே எங்கும் சர்வக்ஞத்தாவாக ஆகிறான்.
ज्ञाने च लौकिकादिविषये ज्ञेये च लौकिकादौ त्रिविधे, पूर्वं लौकिकं स्थूलम् ; तदभावेन पश्चाच्छुद्धं लौकिकम् , तदभावेन लोकोत्तरमित्येवं क्रमेण स्थानत्रयाभावेन परमार्थसत्ये तुर्ये अद्वये अजे अभये विदिते, स्वयमेव आत्मस्वरूपमेव सर्वज्ञता सर्वश्चासौ ज्ञश्च सर्वज्ञः, तद्भावः सर्वज्ञता इह अस्मिन् लोके भवति महाधियः महाबुद्धेः । सर्वलोकातिशयवस्तुविषयबुद्धित्वादेवंविदः सर्वत्र सर्वदा भवति । सकृद्विदिते स्वरूपे व्यभिचाराभावादित्यर्थः । न हि परमार्थविदो ज्ञानिनः ज्ञानोद्भवाभिभवौ स्तः, यथा अन्येषां प्रावादुकानाम् ॥
(ச.பா) லௌகிக விஷய ஞானத்தையும், லௌகிக முதலிய மூன்று விதமான ஞேயத்தையும் அறிந்தபின் அதாவது முதலில் ஸ்தூல லௌகிகம், அதன் பின் அதன் அபாவமாத்திரத்தில் சுத்த லௌகிகம், அதனுடைய அபாவத்தின் பின் லோகோத்தரம் என்று இவ்வாறு கிரமமாய் மூன்று அவஸ்தைகளில் அபாவத்தால் பரமார்த்த சத்ய அத்வயம், அஜன்மா மேலும் அபயரூப துரியத்தை அறிந்த பின் இந்த உலகில் அந்த மஹாபுத்திமான் எங்கும் எப்பொழுதும் ஸ்வயம் ஆத்மஸ்வருபம் அதாவது ஸர்வக்ஞதா இந்த ஸ்வரூபமுடையவனே சர்வக்ஞன் எனப்படுகிறான். ஏனெனில் இவ்வாறு அறிந்தவனின் புத்தி எல்லா லோகத்தைக் காட்டிலும் மேலான வஸ்துவை விஷயம் செய்கிறான். ஒரு தடவை ஸ்வரூப ஞானத்தை அடைந்த பின் எப்பொழுதும் மாறுபடாது. ஏனெனில் எவ்வாறு மற்ற வாதிகளுடைய ஞானம் உண்டாகி, மறைகிறதோ அவ்வாறு இந்த பரமார்த்த வேதாவாகிய ஞானியின் ஞானம் உதயமோ, அஸ்தமனமோ ஆகாது என்பது தாத்பரியம்.
लौकिकादीनां क्रमेण ज्ञेयत्वेन निर्देशादस्तित्वाशङ्का परमार्थतो मा भूदित्याह —
(அ-கை) - லௌகிகாதிகளை கிரமமாக ஞேயத் துவமாய் நிர்தேசம் செய்யப்பட்டதால் அதற்கு அஸ்தித்துவம் பரமார்த்தமானது என்று சங்கை வரக்கூடாது என்பதற்காகக் கூறுகிறார்-
हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयान्यग्रयाणतः ।
तेषामन्यत्र विज्ञेयादुपलम्भस्त्रिषु स्मृतः ॥ ९० ॥
कारिका अन्वयः - तेषाम् अग्रयाणतः हेय ज्ञेय आप्य पाक्यानि विज्ञेयानि विज्ञेयात् अन्यत्र त्रिषु उपलम्भः स्मृतः ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரம் முதலியவை) ஹேயம், (சத்யபிரஹ்மஸ்வரூபம்) ஞேயம், (பாண்டித்யம் முதலியவை) அடையப்பட வேண்டிய சாதனம், (ராகதுவேஷங்கள் முதலியவை) நீக்கப்படவேண்டிய தோஷங்கள் இவைகள் எல்லாம் எல்லாவற்றிற்கும் முன்பே அறியப்பட வேண்டியவை. இவைகளில் ஞேயத்தைத் (பிரஹ்மத்தைத்) தவிர மற்ற மூன்றும் கேவலம் உபலம்பம் (அவித்தியா கல்பிததத்துவம்) ஆகும்.
हेयानि च लौकिकादीनि त्रीणि जागरितस्वप्नसुषुप्तानि आत्मन्यसत्त्वेन रज्ज्वां सर्पवद्धातव्यानीत्यर्थः । ज्ञेयमिह चतुष्कोटिवर्जितं परमार्थतत्त्वम् । आप्यानि आप्तव्यानि त्यक्तबाह्यैषणात्रयेण भिक्षुणा पाण्डित्यबाल्यमौनाख्यानि साधनानि । पाक्यानि रागद्वेषमोहादयो दोषाः कषायाख्यानि पक्तव्यानि । सर्वाण्येतानि हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयानि भिक्षुणा उपायत्वेनेत्यर्थः । अग्रयाणतः प्रथमतः ।
(ச.பா) हेयानि (தள்ளத்தக்க) லௌகிகம் முதலிய மூன்றும் அதாவது ஜாக்ரஸ்வப்ன சுஷுப்தி இவைகள் ஆத்மாவில் அசத்தியமாய் ரஜ்ஜுவில் பாம்பைப்போல் தள்ளத்தக்கவை. என்பது பொருள். ஞேயம் என்பது நான்கு கோடிகள் அற்ற பரமார்த்த தத்துவம், பாஹ்ய மூன்று ஏஷணைகளையும் தியாகம் செய்த முமூக்ஷுவிற்கு பாண்டித்தியம், பாஹ்ய மௌணம் எனப்படும் மூன்று சாதனங்கள் அடையப்பட வேண்டியவை. அவ்வாறே ராகம், த்வேஷம், மோஹம், முதலிய கஷாயங்களாகிய தோஷங்களை ஜீரணிக்க வேண்டும். தாத்பர்யம் என்னவெனில் முமூக்ஷுவால் ஹேய, ஞேய, ஆப்ய, பாக்கிய (ஜீரணித்தல்) ஆகிய இவைகளுக்கு எல்லாம் முன்னதாக இவைகள் தனக்கு சாதன ரூபமாய் அறிய வேண்டும்.
तेषां हेयादीनामन्यत्र विज्ञेयात्परमार्थसत्यं विज्ञेयं ब्रह्मैकं वर्जयित्वा । उपलम्भनमुपलम्भः अविद्याकल्पनामात्रम् । हेयाप्यपाक्येषु त्रिष्वपि स्मृतो ब्रह्मविद्भिः न परमार्थसत्यता त्रयाणामित्यर्थः ॥
(ச.பா) அந்த ஹேயாதிகளில் கேவல ஏக பரமார்த்த சத்ய ஞேய பிரஹ்மத்தைத்தவிர மற்ற ஹேய, ஆப்ய, பாக்கிய மூன்றையும் பிரஹ்ம வேத்தாக்கள் கேவல உபலம்பனம் அதாவது அவித்யாமய கல்பனா மாத்திரம் என்று அறிகிறார்கள்.
परमार्थतस्तु-
(ச.பா) (அ.கை) - உண்மையில்
प्रकृत्याकाशवज्ज्ञेयाः सर्वे धर्मा अनादयः ।
विद्यते न हि नानात्वं तेषां क्वचन किञ्चन ॥ ९१ ॥
कारिका अन्वयः - (मुमुक्षुभिः) सर्वेधर्माः प्रकृत्या आकाशवत् अनादयः ज्ञेयाः तेषां क्वचन किञ्चन नानात्वं न विद्यते हि ।
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு சமானமானம் என்றும், அநாதி என்றும் அறியவேண்டும் அதற்கு நாநாத்துவம் சிறிதும் இல்லை.
प्रकृत्या स्वभावतः आकाशवत् आकाशतुल्याः सूक्ष्मनिरञ्जनसर्वगतत्वैः सर्वे धर्मा आत्मानो ज्ञेया मुमुक्षुभिः अनादयः नित्याः । बहुवचनकृतभेदाशङ्कां निराकुर्वन्नाह —क्वचन क्वचिदपि किञ्चन किञ्चित् अणुमात्रमपि तेषां न विद्यते नानात्वमिति ॥
(ச.பா) முமூக்ஷுக்கள், சூக்ஷ்மத்துவ, நிரஞ்சனத்துவ, சர்வகதத்துவ முதலியவைகளின் காரணத்தால் எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு ஒப்பாயும், அநாதியாயும் இருப்பதை நித்தியம் அறிகின்றார்கள். இங்கு பஹு வசனத்தில் கூறியது ஜீவாத்மாக்களின் பேதத்தில் உள்ள சந்தேஹத்தை நீக்குவதற்காகக் கூறப்பட்டது. எந்த வகையிலும், சிறிதும் அதாவது அணு மாத்திரமும் அவைகளுக்கு நாநாத்துவம் என்பது கிடையாது.
ज्ञेयतापि धर्माणां संवृत्यैव, न परमार्थत इत्याह —
(ச.பா) (அ.கை) ஆத்மாக்களின் ஞேயதாவும் வியாவஹாரிகமே உண்மையில் இல்லை. இந்த அபிப்பிராயத்தில் கூறுகிறார்-
आदिबुद्धाः प्रकृत्यैव सर्वे धर्माः सुनिश्चिताः ।
यस्यैवं भवति क्षान्तिः सोऽमृतत्वाय कल्पते ॥ ९२ ॥
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिबुद्धाः सुनिश्चिताः एवं यस्य क्षान्तिः भवति सः अमृतत्वाय कल्पते ।
காரிகா அர்த்தம் - சம்பூர்ண ஆத்மா ஸ்வபாவமாகவே நித்திய போத ஸ்வரூபம், ஸுநிச்சிதம் ஆகும். எதனால் இவ்வாறு சமாதானம் ஏற்படுகிறது எனில் அது அம்ருதத்தை (மோக்ஷத்தை) அடைவதற்கான சாமர்த்தியம் உள்ளது.
यस्मात् आदौ बुद्धाः आदिबुद्धाः प्रकृत्यैव स्वभावत एव यथा नित्यप्रकाशस्वरूपः सविता, एवं नित्यबोधस्वरूपा इत्यर्थः । सर्वे धर्माः सर्व आत्मानः । न च तेषां निश्चयः कर्तव्यः नित्यनिश्चितस्वरूपा इत्यर्थः । न सन्दिह्यमानस्वरूपा एवं नैवं वेति
(ச.பா) ஏனெனில் எவ்வாறு சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) அதாவது ஆத்மா ஸ்வபாவமாகவே ஆரம்பம் முதலே அறியப்பட்டது. அதாவது நித்திய போதஸ்வரூபம். அதை நிச்சயம் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் நித்திய நிச்சயம் செய்யப்பட்ட ஸ்வரூபமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கிறது அல்லது இல்லை என்ற சந்தேக ஸ்வரூபமாய் இல்லை. (सन्दिग्धस्वरूपः न)
यस्य मुमुक्षोः एवं यथोक्तप्रकारेण सर्वदा बोधनिश्चयनिरपेक्षता आत्मार्थं परार्थं वा । यथा सविता नित्यं प्रकाशान्तरनिरपेक्षः स्वार्थं परार्थं वेत्येवं भवति क्षान्तिः बोधकर्तव्यतानिरपेक्षता सर्वदा स्वात्मनि, सः अमृतत्वाय अमृतभावाय कल्पते, मोक्षाय समर्थो भवतीत्यर्थः ॥
(ச.பா) எவ்வாறு முமூக்ஷுவிற்கு இவ்வாறு முன்பு கூறப்பட்டவாறு தான் பிரகாசிப்பதற்கோ மற்றவை பிரகாசப்படுத்துவதற்கோ எப்பொழுதும் போத நிச்சய சம்பந்தத்தை அபேக்ஷிப்பது இல்லை. எவ்வாறு சூரியன் தன் பொருட்டோ பிறவற்றின் பொருட்டோ எப்பொழுதும் வேறு பிரகாசத்தை அபேக்ஷிப்பது இல்லையோ அவ்வாறு எப்பொழுதும் தன்னுடைய ஆத்மாவிடத்தில் க்ஷாந்தி அதாவது போத கர்த்தவ்யம் அபேக்ஷிக்கிறதில்லை. அது அம்ருதத்துவம் அம்ருத பாவம் அதாவது மோக்ஷத்திற்கான சாமர்த்தியம் உள்ளதாய் இருக்கின்றது.
तथा नापि शान्तिकर्तव्यता आत्मनीत्याह —
(ச.பா) (அ.கை) அவ்வாறு ஆத்மாவில் சாந்தி கர்த்தவ்யமும் இல்லை என்பதைக் கூறுகிறார்-
आदिशान्ता ह्यनुत्पन्नाः प्रकृत्यैव सुनिर्वृताः ।
सर्वे धर्माः समाभिन्ना अजं साम्यं विशारदम् ॥ ९३ ॥
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिशान्ताः अनुत्पन्नाः सुनिर्वृताः समाः अभिन्नाः अजं साम्यं विशारदम् ।
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாவும் நித்திய சாந்தம், அஜன்மா, ஸ்வபாவமாகவே அத்தியந்தம் உபரதம், அவ்வாறே சமம், அபின்னம், ஆத்ம தத்துவம் அஜம், சமதாரூபம், விசுத்தம், “सोमृतत्वाय कल्पते” என்று சென்ற காரிகையில் கூறப்பட்ட அம்ருதத்வத்தை விளக்கு வது இக்காரிகை:- இத்தகைய ஆத்மாவில் சாந்தி என்ற மோக்ஷமும் கூட செய்யத்தக்கதல்ல; ஏனெனில்
यस्मात् आदिशान्ताः नित्यमेव शान्ताः अनुत्पन्ना अजाश्च प्रकृत्यैव सुनिर्वृताः सुष्ठूपरतस्वभावाः नित्यमुक्तस्वभावा इत्यर्थः । सर्वे धर्माः समाश्च अभिन्नाश्च समाभिन्नाः अजं साम्यं विशारदं विशुद्धमात्मतत्त्वं यस्मात् , तस्मात् शान्तिर्मोक्षो वा नास्ति कर्तव्य इत्यर्थः । न हि नित्यैकस्वभावस्य कृतं किञ्चिदर्थवत्स्यात् ॥
(ச.பா) எதனால் சர்வாத்மகமாக உள்ள ஆத்மாவின் தர்மங்கள்யாவும் ஸ்வயமாகவே நித்திய சாந்தமானவை, உண்டாகாதவை (அஜன்மா), ஸ்வபாவமாகவே எல்லாவற்றிலிருந்தும் நிவிர்த்தி அதாவது உபரதி, அவ்வாறே எங்கும் சமம், அபின்னம், ஆக இருக்கிறது. இவ்வாறு ஆத்ம தத்துவம் அஜமாயும், சமதா ரூபமாயும் விசுத்தமாயும் இருப்பதால் அதற்கு சாந்தியோ அல்லது மோக்ஷமோ கர்த்தவ்யம் அல்ல என்பது பொருள். ஏனெனில் நித்ய ஏக ஸ்வபாவத்திற்கு எந்த செய்கையும் பொருள்தருவதாகவோ, பயனுடையதாகவோ ஆகாது.
ये यथोक्तं परमार्थतत्त्वं प्रतिपन्नाः, ते एव अकृपणा लोके ; कृपणास्त्वन्ये इत्याह —
(ச.பா) (அ.கை) உலகில் எவர்கள் பரமார்த்த தத்துவத்தை அறிந்தவர்களோ அவர்கள் அக்ருபணர்கள் அதாவது கீழ்த் தன்மை அற்றவர்கள். மற்றவர்கள் எல்லாரும் கிருபணர்கள்.(தீனர்கள்)
वैशारद्यं तु वै नास्ति भेदे विचरतां सदा ।
भेदनिम्नाः पृथग्वादास्तस्मात्ते कृपणाः स्मृताः ॥ ९४ ॥
कारिका अन्वयः - सदा भेदे विचारतां वैशारद्यं नास्ति वै तस्मात् पृथग्वादाः भेदनिम्नाः ते कृपणाः स्मृताः ।
காரிகா அர்த்தம் - எவர்கள் எப்பொழுதும் பேதத்திலேயே உழல்கிறார்களோ அவர்களுக்கு விசுத்தி (சித்த சுத்தியானது) ஏற்படாது. த்வைதவாதிகள் பேதத்திலேயே இருந்து பிரவிர்த்தி உடையவர்களாய் இருக்கின்றார்கள் ஆகையால் அவர்கள் கிருபணர்கள் (தீனர்கள்) என்று கூறப்பட்டனர்.
यस्मात् भेदनिम्नाः भेदानुयायिनः संसारानुगा इत्यर्थः । के ? पृथग्वादाः पृथक् नाना वस्तु इत्येवं वदनं येषां ते पृथग्वादाः द्वैतिन इत्यर्थः । तस्मात्ते कृपणाः क्षुद्राः स्मृताः, यस्मात् वैशारद्यं विशुद्धिः तन्नास्ति तेषां भेदे विचरतां द्वैतमार्गे अविद्यापरिकल्पिते सर्वदा वर्तमानानामित्यर्थः । अतो युक्तमेव तेषां कार्पण्यमित्यभिप्रायः ॥
(ச.பா) எதனால் பேதநிம்னா என்றால் பேதத்தைப் பின்பற்றி சம்சாரத்தில் அமிழ்ந்துள்ளவர்கள். எவர்கள்? பிருதக்வாதிகள் (पृथक्वादि) அதாவது த்வைதிகள், ஆகையால் அவர்கள் க்ருபணர்கள் அதாவது தீனர்கள், கீழானவர்கள் எனப்படுகிறார்கள், ஏனெனில் பேத அதாவது அவித்தையினால் கல்பிக்கப்பட்ட த்வைதமார்க்கத்தில் எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பவர்கள், விசுத்தியை அடைவதில்லை. ஆகையால் அவர்கள் கிருபணர்கள் என்று கூறுவது சரியே என்பது இதன் அபிப்பிராயம்.
यदिदं परमार्थतत्त्वम् , अमहात्मभिरपण्डितैर्वेदान्तबहिःष्ठैः क्षुद्रैरल्पप्रज्ञैरनवगाह्यमित्याह —
(ச.பா) (அ.கை) இந்த பரமார்த்தத்துவம்- மஹாத்மாக்கள் அல்லாத பண்டிதர்கள் வேதாந்தத்தில் அநதிகாரி, அவ்வாறே கிருபணமும் மந்தபுத்தியும் உடைய புருஷர்களால் கிரஹிக்க (அறிய) முடியாது என்பதைக் கூறுகிறார்.
अजे साम्ये तु ये केचिद्भविष्यन्ति सुनिश्चिताः ।
ते हि लोके महाज्ञानास्तच्च लोको न गाहते ॥ ९५ ॥
कारिका अन्वयः - ये केचित् अजे साम्ये तु सुनिश्चिताः ते हि महाज्ञानाः भविष्यन्ति तत् लोकाः न गाहते ।
காரிகா அர்த்தம் - எவர் இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்ததத்துவத்தை நன்றாக, திடமாக நிச்சயம் செய்தார்களோ அவர்களே இந்த உலகில் பரம ஞானிகள், அந்த தத்துவத்தை சாமான்ய ஜனங்களால் புரிந்து கொள்ளமுடியாது.
अजे साम्ये परमार्थतत्त्वे एवमेवेति ये केचित् स्त्र्यादयोऽपि सुनिश्चिता भविष्यन्ति चेत् , त एव हि लोके महाज्ञानाः निरतिशयतत्त्वविषयज्ञाना इत्यर्थः ।
(ச.பா) இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்த தத்துவத்தை எந்த ஸ்திரீ முதலியோரும் இவ்வாறு தான் இருக்கிறது. என்று பூரணமாய் நிச்சயம் செய்கின்றார்களோ, அவர்களும் உலகத்தில் மஹாஞானி, அதாவது நிரதிசய தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகிறார்கள்.
तच्च तेषां वर्त्म तेषां विदितं परमार्थतत्त्वं सामान्यबुद्धिरन्यो लोको न गाहते नावतरति न विषयीकरोतीत्यर्थः । ‘सर्वभूतात्मभूतस्य समैकार्थं प्रपश्यतः । देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः । शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते’ इत्यादिस्मरणात् ॥
(ச.பா) அவர்களுடைய மார்க்கம் அதாவது அவர்கள் அறிந்த பரமார்த்த தத்துவத்தை மற்றசாதாரண புத்தி உடைய மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாது. விஷயம் செய்யமுடியாது என்பது பொருள். “सर्वभूतात्मभूतस्य सर्वभूतहितस्य च। देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः। शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते” (சர்வபூதாத்ம பூதஸ்ய சர்வ பூதஹிதஸ்யச! தேவா அபிமார்க்கே முஹ்யன்த்யபதஸ்ய பதைஷிண:! சகுனீனாமிவாகாசே கதிர்நைவஉபலப்யதே = எல்லா பூதங்களுக்கும் ஆத்ம பூதமாயும், எல்லா பிராணிகளுக்கும் ஹிதம் செய்யும் பதம் அற்ற(அடையவேண்டிய புருஷார்த்தமற்ற) மஹாத்ம பதத்தை அறிய விரும்பும் தேவதையும் அந்த மார்க்கத்தில் மோஹத்தை அடைகிறார்கள். எவ்வாறு எனில், எவ்வாறு ஆகாசத்தில் பக்ஷிகளின் மார்க்கம் அறிய முடியதோ அவ்வாறு அந்த கதியை அடையமுடியாது முதலிய ஸ்மிருதிகள் பிரமாணமாகின்றன.
कथं महाज्ञानत्वमित्याह —
(ச.பா) (அ.கை) - அவர்களுடைய மஹாக்ஞானத்துவம் எவ்வாறு? அதைக் கூறுகிறார்-
अजेष्वजमसङ्क्रान्तं धर्मेषु ज्ञानमिष्यते ।
यतो न क्रमते ज्ञानमसङ्गं तेन कीर्तितम् ॥ ९६ ॥
कारिका अन्वयः - अजेषु धर्मेषु अजम् असंक्रान्तं ज्ञानम् इष्यते ततः ज्ञानं न क्रमते तेन असङगं कीर्तितम् ।
காரிகா அர்த்தம் - அஜன்ம ஆத்மாக்களில் இருக்கும் அஜம்(நித்தியம்) எக்கலப்பும் அற்றதுமான ஞானம் ஏற்கப்படுகிறது ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் கலப்பதில்லை. ஆகையால் அசங்கம் எனப்படுகிறது.
अजेषु अनुत्पन्नेषु अचलेषु धर्मेषु आत्मसु अजमचलं च ज्ञानमिष्यते सवितरीव औष्ण्यं प्रकाशश्च यतः, तस्मात् असङ्क्रान्तम् अर्थान्तरे ज्ञानमजमिष्यते । यस्मान्न क्रमते अर्थान्तरे ज्ञानम् , तेन कारणेन असङ्गं तत् कीर्तितम् आकाशकल्पमित्युक्तम् ॥
(ச.பா) ஏனெனில் அஜமாயும், அசலமாயும் உள்ள ஆத்மாக்களில் (ஜீவன்களில்) சூரியனிடத்தில் உள்ள உஷ்ணமும், பிரகாசம் போல் அஜமும், சலனமற்ற ஞானமும் உள்ளது. ஆகையால் வேறு விஷயங்களில் கலப்படமற்ற ஞானத்தை அஜன்மா அதாவது நித்தியம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் செல்லாது. ஆகையால் அதை அசங்கம் என்று கூறப்படுகிறது. அது ஆகாசம் போல் அசங்கமாய் இருக்கிறது.
अणुमात्रेऽपि वैधर्म्ये जायमानेऽविपश्चितः ।
असङ्गता सदा नास्ति किमुतावरणच्युतिः ॥ ९७ ॥
कारिका अन्वयः - अविपश्चितः अणुमात्रेऽपि वैधर्म्यै जायमाने असङ्गता सदा नास्ति आवरणच्युतिः किमुत ।
காரிகா அர்த்தம் - அவிவேகிகளுக்கு (நம் கொள்கைக்கு மாறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு). அணு அளவாவது (வஸ்துவில்) வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அசங்கத்துவம் அதாவது பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆவரண நாசம் ஏது? அசங்கத்துவ மேற்படாதவர்களுக்கு பந்தநாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
इतोऽन्येषां वादिनाम् अणुमात्रे अल्पेऽपि वैधर्म्ये वस्तुनि बहिरन्तर्वा जायमाने उत्पद्यमाने अविपश्चितः अविवेकिनः असङ्गता असङ्गत्वं सदा नास्ति ; किमुत वक्तव्यम् आवरणच्युतिः बन्धनाशो नास्तीति ॥
(ச.பா) இதைத் தவிர வேறு வாதிகளின் கொள்கை உடையவர்களுக்கு அணுமாத்திரமானது. வஸ்துவின் உள்ளோ, புறமோ வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அஸங்கத்துவம் என்ற பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. அஸங்கதம் ஏற்படாத போது அவர்களுக்கு பந்த நாசம் ஏது? அசங்கத்துவம் ஏற்படாதவர்களுக்கு பந்த நாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
तेषामावरणच्युतिर्नास्तीति ब्रुवतां स्वसिद्धान्ते अभ्युपगतं तर्हि धर्माणामावरणम् । नेत्युच्यते —
(ச.பா) (அ-கை) - சென்றகாரிகையில் அவர்களுக்கு ஆவரணம் நீங்குவதில்லை என்று கூறியதால் ஆத்ம தர்மங்களுக்கு ஆவரணம் உண்டு என்று அங்கீகரிக்கப்பட்டதாகிறதே என்றால் அவ்வாறு அல்ல என்று கூறுகிறார்-
अलब्धावरणाः सर्वे धर्माः प्रकृतिनिर्मलाः ।
आदौ बुद्धास्तथा मुक्ता बुध्यन्त इति नायकाः ॥ ९८ ॥
कारिका अन्वयः - सर्वेधर्माः अलब्धावरणाः प्रकृतिनिर्मलाः आदौ बुद्धाः तथा मुक्ताः नायकाः इति बुध्यन्ते ।
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாக்களும் ஆவரண சூன்யம், ஸ்வபாவமாகவே நிர்மலம் அவ்வாறே நித்த புத்த முக்தமாய் இருக்கிறது. யவபாவமாகவே அறியும் சக்தி உடையவர்கள் நாயகர்கள் என்று அறியப்படுகின்றன.
अलब्धावरणाः अलब्धमप्राप्तमावरणम् अविद्यादिबन्धनं येषां ते धर्माः अलब्धावरणाः बन्धनरहिता इत्यर्थः । प्रकृतिनिर्मलाः स्वभावशुद्धाः आदौ बुद्धाः तथा मुक्ताः, यस्मात् नित्यशुद्धबुद्धमुक्तस्वभावाः ।
(ச.பா) अलब्धावरणाः (அலப்த ஆவரணா:) ஆவரணம் அதாவது எவர்கள் அவித்யா ரூப பந்தம் அடையவில்லையோ அந்த தர்மங்கள் (ஜீவாத்மாக்கள்) பந்தமற்றவர்களாயும், இயற்கையாகவே சுத்தமானவர்களும் ஆதியிலேயே போதத்தை அடைந்தவர்களும், முக்த ஸ்வரூபராகவும் ஆவர். ஏனெனில் அவர்கள் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவ முடையவர்கள்.
यद्येवं कथं तर्हि बुध्यन्त इत्युच्यते —
(ச.பா) (சங்கை) - இவ்வாறு இருக்கும் பொழுதும் அவர்கள் அறிகிறார்கள் என்று எவ்வாறு கூறப்படுகிறது.
नायकाः स्वामिनः समर्थाः बोद्धुं बोधशक्तिमत्स्वभावा इत्यर्थः । यथा नित्यप्रकाशस्वरूपोऽपि सन् सविता प्रकाशत इत्युच्यते, यथा वा नित्यनिवृत्तगतयोऽपि नित्यमेव शैलास्तिष्ठन्तीत्युच्यते, तद्वत् ॥
(ச.பா) (சமாதானம்) - ஸ்வாமிகளின் (நாயகர்களின்) அறியும் சக்தி ஸ்வபாவமானவை என்று அறியப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது ஏன் அறிகின்றனர் என்று கூறப்படுகின்றனர். எனில் சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபனாய் இருப்பினும் சூரியன் பிரகாசிக்கின்றான் என்றும், மலையானது இயற்கையாகவே என்றும் தான் இருக்குமிடத்திலிருந்து அசைவற்றதாய் இருப்பினும். மலை இருக்கிறது என்று கூறப்படுகிறதோ, அது போல் ஆன்மா நித்ய போத ஸ்வரூபமாய் இருப்பினும் ஆத்மா அறிகிறான் என்று கூறப்படுகிறான்.
क्रमते न हि बुद्धस्य ज्ञानं धर्मेषु तायिनः ।
सर्वे धर्मास्तथा ज्ञानं नैतद्बुद्धेन भाषितम् ॥ ९९ ॥
कारिका अन्वयः - तायिनः बुद्धस्य ज्ञानं धर्मेषु न क्रमते हि (ज्ञानेन आकाशकल्पेन) यथा ज्ञानं तथा सर्वे धर्माः एतत् बुद्धेन न भाषितम् ।
காரிகா அர்த்தம் - அகண்ட பிரக்ஞானவானாய் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. ஆனால் பௌத்த தர்சனத்தில் புத்தரால் இவ்வாறு கூறப்படவில்லை. அதாவது இது பௌத்த சித்தாந்த மல்ல உபநிஷத்தர்சன மாகும்.
“ज्ञानेन आकाशकल्पेन” “ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால்” என்று ஞானம் முதலில் கூறப்பட்டதோ, அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால், அது அவனைக்கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. அறிவு ஸ்வரூபமான பரமார்த்ததர்சி எங்கும் எதிலும் எப்பொழுதும் நிறைந்தவனாய் இருக்கிறான் என்பது கருத்து. (இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானவானாயும். உள்ள ஆத்மக் ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்ததால் வேறு எதிலுல் செல்லாததாய் உள்ளது)
यस्मात् न हि क्रमते बुद्धस्य परमार्थदर्शिनो ज्ञानं विषयान्तरेषु धर्मेषु धर्मसंस्थं सवितरीव प्रभा । तायिनः तायोऽस्यास्तीति तायी, सन्तानवतो निरन्तरस्य आकाशकल्पस्येत्यर्थः ; पूजावतो वा प्रज्ञावतो वा सर्वे धर्मा आत्मानोऽपि तथा ज्ञानवदेव आकाशकल्पत्वान्न क्रमन्ते क्वचिदप्यर्थान्तर इत्यर्थः ।
(ச.பா) தாயி (तायी) என்றால் விஸ்தாரம். तायिनः (தாயின:) எங்கும் நிரந்தரமாக இடைவெளியின்றி, ஆகாசம் போல் நிறைந்தவனாயும், பிரக்ஞானகனனாயும் தபஸ்வியாயும் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. “ज्ञानेन आकाशकल्पेन” ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் என்று எந்த ஞானம் முதலில் கூறப்பட்டதோ அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால் இது அவனைக் கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானகனவானாயும் உள்ள ஆத்மக்ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்து இருப்பதால் வேறு எங்கும் செல்லாததாய் இருக்கிறது.
(ச.பா) இந்த பிரகரணத்தின் ஆரம்பத்தில் “ज्ञानेन आकाशकल्पेन” முதலிய ஸ்லோகங்களால் விளக்கப்பட்டது. ஆகாசம் போல் நிரந்தர போதம் உடையவனுக்கு அந்த போதம் அபின்னமாய் இருப்பதால் அந்த ஆகாசத்திற்கு ஒப்பான ஞானம் ஒரு நாளும் வேறு அர்த்தத்திற்கு செல்வதில்லை. அவ்வாறேதர்மமும் ஆகும். அதாவது அந்த தர்மங்களும் ஆகாசம் போல் அசலம், அவிக்கிரியம், நிரவயவம், நித்தியம், அத்விதீயம், அசங்கம், அதிருஷ்யம், அக்ராஹ்யம், பசி, தாகம் அற்றபிரஹ்மாத்ம தத்துவமாகும். “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந, ஹி த்ருஷ்ட்டுர் த்ருஷ்ட்டேர் விபரிலோபோ வித்யதே = திருஷ்ட்டாவின் திருஷ்ட்டிக்கு லோபம் வராது) என்று சுருதியினால் சித்திக்கிறது.
ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वमद्वयमेतन्न बुद्धेन भाषितम् । यद्यपि बाह्यार्थनिराकरणं ज्ञानमात्रकल्पना च अद्वयवस्तुसामीप्यमुक्तम् । इदं तु परमार्थतत्त्वमद्वैतं वेदान्तेष्वेव विज्ञेयमित्यर्थः ॥
(ச.பா) ஞான, ஞேய, ஞாதா ஆகிய பேதங்கள் அற்றஇந்த அத்வய பரமார்த்த தத்துவத்தை புத்தர் நிரூபணம் செய்யவில்லை. அவ்வாறானாலும் அவர் பாஹ்ய வஸ்துக்களை நிராகரணம் செய்து கேவல ஞானத்தின் கல்பனையானது அத்வய வஸ்துவை நெருங்கி இருக்கிறதே அன்றி அதைப்பற்றிக் கூறவில்லை. இந்த பரமார்த்த அத்வைத தத்துவத்தை வேதாந்தங்களான உபநிஷத்துக்களிலேயே அறியத்தகுந்ததாகும்.
शास्त्रसमाप्तौ परमार्थतत्त्वस्तुत्यर्थं नमस्कार उच्यते —
(ச.பா) (அ.கை) சாஸ்த்திரத்தின் முடிவில் பரமார்த்ததத்துவத்தை ஸ்துதிப்பதற்காக நமஸ்காரம் கூறப்படுகிறது-
दुर्दर्शमतिगम्भीरमजं साम्यं विशारदम् ।
बुद्ध्वा पदमनानात्वं नमस्कुर्मो यथाबलम् ॥ १०० ॥
कारिका अन्वयः - दुर्दर्शम् अतिगंभीरम् अजं साम्यं विशारदम् अनानात्वं पदं बुद्ध्वा यथा बलम् नमस्कुर्मः।
காரிகா அர்த்தம் - மிகுந்த முயற்சியுடன் தர்சிக்கத்தக்கது, மிகுந்த கம்பீரமானது அஜம், நிர்விசேஷம், விசுத்தம் ஆன பதத்தை பேத மற்றதாய் அறிந்து நாம் நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
दुर्दर्शं दुःखेन दर्शनमस्येति दुर्दर्शम् । अस्ति नास्तीति चतुष्कोटिवर्जितत्वाद्दुर्विज्ञेयमत्यर्थः । अत एव अतिगम्भीरं दुष्प्रवेशं महासमुद्रवदकृतप्रज्ञैः । अजं साम्यं विशारदम् । ईदृक् पदम् अनानात्वं नानात्ववर्जितं बुद्ध्वा अवगम्य तद्भूताः सन्तः नमस्कुर्मः तस्मै पदाय । अव्यवहार्यमपि व्यवहारगोचरतामापाद्य यथाबलं यथाशक्तीत्यर्थः ॥
(ச.பா) மிகுந்த முயற்சியால் தர்சிக்கத்தக்கதாயும், அதாவது முற்கூறப்பட்டு இருக்கிறது, இல்லை என்பன போன்ற நான்கு கோடிகளும் அற்றதானதால் சிரமத்துடன் தர்சிக்கத்தக்கதாயும் அதனாலேயே மஹா சமுத்திரம் போல் மிகுந்த கம்பீரமானதாயும், அதாவது முற்கூறிய காரணத்தாலேயே நல்ல புத்தி சாமர்த்தியமும், சாஸ்திரப்பயிற்சியும் அற்றவர்களுக்கு ஆழ்கடல் போல் நுழைய முடியாததாயும், பிறப்பற்றதாயும், சாஸ்வதமானதாயும் எங்கும் நிறைந்ததாயும், எந்த பந்தமும் அற்றதாயும் நாநாத்துவமான ஸ்தானத்தை அறிந்து, அந்த நிலையிலேயே நிலைத்தவராகி அது இவ்வாறு இருக்கிறதென்று வியவகரிக்க முடியாததாயினும் வியவஹார கோசரமாக்கிக் கொண்டு சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
अजमपि जनियोगं प्रापदैश्वर्ययोगा -
दगति च गतिमत्तां प्रापदेकं ह्यनेकम् ।
विविधविषयधर्मग्राहि मुग्धेक्षणानां
प्रणतभयविहन्तृ ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥
அஜமாய் இருப்பினும் தன்னுடைய அறியாமை ஆகிய மாயா சக்தி வசத்தால் ஜன்ம பந்தத்தை அடைந்ததோ அவ்வாறே கதி சூன்யமாய் இருந்தாலும் கதி உள்ளதாயும் அவ்வாறே நாநாவித விஷயங்களின் தர்மங்களை விஷயம் செய்யும் மூட திருஷ்டி உள்ள அவிவேகிகளின் விசாரத்தால் ஒன்றாய் இருப்பினும் அநேகமாக ஆயிற்று. சரணாகதி அடைந்தவர்களின் பயத்தைப்போக்கும் அந்த பிரஹ்மத்தை நமஸ்கரிக்கிறேன்.
प्रज्ञावैशाखवेधक्षुभितजलनिधेर्वेदनाम्नोऽन्तरस्थं
भूतान्यालोक्य मग्नान्यविरतजननग्राहघोरे समुद्रे ।
कारुण्यादुद्दधारामृतमिदममरैर्दुर्लभं भूतहेतो -
र्यस्तं पूज्याभिपूज्यं परमगुरुममुं पादपातैर्नतोऽस्मि ॥ २ ॥
எந்த பரம குருவானவர் நிரந்தரம் ஜன்மஜன்மாந்தரம் எனப்படும் முதலைகள் நிறைந்த பெரிய சமுத்திரத்தில் மூழ்கிய ஜீவன்களைப்பார்த்து கருணையினால் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து சநாதனமாய் வந்த வேதங்கள் எனப்படும் சமுத்திரத்தின் உள்ளே அமிழ்ந்து இருக்கக்கூடியதும் தேவர்களாலும் அடையமுடியாத மரணதர்மத்தைப் போக்கி அம்ருதமெனப்படும் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிக்கவல்ல இந்த அத்வைதம் என்னும் அம்ருதத்தை பிறருக்கில்லாத தன்னுடைய மேதையுடன் கூடிய பிரக்ஞையின் திறமையால் கடைந்து ஜீவர்களின் பொருட்டு அவர்களுக்கு உபயோகமாக திரட்டி மேலே கொண்டு வந்தாரோ அந்த பூஜ்யர்களுக்கெல்லாம் பூஜ்யரான இந்த என் எதிர் உள்ள கௌடபாதாச்சாரியரை வணங்கியவனாய் உள்ளேன்.
यत्प्रज्ञालोकभासा प्रतिहतिमगमत्स्वान्तमोहान्धकारो
मज्जोन्मज्जच्च घोरे ह्यसकृदुपजनोदन्वति त्रासने मे ।
यत्पादावाश्रितानां श्रुतिशमविनयप्राप्तिरग्न्या ह्यमोघा
तत्पादौ पावनीयौ भवभयविनुदौ सर्वभावैर्नमस्ये ॥ ३ ॥
எந்த குரு சரணர்களுடைய ஞான ஒளியால் அடிக்கடி தேவ, மனுஷ்ய, திரியக்யோனிகளில் அந்த அந்த பிறவிகளைத்தருவதாயும் அதனாலேயே மிகவும் பயங்கரமாயும் கோரமாயும் உள்ள பிறவிப் பெருங்கடலில் மூழ்கி மூழ்கி தத்தளிக்கும் என்னுடைய உள்ளே இருக்கும் மோஹாந்தகாரமானது (அக்ஞான இருளானது) ஆச்சாரிய பிரசாதத்தால் நாசத்தை அடைந்ததோ அவ்வாறே எந்த குருசரணர்களின் திருவடிகளைப்பற்றிய மற்ற சிஷ்யர்களுக்கும் மிகவும் சிரேஷ்டமானவைகளும் வீண்போகாதவைகளான மனன நிதித்யாசனத்துடன் கூடிய சிரவணஞானமும், இந்திரிய நிக்ரஹமும் அதனால் ஏற்படும் சாந்தியும், அதனால் ஏற்படும் விநயமும் அதனால் மோக்ஷமும் அடையப்படுகிறது. அவ்வாறு சம்சாரபயத்தை ஒழிப்பதாயும் மிகப் புனிதமானவைகளுமான குரு சரணர்களின் திருவடிகளை மனோவாக்காதி சர்வ பாவங்களாலும் மிகுந்த வணக்கத்துடன் வணங்குகிறேன்.
इति अलातशान्तिप्रकरणम् सम्पूर्णम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ माण्डूक्योपनिषत्कारिकाभाष्यं सम्पूर्णम् ॥