द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

माण्डूक्योपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

மாண்டூக்யோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

उपासनाश्रितो धर्मो जाते ब्रह्मणि वर्तते ।
प्रागुत्पत्तेरजं सर्वं तेनासौ कृपणः स्मृतः ॥ १ ॥
कारिका अन्वयः - उपासनाश्रितो धर्मः जाते ब्रह्मणी वर्तते प्रागुत्पत्तेः अजं सर्वं प्रपत्स्ये तेन असौ कृपणः स्मृतः ॥
காரிகா அர்த்தம் - உபாசனையை ஆஸ்ரியிக்கின்ற ஜீவன் காரிய பிரஹ்மத்தில் நிலைக்கிறான். உத்பத்திக்கு முன் எல்லாம் அஜமாய் இருந்து அதாவது அஜனாவாகிய பிரஹ்ம ஸ்வரூபமாய் இருந்தது. ஆகையால் அல்ப ஞானியாகவும் (தீனனாகவும்) கருதப்படுகிறான்.
(भाष्यम्) (अव) - ओङ्कारनिर्णये उक्तः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत आत्मेति प्रतिज्ञामात्रेण, ‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति च । तत्र द्वैताभावस्तु वैतथ्यप्रकरणेन स्वप्नमायागन्धर्वनगरादिदृष्टान्तैर्दृश्यत्वाद्यन्तवत्त्वादिहेतुभिस्तर्केण च प्रतिपादितः । अद्वैतं किमागममात्रेण प्रतिपत्तव्यम् , आहोस्वित्तर्केणापीत्यत आह — शक्यते तर्केणापि ज्ञातुम् ; तत्कथमित्यद्वैतप्रकरणमारभ्यते । उपास्योपासनादिभेदजातं सर्वं वितथम् , केवलश्चात्मा अद्वयः परमार्थ इति स्थितमतीते प्रकरणे ; यतः
(ச.பா) (அ.கை) பிரபஞ்சத்தின் உபசமனம், சிவம், அத்வைதம் ஆத்மா என்ற பிரதிக்ஞா மாத்திரத்தாலேயே ஓம்காரம் நிர்ணயம் செய்யப்பட்டதாகிறது. ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இல்லாமல் போய்விடும். (ज्ञाते द्वैतं न विद्यतः) அங்கு துவைத அபாவமானது வைதத்திய பிரகரணத்தில் ஸ்வப்னமாயை, கந்தர்வ நகரம் முதலிய திருஷ்ட்டாந்தங்களால் த்ருஷ்யத்துவம், அவ்வாறே ஆதி அந்தத்துவம் முதலிய ஹேதுவாயிலாய் தர்க்கத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்டது. அத்வைதம் ஆகம மாத்திரத்தாலேயே அறிந்து கொள்ள முடியும் அல்லது தர்க்கத்தாலுமா என்பதற்குக் கூறுகிறார் - தர்க்கத்தாலும் அறிய முடியும். அது எவ்வாறு என்று அத்வைத பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. உபாசிக்கப்பட வேண்டியது, உபாசனை முதலிய பேதத்தால் உண்டான எல்லாம் பொய், கேவலம் ஆத்மா அத்வயம் பரமார்த்தம் என்று இதற்கு முந்திய பிரகரணத்தில் நிச்சயிக்கப்பட்டது ஏனெனில் -
उपासनाश्रितः उपासनामात्मनो मोक्षसाधनत्वेन गतः उपासकोऽहं ममोपास्यं ब्रह्म । तदुपासनं कृत्वा जाते ब्रह्मणीदानीं वर्तमानः अजं ब्रह्म शरीरपातादूर्ध्वं प्रतिपत्स्ये प्रागुत्पत्तेश्चाजमिदं सर्वमहं च । यदात्मकोऽहं प्रागुत्पत्तेरिदानीं जातो जाते ब्रह्मणि च वर्तमान उपासनया पुनस्तदेव प्रतिपत्स्ये इत्येवमुपासनाश्रितो धर्मः साधकः येनैवं क्षुद्रब्रह्मवित् , तेनासौ कारणेन कृपणो दीनोऽल्पकः स्मृतो नित्याजब्रह्मदर्शिभिर्महात्मभिरित्यभिप्रायः, ‘यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) इत्यादिश्रुतेस्तलवकाराणाम् ॥ १ ॥
(ச.பா) उपासनाश्रित (உபாசனாச்ரித:) என்றால் உபாசனையை தன்னுடைய மோக்ஷத்திற்கு சாதன ரூபமாய் கருதுபவன் அதாவது நான் உபாசகன். பிரஹ்மம் உபாசிக்க வேண்டியது என்பதாகும். அதனை உபாசனை செய்து கொண்டு காரிய பிரஹ்மத்தில் இருக்கின்றேன். இந்த சரீரம் வீழ்ந்த பின் பிறப்பற்ற பிரஹ்மத்தை அடைந்து அவ்வாறு உத்பத்திக்கு முன் எல்லாம் அஜ ரூபமாய் (ஜன்மற்றதாய்) இருந்தது. உத்பத்திக்கு முன் அவ்வாறு இருந்து இப்பொழுது உத்பன்னமாகி உண்டான பிரஹ்மத்தில் இருந்து கொண்டு முடிவில் உபாசனாவாயிலாய் மறுபடியும் அந்த ரூபத்தை அடைவேன் என்று இவ்வாறு உபாசனையை ஆஸ்ரயிக்கும் சாதக ஜீவன் க்ஷுத்ர (கீழான) பிரஹ்மத்தை அறிந்தவனாவான். ஆகையால் எப்பொழுதும் அஜன்ம பிரஹ்மத்தை தர்சிக்கும் மஹாத்மாக்கள் அவர்களை தீனன் அதாவது க்ஷுத்திரன் என்று கருதுகிறார்கள் என்பது இதன் அபிப்பிராயம், “यद्वाचाऽनभ्युदितं येन वागभ्युद्यते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யத்வாச்சானப்யுதிதம் யேன வாக்அப்யுத்யதே. ததேவ பிரஹ்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே) = எது வாக்கினால் அறிய முடியாதோ. எதனால்வாக் அறிய முடிகிறதோ அது பிரஹ்மம் என்று அறி, உபாசனை செய்யப்படுவது பிரஹ்மம் அல்ல. என்பது முதலிய தலவகார சுருதி பிரமாணம் ஆகும்.
अतो वक्ष्याम्यकार्पण्यमजाति समतां गतम् ।
यथा न जायते किञ्चिज्जायमानं समन्ततः ॥ २ ॥
सबाह्याभ्यन्तरमजमात्मानं प्रतिपत्तुमशक्नुवन् अविद्यया दीनमात्मानं मन्यमानः जातोऽहं जाते ब्रह्मणि वर्ते तदुपासनाश्रितः सन्ब्रह्म प्रतिपत्स्ये इत्येवं प्रतिपन्नः कृपणो भवति यस्मात् -
(ச.பா) (அ.கை) வெளியிலும் உள்ளும் நிறைந்திருக்கும் அஜன்ம ஆத்மாவை அடையும் சாமர்த்தியம் அற்றதின் காரணமாய் அவித்தியா வசத்தால் தன்னை தீனன் எனக் கருதும் புருஷன் நான் உத்பன்னமாய் இருக்கிறேன். உத்பன்னமான பிரஹ்மத்தில் இருக்கிறேன். மேலும் அதை உபாசனைக்கு ஆஸ்ரயமாய் எடுத்துக்கொண்டு பிரஹ்மத்தை அடைவேன் என்று நினைப்பதால் அவன் தீனன்-
कारिका अन्वयः - अतः अकार्पण्यम् अजाति समतामगतं समन्ततः यथा जायमानं किञ्चित् न जायते ।
காரிகா அர்த்தம் - ஆகையால் இப்பொழுது நான் எங்கும் சமபாவனை அடைந்து ஜன்மமற்ற தீனத்தன்மை அற்றதின் (அஜன்மா பிரஹ்மத்தின்) வர்ணனை செய்கிறேன். எவ்வாறு எனில் எல்லாம் உத்பன்னமானாலும் சிறிதும் உத்பன்னமாகவில்லை என்பதைக் கூறப்போகிறேன்.
अतो वक्ष्यामि अकार्पण्यम् अकृपणभावमजं ब्रह्म । तद्धि कार्पण्यास्पदम् , ‘यत्रान्योऽन्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) ‘मर्त्यं तत्’ ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्यादिश्रुतिभ्यः । तद्विपरीतं सबाह्याभ्यन्तरमजमकार्पण्यं भूमाख्यं ब्रह्म ; यत्प्राप्याविद्याकृतसर्वकार्पण्यनिवृत्तिः, तदकार्पण्यं वक्ष्यामीत्यर्थः ।
(ச.பா) ஆகையால் அகார்பண்ய அக்ருபண பாவமான பிரஹ்மத்தை வர்ணிக்கப்போகிறேன். அந்த கார்பண்ய ஆஸ்பதம் என்பது “यत्रान्योऽन्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं मर्त्यमसत्” “वाचारम्भणं विकारो नामधेयम्” (யத்ரான்யோன் யத்பச்யத்யன்யச்ச்ருணோத்யன்யத்விஜானாதி ததல்பம் மர்த்யமசத், வாசாரம்பணம் விகாரோநாமதேயம் = எங்கு மற்றொன்றைப் பார்க்கிறானோ கேட்கிறானோ, அறிகின்றானோ அது அல்பமானது மரண தர்மத்துடன் கூடியது, அது அசத், வாக்கினால் ஆரம்பமாகும் விகாரமெல்லாம் நாம மாத்திரமே) முதலிய சுருதிகளால் அறிகிறோம். அதற்கு விபரீதமானது புறமும், உள்ளும் எங்கும் நீக்கமறநிறைந்ததாயும். பிறப்பற்றதாயும், கார்பண்ய மற்றதாயும் பூமா எனப்படும் பிரஹ்மமாகும். எதை அடைந்தால் அவித்தையால் உண்டான எல்லா கிருபணத் தன்மையும் நிவர்த்தியாகிறதோ அது அகார்ப்பண்யம் அதைக் கூறுகிறேன் என்பது பொருள்.
(भाष्यम्) - तत् अजाति अविद्यमाना जातिरस्य । समतां गतं सर्वसाम्यं गतम् ; कस्मात् ? अवयववैषम्याभावात् । यद्धि सावयवं वस्तु, तदवयववैषम्यं गच्छज्जायत इत्युच्यते ; इदं तु निरवयवत्वात्समतां गतमिति न कैश्चिदवयवैः स्फुटति ; अतः अजाति अकार्पण्यं समन्ततः समन्तात् , यथा न जायते किञ्चित् अल्पमपि न स्फुटति रज्जुसर्पवदविद्याकृतदृष्ट्या जायमानं येन प्रकारेण न जायते सर्वतः अजमेव ब्रह्म भवति, तथा तं प्रकारं शृण्वित्यर्थः ॥ २ ॥
(ச.பா) அது பிறப்பற்றதாயும், எல்லாவற்றிலும் ஒரே ஸமமாய் உள்ளதாயும், எவ்வாறெனில், அவயவங்களுடன் கூடியவைகளுக்கே வைஷம்யம் ஏற்படும், இது அவவய மற்றதால் எவ்வித வைஷம்யமும் அற்றது. எல்லாவற்றிலும் சமமானது. தன்னைச் சுற்றிலும் அல்லது தன்னைச் சார்ந்ததாக எவ்வாறு ரஜ்ஜுவில் ஸர்ப்பம் தோன்றுவது போல் அவித்தியா தோஷத்தால் உண்டாகும். எந்த சிறு தோஷமும் (பேதகல்பனையும்) சிறிது அளவு கூட உண்டாவது இல்லையோ, எது எப்பொழுதும் எவ்வித மாறுபாடுமின்றி உள்ளதோ அத்தகைய பிரஹ்மத்தைக் (கூறுகிறேன்) கேள் என்பது பொருள்.
आत्मा ह्याकाशवज्जीवैर्घटाकाशैरिवोदितः ।
घटादिवच्च सङ्घातैर्जातावेतन्निदर्शनम् ॥ ३ ॥
(भाष्यम्) (अव) - अजाति ब्रह्माकार्पण्यं वक्ष्यामीति प्रतिज्ञातम् ; तत्सिद्ध्यर्थं हेतुं दृष्टान्तं च वक्ष्यामीत्याह —
(ச.பா) (அ.கை) பிறப்பற்ற அகார்பண்ய பிரஹ்மத்தைப் பற்றி கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்யப்பட்டது . அது சித்திக்கும் பொருட்டு ஹேதுவையும், திருஷ்டாந்தத்தையும் சொல்லுகிறேன் என்று கூறுகிறார்-
कारिका अन्वयः - आत्मा हि आकाशवत् (यथा) घटाकाशैरिव (तथा) जीवैः उदितः घटादिवत् च संघातैः जातौ एतत् निदर्शनम् ।
காரிகா அர்த்தம் - ஆத்மா ஆகாசத்திற்கு ஒப்பானதாகும். கடாகாசம்போல் ஜீவரூபமாய் உத்பன்னமாயிற்று. அவ்வாறே கடாதிகளுக்கு சமானமாய் தேஹ சங்காத ரூபமாய் உத்பன்னமாயிருக்கிறது. ஆத்மாவின் உத்பத்தி விஷயத்தில் திருஷ்டாந்தம் கூறப்பட்டுள்ளது.
आत्मा परः हि यस्मात् आकाशवत् सूक्ष्मो निरवयवः सर्वगत आकाशवदुक्तः जीवैः क्षेत्रज्ञैः घटाकाशैरिव घटाकाशतुल्यैः उदितः उक्तः ; स एव आकाशसमः पर आत्मा ।
(ச.பா) ஏனெனில் பரமாத்மா ஆகாசம் போல் சூக்ஷ்ம. நிரவயவ, சர்வகதம் எனப்படுகிறது. மேலும் அது கடாகாசம் போல் க்ஷதே்ரக்ஞ ஜீவ ரூபமாய் உத்பன்னமானது என்று கூறப்படுகிறது. ஆகையால் பரமாத்மா ஆகாசத்திற்குச் சமானமாகும்.
अथवा घटाकाशैर्यथा आकाश उदितः उत्पन्नः, तथा परो जीवात्मभिरुत्पन्नः ; जीवात्मनां परस्मादात्मन उत्पत्तिर्या श्रूयते वेदान्तेषु, सा महाकाशाद्घटाकाशोत्पत्तिसमा, न परमार्थत इत्यभिप्रायः ।
(ச.பா) அல்லது எவ்வாறு கடாகாச ரூபத்தில் ஆகாயம் உத்பன்னமானதோ அவ்வாறு பரமாத்மா ஜீவாத்ம ரூபமாய் உத்பன்னமாயிற்று. தாத்பர்யம் என்னவெனில் வேதாந்தத்தில் எந்த பரமாத்மாவிலிருந்து. ஜீவாத்மாக்களின் உத்பத்தியானது கேட்கப்படுகின்றதோ அது மஹா ஆகாசத்திலிருந்து கடாகாச உத்பத்தி போல் சமானமாகும். உண்மையில் (பரமார்த்தமாக) அல்ல என்பது அபிப்பிராயம்.
तस्मादेवाकाशाद्घटादयः सङ्घाता यथा उत्पद्यन्ते, एवमाकाशस्थानीयात्परमात्मनः पृथिव्यादिभूतसङ्घाता आध्यात्मिकाश्च कार्यकरणलक्षणा रज्जुसर्पवद्विकल्पिता जायन्ते ; अत उच्यते — घटादिवच्च सङ्घातैरुदित इति । यदा मन्दबुद्धिप्रतिपिपादयिषया श्रुत्या आत्मनो जातिरुच्यते जीवादीनाम् , तदा जातावुपगम्यमानायाम् एतत् निदर्शनं दृष्टान्तः यथोदिताकाशवदित्यादिः ॥ ३ ॥
(ச.பா) எவ்வாறு கடம் முதலிய சங்காதம் உத்பன்ன மாகிறதோ அவ்வாறு ஆகாச ஸ்தானீயமாய் இருக்கும் பரமாத்மாவிடத்தில் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பிக்கப்பட்ட பிருதிவீ முதலிய பூதசங்காதங்களும், சரீரம் அவ்வாறே இந்திரிய ரூப ஆத்யாத்மிக பாவம் உத்பன்னமாகிறது. இதனால் கூறப்படுவது என்னவெனில் கடாதிகளைப் போல் தேஹ சங்காத ரூபமாய் உத்பன்னமாகிறது. எப்பொழுது மந்தபுத்தி உடையவர்களுக்கு பிரதிபாதனம் செய்வதற்கான இச்சையால் சுருதியானது ஆத்மாவிலிருந்து ஜீவாதிகளின் உத்பத்தியானது வர்ணிக்கப்பட்டது. அப்பொழுது அதன் உத்பத்தியை ஏற்பதில் முன்பு கூறப்பட்ட ஆகாசம் முதலானவைகள் போல் என்று நிதர்சனம் செய்யப்பட்டது (திருஷ்டாந்தம் காட்டப்பட்டது).
घटादिषु प्रलीनेषु घटाकाशादयो यथा ।
आकाशे सम्प्रलीयन्ते तद्वज्जीवा इहात्मनि ॥ ४ ॥
कारिका अन्वयः - यथा घटादिषु प्रलीनेषु घटाकाशादयः आकाशे संप्रलीयन्ते तद्वत् इह जीवाः संप्रलीयन्ते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடம் முதலியவைகள் லீனமான உடன் கடாகாசம் முதலியவை மஹா ஆகாசத்தில் லீனமாகிறதோ அவ்வாறு ஜீவன் இந்த ஆத்மாவில் லீனம் அடைகிறது.
यथा घटाद्युत्पत्त्या घटाकाशाद्युत्पत्तिः, यथा च घटादिप्रलयेन घटाकाशादिप्रलयः, तद्वद्देहादिसङ्घातोत्पत्त्या जीवोत्पत्तिः तत्प्रलयेन च जीवानाम् इह आत्मनि प्रलयः, न स्वत इत्यर्थः ॥
(ச.பா) எவ்வாறு கட முதலியவைகளின் உத்பத்தியினால் கடாகாசம் முதலியவைகள் உத்பத்தியாகிறதோ, மேலும் எவ்வாறு கடம் முதலியவைகள் நாசம் அடையும்பொழுது கடாகாசம் முதலிவைகளின் நாசம் உண்டாகிறதோ அவ்வாறே தேஹம் முதலிய சங்காதத்தின் உத்பத்தியால் ஜீவனின் உத்பத்தி உண்டாகிறது. அது லயம் ஆகும்பொழுது ஜீவனும் இந்த ஆத்மாவில் லயமாகிறது. அவை இயற்கையாய் உண்டாவதில்லை என்பது கருத்து.
(भाष्यम्) (अव) - सर्वदेहेष्वात्मैकत्वे एकस्मिन् जननमरणसुखदुःखादिमत्यात्मनि सर्वात्मनां तत्सम्बन्धः क्रियाफलसाङ्कर्यं च स्यादिति ये त्वाहुर्द्वैतिनः, तान्प्रतीदमुच्यते ।
(ச.பா) (அ.கை) (முன் காரிகையில் கூறப்பட்ட திருஷ்டாந்தத்தால் ஒரு ஜீவன் சுகம் முதலானவைகளைப் பெற்றிருக்க. மற்ற ஜீவன்கள் அந்த சுகத்தைப் பெறுவதில்லையே? அது ஏன்?) மேலும் எல்லா தேஹங்களிலும் ஒரே ஆன்மாதான் இருக்கிறது என்றால் ஒரு தேஹத்தில் உள்ள ஆத்மா ஜனன, மரண சுகாதிகளை அனுபவிக்கையில் அதனுடன் சம்பந்தப்பட்ட அகில உலகிலுமுள்ள ஆத்மாக்களுக்கும் இதற்கு உண்டாகும் சுகதுக்காதிகள் ஏற்பட்டே ஆகவேண்டும். அது அனுபவத்திற்கு ஒத்துவராததால் துவைதக்கொள்கையே சரியானது என்று கூறும் துவைதிகளுக்கு பதிலாக அமைவது இந்த காரிகை-
यथैकस्मिन्घटाकाशे रजोधूमादिभिर्युते ।
न सर्वे सम्प्रयुज्यन्ते तद्वज्जीवाः सुखादिभिः ॥ ५ ॥
कारिका अन्वयः - यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिर्युते सति तथा सर्वे न संप्रयुज्यन्ते तद्वत् जीवाः सुखादिभिः न संप्रयुज्यन्ते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஒரு கடாகாசமானது புழுதி, புகைமுதலானவைகளுடன் கூடி இருக்கும் பொழுது அந்த முன் கூறப்பட்ட கடாகாசம் போலவே மற்றஎல்லா கடாகாசங்களும் அப்புழுதி, புகை இவைகளுடன் கூடியிருப்பதில்லையோ அது போல் ஜீவாத்மாக்கள் சுகம். துக்கம் இவைகளுடன் ஒரு ஜீவாத்மா பெற்றிருப்பதைப் போன்று, மற்ற ஜீவாத்மாக்கள் சுக துக்கங்களைப் பெற்றிருப்பதில்லை.
(भाष्यम्) — यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिः युते संयुक्ते, न सर्वे घटाकाशादयः तद्रजोधूमादिभिः संयुज्यन्ते, तद्वत् जीवाः सुखादिभिः ।
(ச.பா) எவ்வாறு ஒரு கடாகாசத்தில் புழுதி, புகை முதலியவை கூடி இருக்கும்பொழுது மற்றஎல்லா கடாகாசங்களும் புழுதி, புகை இவைகளுடன் கூடி இருப்பதில்லையோ அவ்வாறு ஜீவர்களும் சுகம் முதலியவைகளுடன் கூடி இருப்பதில்லை.
(पूर्व) ननु, एक एवात्मा ?
(பூர்வ) ஆனால் ஆத்மா ஒன்றேயா?
बाढम् ; ननु न श्रुतं त्वया आकाशवत्सर्वसङ्घातेष्वेक एवात्मेति ?
(ச.பா) (சித்தாந்தி) ஆம், என்ன நீ கேட்டதில்லையா? எல்லா சங்காதங்களிலும் ஆகாசத்திற்கு ஓப்பாய் வியாபித்திருப்பது ஒரே ஆத்மா அல்லவா?
यद्येक एवात्मा, तर्हि सर्वत्र सुखी दुःखी च स्यात् ।
(ச.பா) (பூர்வ) ஆத்மா ஒன்றே என்றால் எங்கும் சுகம் துக்கம் இருக்குமே.
न चेदं साङ्ख्यस्य चोद्यं सम्भवति ; न हि साङ्ख्य आत्मनः सुखदुःखादिमत्त्वमिच्छति, बुद्धिसमवायाभ्युपगमात्सुखदुःखादीनाम् ; न चोपलब्धिस्वरूपस्यात्मनो भेदकल्पनायां प्रमाणमस्ति ।
(ச.பா) (சித்தாந்தி) சாங்கிய மதஸ்தர்களுடைய கொள்கை இங்கு பொருந்தாது. சாங்கியர்கள் ஆத்மாவிற்கு சுக துக்காதிகளை ஒப்புக்கொள்வதில்லை. அல்லது அவர்கள் ஆத்மா சுகத்துடனோ, துக்கத்துடனோ கூடியிருத்தலை ஒப்புக்கொள்வதில்லை. புத்தியுடன் சேர்ந்தபொழுதே சுகதுக்கங்கள் நுகரப்படுவதால் ஆத்மாவிற்கு சுகமோ, துக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. புத்தியுடன் சம்பந்தப்பட்டு சுக துக்கங்களை நுகரும் ஆத்மாவிற்கு பேதத்தைக் கல்பிப்பதற்கான எந்தவிதப் பிரமாணமும் உங்களிடம் இல்லை. யாரிடமும் இல்லை.
भेदाभावे प्रधानस्य पारार्थ्यानुपपत्तिरिति चेत् , न ; प्रधानकृतस्यार्थस्यात्मन्यसमवायात् ; यदि हि प्रधानकृतो बन्धो मोक्षो वा अर्थः पुरुषेषु भेदेन समवैति, ततः प्रधानस्य पारार्थ्यमात्मैकत्वे नोपपद्यत इति युक्ता पुरुषभेदकल्पना ; न च साङ्ख्यैर्बन्धो मोक्षो वार्थः पुरुषसमवेतोऽभ्युपगम्यते, निर्विशेषाश्च चेतनमात्रा आत्मानोऽभ्युपगम्यन्ते ; अतः पुरुषसत्तामात्रप्रयुक्तमेव प्रधानस्य पारार्थ्यं सिद्धम् , न तु पुरुषभेदप्रयुक्तमिति ; अतः पुरुषभेदकल्पनायां न प्रधानस्य पारार्थ्यं हेतुः ।
(ச.பா) மேலும் பேதங்கள் இல்லாது போனால் பிரதானத்திற்கு பரமார்த்தமான தன்மை இல்லாது போய்விடுமே என்பாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பிரதானத்தால். சம்பாதிக்கப்பட்ட காரியத்திற்கு ஆத்மாவுடன் சம்பந்தமில்லை. பிரதானத்தால் ஏற்பட்ட பந்தம் மோக்ஷம் புருஷர்களுடைய பேதத்தைக் காட்டுவதால் ஆத்மாவின் ஏகத்துவத்தை கொள்ளும்பொழுது பிரதானத்திற்கு பாரமார்த்திகம் சம்பவிக்காது. அப்பொழுது புருஷர்களின் பேதத்தை கல்பனை செய்வதே சரியானதாகும். ஆனால் சாங்கியவாதிகள் பந்தத்தையோ. மோக்ஷத்தையோ புருஷ சம்பந்தமுடையதாக கொள்வதில்லை. அவர்கள் ஆத்மாக்களை நிர்விசேஷமாயும், சேதன மாத்திரமாய் கருதுகிறார்கள். ஆகையால் பிரதானத்தின் பரார்த்ததா கேவலம் புருஷனின் சத்தா மாத்திரத்தாலேயே சித்திக்கின்றது. புருஷ பேதத்தின் காரணமாக அல்ல. ஆகையால் புருஷர்களின் பேத கல்பனையில் பிரதானத்தின் பரார்த்ததா (உண்மை) காரணம் அல்ல.
न चान्यत्पुरुषभेदकल्पनायां प्रमाणमस्ति साङ्‍ख्यानाम् । परसत्तामात्रमेव चैतन्निमित्तीकृत्य स्वयं बध्यते मुच्यते च प्रधानम् ; परश्चोपलब्धिमात्रसत्तास्वरूपेण प्रधानप्रवृत्तौ हेतुः, न केनचिद्विशेषेणेति, केवलमूढतयैव पुरुषभेदकल्पना वेदार्थपरित्यागश्च ।
(ச.பா) இதைத் தவிர சாங்கியவாதிகளிடத்தில் புருஷபேத கல்பனையில் பிரமாணம் இல்லை. “पर” (பர) ஆத்மாவின் சத்தா மாத்திரத்தை நிமித்தமாக்கி பிரதானம் தானே பந்தம், மோக்ஷத்தை அடைகிறது. மேலும் அந்த பர (ஆத்மா) கேவலம் உபலப்தி (அறிவது) மாத்திரம் சத்தா ஸ்வரூபத்தால் பிரதானத்தின் பிரவிர்த்தியில் ஹேது ஆகிறது. வேறு விசேஷ காரணம் இல்லை. ஆகையால் கேவலம் மூடத்தன்மையினாலேயே புருஷர்களுக்கு பேத கல்பனையும், வேதார்த்தத்தின் பரித்தியாகமும் ஏற்படுகிறது.
ये त्वाहुर्वैशेषिकादयः इच्छादय आत्मसमवायिन इति ; तदप्यसत् , स्मृतिहेतूनां संस्काराणामप्रदेशवत्यात्मन्यसमवायात्, आत्ममनःसंयोगाच्च स्मृत्युत्पत्तेः स्मृतिनियमानुपपत्तिः, युगपद्वा सर्वस्मृत्युत्पत्तिप्रसङ्गः ।
(ச.பா) இதைத் தவிர வைசேஷிக மதத்தைத் தழுவுகின்றவர்கள் இச்சை முதலியவை ஆத்மாவின் தர்மம் என்று கூறுகிறார்கள் அதுவும் சரியல்லை. ஏனெனில் ஸ்மிருதிக்குக் காரணமான சமஸ்காரங்களுக்கு நிரவயவ ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தம் ஏற்படாது. ஆத்மா, மனதின் சம்யோகத்தால் ஸ்மிருதியின் உத்பத்தி என்றால் ஸ்மிருதிக்கு ஒரு நியமமும் சம்பவிக்காது. அல்லது ஒரே சமயத்தில் எல்லா ஸ்மிருதிகளின் உத்பத்தியின் உபஸ்திதி சம்பவிக்கும்.
न च भिन्नजातीयानां स्पर्शादिहीनानामात्मनां मनआदिभिः सम्बन्धो युक्तः । न च द्रव्याद्रूपादयो गुणाः कर्मसामान्यविशेषसमवाया वा भिन्नाः सन्ति । परेषां यदि ह्यत्यन्तभिन्ना एव द्रव्यात्स्युः इच्छादयश्चात्मनः, तथा सति द्रव्येण तेषां सम्बन्धानुपपत्तिः ।
(ச.பா) மேலும் ஸ்பர்சாதிகள் இல்லாத பின்ன ஜாதியான ஆத்மாவிற்கு மன முதலியவையுடன் சம்பந்தம் என்பது சரியல்ல. அவ்வாறே வேறு மதத்தில் திரவியத்தை விட ரூபம் முதலியவை அதனுடைய குணம், அவ்வாறே கர்ம, சாமான்ய, விசேஷ, சமவாயபின்னம் ஆகியவை இல்லை. வேறு மதத்தில் இச்சை முதலியவை திரவ்யத்தைக் காட்டிலும் இச்சை முதலியவை ஆத்மாவைக் காட்டிலும் அத்யந்தம் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் திரவியத்துடன் அதன் சம்பந்தம் சித்திக்காது.
अयुतसिद्धानां समवायलक्षणः सम्बन्धो न विरुध्यत इति चेत् , न ; इच्छादिभ्योऽनित्येभ्य आत्मनो नित्यस्य पूर्वसिद्धत्वान्नायुतसिद्धत्वोपपत्तिः । आत्मना अयुतसिद्धत्वे च इच्छादीनामात्मगतमहत्त्ववन्नित्यत्वप्रसङ्गः । स चानिष्टः, आत्मनोऽनिर्मोक्षप्रसङ्गात् ।
(ச.பா) அயுத (ஓர்வகை சித்தாந்தம்) சித்தத்தின் படி பதார்த்தத்திற்கு சமவாய சம்பந்தம் ஏற்றுக்கொள்வதில் விரோதம் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் இச்சை முதலிய அநித்திய தர்மத்திற்கு முன்பே நித்ய ஆத்மா சித்தித்திருப்பதால் அவைகளுக்கு பரஸ்பரம் அயுத சித்தத்துவம் சம்பவிக்காது. இச்சை முதலியவை ஆத்மாவுடன் அயுத சித்தியாய் இருந்தால் ஆத்மாவில் உள்ள மஹத்துவத்திற்கு சமமாய் அதற்கும் நித்தியத் தன்மை உடையதாகும். மேலும் இந்த விஷயத்தில் இஷ்டமில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு மோக்ஷமற்றது (அநிர்மோக்ஷம்) என்றாகிவிடும்.
समवायस्य च द्रव्यादन्यत्वे सति द्रव्येण सम्बन्धान्तरं वाच्यम् , यथा द्रव्यगुणयोः । समवायो नित्यसम्बन्ध एवेति न वाच्यमिति चेत् , तथा सति समवायसम्बन्धवतां नित्यसम्बन्धप्रसङ्गात्पृथक्त्वानुपपत्तिः । अत्यन्तपृथक्त्वे च द्रव्यादीनां स्पर्शवदस्पर्शद्रव्ययोरिव षष्ठ्यर्थानुपपत्तिः ।
(ச.பா) எது சமவாய திரவ்யத்தைக் காட்டிலும் பின்னமோ அதற்கு திரவ்யத்துடன் வேறு எதாவது சம்பந்தம் கூறவேண்டும், எவ்வாறு திரவ்யம் குணமோ அவ்வாறு. சமவாயம் நித்திய சம்பந்தம் என்றால் அதனுடன் எதாவது சம்பந்தம் கூறுவதற்கு அவசியம் இல்லை எனில் அந்த அவஸ்தையில் சமவாய சம்பந்தம் உடையவற்றிற்கு நித்தியசம்பந்தம் ஏற்படுவதால் அதற்கு என்று தனி சம்பந்தம் தேவையில்லை. திரவியம் முதலியவைகள் பரஸ்பரம் முற்றிலும் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு ஸ்பரிசத்தை உடையதற்கும் ஸ்பரிசமற்ற திரவியத்திற்கும் பரஸ்பர சம்பந்தம் சம்பவிக்காது. அவ்வாறே இதற்கும் சம்பந்தம் கிடையாது.
इच्छाद्युपजनापायवद्गुणवत्त्वे च आत्मनोऽनित्यत्वप्रसङ्गः । देहफलादिवत्सावयवत्वं विक्रियावत्त्वं च देहादिवदेवेति दोषावपरिहार्यौ । यथा त्वाकाशस्य अविद्याध्यारोपितघटाद्युपाधिकृतरजोधूममलवत्त्वादिदोषवत्त्वम् , तथा आत्मनः अविद्याध्यारोपितबुद्ध्याद्युपाधिकृतसुखदुःखादिदोषवत्त्वे बन्धमोक्षादयो व्यावहारिका न विरुध्यन्ते ; सर्ववादिभिरविद्याकृतव्यवहाराभ्युपगमात् परमार्थानभ्युपगमाच्च । तस्मादात्मभेदपरिकल्पना वृथैव तार्किकैः क्रियत इति ॥ ५ ॥
(ச.பா) ஆத்மாவை இச்சை முதலியவைகளின் உத்பத்தி விநாசம் ஆகிய குணம் உடையவைகளாய் கருதினால் அதற்கு அநித்யத்துவம் ஏற்படும். அவ்வாறே அதற்கு தேஹம் பலம் முதலியவைகளுக்கு சமானமாய் சாவயவத்துவமும் அவ்வாறே தேஹ முதலியவைகளுக்கு சமமாய் கிரியாத்துவம் ஆகிய இரண்டு தோஷங்கள் நீக்க முடியாததாய் ஆகிவிடும். எவ்வாறு எனில் ஆகாசத்தின் அவித்யா ஆரோபத்தால் கடம் முதலிய உபாதிகளின் காரணமாய் தூசி. புகை, மலம் இவைகளுடன் கூடி இருக்கிறதோ அவ்வாறே அவித்தையால் ஆரோபிக்கப்பட்ட புத்தி முதலியவைகளின் உபாதியின் காரணமாய் சுகதுக்கம் முதலிய தோஷங்களின் சேர்க்கையால் வியாவஹாரிக பந்தம், மோக்ஷம் முதலியவை ஏற்படுவதில் எந்த விரோதமும் இல்லை. ஏனெனில் எல்லாவாதிகளும் வியவஹாரத்தை அவித்யையினால் உண்டானதே என்று கருதுகிறார்கள், உண்மை ரூபமாய்(பரமார்த்தரூபமாய்) கருதவில்லை. ஆகையால் தார்க்கிகர்களின் ஜீவபேத கல்பனை பிரயோஜனமற்றதாகும்.
कथं पुनरात्मभेदनिमित्त इव व्यवहार एकस्मिन्नात्मन्यविद्याकृत उपपद्यत इति, उच्यते ।
(ச.பா) (அ.கை) ஆத்மா ஒன்றே ஆத்மாவில் பேதம் இருப்பது போல் அவித்தையினால் உண்டாகும் வியவஹாரம் எவ்வாறு சம்பவிக்கும். இதைக்குறித்து கூறுகிறார்.
रूपकार्यसमाख्याश्च भिद्यन्ते तत्र तत्र वै ।
आकाशस्य न भेदोऽस्ति तद्वज्जीवेषु निर्णयः ॥ ६ ॥
कारिका अन्वयः - तत्र तत्र वै रूपकार्य समाख्याश्च भिद्यन्ते आकाशस्य भेदः न अस्ति तद्वत् जीवेषु निर्णयः ।
காரிகா அர்த்தம் - (குடம் முதலிய உபாதியின் காரணமாய் தோன்றும்) பின்ன பின்ன ஆகாசத்தின் ரூபம், காரியம், பெயர் இவைகளால் பேதம் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆகாசத்தில் எந்தபேதமும் இல்லை அவ்வாறே ஜீவ விஷயத்திலும் அறிந்துகொள்ள வேண்டும்.
यथा इहाकाशे एकस्मिन्घटकरकापवरकाद्याकाशानामल्पत्वमहत्त्वादिरूपाणि भिद्यन्ते, तथा कार्यमुदकाहरणधारणशयनादि, समाख्याश्च घटाकाशः करकाकाश इत्याद्याः तत्कृताश्च भिन्ना दृश्यन्ते, तत्र तत्र वै व्यवहारविषये इत्यर्थः । सर्वोऽयमाकाशे रूपादिभेदकृतो व्यवहारः अपरमार्थ एव । परमार्थतस्त्वाकाशस्य न भेदोऽस्ति । न चाकाशभेदनिमित्तो व्यवहारोऽस्ति अन्तरेण परोपाधिकृतं द्वारम् । यथैतत् , तद्वद्देहोपाधिभेदकृतेषु जीवेषु घटाकाशस्थानीयेष्वात्मसु निरूपणात्कृतः बुद्धिमद्भिः निर्णयः निश्चय इत्यर्थः ॥ ६ ॥
(ச.பா) எவ்வாறு ஒரே ஆகாசத்தில் கடம், கமண்டலம், மடம் ஆகிய ஆகாசங்களாய் சிறிது, பெறிதுமாய் ரூபத்தில் பேதம் உடையதாயும். அவ்வாறே வியவஹாரத்தில் ஜலத்தை கொண்டு வருதல், ஜலத்தைத் தாங்குதல், படுத்தல் முதலிய காரியமாயும், அவ்வாறே கடாகாசம் கரகாகாசம் என்பது முதலிய பெயர்களால் வேறு வேறாய் (பின்னமாய்) காணப்படுகிறது. ஆனால் ஆகாசத்தில் ரூபம் முதலியவைகளுக்கு காரணமாகும் எல்லா வியவஹாரங்களும் பாரமார்த்திகமல்ல உண்மையில் ஆகாசத்திற்கு ஒரு பேதமும் இல்லை. உண்மையில் உபாதி உண்டான நிமித்தத்தை தவிர ஆகாசத்தின் பேதத்திற்கு வேறு காரணமான எந்த வியவஹாரமும் இல்லை. எவ்வாறு கடாதிகளுக்கோ அவ்வாறே தேஹம் முதலிய உபாதியின் பேதத்தால் உண்டாகும் கடாகாசத்திற்கு ஒப்பான ஜீவர்களின் பேதம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அதை புத்திமான்கள் நிச்சயம் செய்கிறார்கள் என்பது தாத்பர்யம்.
ननु तत्र परमार्थकृत एव घटाकाशादिषु रूपकार्यादिभेदव्यवहार इति ; नैतदस्ति, यस्मात्
(ச.பா) அ.கை) கடாகாசம் முதலியவைகளில் ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரம் வாஸ்தவமா? என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் -
नाकाशस्य घटाकाशो विकारावयवौ यथा ।
नैवात्मनः सदा जीवो विकारावयवौ तथा ॥ ७ ॥
कारिका अन्वयः - यथा घटाकाशः आकाशस्य विकारावययौ न, तथा जीवः आत्मनः सदा विकारावयवौ नैव ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடாகாசம் ஆகாச விகாரத்தின் அவயவமாகாதோ அவ்வாறே ஜீவனும் ஆத்மாவின் விகாரம் ஒரு போதும் அவயவமாகாது.
परमार्थाकाशस्य घटाकाशो न विकारः, यथा सुवर्णस्य रुचकादिः, यथा वा अपां फेनबुद्बुदहिमादिः ; नाप्यवयवः, यथा वृक्षस्य शाखादिः । न तथा आकाशस्य घटाकाशो विकारावयवौ यथा, तथा नैवात्मनः परस्य परमार्थसतो महाकाशस्थानीयस्य घटाकाशस्थानीयो जीवः सदा सर्वदा यथोक्तदृष्टान्तवन्न विकारः, नाप्यवयवः । अत आत्मभेदकृतो व्यवहारो मृषैवेत्यर्थः ॥ ७ ॥
(ச.பா) பரமார்த்த ஆகாசத்திற்கு கடாகாசம் விகாரம் அல்ல. எவ்வாறு தங்கத்திற்கு கழுத்து மாலை முதலியவையோ, எவ்வாறு நீரில் நுரை, குமுழி, பனி இவை முதலியவைகளோ அவைகளைப்போல் ஆகும். மரத்தின் கிளைகள் போல் அவயவம் ஆகாது. எவ்வாறு மஹாகாசத்திற்கு கடாகாச விகாரமோ, அவயவமோ ஆகாதோ அவ்வாறு முற்கூறிய திருஷ்டாந்தப்படி மஹாகாச ஸ்தானத்தில் இருக்கும் பரமார்த்த சத் பரமார்த்தாவின் கடாகாச ஸ்தானீய ஜீவன், எந்த ஒரு அவஸ்தையிலும் விகாரமோ அவயவமோ ஆகாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் ஆத்ம பேதத்தால் உண்டாகிற வியவஹாரம் மித்தையேயாகும்.
यस्माद्यथा घटाकाशादिभेदबुद्धिनिबन्धनो रूपकार्यादिभेदव्यवहारः, तथा देहोपाधिजीवभेदकृतो जन्ममरणादिव्यवहारः, तस्मात्तत्कृतमेव क्लेशकर्मफलमलवत्त्वमात्मनः, न परमार्थत इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपिपादयिषन्नाह —
(ச.பா) (அ.கை) ஏனெனில் எவ்வாறு கடாகாசம் முதலிய புத்தி பேதத்தின் காரணமாய் அதற்கு ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரமோ அவ்வாறே தேஹ உபாதியுடன் ஜீவபேதத்தின் காரணத்தால் ஜன்ம, மரண முதலிய வியவஹாரங்கள். ஆகையால் அது ஆத்மக்லேசம், கர்மபலம், மலம் ஆகியவைகளை உடையதாகிறது. உண்மையில் (பரமார்த்தமாய்) அதற்கு இல்லை, இதைக்குறித்து திருஷ்டாந்த மூலமாய் விளக்குவதற்கு இச்சை உடையவராகி கூறுகிறார்.
यथा भवति बालानां गगनं मलिनं मलैः ।
तथा भवत्यबुद्धानामात्मापि मलिनो मलैः ॥ ८ ॥
कारिका अन्वयः - यथा बालानां गगनं मलैः मलिनं भवति तथा अबुद्धानां आत्माऽपि मलैः मलिनः इव भवति ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு மூடர்கள் தூசி முதலிய மலங்களால் ஆகாசம் மலினமடைந்ததாய் எண்ணுகிறார்களோ, அவ்வாறே அவிவேக புருஷர்களின் திருஷ்டியிலும் ஆத்மா (ராகதுவேஷ முதலிய) மலத்துடன் கூடியதாய் மலினமடைந்ததாய் காணப்படுகிறது.
यथा भवति लोके बालानाम् अविवेकिनां गगनम् आकाशं घनरजोधूमादिमलैः मलिनं मलवत् , न गगनयाथात्म्यविवेकवताम् , तथा भवति आत्मा परोऽपि — यो विज्ञाता प्रत्यक् — क्लेशकर्मफलमलैर्मलिनः अबुद्धानां प्रत्यगात्मविवेकरहितानाम् , नात्मविवेकवताम् ।
(ச.பா) உலகில் எவ்வாறு அவிவேக புருஷர்களின் திருஷ்ட்டியில் ஆகாசத்தில் மேகம், தூசி. புகை முதலிய மலங்களின் காரணமாய் ஆகாயம் மலமுடையதாய் இருக்கிறது. ஆனால் ஆகாசத்தின் உண்மையான யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்தவர்களின் திருஷ்டியில் அவ்வாறு அல்ல. இவ்வாறே உண்மையை அறியாத பிரத்யக் ஆத்ம ஸ்வரூபத்தில் விவேகமற்ற புருஷர்களின் திருஷ்டியில் எது பிரத்யக்காயும் எல்லாவற்றிற்கும் சாக்ஷியாய் இருக்கிறதோ அந்த பரமாத்மாக்லேசம், கர்ம, பலரூப மலினத்தோடு கூடி மலினமாகிறது. ஆனால் விவேகிகளாகிய ஆன்ம ஞானிகளின் திருஷ்டியில் அவ்வாறு உண்டாகாது.
न ह्यूषरदेशः तृड्वत्प्राण्यध्यारोपितोदकफेनतरङ्गादिमान् , तथा नात्मा अबुधारोपितक्लेशादिमलैः मलिनो भवतीत्यर्थः ॥ ८ ॥
(ச.பா) தாத்பர்யம் என்னவெனில் ஊஷரபூமியில் தாகம் உடைய ஜீவனுக்கு ஆரோபிக்கப்பட்ட ஜலத்தில் நுரை, அலைகள் இவைகளை உடையதாக காணமாட்டானோ அவ்வாறு ஆத்மாவும் அக்ஞானிகளினால் ஆரோபிக்கப்பட்ட க்லேசங்கள் முதலிய மலங்களால் மலினமாவதில்லை.
पुनरप्युक्तमेवार्थं प्रपञ्चयति —
(ச.பா) (அ.கை) மறுபடியும் முன்பு கூறப்பட்ட அர்த்தத்தையே விளக்குகிறார்.
मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि ।
स्थितौ सर्वशरीरेषु चाकाशेनाविलक्षणः ॥ ९ ॥
कारिका अन्वयः - मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि सर्वशरीषु स्थितौ आकाशेन अविलक्षणः ।
காரிகா அர்த்தம் - இந்த ஆத்மா மரணம், ஜன்மம், வேறு லோகங்களுக்கு சென்றுவருதல் மேலும் இருத்தல் முதலிய வியவஹாரங்கள் உடன் கூடிய எல்லா சரீரங்களில் இருந்தாலும் ஆகாசத்தைக் காட்டிலும் நிர்விகாரமாய் இருக்கிறது.
घटाकाशजन्मनाशगमनागमनस्थितिवत्सर्वशरीरेष्वात्मनो जन्ममरणादिराकाशेनाविलक्षणः प्रत्येतव्य इत्यर्थः ॥ ९ ॥
(ச.பா) கடாகாசத்தின் ஜன்மம், நாசம், வருதல், செல்லுதல் இருத்தல் இவற்றிற்கு சமானமாக எல்லா சரீரங்களிலும் உள்ள ஆத்மாவின் ஜன்ம, மரண முதலியவைகள் ஆகாசத்தைக் காட்டிலும் விலக்ஷணமற்று அதாவது பேதமற்றது என்று அனுபவிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
सङ्घाताः स्वप्नवत्सर्व आत्ममायाविसर्जिताः ।
आधिक्ये सर्वसाम्ये वा नोपपत्तिर्हि विद्यते ॥ १० ॥
कारिका अन्वयः- सर्व संघाताः स्वप्नवत् आत्म माया विसर्जिताः हि आधिक्ये सर्व साम्ये वा उपपत्ति न विद्यते ।
காரிகா அர்த்தம் - தேஹ முதலிய எல்லா சங்காதங்களும் ஸ்வப்ன துல்யமாய் ஆத்மாவின் மாயையால் உண்டாக்கப்பட்டது. அதை அபேக்ஷித்து அதைக்காட்டிலும் உத்கிருஷ்டமானதோ அல்லது எல்லாவற்றிகும் சமானமாகவோ அதற்கு ஹேது ஒன்றும் இல்லை.
घटादिस्थानीयास्तु देहादिसङ्घाताः स्वप्नदृश्यदेहादिवन्मायाविकृतदेहादिवच्च आत्ममायाविसर्जिताः, आत्मनो माया अविद्या, तया प्रत्युपस्थापिताः, न परमार्थतः सन्तीत्यर्थः । यदि आधिक्यमधिकभावः तिर्यग्देहाद्यपेक्षया देवादिकार्यकरणसङ्घातानाम् , यदि वा सर्वेषां समतैव, तेषां न ह्युपपत्तिसम्भवः, सम्भवप्रतिपादको हेतुः न विद्यते नास्ति ; हि यस्मात् , तस्मादविद्याकृता एव, न परमार्थतः सन्तीत्यर्थः ॥ १० ॥
(ச.பா) (அ.கை) கடம் முதலியவை போன்ற தேஹ முதலிய சங்காதங்கள் ஸ்வப்னத்தில் பார்க்கும் தேஹம் முதலியவைகளுக்கு சமானமானதாகும். அவ்வாறே மாயாவியினால் உண்டாக்கப்பட்ட தேஹம் முதலியவைப் போன்று ஆத்மாவின் மாயையால் உண்டானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்மாவின் மாயையாகிய எந்த அவித்தை உண்டோ அதை ஸ்துதிப்பதின் பொருட்டாகும். உண்மையில் இல்லை. திரியக் முதலிய தேஹங்களை அபேக்ஷித்து தேவதை முதலியவைகளின் சரீரம், மேலும் (இந்திரியங்களின் உத்கிருஷ்ட்டத்தன்மை அல்லது (தத்துவ திருஷ்ட்டியினால்) எல்லாம் சமானமானாலும் அதற்கு சத்பாவத்தை விளக்குவதற்கு ஒரு ஹேதுவும் இல்லை. ஆகையால் அவை அவித்தையினால் ஏற்பட்டது. உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை என்பதாகும்.
उत्पत्त्यादिवर्जितस्याद्वयस्यास्यात्मतत्त्वस्य श्रुतिप्रमाणकत्वप्रदर्शनार्थं वाक्यान्युपन्यस्यन्ते —
(ச.பா) (அ.கை) உத்பத்தி முதலியவை அற்ற அத்வைத ஆத்ம தத்துவத்தின் சுருதி பிரமாணத்தை எடுத்துக் காட்டுவதற்காக இந்த வாக்கியங்கள் கூறப்படுகிறது.
रसादयो हि ये कोशा व्याख्यातास्तैत्तिरीयके ।
तेषामात्मा परो जीवः खं यथा सम्प्रकाशितः ॥ ११ ॥
कारिका अन्वयः - हि रसादयः ये कोशाः तैत्तिरीयके व्याख्याताः तेषां जीवः परः आत्मा यथा खं तथा संप्रकाशितः ।
காரிகா அர்த்தம் - தைத்திரீய சுருதியில் எந்த ரசம் முதலியவை அதாவது அன்னமய முதலிய கோசங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டதோ அவை ஆகாசம் போல் பரமாத்மாவே. அவைகளின் ஆத்மா ஜீவ ரூபமாய் பிரகாசிக்கிறது.
रसादयः अन्नरसमयः प्राणमय इत्येवमादयः कोशा इव कोशाः अस्यादेः, उत्तरोत्तरापेक्षया बहिर्भावात्पूर्वपूर्वस्य व्याख्याताः विस्पष्टमाख्याताः तैत्तिरीयके तैत्तिरीयकशाखोपनिषद्वल्ल्याम् , तेषां कोशानामात्मा येनात्मना पञ्चापि कोशा आत्मवन्तोऽन्तरतमेन । स हि सर्वेषां जीवननिमित्तत्वाज्जीवः ।
(ச.பா) தைத்திரீயக சாகா உபநிஷத் வல்லியில் எந்த ரசாதி அதாவது அன்னரச மய அவ்வாறே பிராணமய முதலிய கோசங்கள் ஸ்பஷ்டமாய் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உத்தரோத்தரத்தை அபேக்ஷித்து பூர்வபூர்வ கோசங்கள் பாஹ்யமாய் இருப்பதின் காரணமாய் கத்தியின் கோசத்திற்கு (உறைக்கு) சமானமாய் இருப்பதால் கோசம் எனப்படுகிறது. அந்த கோசங்களின் ஆத்மா, எந்த மிகவும் உள்ளே இருக்கும் ஆத்மாவின் காரணத்தால் பஞ்சகோச ஆத்மாவானாய் இருக்கிறானோ அது எல்லா ஜீவனத்திற்கும் நிமித்தமாய் இருப்பதன் காரணமாய் ஜீவன் எனக்கூறப்படுகிறான்.
कोऽसावित्याह — पर एवात्मा यः पूर्वम् ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) इति प्रकृतः ; यस्मादात्मनः स्वप्नमायादिवदाकाशादिक्रमेण रसादयः कोशलक्षणाः सङ्घाता आत्ममायाविसर्जिता इत्युक्तम् । स आत्मा अस्माभिः यथा खं तथेति सम्प्रकाशितः, ‘आत्मा ह्याकाशवत्’ (मा. का. ३ । ३) इत्यादिश्लोकैः । न तार्किकपरिकल्पितात्मवत्पुरुषबुद्धिप्रमाणगम्य इत्यभिप्रायः ॥ ११ ॥
(ச.பா) அது யார் என்பதைக் கூறுகிறார் - அது பரமாத்மா. இதற்குமுன்னால் “सत्यंज्ञानमनन्तं ब्रह्म” (சத்தியம், ஞானம், அனந்தம்) என்ற வாக்கியங்களால் கூறப்பட்டது. எந்த ஆத்மா ஸ்வப்னம், மாயை முதலியவைகளுக்கு சமமாக ஆகாச முதலிய கிரமமாக கோசரூப சங்காதங்கள் ஆத்மாவினுடைய மாயையால் உண்டாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த ஆத்மாவை நாம் “आत्माह्याकाशवत्” முதலிய ஸ்லோகங்களில் எவ்வாறு ஆகாசம் கூறப்பட்டதோ அதைப்போல் பிரகாசப்படுத்தப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் தார்க்கிகர்களால் கல்பனை செய்யப்பட்ட ஆத்மாவிற்கு சமமாய் மனுஷ்ய புத்தியினால் அது பிரமாணம் செய்யமுடியாது.
द्वयोर्द्वयोर्मधुज्ञाने परं ब्रह्म प्रकाशितम् ।
पृथिव्यामुदरे चैव यथाकाशः प्रकाशितः ॥ १२ ॥
कारिका अन्वयः - यथा पृथिव्याम् उदरेचैव अकाशः प्रकाशितः तथा मधुज्ञाने द्वयोः द्वयोः परं ब्रह्म प्रकाशितः ।
காரிகா அர்த்தம் - உலகில் எவ்வாறு பிருதிவியிலும் உதரத்திலும் ஒரே ஆகாசம் பிரகாசிக்கிறதோ அவ்வாறே மது பிராஹ்மணத்திலும் (அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய) இரண்டு ஸ்தானத்திலும் ஒரே பிரஹ்மமே நிரூபிக்கப்பட்டுள்ளது.
किञ्च, अधिदैवतमध्यात्मं च तेजोमयोऽमृतमयः पुरुषः पृथिव्याद्यन्तर्गतो यो विज्ञाता पर एवात्मा ब्रह्म सर्वमिति द्वयोर्द्वयोः आ द्वैतक्षयात् परं ब्रह्म प्रकाशितम् ; क्वेत्याह — ब्रह्मविद्याख्यं मधु अमृतम् , अमृतत्वं मोदनहेतुत्वात् , तद्विज्ञायते यस्मिन्निति मधुज्ञानं मधुब्राह्मणम् , तस्मिन्नित्यर्थः । किमिवेत्याह — पृथिव्याम् उदरे चैव यथा एक आकाशः अनुमानेन प्रकाशितः लोके, तद्वदित्यर्थः ॥ १२ ॥
(ச.பா) அதிதைவதமான பிருதிவியிலும் (தேஜோமயமாயும்) வயிற்றிலும் அதாவது அத்யாத்மமான சரீரத்திலும் (அம்ருதமயமாயும்) இழையோடுடிருப்பது ஒரே ஆகாசமே யென்று அனுமானத்தால் உலகில் எவ்வாறு விளக்கப்பட்டதோ அவ்வாறே மதுப்பிராஹ்மணத்தில் அதாவது மிகவும் மகிழ்ச்சியளிக்ககூடிய பிரஹ்மஞானமாகிறதேன் ஈண்டு விளக்கப்பட்டுள்ளதால் பிருஹதாரண்யகத்தின் இப்பகுதி மதுஞானம் என்று கூறப்பட்டது. பலபர்யாயங்களில், அதாவது அத்யாத்மம், அதிதைவதம் எனப் பிரிக்கப்பட்ட பலஸ்தானங்களில் இங்கு தேஜோமயனாயும் அங்கு அம்ருதமயனாயும் விளங்குபவன் அவன் ஒருவனே என்று “अयमेव स इति” என்பதால் இங்கு தேஜோமயனாய் விளங்குபவனே அம்ருத மயமாய் விளங்குகிறான் என்று இரண்டு பர்யாயங்களாய் பிரித்துக்கொண்டு ஒன்றோடு ஒன்றாய் இணைத்து அந்தந்தஸ்தான பேதங்களில் விக்ஞாதாவாய் விளங்குவது பரப்பிரஹ்மமே என்று விளக்கப்பட்டது.
जीवात्मनोरनन्यत्वमभेदेन प्रशस्यते ।
नानात्वं निन्द्यते यच्च तदेवं हि समञ्जसम् ॥ १३ ॥
कारिका अन्वयः - यत् जीवात्मनोः अनन्यत्वम् अभेदेन प्रशस्यते नानात्वं तत् निन्द्यते एवं हि समञ्जसम् ।
காரிகா அர்த்தம் - ஜீவனும் ஆத்மாவும் அபேத ரூபமாய் ஒன்றாகவே விளங்குகிறது மேலும் அதன் நாநாத்துவம் நிந்திக்கப்படுகிறது. ஆகையால் அதனுடைய ஏகத்துவமே சரியானது.
यद्युक्तितः श्रुतितश्च निर्धारितं जीवस्य परस्य चात्मनोऽनन्यत्वम् अभेदेन प्रशस्यते स्तूयते शास्त्रेण व्यासादिभिश्च, यच्च सर्वप्राणिसाधारणं स्वाभाविकं शास्त्रबहिर्मुखैः कुतार्किकैर्विरचितं नानात्वदर्शनं निन्द्यते, ‘न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । २३) ‘द्वितीयाद्वै भयं भवति’ (बृ. उ. १ । ४ । २) ‘उदरमन्तरं कुरुते, अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १) ‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) ‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (क. उ. २ । ४ । १०) इत्येवमादिवाक्यैरन्यैश्च ब्रह्मविद्भिः यच्चैतत् , तदेवं हि समञ्जसम् ऋज्ववबोधं न्याय्यमित्यर्थः । यास्तु तार्किकपरिकल्पिताः कुदृष्टयः, ताः अनृज्व्यो निरूप्यमाणा न घटनां प्राञ्चन्तीत्यभिप्रायः ॥ १३ ॥
(ச.பா) யுக்தியினாலும், ஸ்ருதியினாலும் நிச்சயிக்கப்பட்ட ஜீவ, பரமாத்மாவின் அநந்யத்துவ அபேதமானது சாஸ்திரங்களினாலும், வியாசர் முதலியவர்களாலும் ஸ்துதிக்கப்பட்டதாகும். சாஸ்திரத்திற்கு பஹிர்முகமாய் உள்ள குதார்க்கிகர்களால் கல்பிக்கப்பட்ட எல்லா பிராணிகளுக்கும் சாதாரணமாய் ஸ்வபாவமாய் உள்ள நாநா தர்சனமானது நிந்திக்கப்படுகிறது. “न तु तद्द्वितीयमस्ति” நது தத்த்விதீயமஸ்தி = அதைக்காட்டிலும் த்விதீயம் இரண்டாவது இல்லை “द्वितीयाद्वै भयं भवति” (த்விதீயாத்வை பயம் பவதி = இரண்டாவதினின்றே பயம் உண்டாகிறது) “उदरमन्तरं कुरुते, अथ तस्य भयं भवति” உதரமந்தரம் குருதே. அத தஸ்யபயம் பவதி = சிறிதளவு பேதம் செய்தாலும் அவனுக்கு பயம் உண்டாகிறது) “इदं सर्वं यदयमात्मा” (இதம்சர்வம் யதயமாத்மா) = எது இருக்கிறதோ அது எல்லாம் ஆத்மா) “मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति” (ம்ருத்யோ; ச ம்ருத்யுமாப்னோதி ய இஹ நாநேவபச்யதி = இங்கு எவன் நாநாவாகவே பார்க்கிறானோ அவன் ம்ருத்யுவிலிருந்து ம்ருத்யுவையே அடைகின்றான். என்பது முதலிய வாக்கியங்களாலும் வேறு பிரஹ்ம வேதாக்கள் மூலமாய் (நாநாத்துவம்) நிந்தை செய்யப்படுகிறது. இது இவ்வாறு சுலபமாக அறியமுடியும். அதாவது நியாயத்துடன் கூடியது. தார்க்கிகர்களின் குதிருஷ்ட்டியானது சுலபமானதல்ல அதை நிரூபிக்க முற்பட்டால் அது பொருந்தக்கூடியதாகாது என்பது அபிப்பிராயம்.
जीवात्मनोः पृथक्त्वं यत्प्रागुत्पत्तेः प्रकीर्तितम् ।
भविष्यद्वृत्त्या गौणं तन्मुख्यत्वं हि न युज्यते ॥ १४ ॥
कारिका अन्वयः - यत् जीवात्मनोः पृथक्त्वं तत् उत्पत्तेः प्राक् प्रकीर्तितम् तत् मुख्यत्वं न युज्यते हि भविष्यत् वृत्त्या गौणम् ॥ १४ ॥
காரிகா அர்த்தம் - முன்பு உபநிஷத்துக்களில் உள்ள கர்மகாண்டத்தில் உத்பத்தியைக் கூறும் வாக்கியங்களால் எந்த ஜீவனும் பரமாத்மாவும் தனியாக கூறப்பட்டதோ அது இனிவரும் விருத்திகளால் கௌணமாகும். அதை முக்கிய அர்த்தமாகக் கொள்ளுவது சரியல்ல.
ननु श्रुत्यापि जीवपरमात्मनोः पृथक्त्वं यत् प्रागुत्पत्तेः उत्पत्त्यर्थोपनिषद्वाक्येभ्यः पूर्वं प्रकीर्तितं कर्मकाण्डे अनेकशः कामभेदतः इदङ्कामः अदःकाम इति, परश्च ‘स दाधार पृथिवीं द्याम्’ (ऋ. १० । १२१ । १) इत्यादिमन्त्रवर्णैः ; तत्र कथं कर्मज्ञानकाण्डवाक्यविरोधे ज्ञानकाण्डवाक्यार्थस्यैवैकत्वस्य सामञ्जस्यमवधार्यत इति ।
(ச.பா) (சங்கை) - ஸ்ருதியில் முதலில் கர்மகாண்டத்தில் உபநிஷத்துக்களினால் இதம் காம: அத: காம: என்று இவ்வாறு அநேககாமனைகளின் பேதங்களால் ஜீவன், பரமாத்மா இவைகளின் பேதத்தை விளக்கி இருக்கிறார்கள். “स दाधारपृथिवीं द्याम्” (ச தாதார பிருதிவீம்த்யாம் = அந்த பரமாத்மாவே மண்ணையும், விண்ணையும் தாங்குகிறான்) என்று மந்திரங்களால் தனித்தன்மையாய் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு கர்மகாண்ட. ஞானகாண்ட வாக்கியங்களுக்கு விரோதம் இருக்கும்பொழுது ஞானகாண்டத்திற்கு எவ்வாறு ஏகத்துவம் நிச்சயிக்கப்படுகிறது?
अत्रोच्यते — ‘यतो वा इमानि भूतानि जायन्ते’ (तै. उ. ३ । १ । १) ‘यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गाः’ (बृ. उ. २ । १ । २०) ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १) ‘तदैक्षत तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इत्याद्युत्पत्त्यर्थोपनिषद्वाक्येभ्यः प्राक्पृथक्त्वं कर्मकाण्डे प्रकीर्तितं यत् , तन्न परमार्थतः । किं तर्हि ? गौणम् ; महाकाशघटाकाशादिभेदवत् , यथा ओदनं पचतीति भविष्यद्वृत्त्या, तद्वत् । न हि भेदवाक्यानां कदाचिदपि मुख्यभेदार्थकत्वमुपपद्यते, स्वाभाविकाविद्यावत्प्राणिभेददृष्ट्यनुवादित्वादात्मभेदवाक्यानाम् ।
(ச.பா) (சமாதானம்) - இங்கு கூறப்படுகிறது - “यतो वा इमानि भूतानि जायन्ते” (யதோ வா இமானி பூதானி ஜாயந்தே = எதிலிருந்து இந்த பூதங்கள் எல்லாம் உண்டாகிறதோ) “यथाऽग्नेः क्षुद्राः विस्फुलिङ्गाः” (யதாக்னே: க்ஷுத்ரா விஸ்புலிங்கா: = எவ்வாறு அக்னியிலிருந்து தீப்பொறிகள் கிளம்புகின்றனவோ) “तस्माद्वा एतस्मादात्मन आकाशः संभूतः” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:= அந்த இந்த ஆத்மாவில் இருந்து ஆகாசம் உண்டாயிற்று) “तदैक्षत” (ததைக்ஷத = அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அதிலிருந்து தேஜஸ் உண்டாக்கப்பட்டது) என்பது முதலிய உத்பத்தியைக் குறிக்கும் உபநிஷத் வாக்கியங்களுக்கு முன்பே கர்மகாண்டத்தில் எது தனியாக பிரதிபாதனம் செய்யப்பட்டதோ அது உண்மையில் இல்லை. அது எவ்வாறு? மஹாகாச கடாகாச பேதம் போல் கௌணமாகும். ஓதனம் பசதி (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல் பவிஷ்யத் விருத்தி) (இனி வரும் விருத்தி) போல் ஆகும். பேதவாக்கியங்கள் ஒரு நாளும் முக்கிய பேதத்தை உடையதாக ஆகாது. ஏனெனில் பேதவாக்கியமோ எனில் அக்ஞானிகளின் ஸ்வபாவமான பேத திருஷ்ட்டியைக் குறிப்பதாக ஆகிறது.
इह च उपनिषत्सु उत्पत्तिप्रलयादिवाक्यैर्जीवपरात्मनोरेकत्वमेव प्रतिपिपादयिषितम् ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) इत्यादिभिः ; अत उपनिषत्स्वेकत्वं श्रुत्या प्रतिपिपादयिषितं भविष्यतीति भाविनीमिव वृत्तिमाश्रित्य लोके भेददृष्ट्यनुवादो गौण एवेत्यभिप्रायः ।
(ச.பா) உபநிஷத்களில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அதுவாய் நீ இருக்கிறாய்) “अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மீதி ந ச வேத = அதுவேறு நான்வேறு என்று அறிவதில்லை) என்றசுருதிகளின் படி உத்பத்தி பிரளயங்களை போதிக்கும் வாக்கியங்களுக்கு ஜீவன், பரமாத்மா இவைகளின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகும், ஆகையால் உபநிஷத்துக்களில் சுருதியின் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகிறது. இந்த பவிஷ்யத் விருத்தியை ஆஸ்ரயித்து உலகில் பேத திருஷ்டியை அனுவாதம் செய்தல் கௌணம் ஆகும் என்பது அபிப்பிராயம்.
अथवा, ‘तदैक्षत. . . तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इत्याद्युत्पत्तेः प्राक् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । २) इत्येकत्वं प्रकीर्तितम् ; तदेव च ‘तत्सत्यं स आत्मा, तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इत्येकत्वं भविष्यतीति तां भविष्यद्वृत्तिमपेक्ष्य यज्जीवात्मनोः पृथक्त्वं यत्र क्वचिद्वाक्ये गम्यमानम् , तद्गौणम् ; यथा ओदनं पचतीति, तद्वत् ॥ १४ ॥
(ச.பா) அல்லது “तदैक्षत” (ததைக்ஷத -= அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அது தேஜஸை உண்டாக்கியது) இவைகள் முதலிய சுருதிகள் வாயிலாய் உத்பத்திக்கு முன் “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே இரண்டற்றது) முதலிய பிரகாரமாய் ஏகத்துவம் நிரூபணம் செய்யப்பட்டது. அதுவே. “तत्सत्यं स आत्मातत्त्वमसि” என்று, இனி ஏகத்துவம் உண்டாகும் என்று பவிஷ்யத் விருத்தியை அபேக்ஷித்து எந்த ஜீவ ஆத்மாக்களுக்கு பிருதக்துவம் (வேறாக இருக்கும் தன்மை) எந்த வாக்கியத்தால் அறிகிறோமோ அது கௌண வாக்கியம் ஆகும். (ஓதனம் பசதி) (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல்.
मृल्लोहविस्फुलिङ्गाद्यैः सृष्टिर्या चोदितान्यथा ।
उपायः सोऽवताराय नास्ति भेदः कथञ्चन ॥ १५ ॥
कारिका अन्वयः - मृल्लोहविस्फुलिङ्गाद्यैः या सृष्टिः अन्यथा चोदिता सः अवताराय उपायः भेदः कथञ्चन नास्ति ।
காரிகா அர்த்தம்- மண், லோஹபிண்டம், விஸ்புலிங்கம் (நெருப்பு பொறி) முதலிய திருஷ்டாந்தங்களால் வெவ்வேறு விதமாய் சிருஷ்டி நிரூபணம் செய்யப்பட்டது. அது புத்தியை செழுத்துவதற்கான உபாயமாகும் உண்மையில் அதில் சிறிதும் பேதம் இல்லை.
ननु यद्युत्पत्तेः प्रागजं सर्वमेकमेवाद्वितीयम् , तथापि उत्पत्तेरूर्ध्वं जातमिदं सर्वं जीवाश्च भिन्ना इति । मैवम् , अन्यार्थत्वादुत्पत्तिश्रुतीनाम् । पूर्वमपि परिहृत एवायं दोषः — स्वप्नवदात्ममायाविसर्जिताः सङ्घाताः, घटाकाशोत्पत्तिभेदादिवज्जीवानामुत्पत्तिभेदादिरिति । इत एव उत्पत्तिभेदादिश्रुतिभ्य आकृष्य इह पुनरुत्पत्तिश्रुतीनामैदम्पर्यप्रतिपिपादयिषयोपन्यासः ।
(ச.பா) (அ.கை) உத்பத்திக்கு முன்பே எல்லாம் பிறப்பற்றதாயும் அத்விதீயமாய் இருந்தாலும் அதன் பின் எல்லாம் உண்டாயிற்று. மேலும் அப்பொழுது ஜீவன் பின்னமாய் இருக்கிறது என்று கூறுதல் சரியாகாது. ஏனெனில் உத்பத்தியை கூறும் சுருதிகளுக்கு வேறு அபிப்பிராயமாகும். தேஹ முதலிய சங்காதம் ஸ்வப்னத்தைப் போல் ஆத்மாவின் மாயையால் உண்டானது. எவ்வாறு எனில் கடாகாசத்தின் உத்பத்தியினால் தோன்றும் பேதம் போல் ஜீவர்களின் உத்பத்தியின் பேதம் என்று வாக்கியங்கள் மூலமாய் முன்பே இந்த தோஷங்கள் பரிகாரம் செய்யப்பட்டதாகிறது ஆகையால் முன்பு கூறிய உத்பத்தி, பேதங்களைக் கூறும் சுருதிகளால் அந்த பேத முதலியவைகளின் நிஷ்கர்ஷ (நீக்கத்தை)க் கொண்டு அந்த உத்பத்தி சுருதிகளின் பிரஹ்மாத்மைக்கிய பரத்துவத்தை பிரதிபாதனம் செய்வதற்கு இச்சையினால் உபந்நியாசம் செய்யப்படுகிறது.
मृल्लोहविस्फुलिङ्गादिदृष्टान्तोपन्यासैः सृष्टिः या च उदिता प्रकाशिता कल्पिता अन्यथान्यथा च, स सर्वः सृष्टिप्रकारो जीवपरमात्मैकत्वबुद्ध्यवतारायोपायोऽस्माकम् , यथा प्राणसंवादे वागाद्यासुरपाप्मवेधाद्याख्यायिका कल्पिता प्राणवैशिष्ट्यबोधावताराय ।
(ச.பா) - மண், லோகபிண்டம். தீப்பொறி முதலிய திருஷ்ட்டாந்தங்களால் உபந்நியாசம் செய்து வேறு வேறு விதமாய் ஸ்ருஷ்ட்டியானது கல்பிக்கப்பட்டது. சிருஷ்ட்டியின் எல்லா விதமாகவும் நாம் ஜீவன் பரமார்த்மாவின் ஏகத்துவத்தின் நிச்சயத்தை செய்யும் புத்தியை அடைவதற்காக ஆகும். அது எவ்வாறு எனில் பிராண சம்வாதத்தில் பிராணனின் மேன்மையைக் காட்டுவதற்காக வாக் முதலிய இந்திரியங்களுக்கு அசுரர் மூலமாக பாபங்கள் இருப்பதாக இந்த கதை கல்பிக்கப்பட்டதாகும்.
तदप्यसिद्धमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) - ஆனாலும் இது பொருந்தாது எனில்.
न, शाखाभेदेष्वन्यथान्यथा च प्राणादिसंवादश्रवणात् । यदि हि वादः परमार्थ एवाभूत् , एकरूप एव संवादः सर्वशाखास्वश्रोष्यत, विरुद्धानेकप्रकारेण नाश्रोष्यत ; श्रूयते तु ; तस्मान्न तादर्थ्यं संवादश्रुतीनाम् । तथोत्पत्तिवाक्यानि प्रत्येतव्यानि ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. வெவ்வேறு சாஸ்திரங்களில் வெவ்வேறு பிரகாரமாய் பிராண சம்வாதத்தைக் கேட்டதினால் அந்த சம்வாதம் உண்மையில் எல்லா சாகைகளிலும் ஒரே சம்வாதம் தான் கேட்கப்படுகிறது. பரஸ்பரம் விருத்தமாக வெவ்வேறு பிரகாரமாக அல்ல. ஆகையால் சம்வாத சுருதிகளின் தாத்பர்யம் கேட்டவாறு (यथाश्रुत) அர்த்தத்தில் இல்லை. இவ்வாறு உத்பத்தி வாக்கியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
कल्पसर्गभेदात्संवादश्रुतीनामुत्पत्तिश्रुतीनां च प्रतिसर्गमन्यथात्वमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) - கல்பத்தின் சிருஷ்டி பேதத்தால் ஒவ்வொரு சர்க்கத்திற்கு தக்கவாறு பேதம் இருக்கிறது என்றால்?
न, निष्प्रयोजनत्वाद्यथोक्तबुद्ध्यवतारप्रयोजनव्यतिरेकेण । न ह्यन्यप्रयोजनवत्त्वं संवादोत्पत्तिश्रुतीनां शक्यं कल्पयितुम् । तथात्वप्रत्तिपत्तये ध्यानार्थमिति चेत् ; न, कलहोत्पत्तिप्रलयानां प्रतिपत्तेरनिष्टत्वात् । तस्मादुत्पत्त्यादिश्रुतय आत्मैकत्वबुद्ध्यवतारायैव, नान्यार्थाः कल्पयितुं युक्ताः । अतो नास्त्युत्पत्त्यादिकृतो भेदः कथञ्चन ॥
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் சுருதிக்கு முன்பு கூறப்பட்ட (பிரஹ்மாத்மா ஏகத்துவத்தில்) புத்தியை பிரவேசிக்கச் செய்வதாகிய பிரயோஜனத்தைத் தவிர வேறு பிரயோஜனம் இல்லை. பிராணசம்வாதம், உத்பத்தி சுருதிகளுக்கு இதைத் தவிரவேறு பிரயோஜனத்தைக் கல்பிக்க முடியாது. ருமலும் அந்த ரூபத்தை அடைவதற்கான தியானத்தின் பொருட்டாகும் என்று கூறினாலும் அதுவும் பொருந்தாது. ஏனெனில் கலகம், உத்பத்தி, பிரளயம் இவைகளில் ஒருவருக்கும் இஷ்டம் கிடையாது. ஆகையால் உத்பத்தி முதலியவைகளை பிரதிபாதனம் செய்யும் சுருதிகள் ஆத்ம ஏகத்துவ ரூபத்தை புத்தி அடைவதற்காகவே ஆகும். அதைத்தவிர வேறு பிரயோஜனத்தைக் கொள்வது உசிதமல்ல. ஆகையால் உத்பத்தி முதலியவைகளுக்குக் காரணமான பேதம் சிறிதும் இல்லை என்பதாகும்.
यदि हि पर एवात्मा नित्यशुद्धबुद्धमुक्तस्वभाव एकः परमार्थतः सन् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । २) इत्यादिश्रुतिभ्यः, असदन्यत् , किमर्थेयमुपासनोपदिष्टा ‘आत्मा वा अरे द्रष्टव्यः’ (बृ. उ. २ । ४ । ५) ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) ‘स क्रतुं कुर्वीत’ (छा. उ. ३ । १४ । १) ‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इत्यादिश्रुतिभ्यः, कर्माणि चाग्निहोत्रादीनि ?
(ச.பா) (அ.கை) (சங்கை)- “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்= ஒன்றே அத்விதியம்) என்ற இந்த சுருதி வாக்கியத்தை அனுசரித்து பரமார்த்தமாய் (உண்மையில்) ஒன்றாய், நித்திய, சுத்த, புத்த, முக்தஸ்வபாவ பரமார்த்மாவே சத்தியம், மற்றவை எல்லாம் மித்தை என்று இவ்வாறு இருக்கும்பொழுது “आत्मा वा अरे द्रष्टव्यः” (ஆத்மாவா அரே திரஷ்ட்டவ்ய-: = ஆத்மா பார்க்கப்பட வேண்டியது) “य आत्माऽपहतपाप्मा” (ய ஆத்மா அபஹதபாப்மா (அந்த ஆத்மா பாபமற்றது) “स क्रतुं कुर्वीत” (ச க்ரதும்குர்வீத = அவன் (உபாசனாசம்பந்தி) கிரதுவை செய்யட்டும்) “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யே வோபாசீத) ஆத்மாவை இவ்வாறு உபாசனை செய்) என்று இவ்வாறு உபாசனை எதற்காக சுருதிகளில் உபதேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அக்னிஹோத்திராதி கர்மங்களும் ஏன் கூறப்பட்டுள்ளது.?
शृणु तत्र कारणम् ।
(ச.பா) (சமாதானம்) - அதற்கான காரணத்தைக்கேள்-
आश्रमास्त्रिविधा हीनमध्यमोत्कृष्टदृष्टयः ।
उपासनोपदिष्टेयं तदर्थमनुकम्पया ॥ १६ ॥
कारिका अन्वयः - हीनमध्यमोत्कृष्टदृष्टयः आश्रमाः त्रिविधाः तदर्थम् अनुकम्पया इयम् उपासना उपदिष्टा ।
காரிகா அர்த்தம் - ஆஸ்ரமம் மூன்று விதமாய் உள்ளது. அதாவது அதம, மத்யம, உத்கிருஷ்ட (உத்தம) என்று. அவர்களிடத்தில் உள்ள கருணையினால்
आश्रमाः आश्रमिणोऽधिकृताः, वर्णिनश्च मार्गगाः, आश्रमशब्दस्य प्रदर्शनार्थत्वात् , त्रिविधाः । कथम् ? हीनमध्यमोत्कृष्टदृष्टयः हीना निकृष्टा मध्यमा उत्कृष्टा च दृष्टिः दर्शनसामर्थ्यं येषां ते, मन्दमध्यमोत्तमबुद्धिसामर्थ्योपेता इत्यर्थः ।
(ச.பா) ஆஸ்ரமங்கள் அதாவது கர்மாதிகாரி ஆஸ்ரமி, அவ்வாறே சன்மார்கத்தில் உள்ள பிரஹ்மச்சாரி. “ஆஸ்ரமம்” என்ற சப்தம் அவற்றிற்கு உபலக்ஷணம் ஆகும். அவை மூன்று பிரகாரங்களாய் உள்ளன. எவ்வாறு எனில் ஹீன மத்தியம், உத்க்ருஷ்ட என்ற திருஷ்டி உடையதாய் உள்ளது. எவருடைய தர்சன சாமர்த்தியம் ஹீன மத்தியம், உத்கிருஷ்டமோ அதுவே மந்த, மத்தியம், உத்தம புத்தியின் சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது.
उपासना उपदिष्टा इयं तदर्थं मन्दमध्यमदृष्ट्याश्रमाद्यर्थं कर्माणि च । न चात्मैक एवाद्वितीय इति निश्चितोत्तमदृष्ट्यर्थम् । दयालुना देवेनानुकम्पया सन्मार्गगाः सन्तः कथमिमामुत्तमामेकत्वदृष्टिं प्राप्नुयुरिति, ‘यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यः ॥ १३ ॥
(ச.பா) அந்த மந்த, மத்யம திருஷ்டி உடைய ஆஸ்ரமிகளுக்காக இந்த உபாசனையும், கர்மத்தின் உபதேசமும் செய்யப்பட்டது, ஆத்மா ஒன்றே, அத்விதீயம் என்று நிச்சயம் உடைய உத்தம திருஷ்டி உடையவனுக்கு இந்த உபதேசம். தயாலுவான வேதமானது அந்த உத்தம சன்மார்க்கத்தில் செல்பவனுக்காக இவ்வாறு உபதேசம் செய்கிறது. “यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम्। तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யன்மனசா ந மனுதே யேனாஹுர்மனோ மதம். ததேவ பிரஹ்ம துவம் வித்தி நேதம் யதிதமுபாசதே = எது மனதால் நினைக்க முடியாதோ, எதனால் மனது செயல்படுகிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி, உம்மால் உபசிக்கக்கூடியது பிரஹ்மமாகாது) “तत्त्वमसि” (தத்துவமஸி = நீ அதுவாய் இருக்கிறாய்) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = இது எல்லாம் ஆத்மாவே) முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
शास्त्रोपपत्तिभ्यामवधारितत्वादद्वयात्मदर्शनं सम्यग्दर्शनम् , तद्बाह्यत्वान्मिथ्यादर्शनमन्यत् । इतश्च मिथ्यादर्शनं द्वैतिनां रागद्वेषादिदोषास्पदत्वात् । कथम् ?
(ச.பா) (அ.கை) சாஸ்த்ர யுக்தியுடன் நிச்சயிக்கப்பட்ட காரணத்தால் அத்வய ஆத்மதர்சனமே சம்யக் தர்சனமாகிறது. அதனின்று வெளிவந்த காரணத்தினால் எல்லா தர்சனங்களும் மித்யாவாகின்றன. ஏனெனில் த்வைதிகளின் மித்யாதர்சனம் ராகத்வேஷங்களுக்கு ஆஸ்ரயமாயிருக்கின்றன. எவ்வாறு? (எனில் கூறுகிறார்).
स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनो निश्चिता दृढम् ।
परस्परं विरुध्यन्ते तैरयं न विरुध्यते ॥ १७ ॥
कारिका अन्वयः - स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनः दृढम् निश्चिताः परस्परं विरुध्यन्ते तै अयं न विरुध्यते ।
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் தங்கள் தங்கள் சித்தாந்தங்களில் திடமான ஆக்கிரஹத்துடன் இருப்பதால் தங்களுக்கு விரோதம் உண்டாகிறது. ஆனால் இவர்களுக்கு
स्वसिद्धान्तव्यवस्थासु स्वसिद्धान्तरचनानियमेषु कपिलकणादबुद्धार्हतादिदृष्ट्यनुसारिणो द्वैतिनो निश्चिताः, एवमेवैष परमार्थो नान्यथेति, तत्र तत्रानुरक्ताः प्रतिपक्षं चात्मनः पश्यन्तस्तं द्विषन्त इत्येवं रागद्वेषोपेताः स्वसिद्धान्तदर्शननिमित्तमेव परस्परम् अन्योन्यं विरुध्यन्ते ।
(ச.பா) சுவ சித்தாந்த அதாவது தங்கள் தங்கள் கொள்கைகளை வரையறுப்பதிலும், கபில, கணாத, புத்த, ஜைமினி மதக்கொள்கைகளையும் உடைய த்வைதிகள் வலுவான தீர்மானமும். அசைக்க முடியாத நம்பிக்கையும் உடையவர்கள், எனவே தங்கள், தங்கள் கொள்கையில் இதுவே உண்மை, இதற்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை என்ற ஈடுபாடும் அதற்கு முரண்பாடானவைகளில் த்வேஷமும் கொண்டவர்கள்.
तैरन्योन्यविरोधिभिरस्मदीयोऽयं वैदिकः सर्वानन्यत्वादात्मैकत्वदर्शनपक्षो न विरुध्यते, यथा स्वहस्तपादादिभिः । एवं रागद्वेषादिदोषानास्पदत्वादात्मैकत्वबुद्धिरेव सम्यग्दर्शनमित्यभिप्रायः ॥
(ச.பா) அவர்கள் ஒருவருக்கு ஒருவர்கொள்கை முரண்பாடு காரணமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த பரஸ்பர விரோதிகளுடன் நமது வைதிக சித்தாந்தத்தம் விரோதமல்ல. எவ்வாறு எனில் தன்னுடைய கை. கால்களுக்குள் விரோதம் இல்லாதது போல் ஆகும். இவ்வாறு ராகதுவேஷங்களை ஆஸ்ரியக்காததினால் ஆத்ம ஏகத்துவ புத்தியே சம்யக் திருஷ்டி என்பது இதன் தாத்பர்யம்.
केन हेतुना तैर्न विरुध्यत इत्युच्यते —
(ச.பா) (அ.கை) எந்தக் காரணத்தால் அவர்கள் இடத்தில் விரோதம் இல்லை என்பதைக் குறித்துக் கூறுகிறார்-
अद्वैतं परमार्थो हि द्वैतं तद्भेद उच्यते ।
तेषामुभयथा द्वैतं तेनायं न विरुध्यते ॥ १८ ॥
कारिका अन्वयः - अद्वैतं परमार्थः हि द्वैतं तत् भेदः उच्यते तेषाम् उभयता द्वैतं तेन अयं न विरुध्यते ।
காரிகா அர்த்தம் - அத்வைதம் பரமார்த்தம் துவைதம் அதன் பேதம் (காரியம்) என்று சொல்லப்படுகிறது. அவ்வாறே அந்த (துவைதவாதி) மதத்தில் (பரமார்த்தம், அபரமார்த்தம்) இரண்டு விதமாய் துவைதம். ஆகையால் அவர்களுக்கு விரோதம் இல்லை
अद्वैतं परमार्थः, हि यस्मात् द्वैतं नानात्वं तस्याद्वैतस्य भेदः तद्भेदः, तस्य कार्यमित्यर्थः, ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इति श्रुतेः ; उपपत्तेश्च, स्वचित्तस्पन्दनाभावे समाधौ मूर्छायां सुषुप्तौ वा अभावात् । अतः तद्भेद उच्यते द्वैतम् ।
(ச.பா) அத்வைதக் கொள்கை வாஸ்தவமான உண்மை, ஏனெனில் த்வைதவாதமான நானாத்வவாதம் அந்த அத்வைதத்தின் பேதம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அத்வைதத்தின் காரியம் என்பது பொருள். அது “एकमेवाद्वितीयम्” (அந்த ஒன்றே இரண்டாவது போல் காக்ஷி அளிக்கிறது) “तत्तेजोऽसृजत” (அது தேஜசைப் படைத்தது) என்ற வேத வாக்கியங்களின் உபபத்தியால் அவ்வாறு கூறப்பட்டது. மேலும் தன்னுடைய சித்தத்தின் ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத போதும் சுஷுப்தியிலும், அந்த த்வைதரூபமான நாநாத்துவம் ஏற்படாமையால் த்வைதம் அத்வைதத்தின் பேதம் எனக்கூறப்பட்டது.
द्वैतिनां तु तेषां परमार्थतोऽपरमार्थतश्च उभयथापि द्वैतमेव ; यदि च तेषां भ्रान्तानां द्वैतदृष्टिः अस्माकमद्वैतदृष्टिरभ्रान्तानाम् , तेनायं हेतुना अस्मत्पक्षो न विरुध्यते तैः, ‘इन्द्रो मायाभिः’ (बृ. उ. २ । ५ । १९) ‘न तु तद्द्वितीयमस्ति’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।
(ச.பா) அந்த நானாத்துவவாதிகளான த்வைதிகளுக்கு இரண்டு வழியிலும் அதாவது உண்மையிலும். பொய்யிலும் இரண்டே. அம்மாதிரி பிராந்தர்களுக்கு எப்பொழுதும், எதுவுமே இரண்டுதான். ஆனால் நமக்கோ எப்பொழுதும் ஒன்றே. அதாவது நமக்கு பிராந்தி இல்லாததினால் இந்த அத்வைத தர்சனம் (அவர்களுடன்) விரோதம் இருப்பது இல்லை. மேலும் “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரோ மாயாபி: புருரூப ஈயதே = இந்திரன் மாயையால் அநேக ரூபத்தை தரிக்கிறான்) “न तु तद्द्वितीयमस्ति” (ந து தத்த்விதீயமஸ்தி= அதைக் காட்டிலும் வேறான இரண்டாவது இல்லை) என்ற சுருதி வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.
यथा मत्तगजारूढः उन्मत्तं भूमिष्ठम् ‘प्रतिगजारूढोऽहं गजं वाहय मां प्रति’ इति ब्रुवाणमपि तं प्रति न वाहयत्यविरोधबुद्ध्या, तद्वत् । ततः परमार्थतो ब्रह्मविदात्मैव द्वैतिनाम् । तेनायं हेतुना अस्मत्पक्षो न विरुध्यते तैः ॥
(ச.பா) எவ்வாறு மதயானையில் ஏறிக்கொண்ட பைத்தியக்காரன், நான் யானை மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன் எங்கே என் மேல் யானையை யேற்று என்று மற்றொரு யானைப் பாகனைப் பார்த்துச் சொன்னால் அந்தப் பைத்தியக்காரனின் சொல்லை மற்றவன் எப்படி பொருள்படுத்த மாட்டானோ நாம் அது போல் இந்த உன்மத்தர்கள் என த்வைதிகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆதலால் பரமார்த்தமான பிரஹ்ம ஸ்வரூபத்தை அறிந்த நமக்கு அந்த த்வைதிகளும் ஆத்ம ஸ்வரூபமே. ஆதலால் நாம் அவர்களை துவேஷிப்பதில்லை.
द्वैतमद्वैतभेद इत्युक्ते द्वैतमप्यद्वैतवत्परमार्थसदिति स्यात्कस्यचिदाशङ्केत्यत आह —
(ச.பா) (அ.கை) துவைதம் அத்வைதத்தின் பேதம் என்று கூறும் பொழுது சிலருக்கு இவ்வாறு சந்தேஹம் ஏற்படலாம். அது என்ன வெனில் அத்வைதம் போல் துவைதமும் பரமார்த்த சத் என்று ஏற்படும் பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.
मायया भिद्यते ह्येतन्नान्यथाजं कथञ्चन ।
तत्त्वतो भिद्यमाने हि मर्त्यताममृतं व्रजेत् ॥ १९ ॥
कारिका अन्वयः - हि एतत् मायया भिद्यते अजं कथञ्चन न अन्यथा तत्वतः भिद्यमाने हि अमृतं मर्त्यतां व्रजेत्।
காரிகா அர்த்தம் - இந்த அஜன்மா அத்வைதத்தில் மாயையின் காரணமாய் பேதம் இருக்கிறது, வேறு எந்த வகையாலும் இல்லை. உண்மையில் பேதம் இருந்தால் அம்ருதம் மரண தர்மத்தை அடையும்.
यत्परमार्थसदद्वैतम् , मायया भिद्यते ह्येतत् तैमिरिकानेकचन्द्रवत् रज्जुः सर्पधारादिभिर्भेदैरिव ; न परमार्थतः, निरवयवत्वादात्मनः । सावयवं ह्यवयवान्यथात्वेन भिद्यते, यथा मृत् घटादिभेदैः । तस्मान्निरवयवमजं नान्यथा कथञ्चन, केनचिदपि प्रकारेण न भिद्यत इत्यभिप्रायः ।
(ச.பா) ஏனெனில் எந்த பரமார்த்த சத்தாயுள்ள அத்வைத ஸ்வரூபமே மாயையால் கண் நோய் வந்தவனுக்கு ஒரே சந்திரன் பல சந்திரன்களாகவும் காட்சி அளிப்பது போலவும், இருட்டில் ரஜ்ஜுவில் சர்ப்பம், ஜல தாரையைப் பார்ப்பது போலவும் இந்த பேதமானது மாயையால் தோன்றுகிறது. இந்தபேதம் பிரமரூபமானது. உண்மையானது அல்ல. அவயவத்துடன் கூடிய வஸ்துவே மண்ணில் குடம் போல் வேறுபடும். பிரஹ்மமோ நிரவயவமானது. எனவே அது ஒரு போதும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை.
तत्त्वतो भिद्यमानं हि अमृतमजमद्वयं स्वभावतः सत् मर्त्यतां व्रजेत् , यथा अग्निः शीतताम् । तच्चानिष्टं स्वभाववैपरीत्यगमनम् , सर्वप्रमाणविरोधात् । अजमद्वयमात्मतत्त्वं माययैव भिद्यते, न परमार्थतः । तस्मान्न परमार्थसद्द्वैतम् ॥
(ச.பா) ஜன்மரகிதமான ஆத்மா எந்த விதத்திலும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை. உண்மையாக அந்தப் பரம்பொருள் மாறுபடுமேயானால் அக்னி குளிர்ச்சி பாவத்தைப் பெறுவதுபோல ஆத்மா தன் ஸ்வபாவத்திலிருந்து விபரீத நிலையை அடைவது எல்லா ப்ரமாணங்களுக்கும் விரோதம் ஏற்படும் காரணத்தினால் ஒருவருக்கும் அது இஷ்டமானதல்ல. ஆகவே அம்ருதமாயும், அஜன்மமாயும், அத்வீதயமாயுமுள்ள ஆத்மா மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும். அந்த ஆத்மா மாயையாலேயே பேதத்தை அடைகிறது உண்மையில் அல்ல. ஆகையால் த்வைதம் பரமார்த்த சத் அல்ல.
अजातस्यैव भावस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो भावो मर्त्यतां कथमेष्यति ॥ २० ॥
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव भावस्य जातिम् इच्छन्ति हि अजातः अमृतो भावः कथं मर्त्यतां एष्यति ।
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் ஜன்மம் அற்ற ஆத்மாவிற்கு ஜன்மத்தை விரும்புகிறார்கள். எந்த பதார்த்தமானது நிச்சயமாக பிறப்பற்றதும், மரணமற்றதுமாய் உள்ளதோ அது மரண தர்மத்தை எவ்வாறு அடையும்?
ये तु पुनः केचिदुपनिषद्व्याख्यातारो ब्रह्मवादिनो वावदूकाः अजातस्यैव आत्मतत्त्वस्यामृतस्य स्वभावतो जातिम् उत्पत्तिम् इच्छन्ति परमार्थत एव, तेषां जातं चेत् , तदेव मर्त्यतामेष्यत्यवश्यम् । स च अजातो ह्यमृतो भावः स्वभावतः सन्नात्मा कथं मर्त्यतामेष्यति ? न कथञ्चन मर्त्यत्वं स्वभाववैपरीत्यमेष्यतीत्यर्थः ॥
(ச.பா) பிரஹ்மவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதும், பிறப்பு இல்லாததாலேயே இறப்பற்றதுமான ஆத்மபாவத்திற்கு உத்பத்தியை விரும்புகிறார்கள் உண்மையில் உண்டானவையே மரணத்தை அடையும், உண்டாகாதது எவ்வாறு மரணத்தை அடையும்? ஏனெனில் பிறப்பற்ற ஸ்வபாவ, நித்தியமாய் உள்ள ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும் ஆதலால் அந்த வாதிகளின் வாதம் சரியானது அல்ல.
यस्मान्न
(ச.பா) (அ.கை) ஏனெனில் -
न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २१ ॥
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - மரணமற்ற வஸ்து ஒருபொழுதும் மரணமுடையதாக ஆகாது மரண முடைய வஸ்து ஒருநாளும் மரணமற்றதாக ஆகாது எவ்விதமாகவும் ஸ்வபாவமானது மாறுபாடு உடையதாக ஆகாது.
न भवति अमृतं मर्त्यं लोके नापि मर्त्यममृतं तथा, ततः प्रकृतेः स्वभावस्य अन्यथाभावः स्वतः प्रच्युतिः न कथञ्चिद्भविष्यति, अग्नेरिवौष्ण्यस्य ॥ २१ ॥
(ச.பா) எவ்வாறு அம்ருத ஸ்வரூபமான ஆத்மா மரண தர்மத்தோடு கூடியதாக இருக்காதோ அவ்வாறே மரண ஸ்வபாவமுள்ளது மரணமற்ற ஸ்வபாவமுடையதாக ஆகாது. அதனதன் இயற்கைத்தன்மைக்கு மாறுபாடான தன்மை எப்படியும், ஒரு போதும் உண்டாகப் போவது இல்லை, அக்னியின் உஷ்ண ஸ்வபாவம் போல் அதனதன் இயற்கை ஸ்வபாவம் ஒரு போதும், எக்காரணத்தாலும் எப்படியும் மாறுபாட்டை அடையாது. அது போல் ஆத்மாவும் ஒருபோதும் மாறுபடுவது இல்லை.
स्वभावेनामृतो यस्य भावो गच्छति मर्त्यताम् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ २२ ॥
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति तस्य कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ॥ २२ ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் மரணமற்ற பதார்த்தம் மரணத்தை அடைகிறதோ அவர்களுடைய சித்தாந்தத்தின்படி ஜன்மம் எடுத்ததன் காரணமாய் அம்ருத (மரணமற்ற) பதார்த்தம் எவ்வாறு ஸ்திரமானதாய் இருக்கும்?
यस्य पुनर्वादिनः स्वभावेन अमृतो भावः मर्त्यतां गच्छति परमार्थतो जायते, तस्य प्रागुत्पत्तेः स भावः स्वभावतोऽमृत इति प्रतिज्ञा मृषैव । कथं तर्हि ? कृतकेनामृतः तस्य स्वभावः । कृतकेनामृतः स कथं स्थास्यति निश्चलः ? अमृतस्वभावतया न कथञ्चित्स्थास्यति । आत्मजातिवादिनः सर्वथा अजं नाम नास्त्येव । सर्वमेतन्मर्त्यम् ; अतः अनिर्मोक्षप्रसङ्ग इत्यभिप्रायः ॥ २२ ॥
(ச.பா) எந்த வாதியினுடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரணமற்ற பதார்த்தம் மரண தர்மத்தை அடைகிறதோ அதாவது உண்மையில் (பரமார்த்தமாய்) ஜன்மத்தை எடுக்கிறது. அதன் பிரதிக்ஞையின் உத்பத்திக்கு முன்பே அந்த பதார்த்தம் ஸ்வபாவமாகவே அமரணதர்மமுடையது. அது மித்தியா. ஆனால் ஜன்மம் உண்டாவதின் காரணமாய் அதன் ஸ்வபாவமாக அமரத்துவம் எவ்வாறு பொருந்தும். மேலும் இவ்வாறு ஜன்மம் உண்டாவதால் அந்த அம்ருதத்துவ பதார்த்தம் நிச்சலமானதாயும், அம்ருதத்துவ பாவம் உடையதாயும் எவ்வாறு ஆக முடியும்? அதாவது ஒரு நாளும் ஆக முடியாது என்பதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு ஜன்மத்தைக் கூறும் மதத்தில் அஜன்ம வஸ்து என்பது இல்லை. ஆகையால் எல்லாம் மரண தர்மத்தை உடையதாகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் அந்த மதத்தில் மோக்ஷம் என்பதே இல்லை என்பதாகும்.
नन्वजातिवादिनः सृष्टिप्रतिपादिका श्रुतिर्न सङ्गच्छते प्रामाण्यम् ।
(ச.பா) (அ.கை) (சங்கை) ஆனால் அஜாதிவாதிகளின் மதத்தில் சிருஷ்ட்டியை கூறும் சுருதியின் பிரமாணம் சித்திக்காது அல்லவா?
बाढम् ; विद्यते सृष्टिप्रतिपादिका श्रुतिः ; सा त्वन्यपरा, ‘उपायः सोऽवतारय’ (मा. का. ३ । १५) इत्यवोचाम । इदानीमुक्तेऽपि परिहारे पुनश्चोद्यपरिहारौ विवक्षितार्थं प्रति सृष्टिश्रुत्यक्षराणामानुलोम्यविरोधशङ्कामात्रपरिहारार्थौ ।
(ச.பா) (சமாதானம்) ஆம் சரிதான். சிருஷ்டியை பிரதி பாதனம் செய்யும் சுருதியும் உள்ளது. ஆனால் அதன் உத்தேசம் வேறு. அதை தாண்டுவதற்கான உபாயம் என்று முன்பே அதன் உத்தேசம் கூறப்பட்டுவிட்டது. இவ்வாறு முன்பே இந்த சங்கைக்கு சமாதானம் கூறப்பட்டாலும் “சிருஷ்டி சுருதியின் அக்ஷரங்களின் அனுகூலமானது, நாம் விளக்கப்போகும் அர்த்தத்திற்கு விரோதமானது” என்ற இந்த சங்கையை நீக்குவதற்காக இப்பொழுது அதன் சம்பந்தமான சங்கை மேலும் சமாதானமும் மறுபடியும் காண்பிக்கப்படுகிறது.
भूततोऽभूततो वापि सृज्यमाने समा श्रुतिः ।
निश्चितं युक्तियुक्तं च यत्तद्भवति नेतरत् ॥ २३ ॥
कारिका अन्वयः - भूततः अभूततः सृज्यमाने (वस्तुनि) श्रुतिः समा यत् युक्तियुक्तं तत् निश्चितं भवति इतरत् न ।
காரிகா அர்த்தம் - சிருஷ்டி பரமார்த்தமாகவோ, அபரமார்த்தமாகவோ எந்த விதமாய் இருந்தாலும் சுருதி சமானமாகவே இருக்கிறது. ஆகையால் அவைகளில் நிச்சயமானதும் யுக்தியுடன் கூடியதும் சுருதியின் அபிப்ராயம் ஆகும். வேறு விதமாக அல்ல.
भूततः परमार्थतः सृज्यमाने वस्तुनि, अभूततः मायया वा मायाविनेव सृज्यमाने वस्तुनि समा तुल्या सृष्टिश्रुतिः । ननु गौणमुख्ययोर्मुख्ये शब्दार्थप्रतिपत्तिर्युक्ता ; न, अन्यथासृष्टेरप्रसिद्धत्वान्निष्प्रयोजनत्वाच्च इत्यवोचाम । अविद्यासृष्टिविषयैव सर्वा गौणी मुख्या च सृष्टिः, न परमार्थतः, ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः ।
(ச.பா) உண்மையாகவோ, பொய்யாகவோ, மாயையாகவோ அல்லது மாயாவி படைப்பது போலோ படைக்கப்படும் பொருள்களில் வேதம் (வேத வாக்கியங்கள்) படைப்பு விஷயத்தில் ஒரே சமமானது. அந்த வேதவாக்கியங்கள் அன்யபரமானவை. கௌணம் முக்கியங்கள் இரண்டும் வருமிடத்து முக்கியமே ஏற்கத்தக்கதாகும். எனவேதான் முன்பே இவ்விஷயத்தில் “उपायः सोवताराय” என்ற இடத்தில் இவைகளின் படைப்பை விளக்குவதற்காக கூறினோம். (அது போதாது என்று மேலும் சந்தேஹத்தைக் கிளப்பினால் இந்நிலையில் எது (எந்த வாதம்) யுக்தியுடன் கூடியதோ அந்த வாதம் நிச்சயிக்கப்பட்டதாக, கொள்ளப்பட்டதாக ஆகிறது. மற்றையது அதாவது யுக்தியினால் சாதிக்க முடியாதது கொள்ளப்பட்டதாக ஆவது இல்லை. படைப்பை பற்றிய வேத வாக்கியங்கள் பரிணாம வாதத்திற்கும் விவர்த்தவாதத்திற்கும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. அவைகளில் யுக்தி காரணமாய் (யுக்தியின் பலத்தால்) அத்வைத பரமான விவர்த்தவாதமே ஏற்கத்தக்கது. அதாவது சிருஷ்டி பரமான வேதவாக்கியங்களைப் பொருள்படுத்துவதில் விவர்த்த வாதமே யுக்தி பலத்துடனிருப்பதால் (அதனால் கிடைக்கும்) அத்வைதக் கொள்கையே ஏற்கதக்கது. மேலும் ஆத்மாதான் காரிய ரூபமான பிரபஞ்சமாகவும் ஆயிற்று என்று பொருள் கொள்ளக்கூடிய வேத வாக்கியங்களும் இருக்கின்றன என்பதை ஏற்றேகூறுகிறார்). அவைகள் பொய்யான ஸ்ருஷ்ட்டியைப் பற்றி கூறுகின்றனவேயன்றி அந்தக் காரிய ரூபமான சிருஷ்ட்டிகள் உண்மையானவை அல்ல என்பது கருத்து. “सबाह्याभ्यन्तरो हि ह्यजः” உள்ளும் புறமும் அந்தப் பிறப்பற்றவனே உள்ளான் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன.
तस्मात् श्रुत्या निश्चितं यत् एकमेवाद्वितीयमजममृतमिति, युक्तियुक्तं च युक्त्या च सम्पन्नम् , तदेवेत्यवोचाम पूर्वैर्ग्रन्थैः ; तदेव श्रुत्यर्थो भवति, नेतरत्कदाचिदपि क्वचिदपि ॥ २३ ॥
(ச.பா) அதனாலேயே வேதங்களால், தனக்கிரண்டாவதற்றதாயும் பிறப்பற்றதாயும், என்றும் உள்ளதாயும், உள்ள ஒன்றே உள்ளது என்று யுக்தியால் நிச்சயிக்கப்பட்டது. அதுவே வேதார்த்தமாகும்.
कथं श्रुतिनिश्चय इत्याह —
(ச.பா) (அ.கை) அந்த சுருதி நிச்சயம் எவ்வாறு? என்பதைக் கூறுகிறார்-
नेह नानेति चाम्नायादिन्द्रो मायाभिरित्यपि ।
अजायमानो बहुधा जायते मायया तु सः ॥ २४ ॥
कारिका अन्वयः - नेह नानेति च इन्द्रो मायाभिः इत्यपि अजायमानो बहुधा विजायते आम्नायात् मायया तु सः ।
காரிகா அர்த்தம் - “नेह नानेति किञ्चन” (இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனாகிறான்) “अजायमानो बहुधाविजायते” (பிறப்பற்றவனாய் இருந்தாலும். அநேகமாய் உண்டாகிறான்) என்ற சுருதி வாக்கியங்களை அனுசரித்து பரமாத்மா மாயையால் அநேக ரூபங்களை எடுக்கிறான்.
यदि हि भूतत एव सृष्टिः स्यात् , ततः सत्यमेव नानावस्त्विति तदभावप्रदर्शनार्थ आम्नायो न स्यात् ; अस्ति च ‘नेह नानास्ति किञ्चन’ (क. उ. २ । १ । ११) इत्याम्नायो द्वैतभावप्रतिषेधार्थः ; तस्मादात्मैकत्वप्रतिपत्त्यर्था कल्पिता सृष्टिरभूतैव प्राणसंवादवत् । ‘इन्द्रो मायाभिः’ (बृ. उ. २ । ५ । १९) इत्यभूतार्थप्रतिपादकेन मायाशब्देन व्यपदेशात् ।
(ச.பா) - உண்மையில் சிருஷ்டி ஏற்பட்டு நாநா வஸ்துக்களும் சத்தியம் என்ற நிலை இருக்கும் பொழுது அவைகளின் அபாவத்தை தெரிவிப்பதற்காக ஒரு சாஸ்திர வசனமும் தேவையில்லை. ஆனால் த்வைத பாவத்தை நிஷேதம் செய்வதற்காக இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை முதலிய சாஸ்திர வசனங்கள் உள்ளன. ஆகையால் பிராண சம்வாதனையைப் போல் ஆத்ம ஏகத்துவத்தின் அடைவின் பொருட்டு கல்பிக்கப்பட்ட சிருஷ்டி பொய்யானதாகும். ஏனெனில் இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனான் என்றசுருதியினால் சிருஷ்டியினை பொய் என்பதைக் பிரதிபாதனம் செய்வதற்காக “மாயா” சப்தம் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது.
ननु प्रज्ञावचनो मायाशब्दः ।
(ச.பா) (சங்கை) - ஆனால் மாயா சப்தமானது பிரக்ஞா வசனமாகும்-
सत्यम् , इन्द्रियप्रज्ञाया अविद्यामयत्वेन मायात्वाभ्युपगमाददोषः । मायाभिः इन्द्रियप्रज्ञाभिरविद्यारूपाभिरित्यर्थः । ‘अजायमानो बहुधा विजायते’ (तै. आ. ३ । १३) इति श्रुतेः । तस्मात् जायते मायया तु सः ; तु —शब्दोऽवधारणार्थः माययैवेति । न ह्यजायमानत्वं बहुधाजन्म च एकत्र सम्भवति, अग्नाविव शैत्यमौष्ण्यं च ।
(ச.பா) (சமாதானம்) - நீ கூறுவது சரியே. இருப்பு இன்மையின் காரணமாய் இந்திரிய பிரக்ஞையானது மாயாத்துவம் என கருதப்படுகிறது. அதனால் தோஷம் ஒன்றும் இல்லை. ஆகையால் மாயையினால் அதாவது அவித்தியா ரூபமான இந்திரிய பிரக்ஞையினால் எவ்வாறு “अजायमानो बहुधाविजायते” (அஜாயமானோ பஹுதா விஜாயதே = பிறப்பற்றவன் பலவாறாக ஆகிறான்) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. ஆகையால் மாயையால் உத்பன்னமாகிறது. तु (து) சப்தமானது நிச்சயார்த்தமாகும். அதாவது அக்கினியில் சீதளமும் உஷ்ணமும் சேர்ந்து அமையாது. அது போல் பிறப்பின்மையும் பலவாராய் பிறத்தலும் ஓர் இடத்தில் அமையாது.
फलवत्त्वाच्चात्मैकत्वदर्शनमेव श्रुतिनिश्चितोऽर्थः, ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इत्यादिमन्त्रवर्णात् ‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । ४ । १०) इति निन्दितत्वाच्च सृष्ट्यादिभेददृष्टेः ॥ २४ ॥
(ச.பா) ஏகாத்ம தர்சனத்திற்கு பலரூபமாய் (பிரயோஜனமாய்) “तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ க சோக ஏகத்துவம் அனுபச்யத: = ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?) என்பன போன்ற சுருதி வாக்கியங்கள் அமைந்துள்ளன. நானாத்துவ தர்சனமோ “मृत्योः स मृत्युमाप्नोति” (ம்ருத்யோ ச ம்ருத்யுமாப்னோதி = அவன் மிருத்யுவிலிருந்து ம்ருத்யுவை அடைகின்றான்) என்பது போன்ற பல வேதவாக்கியங்களால் நிந்திக்கப்பட்டுள்ளதும் உணரத்தக்கதாகும். எனவே யுக்தியுக்தமான விவர்த்தவாதத்தின் பலனான அத்வைதக் கொள்கையே வேதார்த்தமாகும்.
सम्भूतेरपवादाच्च सम्भवः प्रतिषिध्यते ।
को न्वेनं जनयेदिति कारणं प्रतिषिध्यते ॥ २५ ॥
कारिका अन्वयः - सम्भूूूतेः अपवादात् सम्भव प्रतिषिध्यते एवं कोनु एनं जनयेत् इति कारणं प्रतिषिध्यते ।
காரிகா அர்த்தம் - சுருதியில் சம்பூதியை (ஹிரண்ய கர்பனை) நிந்தை செய்வதின் வாயிலாய் காரிய வர்க்கம் நிந்திக்கப்பட்டதாகிறது. எவன் உண்டாக்குவான் என்ற வாக்கியத்தால் காரணம் நிஷேதிக்கப்படுகிறது.
‘अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते’ (ई. मा. ९) इति सम्भूतेरुपास्यत्वापवादात्सम्भवः प्रतिषिध्यते ; न हि परमार्थसद्भूतायां सम्भूतौ तदपवाद उपपद्यते ।
(ச.பா) “अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே சம்பூதிமுபாசதே = எவர்கள் சம்பூதியை (ஹிரண்யகர்பனை) உபாசிக்கிறார்களோ அவர்கள் கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) இவ்வாறு சுருதி சம்பூதி உபாசனையை நிந்தையின் காரணமாய் காரிய வர்க்கங்கள் தள்ளப்பட்டது. சம்பூதியானது பரமார்த்த ஸ்வரூபமாய் இருந்தால் இவ்வாறு அதன் நிந்தை சம்பவிக்காது.
ननु विनाशेन सम्भूतेः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः, यथा ‘अन्धं तमः प्रविशन्ति येऽविद्यामुपासते’ (ई. मा. १२) इति ।
(ச.பா) சங்கை - எது சம்பூதி உபாசனையின் நிந்தை செய்யப்பட்டதோ அது விநாசத்துடன் அதாவது கர்மத்துடன் சேர்ந்து சம்பூதியின் சமுச்சய விதானத்தின் பொருட்டாகும். எவ்வாறு “अन्धं तमः प्रविशन्ति येऽविद्या-मुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே அவித்யாமுபாசதே = அவித்யையை உபாசனை செய்து கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) என்ற வாக்கியத்தால் சித்திக்கிறது.
सत्यमेव, देवतादर्शनस्य सम्भूतिविषयस्य विनाशशब्दवाच्यस्य च कर्मणः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः ; तथापि विनाशाख्यस्य कर्मणः स्वाभाविकाज्ञानप्रवृत्तिरूपस्य मृत्योरतितरणार्थत्ववत् देवतादर्शनकर्मसमुच्चयस्य पुरुषसंस्कारार्थस्य कर्मफलरागप्रवृत्तिरूपस्य साध्यसाधनैषणाद्वयलक्षणस्य मृत्योरतितरणार्थत्वम् । एवं ह्येषणाद्वयरूपान्मृत्योरशुद्धेर्वियुक्तः पुरुषः संस्कृतः स्यात् । अतो मृत्योरतितरणार्था देवतादर्शनकर्मसमुच्चयलक्षणा ह्यविद्या ।
(ச.பா) சமாதானம் - எது சமுச்சயமே ஆகும். சம்பூதி விஷயமான தேவதாதர்சனமும். வினாச (विनाश) சப்த வாச்சியமாகிய கர்மத்தின் சமுச்சய விதானம் செய்வதற்காக சம்பூதியின் அபவாதம் செய்யப்பட்டது. அப்படி இருந்தபோதிலும் எவ்வாறு விநாசம் (विनाशम्) எனப்படும். கர்மம் ஸ்வபாவமாய் அக்ஞானத்தால் உண்டான பிரவிர்த்தி ரூப மிருத்யுவை தாண்டுவதற்காகவே. அவ்வாறு புருஷனுடைய சம்ஸ்காரத்திற்காக விதிக்கப்பட்ட தேவதா தர்சனமும், கர்ம இவைகளின் சமுச்சய பலத்தின் ராகம் உண்டாகக் கூடிய பிரவிர்த்தி ரூப எந்த சாத்திய சாதன லக்ஷணமாகிய இரண்டு பிரகார வாசனாமயமான மிருத்தியு இருக்கிறதோ அதைத்தாண்டுவதற்கு ஆகும். இவ்வாறு ஏஷணாத்துவய ரூப மிருத்யுவின் அசுத்தியிலிருந்து விடுப்பட்ட புருஷனே சம்ஸ்கார சம்பன்னனாகிறான். ஆகையால் தேவதா தர்சனமும் கர்ம சமுச்சய லக்ஷணமான அவித்தியா மிருத்யுவிலிருந்து தாண்டுவதற்காக ஆகும்.
एवमेव एषणाद्वयलक्षणाविद्याया मृत्योरतितीर्णस्य विरक्तस्योपनिषच्छास्त्रार्थालोचनपरस्य नान्तरीयिका परमात्मैकत्वविद्योत्पत्तिरिति पूर्वभाविनीमविद्यामपेक्ष्य पश्चाद्भाविनी ब्रह्मविद्या अमृतत्वसाधना एकेन पुरुषेण सम्बध्यमाना अविद्यया समुच्चीयत इत्युच्यते । अतः अन्यार्थत्वादमृतत्वसाधनं ब्रह्मविद्यामपेक्ष्य, निन्दार्थ एव भवति सम्भूत्यपवादः यद्यप्यशुद्धिवियोगहेतुः अतन्निष्ठत्वात् । अत एव सम्भूतेरपवादात्सम्भूतेरापेक्षिकमेव सत्त्वमिति परमार्थसदात्मैकत्वमपेक्ष्य अमृताख्यः सम्भवः प्रतिषिध्यते ।
(ச.பா) இவ்வாறு ஏஷணாத்வய லக்ஷணமான அவித்தியாரூப மிருத்யுவை கடந்து அவ்வாறே உபநிஷத் சாஸ்த்திரத்தில் விசாரமுடைய விரக்த புருஷர்களுக்கு பிரஹ்மாத்மைக்கிய ரூபவித்தையின் உற்பத்தி தூரமாக இல்லை. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது முதலில் இருக்கும் அவித்தையை அபேக்ஷித்து பின்னால் அடையப்படும் பிரஹ்ம வித்தியா அது அம்ருதத்துவ சாதனமாகும். ஒரே புருஷனிடத்தில் சம்பந்தம் உள்ளதால் அவித்தையுடன் சமுச்சயம் உண்டாகிறது. ஆகையால் அம்ருதத்திற்கு சாக்ஷாத் சாதனமான பிரஹ்ம வித்தையின் அபேக்ஷை வேறு பிரயோஜன முடையதாய் இருப்பதால் சம்பூதியின் அபவாதமானது நிந்தையின் பொருட்டு செய்யப்பட்டது. அது அசுத்தத்தை நீக்குவதாய் இருப்பினும் மோக்ஷத்திற்கு சாக்ஷாத் ஹேது ஆகாததினால் சம்பூதி நிந்திக்கப்படுகிறது. சம்பூதிக்கு அபவாதம் ஏற்படுவதால் அதனுடைய சத்துவம் அபேக்ஷிகமாகும். ஆகையால் பரமார்த்த சத் ஆத்ம ஏகத்துவத்தை அபேக்ஷித்து அம்ருதம் எனப்படும் சம்பூதியானது நீக்கப்படுகிறது. (தள்ளப்படுகிறது)
एवं मायानिर्मितस्यैव जीवस्य अविद्यया प्रत्युपस्थापितस्य अविद्यानाशे स्वभावरूपत्वात्परमार्थतः को न्वेनं जनयेत् ? न हि रज्ज्वामविद्याध्यारोपितं सर्पं पुनर्विवेकतो नष्टं जनयेत्कश्चित् ; तथा न कश्चिदेनं जनयेदिति । को न्वित्याक्षेपार्थत्वात्कारणं प्रतिषिध्यते । अविद्योद्भूतस्य नष्टस्य जनयितृ कारणं न किञ्चिदस्तीत्यभिप्रायः ; ‘नायं कुतश्चिन्न बभूव कश्चित्’ (क. उ. १ । २ । १८) इति श्रुतेः ॥ २५ ॥
(ச.பா) அவித்தையினால் வசப்பட்ட மாயையினால் உண்டாக்கப்பட்ட ஜீவன் அவித்யைநாசம் அடைந்தவுடன் தன் ஸ்வரூபத்தில் நிலைத்திருக்கும் பொழுது பரமார்த்தமாய் அவனிடத்தில் என்ன உண்டுபண்ண முடியும்? ரஜ்ஜுவில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சர்ப்பமானது விவேகத்தால் நஷ்டமான பின் அதை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது. அவ்வாறே இங்கும் ஒன்றையும் உற்பத்தி செய்ய முடியாது. “को न्वेनम्” முதலியவை சுருதியின் ஆக்ஷபே அர்த்தத்துடன் கூடியது. கேள்வி அர்த்தத்தில் அல்ல. ஆகையால் இதனால் காரணமானது நிஷேதிக்கப்படுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்தையினால் உண்டானவை ஜீவனுடைய வித்யையினால் நாசம் அடைந்தபின் மறுபடியும் உண்டாக்குவது வேறு ஒரு காரணமும் இல்லை. “नायं कुतश्चिन्न बभूव कश्चित्” (நாயம் குதச்சித்ந பபூவ கச்சித் = அது ஒரு காரணத்தாலும் உண்டாகவில்லை) என்பது சுருதி வாக்கியம்.
स एष नेति नेतीति व्याख्यातं निह्नुते यतः ।
सर्वमग्राह्यभावेन हेतुनाजं प्रकाशते ॥ २६ ॥
कारिका अन्वयः - यतः व्याख्यातं सर्वं नेति नेतीति निह्नुते ततः अग्राह्यभावेन हेतुना सः एष अजं प्रकाशते ।
காரிகா அர்த்தம் - ஏனெனில் “स एष नेति नेति” என்பது முதலிய சுருதி ஆத்மாவை கிரஹிக்க முடியாத காரணத்தால் முன்பு கூறப்பட்ட எல்லா பாவங்களையும் நிஷேதம் செய்கிறது. ஆகையால் இந்த நிஷேத ரூப ஹேதுவினால் பிறப்பற்ற ஆத்மாவானது பிரகாசிக்கிறது.
सर्वविशेषप्रतिषेधेन ‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इति प्रतिपादितस्यात्मनो दुर्बोधत्वं मन्यमाना श्रुतिः पुनः पुनरुपायान्तरत्वेन तस्यैव प्रतिपिपादयिषया यद्यद्व्याख्यातं तत्सर्वं निह्नुते । ग्राह्यं जनिमद्बुद्धिविषयमपलपत्यर्थात् ‘स एष नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६), (बृ. उ. ४ । २ । ४), (बृ. उ. ४ । ४ । २२), (बृ. उ. ४ । ५ । १५) इत्यात्मनोऽदृश्यतां दर्शयन्ती श्रुतिः । उपायस्योपेयनिष्ठतामजानत उपायत्वेन व्याख्यातस्य उपेयवद्ग्राह्यता मा भूदिति अग्राह्यभावेन हेतुना कारणेन निह्नुत इत्यर्थः । ततश्चैवमुपायस्योपेयनिष्ठतामेव जानत उपेयस्य च नित्यैकरूपत्वमिति तस्य सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वं प्रकाशते स्वयमेव ॥ २६ ॥
(ச.பா) “अथात आदेशो नेति नेति” என்று இவ்வாறு எல்லா விசேஷணங்களையும் நீக்கி பிரதிபாதனம் செய்யப்பட்ட ஆத்மாவை அறிவதில் உள்ள மிகுந்த கடினத்தன்மையை சுருதியானது அடிக்கடி வேறு உபாயம் வாயிலாகவும் விளக்க இச்சை உடையதாய் முதலில் எந்த வியாக்கியானம் உள்ளதோ அதில் (ஆத்மாவைத் தவிர மற்ற) எல்லாவற்றின் அசத்தியத் துவத்தை விளக்குகிறது. கிரஹிக்கப்படும் புத்தியில் தோன்றும் விஷயங்களை நீக்குகிறது. அதாவது “स एष नेति नेति” (அது இது இல்லை இல்லை) என்று இவ்வாறு ஆத்மாவின் அதிருச்யத் தன்மையைக் காட்டும் சுருதி உபாயத்தின் உபேயநிஷ்டையை அறியாத லெளகிகர்களுக்கு உபாய ரூபமாய் கூறுவதற்கான விஷயம் உபேயத்தைப் போல் கிரஹிக்க முடியாது. ஆகையால் கிரஹிக்க முடியாத ஹேதுவினால் அதை நிஷேதம் செய்கிறது என்பது இதன் அபிப்பிராயம். அதன்பின் இவ்வாறு உபாயத்தின் உபேயநிஷ்ட்டாவை அறிந்தவனும், உபேயத்தின் நித்திய ஏக ஸ்வரூபத்தையும் அறிந்தவர்களாகிய புருஷர்களுக்கு வெளியிலும், உள்ளும் இருக்கும் அஜன்மாவாகிய ஆத்மதத்துவம் சுயமாகவே பிரகாசிக்கிறது.
एवं हि श्रुतिवाक्यशतैः सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वमद्वयं न ततोऽन्यदस्तीति निश्चितमेतत् । युक्त्या चाधुनैतदेव पुनर्निर्धार्यत इत्याह ।
(ச.பா) (அ.கை) இவ்வாறு நூ ற்றுக்கணக்கான வேத வாக்கியங்களால் வெளியிலும், உள்ளும் நிறைந்து இருக்கும் அஜன்மா ஆத்மதத்துவம் அத்விதீயமானது, அதைத் தவிர வேறு சிறிதும் இல்லை. இந்த விஷயத்தைக் குறித்து யுக்தியினால் நிச்சயம் செய்யப்படுகிறது. அதை கூறுகிறார்-
सतो हि मायया जन्म युज्यते न तु तत्त्वतः ।
तत्त्वतो जायते यस्य जातं तस्य हि जायते ॥ २७ ॥
कारिका अन्वयः - सतः मायया हि जन्म युज्यते तत्त्वतः तु न यस्य तत्त्वतः जायते तस्य जातं हि जायते ।
காரிகா அர்த்தம் - சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. எவர்களுடைய மதத்தில் ஜன்மமானது உண்மையில் ஏற்படுகிறதோ அவர்களின் சித்தாந்தப்படி உத்பத்தி ஆகும் தன்மை உள்ள வஸ்துவிற்கே ஜன்மம் ஏற்பட முடியும்.
तत्रैतत्स्यात् सदा अग्राह्यमेव चेदसदेवात्मतत्त्वमिति ; तन्न, कार्यग्रहणात् । यथा सतो मायाविनः मायया जन्म कार्यम् , एवं जगतो जन्म कार्यं गृह्यमाणं मायाविनमिव परमार्थसन्तमात्मानं जगज्जन्म मायास्पदमेव गमयति । यस्मात् सतो हि विद्यमानात्कारणात् मायानिर्मितस्य हस्त्यादिकार्यस्येव जगज्जन्म युज्यते, नासतः कारणात् । न तु तत्त्वत एव आत्मनो जन्म युज्यते ।
(ச.பா) - இந்த ஆத்மதத்துவ விஷயத்தில் இந்த சங்கை உண்டாகிறது. என்னவெனில் ஆத்மதத்துவம் எப்பொழுதும் கிரஹிக்க முடியாமையால் அது அசத் ஆகுமே. ஆனால் அவ்வாறு கூறுவது சரியல்லை. ஏனெனில் அதன் காரியம் காணப்படுகிறது. எவ்வாறு சத் ஸ்வரூப மாயாவியின் மாயையால் ஜன்மம் எடுத்தல் காரியமோ அவ்வாறு காணப்படும் ஜகத்தின் ஜன்மரூபகாரியம் ஜகத்ஜன்ம ரூபமாயையின் ஆஸ்ரிய பூதமான பரமார்த்த சத் மாயாவிக்கு சமமாய் ஆத்மாவின் போதத்தை செய்கிறது. ஏனெனில் மாயையினால் செய்யப்பட்ட யானை முதலிய காரியத்திற்கு சமானமான சத் அதாவது இருக்கின்ற காரணத்திலிருந்தே ஜகத்தின் ஜன்மம் சம்பவிக்கிறது. இல்லாத காரணத்திலிருந்து அல்ல. அவ்வாறு உண்மையில் ஆத்மாவிற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது.
अथवा, सतः विद्यमानस्य वस्तुनो रज्ज्वादेः सर्पादिवत् मायया जन्म युज्यते न तु तत्त्वतो यथा, तथा अग्राह्यस्यापि सत एवात्मनो रज्जुसर्पवज्जगद्रूपेण मायया जन्म युज्यते । न तु तत्त्वत एवाजस्यात्मनो जन्म ।
(ச.பா) அல்லது எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம் முதலியவைகள் போன்று சத், அதாவது இருக்கின்ற வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. அவ்வாறு அக்ராஹ்யமாய் (கிரஹிக்க முடியாததாய்) இருந்தாலும் சத் ஸ்வரூப ஆத்மா ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜகத்ரூபமாய் ஜன்மம் ஏற்படுவது மாயையினால் சம்பவிக்கிறது. அந்த அஜன்மாவான ஆத்மாவிற்கு உண்மையில் ஜன்மம் என்பது கிடையாது.
यस्य पुनः परमार्थसदजमात्मतत्त्वं जगद्रूपेण जायते वादिनः, न हि तस्य अजं जायत इति शक्यं वक्तुम् , विरोधात् । ततः तस्यार्थाज्जातं जायत इत्यापन्नम् । ततश्चानवस्थापाताज्जायमानत्वं न । तस्मादजमेकमेवात्मतत्त्वमिति सिद्धम् ॥
(ச.பா) எந்த வாதியின் மதத்தின்படி பரமார்த்த சத்தாகிய ஆத்ம தத்துவமே ஜகத்ரூபமாய் உத்பன்னமாகின்றது என்ற சித்தாந்தத்தை அனுசரித்து அஜன்ம வஸ்துவிற்கு ஜன்மம் உண்டாகிறது என்று கூறமுடியாது. ஏனெனில் இதனால் விரோதம் உண்டாகும். ஆகையால் அது சுவத சித்தமானது என்ற மதத்தின்படி ஜன்மசீலம் உடையதற்கே ஜன்மம் உண்டாகும். இவ்வாறு ஜன்மசீலத்தினாலேயே ஜன்மம் என்று எடுத்துக்கொண்டால் அநவஸ்தாதோஷம் ஏற்படும் ஆகையால் சித்தமாய் இருக்கின்ற ஆத்மதத்துவம் அஜன்மாவாயும் ஏகமாயும் இருக்கிறது.
असतो मायया जन्म तत्त्वतो नैव युज्यते ।
वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वापि जायते ॥ २८ ॥
कारिका अन्वयः - असतः मायया तत्वतः जन्म नैव युज्यते वन्ध्यापुत्रः तत्त्वेन मायायावापि न जायते ।
காரிகா அர்த்தம் - அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் எவ்விதமாகவும் சம்பவிக்காது, வந்தியாபுத்திரன் (மலடிமகன்) உண்மையாகவோ, மாயையினாலோ தோன்றுவது இல்லை.
असद्वादिनाम् असतो भावस्य मायया तत्त्वतो वा न कथञ्चन जन्म युज्यते, अदृष्टत्वात् । न हि वन्ध्यापुत्रो मायया तत्त्वतो वा जायते । तस्मादत्रासद्वादो दूरत एवानुपपन्न इत्यर्थः ॥ २८ ॥
(ச.பா) - அசத்வாதி பக்ஷத்தில் அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் வேறு எதனாலும் சம்பவிக்காது. வந்தியா புத்திரன் மாயையினாலோ, உண்மையிலோ பிறப்பதில்லை. ஆகையால் அசத்வாதம் எவ்விதத்தாலும் பொருந்தாது.
कथं पुनः सतो माययैव जन्मेत्युच्यते —
(ச.பா) (அ.கை) சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-
यथा स्वप्ने द्वयाभासं स्पन्दते मायया मनः ।
तथा जाग्रद्द्वयाभासं स्पन्दते मायया मनः ॥ २९ ॥
कारिका अन्वयः - यथा स्वप्ने मनः मायया द्वयाभासं स्पन्दते तथा जाग्रत् मायया मनः द्वयाभासं स्पन्दते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்ன காலத்தில் மனமானது மாயையால் த்வைத ஆபாசரூபமாய் விளங்குகிறது அவ்வாறு ஜாக்ரத் காலத்திலுமானது அந்த மாயையினால் த்வைத ஆபாச ரூபத்துடன் விளங்குகிறது.
यथा रज्ज्वां विकल्पितः सर्पो रज्जुरूपेणावेक्ष्यमाणः सन् , एवं मनः परमात्मविज्ञप्त्यात्मरूपेणावेक्ष्यमाणं सत् ग्राह्यग्राहकरूपेण द्वयाभासं स्पन्दते स्वप्ने मायया, रज्ज्वामिव सर्पः ; तथा तद्वदेव जाग्रत् जागरिते स्पन्दते मायया मनः, स्पन्दत इवेत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) - எவ்வாறு ரஜ்ஜுவில் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் ரஜ்ஜுரூபமாய் அறியப்பட்ட பின் சத்தாய் இருக்கிறதோ அவ்வாறு மனமானது பரமார்த்த ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமாய் அறியப்பட்டபின் அது சத்தேயாகும். அது ரஜ்ஜு சர்ப்பத்திற்குச் சமமாய் ஸ்வப்னாவஸ்த்தையில் மாயையினால் க்ராஹ்ய, க்ராஹக ரூப த்வைதத்தின் ஆபாச ரூபத்தால் விளங்குகிறது. இவ்வாறு மனம்தான் ஜாக்ரத் அவஸ்தையில் மாயையினால் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது விளங்குகிறது அல்லது அறியப்படுகிறது என்பது பொருள்.
अद्वयं च द्वयाभासं मनः स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ३० ॥
कारिका अन्वयः - अद्वयं मनः स्वप्ने च द्वयाभासं न संशयः तथा जाग्रत् अद्वयं द्वयाभासं न संशयः ।
காரிகா அர்த்தம் - இதில் சந்தேஹம் சிறிதும் இல்லை. ஸ்வப்ன அவஸ்தையில் அத்வைதமே மனதால் துவைத ரூபமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜாக்ராவஸ்தையிலும் சந்தேஹம் இல்லாமல் அத்வைதமே மனதினால் துவைதமாய் விளங்குகிறது.
रज्जुरूपेण सर्प इव परमार्थत आत्मरूपेण अद्वयं सत् द्वयाभासं मनः स्वप्ने, न संशयः । न हि स्वप्ने हस्त्यादि ग्राह्यं तद्ग्राहकं वा चक्षुरादि, द्वयं विज्ञानव्यतिरेकेणास्ति ; जाग्रदपि तथैवेत्यर्थः ; परमार्थसद्विज्ञानमात्राविशेषात् ॥ ३० ॥
(ச.பா) ரஜ்ஜு ரூபத்தால் சத் சர்ப்பத்திற்கு சமமாய் பரமார்த்தமாக அத்வைத ஆத்மரூப சத் அத்வைத ஆத்மரூபமான சத்தாகிய மனமானது ஸ்வப்னத்தில் த்வைத ரூபமாய் விளங்குகிறது. இதில் சந்தேஹமில்லை. ஸ்வப்னத்தில் அறியப்படும் யானை முதலியவைகளை கிரஹிக்கப்படும் பதார்த்தம், அவ்வாறே கிரஹிக்கும் கண் முதலிய இந்திரியங்கள் ஆகியவை விக்ஞானத்தை தவிர சிறிதும் இல்லை. அவ்வாறே ஜாக்கிரத்திலும் என்பது இதன் தாத்பரியம். ஏனெனில் இந்த இரண்டு அவஸ்தைகளிலும் பரமார்த்த சத்தான விக்ஞானமே சமானரூபமாய் இருக்கிறது.
रज्जुसर्पवद्विकल्पनारूपं द्वैतरूपेण मन एवेत्युक्तम् । तत्र किं प्रमाणमिति, अन्वयव्यतिरेकलक्षणमनुमानमाह । कथम् ?
(ச.பா) (அ.கை) ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனா ரூபமான த்வைதரூபமானது மனம் எனப்படுகிறது. அங்கு இதற்கு பிரமாணம் என்ன? இதன் பொருட்டு அந்வய வியதிரேக அனுமான பிரமாணத்தால் விளக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு?
मनोदृश्यमिदं द्वैतं यत्किञ्चित्सचराचरम् ।
मनसो ह्यमनीभावे द्वैतं नैवोपलभ्यते ॥ ३१ ॥
कारिका अन्वयः - इदं सचराचम् यत् किञ्चित् द्वैतं दृश्यम् (तत् सर्वं) मनः मनसः अमनीभावे हि द्वैतं नैव उपलभ्यते ।
காரிகா அர்த்தம் - எது எல்லாம் சராசர துவைதம் உள்ளதோ அவை எல்லாம் திருச்யமே, ஏனெனில் அமநீயபாவத்தை அறிந்ததும் த்வைதத்தின் அறிவானது ஏற்படாது.
तेन हि मनसा विकल्प्यमानेन दृश्यं मनोदृश्यम् इदं द्वैतं सर्वं मन इति प्रतिज्ञा, तद्भावे भावात् तदभावे चाभावात् । मनसो हि अमनीभावे निरुद्धे विवेकदर्शनाभ्यासवैराग्याभ्यां रज्ज्वामिव सर्पे लयं गते वा सुषुप्ते द्वैतं नैवोपलभ्यत इति अभावात्सिद्धं द्वैतस्यासत्त्वमित्यर्थः ॥ ३१ ॥
(ச.பா) அந்த மனதால் விகல்பிக்கப்பட்ட இந்த சம்பூர்ண த்வைதமான த்ருச்யம்யாவும் மனதை என்பது ப்ரதிக்ஞை. அந்த மனது இருந்தால் வஸ்து பாவனை ஏற்படுகிறது. அது இல்லையேல் வஸ்து பாவனை ஏற்படுவதில்லை. மனத்தினுடைய அமனீபாவம் நிரோதமானபொழுது (அதாவது மனதின் சிந்திக்கும் தன்மை கட்டுப்பட்டபொழுது) விவேக தர்சனத்தாலும், அப்யாசத்தாலும், வைராக்யத்தாலும், ரஜ்ஜுவில் ஸர்ப்பம் லயத்தை அடைந்தது போலும், அல்லது சுஷுப்தியிலும் த்வைத பாவனை அடையப்படுவதில்லை. இவ்வாறு மனதானது கட்டுப்படுத்தப்பட்டபொழுது த்வைத தரிசனம் ஏற்படாததால் அது உண்மையானதல்ல என்று நிலைநாட்டப்படுகிறது.
कथं पुनरयममनीभाव इत्युच्यते —
(ச.பா) (அ,கை) அது எவ்வாறு அமனீபாவமாகிறது - அது கூறப்படுகிறது.
आत्मसत्यानुबोधेन न सङ्कल्पयते यदा ।
अमनस्तां तदा याति ग्राह्याभावे तदग्रहम् ॥ ३२ ॥
कारिका अन्वयः - आत्मसत्यानुबोधेन यदा मनः न सङ्कल्पयते तदा अमनस्तां याति ग्राह्याभावे तत् अग्रहं भवति ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது ஆத்மாவின் சத்தின் ஞானத்தை அடைந்த உடன் மனம் சங்கல்பிக்காதோ அந்த சமயத்தில் அமனீயபாவம் அடையப்பட்டதாகிறது. அந்த அவஸ்தயில் கிராஹகமானது அபாவத்தை அறிந்ததின் காரணத்தால் கிரஹிப்பதற்கு வேண்டியதற்கான விகல்பம் இல்லாமல் நீங்கிவிடுகிறது.
आत्मैव सत्यमात्मसत्यम् , मृत्तिकावत् , ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः । तस्य शास्त्राचार्योपदेशमन्ववबोध आत्मसत्यानुबोधः । तेन सङ्कल्प्याभावात्तन्न सङ्कल्पयते दाह्याभावे ज्वलनमिवाग्नेः यदा यस्मिन्काले, तदा तस्मिन्काले अमनस्ताम् अमनोभावं याति ; ग्राह्याभावे तत् मनः अग्रहं ग्रहणविकल्पनावर्जितमित्यर्थः ॥ ३२ ॥
(ச.பா) - “वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव ” (வாச்சாரம்பனம் விகாரோ நாமதேயம் மிருதிகேத்யேவ) வாக்கினால் ஆரம்பமாகும் விகாரம் நாமமாத்திரமே மிருதிகையைப் போல் சத்யம் என்பது சுருதி வாக்கியம். அதை சாஸ்திரம் மேலும் ஆச்சாரியரின் உபதேசங்களால் உண்டாகும் ஆத்மானுபோதம். ஆகையால் சங்கல்பத்திற்கு யோக்யமான வஸ்துவின் அபாவம் அறிந்தபின், எரிக்கப்படும் வஸ்துவின் அபாவம் அடைந்ததை அறிந்த பின்னர், தாஹ்ய வஸ்துவின் அபாவத்தை அறிந்ததால் அக்னியின் தஹிக்கும் தன்மை அபாவத்திற்கு சமானம் இருக்கும். எந்த சமயத்தில் சித்தமானது சங்கல்பிக்கவில்லையோ அந்த சமயத்தில் அந்த அமனஸ்த்தமானது அதாவது அமனீபாவத்தை அடைகிறது. கிராஹ்ய வஸ்துவிற்கு அபாவத்தை அறிந்தபொழுது மனமானது கிரஹிக்கப்படவில்லை. அதாவது கிரஹிக்கும் விகல்பங்கள் அற்றதாகிவிடும்.
यद्यसदिदं द्वैतम् , केन समञ्जसमात्मतत्त्वं विबुध्यत इति, उच्यते —
(ச.பா) (அ.கை) இந்த எல்லா த்வைதமும் அசத்தியமாகும் என்றால் சத்திய ஆத்ம தத்துவத்தின் ஞானம் எவ்வாறு ஏற்படும்? இதைக் குறித்து கூறுகிறார்-
अकल्पकमजं ज्ञानं ज्ञेयाभिन्नं प्रचक्षते ।
ब्रह्म ज्ञेयमजं नित्यमजेनाजं विबुध्यते ॥ ३३ ॥
कारिका अन्वयः - अकल्पकम् अजं ज्ञानं ज्ञेय अभिन्नं (ब्रह्मविदः) प्रचक्षते ब्रह्म ज्ञेयम् अजं नित्यम् अजेन अजं विबुध्यते।।
காரிகா அர்த்தம் - இந்த கல்பனா சூன்யமான அஜன்மா ஞானமுடைய விவேகிகள் ஞேய பிரஹ்மத்துடன் அபின்னம், பிரஹ்மம் எதற்கு விஷயமோ அந்த ஞானம் அஜன்மா, நித்தியமானது. இந்த அஜன்மா ஞானத்தால் அஜன்மா ஆத்மதத்துவம் ஸ்வயமாகவே அறியப்படுகிறது.
अकल्पकं सर्वकल्पनावर्जितम् , अत एव अजं ज्ञानं ज्ञप्तिमात्रं ज्ञेयेन परमार्थसता ब्रह्मणा अभिन्नं प्रचक्षते कथयन्ति ब्रह्मविदः । ‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । ३०) अग्न्युष्णवत् , ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) इत्यादिश्रुतिभ्यः ।
(ச.பா) - எல்லா கல்பனைகளும் அற்றது. ஆகையால் தான் ஞப்திமாத்திரமாகும். அதாவது ஞப்திமாத்திர ஞானத்தை பிரஹ்ம வித்துக்கள் ஞேயம் என்று பரமார்த்த ஸ்வரூப பிரஹ்மத்தை அபின்னமாக கூறுகிறார்கள். அக்னியில் உள்ள சூடுபோல் உள்ளது. அக்னியில் உள்ள உஷ்ணத்திற்கு சமானமாய் விக்ஞாதாவின் ஞானம் ஒருபோதும் லோபத்தை அடைவதில்லை. “விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம” “ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம” என்பது முதலிய சுருதிகளிளால் கருதப்படுகிறது.
तस्यैव विशेषणम् — ब्रह्म ज्ञेयं यस्य, स्वस्थं तदिदं ब्रह्म ज्ञेयम् औष्ण्यस्येवाग्निवदभिन्नम् , तेन आत्मस्वरूपेण अजेन ज्ञानेन अजं ज्ञेयमात्मतत्त्वं स्वयमेव विबुध्यते अवगच्छति । नित्यप्रकाशस्वरूप इव सविता नित्यविज्ञानैकरसघनत्वान्न ज्ञानान्तरमपेक्षत इत्यर्थः ॥ ३३ ॥
(ச.பா) அந்த (ஞானத்திற்கு) விசேஷணம் கூறப்படுகிறது. ब्रह्मज्ञेयम् (பிரஹ்மஞேயம்) என்று அதாவது பிரஹ்மம் எதற்கு ஞேயமோ அந்த ஞானம் அக்னி உஷ்ணத்தைப் போல் பிரஹ்மத்துடன் அபின்னமாகும். அந்த ஆத்ம ஸ்வரூப அஜன்மாஞானத்தால் அஜன்மா ஞேயரூப ஆத்மதத்துவத்தை தானே அறிகிறது. தாத்பர்யம் என்னவெனில் நித்திய பிரகாச ரூப சூரியனைப்போல் நித்தியவிக்ஞான ஏகரச கனரூபமாய் இருத்தலால் அதற்கு வேறு ஞானத்தின் அபேக்ஷை இல்லை.
आत्मसत्यानुबोधेन सङ्कल्पमकुर्वत् बाह्यविषयाभावे निरिन्धनाग्निवत्प्रशान्तं सत् निगृहीतं निरुद्धं मनो भवतीत्युक्तम् । एवं च मनसो ह्यमनीभावे द्वैताभावश्चोक्तः । तस्यैवं
(ச.பா) (அ.கை) ஆத்ம சத்தியத்தை அடைந்ததால் சங்கல்பத்தைச் செய்யாத சித்தம் பாஹ்ய விஷயங்களை அபாவம் என்று அறிந்ததால் இந்தனம் (கட்டை) அற்ற அக்னிபோல் சாந்தமடைந்து நிருத்தம் ஆகிறது என்று கூறப்பட்டது. இவ்வாறு மனமானது அமனீபாவம் அடைந்து துவைதமும் அபாவம் என்று கூறப்படுகிறது. அது இவ்வாறாக ஆகும்.
निगृहीतस्य मनसो निर्विकल्पस्य धीमतः ।
प्रचारः स तु विज्ञेयः सुषुप्तेऽन्यो न तत्समः ॥ ३४ ॥
कारिका अन्वयः - निगृहीतस्य मनसः निर्विकल्पस्य धीमतः यः प्रचारः सः तु योगिभिः विज्ञेयः सुषुप्ते अन्यः तत्समः न ।
காரிகா அர்த்தம் - ஒடுக்கப்பட்ட மனதை உடையவனும் (மனோநாசம் உற்றவனும்) அதனால் எந்த விதமான சங்கல்ப விகல்பங்கள் அற்றவனுமான விவேகியின் (ஆத்மாராமனின்) எந்த ஒரு ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டு அதிலேயே சஞ்சரிக்கும் தன்மை உண்டோ அந்தப் பிரச்சாரமானது யோகிகளால் உணரத்தக்கதாகும். சுஷுப்தி நிலையில் (மனதின் சேஷ்டையற்ற தன்மை) வேறானது. முன்சொன்ன நிலைக்கு சமமானது இல்லை.
निगृहीतस्य निरुद्धस्य मनसः निर्विकल्पस्य सर्वकल्पनावर्जितस्य धीमतः विवेकवतः प्रचरणं प्रचारो यः, स तु प्रचारः विशेषेण ज्ञेयो विज्ञेयो योगिभिः ।
(ச.பா) ஒடுக்கப்பட்ட மனது உடையவனும் எல்லா கல்பனைகளும் அற்றவிவேகமுடையவனின் சித்தத்தின் பிரசாரமாகும் (வியாபாரமாகும்). அது யோகிகளால் விசேஷமாய் உணரத்தக்கதாகும்.
ननु सर्वप्रत्ययाभावे यादृशः सुषुप्तिस्थस्य मनसः प्रचारः, तादृश एव निरुद्धस्यापि, प्रत्ययाभावाविशेषात् ; किं तत्र विज्ञेयमिति ।
(ச.பா) (சங்கை) - எல்லாவிதமான பிரத்தியயங்களும் அபாவம் அடைந்தபின் சுஷுப்தியில் இருப்பவனுடைய மனதின் பிரச்சாரம் (வியாபாரம்) போல் ஒடுங்கிய மனதை உடையவனும் ஆகிறான். ஏனெனில் இரண்டிலும் சமானமாகும். இதில் விசேஷமாக அறியவேண்டியது என்ன?
अत्रोच्यते — नैवम् , यस्मात्सुषुप्ते अन्यः प्रचारोऽविद्यामोहतमोग्रस्तस्य अन्तर्लीनानेकानर्थप्रवृत्तिबीजवासनावतो मनसः आत्मसत्यानुबोधहुताशविप्लुष्टाविद्याद्यनर्थप्रवृत्तिबीजस्य निरुद्धस्य अन्य एव प्रशान्तसर्वक्लेशरजसः स्वतन्त्रः प्रचारः । अतो न तत्समः । तस्माद्युक्तः स विज्ञातुमित्यभिप्रायः ॥
(ச.பா) (சமாதானம்) அந்த விஷயத்தில் கூறப்படுகிறது அவ்வாறு அல்ல, ஏனெனில் சுஷுப்தியில் அவித்யா மோஹ ரூப அந்தகாரத்தால் விழுங்கப்பட்டு (மறைக்கப்பட்டு) அவ்வாறே உள்ளே அநேக அனர்த்த பிரவிர்த்தியின் பீஜபூதமான வாசனைகளும் லீனமடைந்த அந்த மனதின் வியாபாரம் மற்றொரு வகையானது. மேலும் ஆத்ம சத்தியரூபத்தின் ஞானாக்னியினால் எந்த அவித்தியாரூப அநர்த்த பிரவிர்த்தி எரிக்கப்பட்டதாகிறதோ அவ்வாறே எதனுடைய எல்லா வகையான க்லேச ரூபதோஷம் சாந்தமாகி விட்டதோ அந்த நிருத்த (அடங்கிய) சித்தத்தின் சுவதந்திர பிரசாரம் வேறு வகையாகும். ஆகையால் இரண்டும் சமமாகாது ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் அதன் ஞானத்தை அடையவேண்டும் என்பதாகும்.
प्रचारभेदे हेतुमाह —
(ச.பா) (அ.கை)- இவை இரண்டின் பிரசாரபேதம் கூறப்படுகிறது-
लीयते हि सुषुप्तौ तन्निगृहीतं न लीयते ।
तदेव निर्भयं ब्रह्म ज्ञानालोकं समन्ततः ॥ ३५ ॥
कारिका अन्वयः - सुषुप्ते तत् लीयते हि निगृहीतं तत् एव निर्भयं ब्रह्म ज्ञानालोकं (ज्ञप्तिः प्रकाशः यस्य तत्) समन्ततः प्रकाशते ।
காரிகா அர்த்தம் - சுஷுப்தி அவஸ்தையில் மனமானது (அவித்தையில்) லீனமாகிறது. நிருத்தமான பொழுது அதில் லீனமாவதில்லை. அந்த சமயத்தில் சித்பிரகாசமய நிர்பய பிரஹ்மமாய் இருக்கிறது.
लीयते सुषुप्तौ हि यस्मात्सर्वाभिरविद्यादिप्रत्ययबीजवासनाभिः सह तमोरूपम् अविशेषरूपं बीजभावमापद्यते तद्विवेकविज्ञानपूर्वकं निगृहीतं निरुद्धं सत् न लीयते तमोबीजभावं नापद्यते । तस्माद्युक्तः प्रचारभेदः सुषुप्तस्य समाहितस्य मनसः ।
(ச.பா) ஏனெனில் சுஷுப்தியில் மனமானது அவித்யா முதலிய எல்லா பிரத்யயங்களின் பீஜ பூதமான வாசனைகளுடன் கூடி தமஸ்வபாவ அவிசேஷ ரூப பீஜபாவத்தை அடைகிறது. விசேஷ ஞானத்துடன் நிருத்தம் ஆனபின் (ஒடுக்கப்பட்டபின்) லீனமாகாது. அதாவது அக்ஞானரூப பீஜ பாவத்தை அடையாது. ஆகையால் சுஷுப்திக்கும், சமாஹித சித்தத்திற்கும் பிரசாரபேதம் உள்ளது சரியானதே.
यदा ग्राह्यग्राहकाविद्याकृतमलद्वयवर्जितम् , तदा परमद्वयं ब्रह्मैव तत्संवृत्तमित्यतः तदेव निर्भयम् , द्वैतग्रहणस्य भयनिमित्तस्याभावात् । शान्तमभयं ब्रह्म यद्विद्वान्न बिभेति कुतश्चन ।
(ச.பா) எப்பொழுது சித்தமானது க்ராஹ்யக்ராஹக ரூப அவித்தையினால் உண்டாகும் இரண்டு விதமான மலம் அற்றதாகிறதோ அப்பொழுது அது பரம அத்விதீய ப்ரஹ்மமாகிறது. ஆகையால் த்வைதக்ரஹண ரூப பயத்திற்குக் காரணம் அபாவமான பொழுது அது நிர்பயமாகிறது. பிரஹ்மம் சாந்தமும் அபயபதமும் ஆகும். அதை அறிந்தவன் எதற்கும் பயப்படமாட்டான்.
तदेव विशेष्यते — ज्ञप्तिर्ज्ञानम् आत्मस्वभावचैतन्यम् , तदेव ज्ञानमालोकः प्रकाशो यस्य, तद्ब्रह्म ज्ञानालोकं विज्ञानैकरसघनमित्यर्थः । समन्ततः समन्तात् ; सर्वतो व्योमवन्नैरन्तर्येण व्यापकमित्यर्थः ॥
(ச.பா) அதன் விசேஷணம் கூறப்படுகிறது. ஞானத்தின் அர்த்தம் ஞப்தி அதாவது ஆத்ம ஸ்வரூப சைதன்யம். அந்த ஞானம் எதன் ஆலோகமான பிரகாசமோ அது பிரஹ்ம ஞானாலோகம் அதாவது விக்ஞான ஏக ரச ரூபமாகும். எங்கும் ஆகாசம்போல் நிரந்தரமாய் வியாபித்து இருக்கிறது.
अजमनिद्रमस्वप्नमनामकमरूपकम् ।
सकृद्विभातं सर्वज्ञं नोपचारः कथञ्चन ॥ ३६ ॥
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नम् अनामकम-रूपकम् सकृद्विभातम् सर्वज्ञम् उपचारः न कथञ्चन ।
காரிகா அர்த்தம் - அந்த பிரஹ்மம் ஜன்மமற்றது, நித்திரை அற்றது, ஸ்வப்னம் இல்லாதது, நாமரூபமற்றது, நித்திய பிரகாசரூபம், சர்வக்ஞனம் ஆகும். அதில் ஒருவிதமான கர்த்தவ்யம் இல்லாதது.
जन्मनिमित्ताभावात्सबाह्याभ्यन्तरम् अजम् ; अविद्यानिमित्तं हि जन्म रज्जुसर्पवदित्यवोचाम । सा चाविद्या आत्मसत्यानुबोधेन निरुद्धा यतः, अतः अजम् , अत एव अनिद्रम् अविद्यालक्षणानादिर्मायानिद्रास्वापात्प्रबुद्धम् अद्वयस्वरूपेणात्मना ; अतः अस्वप्नम् । अप्रबोधकृते ह्यस्य नामरूपे ; प्रबोधाच्च ते रज्जुसर्पवद्विनष्टे । न नाम्नाभिधीयते ब्रह्म, रूप्यते वा न केनचित्प्रकारेण इति अनामकम् अरूपकं च तत् , ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतेः ।
(ச.பா) - ஜன்மத்திற்கான காரணம் அபாவமாய் இருத்தலால் பிரஹ்மம் வெளியிலும், உள்ளும் ஊடுருவியும் ஜன்மம் அற்றதாயும் இருக்கிறது. ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜீவனுடைய ஜன்மா அவித்தையினால் உண்டானது என்று நாம் முதலிலேயே கூறி இருக்கிறோம். ஏனெனில் ஆத்மா சத்தியம் என்றஅனுபவம் ஏற்பட்டதும் அந்த அவித்யா நீங்கிவிடுகிறது. ஆகையால் பிரஹ்மம் அஜன்மா, இதனால் நித்திரை அற்றதும் ஆகும். இங்கு அவித்யாரூப அநாதி மாயைதான் நித்திரை. தன்னுடைய அத்வைத ஸ்வரூபத்தால் அந்த ஸ்வப்னத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அஸ்வப்னம் (ஸ்வப்னம் நீங்கியது) ஞானம் ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவில் தோன்றிய சர்ப்பம்போல் நஷ்டமாய் விடும். ஆகையால் பிரஹ்மத்தை எந்த நாம ரூபத்தாலும் கூறமுடியாது ஆகையால் அது அநாமம், அரூபம் ஆகும். “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
किञ्च, सकृद्विभातं सदैव विभातं सदा भारूपम् , अग्रहणान्यथाग्रहणाविर्भावतिरोभाववर्जितत्वात् । ग्रहणाग्रहणे हि रात्र्यहनी ; तमश्चाविद्यालक्षणं सदा अप्रभातत्वे कारणम् ; तदभावान्नित्यचैतन्यभारूपत्वाच्च युक्तं सकृद्विभातमिति । अत एव सर्वं च तत् ज्ञप्तिस्वरूपं चेति सर्वज्ञम् । नेह ब्रह्मण्येवंविधे उपचरणमुपचारः कर्तव्यः, यथा अन्येषामात्मस्वरूपव्यतिरेकेण समाधानाद्युपचारः । नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वाद्ब्रह्मणः कथञ्चन न कथञ्चिदपि कर्तव्यसम्भवः अविद्यानाशे इत्यर्थः ॥ ३६ ॥
(ச.பா) அது அக்ரஹனம், அன்யதாக்ரஹனம் (வேறாய் கிரஹிப்பது) ஆவிர்பாவம், திரோபாவம் இவைகள் இல்லாததால் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நித்திய பிரகாசரூபமாய் இருக்கிறது. கிரஹித்தலும் கிரஹிக்காமல் இருப்பது இரவு, பகல்போல் ஆகும். அவித்யா ரூப அந்தகாரத்தால் (இருட்டால்) பிரஹ்மம் பிரகாசியாமல் இருப்பதற்கு காரணமாகும். அந்த அவித்தை அபாவம் அடைந்து நித்திய சைதன்ய ஸ்வரூபம் ஆகும்பொழுது பிரஹ்மத்திற்கு நித்தியப்ரகாச ரூபம் ஆதல் சரியே. ஆகையால் எல்லாமாயும் ஞப்தி ரூபமாயும் ஆவதால் அது சர்வக்ஞம். இவ்வாறு பிரஹ்மத்தினிடத்தில் எந்த ஒரு உபசாரமோ, கர்த்தவ்யமோ இல்லை. எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான சமாதி முதலிய கர்த்தவ்யமோ அவ்வாறு இல்லை. தாத்பர்யம் என்னவெனில் பிரஹ்மம் நித்ய, சுத்த, புத்த, முக்த ஸ்வபாவமாகும். ஆகையால் அவித்தை நாசம் அடைந்தபின் வித்வானுக்கு எந்த ஒரு கர்த்தவ்யமும் கிடையாது.
अनामकत्वाद्युक्तार्थसिद्धये हेतुमाह —
(ச.பா) (அ.கை) அநாமம் முதலியவையின் அர்த்த சித்திக்கான காரணத்தைக் கூறுகிறார்.
सर्वाभिलापविगतः सर्वचिन्तासमुत्थितः ।
सुप्रशान्तः सकृज्ज्योतिः समाधिरचलोऽभयः ॥ ३७ ॥
कारिका अन्वयः - सर्व अभिलाप विगतः सर्वचिन्ता समुत्थितः सुप्रशान्तः सकृत् ज्योतिः समाधिः अचलः अभयः ॥ ३७ ॥
காரிகா அர்த்தம் - எல்லா விதமாகவும் வாக் வியாபரம் அற்றது, எல்லா சிந்தனைகளையும் தாண்டியது, முற்றிலும் சாந்தமானது, நித்திய பிரகாசமானது, சமாதி ஸ்வரூபமானது, அசலமானது, நிர்பயமானதும் ஆகும்.
अभिलप्यते अनेनेति अभिलापः वाक्करणं सर्वप्रकारस्याभिधानस्य, तस्माद्विगतः ; वागत्रोपलक्षणार्था, सर्वबाह्यकरणवर्जित इत्येतत् ।
(ச.பா) எதனால் சப்தத்தை உச்சரிக்கின்றோமோ அது வாக் அது எல்லா சப்த உச்சரிப்பிற்கும் சாதனமாகும். அது அற்றது இந்த வாக் இந்திரியம் உப லக்ஷணமாக கூறப்பட்டது. இது எல்லா பாஹ்ய இந்திரியங்களையும் குறிப்பதாகும். அதாவது அவைகள் இல்லை என்பதாகும்.
तथा, सर्वचिन्तासमुत्थितः, चिन्त्यते अनयेति चिन्ता बुद्धिः, तस्याः समुत्थितः, अन्तःकरणविवर्जित इत्यर्थः, ‘अप्राणो ह्यमनाः शुभ्रः अक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) इत्यादिश्रुतेः ।
(ச.பா) அது எல்லா சிந்தனைகளையும் தாண்டியது. எதனால் சிந்திக்கிறோமோ அந்த புத்தி சிந்தா எனப்படுகிறது. அதைத் தாண்டியது என்றால் அந்தக்கரணம் அற்றது என்பது பொருள். “अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः” (அப்ராணோ ஹ்யமனா சுப்ரோ, அக்ஷராத்பரத: பர = பிராணன் அற்றது, மனது அற்றது, சுத்தம் அவ்வாறே அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்) என்ற சுருதி இதற்குப் பிரமாணமாகும்.
यस्मात्सर्वविषयवर्जितः, अतः सुप्रशान्तः । सकृज्ज्योतिः सदैव ज्योतिः आत्मचैतन्यस्वरूपेण । समाधिः समाधिनिमित्तप्रज्ञावगम्यत्वात् ; समाधीयते अस्मिन्निति वा समाधिः । अचलः अविक्रियः । अत एव अभयः विक्रियाभावात् ॥
(ச.பா) ஏனெனில் அது எல்லா விஷயங்களும் அற்றது. ஆகையால் முற்றிலும் சாந்தமானது. நித்யஜ்யோதி ஸ்வரூபமானது, அதாவது ஆத்ம சைதன்ய ஸ்வரூபமாய் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டு இருப்பது. சமாதியினால் உண்டான பிரக்ஞையினை அடைவதால் சமாதி எனப்படுகிறது. அல்லது அதில் சித்தமானது ஒரு நிலைப்பட்டதால் சமாதி எனப்படுகிறது. அசலம் அதாவது விகாரமற்றது (அவிகாரி). விகாரம் அற்றதால் அபயம் எனப்படுகிறது.
यस्माद्ब्रह्मैव ‘समाधिरचलोऽभयः’ इत्युक्तम् ।
(ச.பா) (அ.கை)- எதனால் பிரஹ்மம் சமாதி ஸ்வரூபம், அசலம், அபயம் என்று சொல்லப்பட்டதோ அதனால்-
ग्रहो न तत्र नोत्सर्गश्चिन्ता यत्र न विद्यते ।
आत्मसंस्थं तदा ज्ञानमजाति समतां गतम् ॥ ३८ ॥
कारिका अन्वयः - तत्र न ग्रहः न उत्सर्गः यत्र चिन्ता न विद्यते तदा आत्मसंस्थं ज्ञानम् अजाति समतां गतं (भवति) ।
காரிகா அர்த்தம் - எங்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லையோ அங்கு எடுத்துக் கொள்ளுதலோ விடலோ இல்லை அந்த அவஸ்தையில் ஆத்மநிஷ்ட ஞானமும், ஜன்மமற்ற நிலையும் சமபாவனையும் அடைவான்.
अतः न तत्र तस्मिन्ब्रह्मणि ग्रहः ग्रहणमुपादानम् , न उत्सर्गः उत्सर्जनं हानं वा विद्यते । यत्र हि विक्रिया तद्विषयत्वं वा, तत्र हानोपादाने स्याताम् ; न तद्द्वयमिह ब्रह्मणि सम्भवति, विकारहेतोरन्यस्याभावान्निरवयवत्वाच्च ; अतो न तत्र हानोपादाने सम्भवतः । चिन्ता यत्र न विद्यते, सर्वप्रकारैव चिन्ता न सम्भवति यत्र अमनस्त्वात् , कुतस्तत्र हानोपादाने इत्यर्थः ।
(ச.பா) அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலும், துறத்தலும் இல்லை. எங்கு விகாரமோ, விகாரத்திற்கான விஷயம் இருக்கிறதோ அங்கு ஏற்றலும், துறத்தலும் சம்பவிக்கும். ஆனால் இங்கு ப்ரஹ்மத்தினிடத்தில் இவ்விரண்டும் இல்லை. ஏனெனில் விகாரத்திற்கு ஹேது பூதமான அன்ய பதார்த்தம் இல்லை. மேலும் அது ஸ்வயமாகவே நிர அவயவம் ஆகும். ஆகையால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலோ, துறத்தலோ சம்பவிக்காது. அங்கு சிந்தனையும் இல்லை. அதாவது மனம் இல்லாததினால் எந்த ஒரு சிந்தனையும் சம்பவிக்காததால் அங்கு தியாகமும் (துறத்தலும், க்ரஹணம் (ஏற்றலும் எவ்வாறு சம்பவிக்கும் என்பது பொருள்.
यदैव आत्मसत्यानुबोधो जातः, तदैव आत्मसंस्थं विषयाभावादग्न्युष्णवदात्मन्येव स्थितं ज्ञानम् , अजाति जातिवर्जितम् , समतां गतम् परं साम्यमापन्नं भवति ।
(ச.பா) எப்பொழுது ஆத்மசத்தியத்தின் போதம் உண்டாகிறதோ அப்பொழுது விஷயம் அபாவமானதால் அக்னியின் சூடுபோல ஆத்மாவில் இருக்கும் ஞானம் ஜன்மற்றதாயும் சமத்துவமாயும் ஆகிறது.
यदादौ प्रतिज्ञातम् ‘अतो वक्ष्याम्यकार्पण्यमजाति समतां गतम्’ (मा. का. ३ । २) इति, इदं तदुपपत्तितः शास्त्रतश्चोक्तमुपसंह्रियते — अजाति समतां गतमिति । एतस्मादात्मसत्यानुबोधात्कार्पण्यविषयमन्यत् , ‘यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः’ (बृ. उ. ३ । ८ । १०) इति श्रुतेः । प्राप्यैतत्सर्वः कृतकृत्यो ब्राह्मणो भवतीत्यभिप्रायः ॥ ३८ ॥
(ச.பா) இதற்கு முன் பிரதிக்ஞை செய்யப்பட்டது, சமான பாவனை அடைந்து அஜன்மா கிருபணத் தன்மை அற்றது என்பதை வர்ணிக்கிறேன் என்று முன்பு கூறியதை இங்கு “अजाति समतां गतम्” (அஜாதி சமதாம் கதம் = பிறப்பற்றது, சமபாவனையை அடைந்தது) என்று கூறி யுக்தி மூலமாயும் சாஸ்த்திர மூலமாயும் முடிவுக்கு வருகிறார். “यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः” (யோ வா ஏததக்ஷரம் கார்க்ய விதித்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ச க்ருபண: = ஹே! கார்க்கீ! எந்த புருஷன் இந்த அக்ஷர பிரஹ்மத்தை அறியவில்லையோ இந்த உலகத்தை விட்டு மரண மடைகிறானோ அவனே க்ருபணன்) என்ற சுருதியினால் கார்பண்ய விஷயத்தில் இந்த ஆத்ம ஸத்யானு போதத்தினால் வேறாக உள்ளது என்று அறிகிறோம். இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாத்ம தத்துவத்தை அடைந்தவன் க்ருதக்ருத்யனாகவும் வேண்டிய பேற்றைப் பெற்றவனாகவும்) ப்ராஹ்மணனாகவும் ஆகிறான் என்பது அபிப்பிராயம்.
यद्यपीदमित्थं परमार्थतत्त्वम् ।
(ச.பா) (அ.கை) - பரமார்த்ததத்துவம் எவ்வாறாய் இருந்தாலும்-
अस्पर्शयोगो वै नाम दुर्दर्शः सर्वयोगिणाम् ।
योगिनो बिभ्यति ह्यस्मादभये भयदर्शिनः ॥ ३९ ॥
कारिका अन्वयः - सर्वयोगिभिः अस्पर्श योगो नाम वै (अयं योगः) दुर्दर्शः हि अभये अस्मात् भयदर्शिनः योगिनः बिभ्यति ।
காரிகா அர்த்தம் - இந்த அஸ்பர்சயோகம் நிச்சயம் யோகிகளுக்கு மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அபய பதத்தில் பயத்தைக் காணும் யோகிகள் இதை பயமுடையதாக கருதுகிறார்கள்.
अस्पर्शयोगो नाम अयं सर्वसम्बन्धाख्यस्पर्शवर्जितत्वात् अस्पर्शयोगो नाम वै स्मर्यते प्रसिद्ध उपनिषत्सु । दुःखेन दृश्यत इति दुर्दर्शः सर्वयोगिणाम् वेदान्तविज्ञानरहितानाम् ; आत्मसत्यानुबोधायासलभ्य एवेत्यर्थः ।
(ச.பா) அஸ்பர்சயோகம் என்ற பெயர் உடையது. அதாவது எல்லா சம்பந்த ரூப ஸ்பர்சங்களும் அற்றது. அதனால் அது உபநிஷத்துக்களில் அஸ்பர்சயோகம் என்ற நாமத்தால் பிரசித்தமாய் இருக்கிறது. வேதாந்த விக்ஞானம் அற்றயோகிகளுக்கு அது மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்களுக்கு மிகக் கடினமானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்ம சத்யானுபோதத்தை அநுபவித்தர்களுக்கே ஆகும். மேலும் மிகுந்த ஆயாசத்தோடு அடையப்படுவதாகும்.
योगिनः बिभ्यति हि अस्मात्सर्वभयवर्जितादपि आत्मनाशरूपमिमं योगं मन्यमाना भयं कुर्वन्ति, अभये अस्मिन् भयदर्शिनः भयनिमित्तात्मनाशदर्शनशीलाः अविवेकिनः इत्यर्थः ॥
(ச.பா) ஏனெனில் பயமற்றதான இந்த ஆத்ம தத்துவத்தினின்று ஆத்ம சத்யானுபவ மில்லாமையால் இதை ஆத்ம நாசமோ என்று நினைத்து பயப்படுகின்றகேவல கர்ம நிஷ்டர்கள் ஆத்மாவே நசித்து விடுவதாகப் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் அபயரூபத்தில் தங்கள் அனுபவக்குறைவால் பயத்தைக் கற்பிக்கிறார்கள். இவர்கள் அவிவேகிகளாவார்கள்.
येषां पुनर्ब्रह्मस्वरूपव्यतिरेकेण रज्जुसर्पवत्कल्पितमेव मन इन्द्रियादि च न परमार्थतो विद्यते, तेषां ब्रह्मस्वरूपाणामभयं मोक्षाख्या च अक्षया शान्तिः स्वभावत एव सिद्धा, नान्यायत्ता, ‘नोपचारः कथञ्चन’ (मा. का. ३ । ३६) इत्युक्तेः ; ये त्वतोऽन्ये योगिनो मार्गगा हीनमध्यमदृष्टयो मनोऽन्यदात्मव्यतिरिक्तमात्मसम्बन्धि पश्यन्ति, तेषामात्मसत्यानुबोधरहितानां
(ச.பா) (அ.கை) எவர்களுடைய திருஷ்டியில் பிரஹ்ம ஸ்வரூபத்தைக்காட்டிலும் வேறான மனம், இந்திரியம் முதலியவைகள் ரஜ்ஜு சர்ப்பம் போல் கல்பிக்கப்பட்டவை, உண்மையில் அவற்றிக்கு இருப்பு இல்லை. அப்படிப்பட்ட பிரஹ்ம ஸ்வரூபமானவர்களுக்கு பயமற்றதன்மையும் மோக்ஷம் எனப்படும் குறைவற்ற சாந்தியும் ஸ்வபாவமாகவே சித்திக்கிறது. எந்த ஒன்றின் அதீனமும் அல்ல. அதற்கு கர்த்தவ்யம் இல்லை என்பது முன்பே கூறப்பட்டது. ஆனால் இதைத்தவிர வேறான அதம, மத்யம பாதையில் செல்லும் யோகிகள் மனதை ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆத்மாவின் சம்பந்தி என்று கருதுகிறார்கள். அவர்கள் ஆத்ம சத்ய போதம் அற்றவர்கள்-
मनसो निग्रहायत्तमभयं सर्वयोगिणाम् ।
दुःखक्षयः प्रबोधश्चाप्यक्षया शान्तिरेव च ॥ ४० ॥
कारिका अन्वयः - सर्वयोगिनां मनसः निग्रहायत्तम् अभयं (भवति) किं च दुःख क्षयः अपि प्रबोधः च अक्षया शान्तिरेव च ।
காரிகா அர்த்தம் - எல்லா யோகிகளுக்கும் பயமற்றதன்மை, (அபயம்), துக்கக்ஷயம், பிரபோதம், குறைவற்ற சாந்தி இவைகள் மனோ நிக்கிரஹத்தின் அதீனமாகும்
मनसो निग्रहायत्तमभयं सर्वेषां योगिनाम् । किञ्च, दुःखक्षयोऽपि । न ह्यात्मसम्बन्धिनि मनसि प्रचलिते दुःखक्षयोऽस्त्यविवेकिनाम् । किञ्च, आत्मप्रबोधोऽपि मनोनिग्रहायत्त एव । तथा, अक्षयापि मोक्षाख्या शान्तिस्तेषां मनोनिग्रहायत्तैव ॥ ४० ॥
(ச.பா) எல்லா யோகிகளின் அபயமானது மனோ நிக்ரஹத்தின் அதீனமாகும். துக்கக்ஷயமும் அவ்வாறே. ஏனெனில் ஆத்மா சம்பந்தமுடைய மனத்தில் சலனம் உடைய அவிவேகி புருஷனுக்கு துக்கம் க்ஷயமாவதில்லை. இதைத் தவிர ஆத்மஞானமும் மனதின் நிக்ரஹத்திற்கு அதீனமாகவே உள்ளது. அவ்வாறே மோக்ஷம் எனப்படும் குறைவற்ற (அக்ஷய) சாந்தியும் மனோநிக்ரஹத்தின் அதீனமாகவே உள்ளது.
उत्सेक उदधेर्यद्वत्कुशाग्रेणैकबिन्दुना ।
मनसो निग्रहस्तद्वद्भवेदपरिखेदतः ॥ ४१ ॥
कारिका अन्वयः - यद्वत् कुशाग्रेण एकबिन्दुना उदधेः उत्सेकः तद्वत् अपरिखेदतः मनसः निग्रहः भवेत् ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு (ஒரு குருவி) தர்பையின் நுனியால் (விழும்) ஒருதுளியால் கடலின் (தண்ணீரை) வற்றும்படி செய்ய இரைத்ததோ அவ்வாறே தளர்ச்சி அடையாத முயற்சியால் மனதின் நிக்ரஹம் ஏற்படும்.
मनोनिग्रहोऽपि तेषाम् उदधेः कुशाग्रेण एकबिन्दुना उत्सेचनेन शोषणव्यवसायवत् व्यवसायवतामनवसन्नान्तःकरणानामनिर्वेदात् अपरिखेदतः भवतीत्यर्थः ॥
(ச.பா) மனோ நிக்ரஹமும் தர்பையின் நுனியால் துளிதுளியாய் தெளித்து சமுத்திரத்தை வற்றச்செய்யும் முயற்சி போல் தைரியத்துடன் முயற்சி செய்யும் யோகிகளின் மனோநிக்ரஹம் கஷ்டமின்றி உண்டாகும்.
किमपरिखिन्नव्यवसायमात्रमेव मनोनिग्रहे उपायः ? नेत्युच्यते ;
(ச.பா) (அ.கை) என்ன தளர்ச்சியடையாத முயற்சி மாத்திரமே மனோநிக்கிரஹத்தின் உபாயமா? என்றால் இல்லை என்று கூறப்படுகிறது.
उपायेन निगृह्णीयाद्विक्षिप्तं कामभोगयोः ।
सुप्रसन्नं लये चैव यथा कामो लयस्तथा ॥ ४२ ॥
कारिका अन्वयः - कामभोगयोः विक्षिप्तम् उपायेन निगृणीयात् लये सुप्रसन्नम् अपि यथा कामः तथा लयः निगृहीतव्यः ।
காரிகா அர்த்தம் - காமிய விஷயங்களிலும், போகங்களிலும் பாய்ந்து ஓடும் சித்தத்தை உபாய மூலமாய் ஒடுக்க வேண்டும். அவ்வாறே லய அவஸ்தையிலும் மிகுந்த பிரசன்னமடைந்த சித்தத்தையும் தடைசெய். எவ்வாறு காமம் அனர்த்தத்தை உண்டு பண்ணுமோ அவ்வாறே லயமும் ஆகும்.
अपरिखिन्नव्यवसायवान्सन् , वक्ष्यमाणेनोपायेन कामभोगविषयेषु विक्षिप्तं मनो निगृह्णीयात् निरुन्ध्यादात्मन्येवेत्यर्थः । किञ्च, लीयतेऽस्मिन्निति सुषुप्तो लयः ; तस्मिन् लये च सुप्रसन्नम् आयासवर्जितमपीत्येतत् , निगृह्णीयादित्यनुवर्तते ।
(ச.பா) தளர்ச்சி அற்றமுயற்சி உடையவனால் மேலே கூறப்போகும் உபாயத்தால் காமபோகங்களில் பாய்ந்தோடும் சித்தத்தை நிக்கிரஹம் செய்து (அடக்கி) அதை ஆத்மாவிலேயே நிரோதம் செய்யவேண்டும். எந்த அவஸ்தையில் சித்தம் லீனமாகிறதோ அது சுஷுப்தி லயம் எனப்படும். அந்த லய அவஸ்த்தையில் மிகுந்த பிரசன்ன மடைந்த அதாவது ஆயாச மற்றஸ்திதியை அடையும் சித்தத்தையும் நிக்கிரஹம் செய்யவேண்டும் “निगृणीयात्” என்றபதம் அனுவிருத்தி ஆகிறது.
सुप्रसन्नं चेत्कस्मान्निगृह्यत इति, उच्यते ; यस्मात् यथा कामः अनर्थहेतुः, तथा लयोऽपि ; अतः कामविषयस्य मनसो निग्रहवल्लयादपि निरोद्धव्यत्वमित्यर्थः ॥
(ச.பா) அந்த அவஸ்தையில் மிகுந்த பிரசன்னமாய் இருக்கும் பொழுது அதை ஏன் நிக்ரஹம் செய்யவேண்டும்? இதற்குக் கூறுகிறார்- ஏனெனில் எவ்வாறு காமம் அநர்த்தத்திற்குக் காரணமாகிறதோ அவ்வாறே இந்த லயமும் ஆகும். ஆகையால் காம விஷய மனதை நிக்கிரஹம் செய்வது போல் லயத்தையும் நிரோதம் செய்ய வேண்டும்.
कः स उपाय इति, उच्यते —
(ச.பா) (அ.கை) அந்த உபாயம் என்ன? என்பதைக் கூறுகிறார்-
दुःखं सर्वमनुस्मृत्य कामभोगान्निवर्तयेत् ।
अजं सर्वमनुस्मृत्य जातं नैव तु पश्यति ॥ ४३ ॥
कारिका अन्वयः - सर्वं दुःखम् अनुस्मृत्य कामभोगात् निवर्तयेत् सर्वम् अजम् अनुस्मृत्य जातं तु नैव पश्यति ॥ ४३ ॥
காரிகா அர்த்தம் - எல்லா துவைதமும் துக்கரூபமே என்று எப்பொழுதும் ஸ்மரித்து சித்தத்தை காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அடக்கவேண்டும். இவ்வாறு நிரந்தரம் (எப்பொழுதும்) எல்லா வஸ்துக்களையும் பிறப்பற்ற பிரஹ்ம ரூபமாய் நினைத்து எந்த ஒரு உண்டான பதார்த்தங்களைக் காணமாட்டான்.
सर्वं द्वैतमविद्याविजृम्भितं दुःखमेव इत्यनुस्मृत्य कामभोगात् कामनिमित्तो भोगः इच्छाविषयः तस्मात् विप्रसृतं मनो निवर्तयेत् वैराग्यभावनयेत्यर्थः । अजं ब्रह्म सर्वम् इत्येतच्छास्त्राचार्योपदेशतः अनुस्मृत्य तद्विपरीतं द्वैतजातं नैव तु पश्यति अभावात् ॥
(ச.பா) - அவித்தையினால் தோன்றும் எல்லா துவைதமும் துக்க ரூபமானதே என்று அடிக்கடி நினைத்து காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அதாவது இச்சையினால் உண்டாகும் விஷயங்களில் செல்லும் சித்தத்தை வைராக்கிய பாவனையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். அதன்பின் இவை எல்லாம் பிறப்பற்ற பிரஹ்மமே என்று சாஸ்திரம், ஆச்சாரியரின் உபதேசம் இவற்றை அனுசரித்து எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்த இந்த விபரீதமான த்வைத ஜாதத்தை அபாவம் என்று அறிந்ததால் அது காணமுடியாது.
लये सम्बोधयेच्चित्तं विक्षिप्तं शमयेत्पुनः ।
सकषायं विजानीयात्समप्राप्तं न चालयेत् ॥ ४४ ॥
कारिका अन्वयः - लये चित्तं संबोधयेत् पुनः विक्षिप्तं शमयेत् सकषायं विजानीयात् समप्राप्तं न चालयेत् ।
காரிகா அர்த்தம் - சித்தமானது (சுஷுப்தி அவஸ்தையில்) லீனமான பொழுது அதை ஆத்ம விவேகத்தில் சேர்க்க வேண்டும் சித்தமானது வெளியில் அலைபாயும் பொழுது அதை சாந்தபடுத்த வேண்டும். இல்லாவிடில் ராகத்துடன் கூடியதாகும். அவ்வாறேசாம்யா அவஸ்தையை அடைந்த பொழுது சித்தத்தை சலனமுடையதாக செய்யாதே.
एवमनेन ज्ञानाभ्यासवैराग्यद्वयोपायेन लये सुषुप्ते लीनं सम्बोधयेत् मनः आत्मविवेकदर्शनेन योजयेत् । चित्तं मन इत्यनर्थान्तरम् । विक्षिप्तं च कामभोगेषु शमयेत्पुनः । एवं पुनः पुनरभ्यासतो लयात्सम्बोधितं विषयेभ्यश्च व्यावर्तितम् , नापि साम्यापन्नमन्तरालावस्थं सकषायं सरागं बीजसंयुक्तं मन इति विजानीयात् । ततोऽपि यत्नतः साम्यमापादयेत् । यदा तु समप्राप्तं भवति, समप्राप्त्यभिमुखीभवतीत्यर्थः ; ततः तत् न चालयेत् , विषयाभिमुखं न कुर्यादित्यर्थः ॥
(ச.பா) - முற்கூறப்பட்ட ஞானாப்யாசம், வைராக்கியம் என்றஇரு உபாயங்களால் சுஷுப்தியில் லயமடைந்திருக்கக் கூடிய மனதை இங்கு சித்தசப்தமும் மனதையே குறிக்கும், தட்டி எழுப்பி விழிப்படையச் செய்யவேண்டும். மேலும் (இவ்வாறு விழிப்படைந்த மனது) காமபோகாதிகளில் விக்ஷபேம் அடைந்திருந்தால் இவ்விடைநிலையை அது கஷாயம் போன்றராகவாசனை உள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து மேலும் இடைவிடாது முயற்சி செய்து சமநிலையை அடையச் செய்யவேண்டும். சமநிலையை (பிரஹ்ம ஸ்வரூபத்தை) அடைந்திருக்கும் மனதை சலனமடையச் செய்யக்கூடாது. அப்படியே விட்டுவிட வேண்டும் விஷயங்களில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
नास्वादयेत्सुखं तत्र निःसङ्गः प्रज्ञया भवेत् ।
निश्चलं निश्चरच्चित्तमेकीकुर्यात्प्रयत्नतः ॥ ४५ ॥
कारिका अन्वयः - तत्र सुखं न आस्वादयेत् प्रज्ञया निःसङ्गः भवेत् निश्चलं भवति पुनः निश्चरत् चित्तं प्रयत्नतः एकीकुर्यात् ।
காரிகா அர்த்தம் -அந்த சாம்யாவஸ்தையில் சுகத்தை சுவைக்காதே. விவேக புத்தியினால் சங்க மற்று இரு, மேலும் சித்தமானது வெளியில் அலை பாய்ந்தால் அதை நிச்சல மற்றதாய் ஏகாக்கிரமாக்கு (ஒருநிலைப்படுத்து)
समाधित्सतो योगिनो यत्सुखं जायते, तत् नास्वादयेत् तत्र न रज्येतेत्यर्थः । कथं तर्हि ? निःसङ्गः निःस्पृहः प्रज्ञया विवेकबुद्ध्या यदुपलभ्यते सुखम् , तदविद्यापरिकल्पितं मृषैवेति विभावयेत् ; ततोऽपि सुखरागान्निगृह्णीयादित्यर्थः । यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सत् निश्चरत् बहिर्निर्गच्छद्भवति चित्तम् , ततस्ततो नियम्य उक्तोपायेन आत्मन्येव एकीकुर्यात् प्रयत्नतः । चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ॥
(ச.பா) சமாதியில் உள்ள யோகி சுகத்தை அடைவான். அதை சுவைக்கக்கூடாது. அதாவது அதில் ராகம் இருக்கக்கூடாது. மேலும் என்ன செய்யவேண்டும் எனில் விவேக புத்தியினால் எந்த இந்த சுகமுள்ளதோ அது அவித்தையினால் கல்பிக்கப்பட்டது மேலும் மித்தை என்று பாவனை செய்ய வேன்டும். சுகத்தில் உள்ள ராகத்தையுடைய சித்தத்தை நிக்கிரஹம் செய் என்பது பொருள்.
यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सन्निश्चरद्बहिर्निर्गच्छद्भवति चित्तं ततस्ततो नियम्योक्तोपायेना-त्मन्येवैकीकुर्यात्प्रयत्नतः। चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ।
(ச.பா) எப்பொழுது சுகராகத்திலிருந்து நிவிர்த்தியாகி நிச்சல ஸ்வபாவம் அடைந்த சித்தம் மறுபடியும் வெளியில் செல்லுமோ அப்பொழுது முன்பு கூறிய உபாயத்தால் பிரயத்தின பூர்வமாய் ஆத்மாவில் ஏகாக்ரம் செய்ய வேண்டும். சித்த ஸ்வரூப சத்தாமாத்திரத்தை சம்பாதிக்க வேண்டும்.
यदा न लीयते चित्तं न च विक्षिप्यते पुनः ।
अनिङ्गनमनाभासं निष्पन्नं ब्रह्म तत्तदा ॥ ४६ ॥
कारिका अन्वयः - यदा चित्तं न लीयते पुनः न च विक्षिप्यते तदा तत् अनिङ्गनम् अनाभासं ब्रह्म निष्पन्नं भवति ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது மனம் லய மடையவில்லையோ, மேலும் விஷயங்களில் விக்ஷபேம் அடையவில்லையோ அப்பொழுது அந்த சித்தமானது காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் போல் அசைவற்றதாயும் எந்த கல்பிதமான விஷய பாவனையும் அற்றதாகி பிரஹ்மமே ஆனதாக இருக்கிறது.
यथोक्तेनोपायेन निगृहीतं चित्तं यदा सुषुप्ते न लीयते, न च पुनर्विषयेषु विक्षिप्यते ; अनिङ्गनम् अचलं निवातप्रदीपकल्पम् , अनाभासं न केनचित्कल्पितेन विषयभावेनावभासते इति ; यदा एवंलक्षणं चित्तम् , तदा निष्पन्नं ब्रह्म ; ब्रह्मस्वरूपेण निष्पन्नं चित्तं भवतीत्यर्थः ॥ ४६ ॥
(ச.பா) மேலே கூறப்பட்ட உபாயத்தால் நிக்ரஹம் செய்யப்பட்ட சித்தம் சுஷுப்தியில் லீனமாகாமலும் விஷயங்களில் செல்லாமலும் இருக்கிறதோ அப்பொழுது காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் நிச்சலமாயும் விஷயங்களை விளக்காமலும் இருக்கும் சித்தம் பிரஹ்மமாகவே ஆகிறது.
स्वस्थं शान्तं सनिर्वाणमकथ्यं सुखमुत्तमम् ।
अजमजेन ज्ञेयेन सर्वज्ञं परिचक्षते ॥ ४७ ॥
कारिका अन्वयः - स्वस्थं शान्तं सनिर्वाणम् अकथ्यम् उत्तमं सुखं ज्ञेयेन अजेन अजं सर्वज्ञं (ब्रह्मविदः) परिचक्षते ।
காரிகா அர்த்தம் - (பிரஹ்மக்ஞர்கள்) தன்னில் நிலை பெற்றதாயும், சாந்தமாயும், நிர்வாண முடையவராயும், இவ்வாறு என்று கூறமுடியாதவராயும், நிரதிசய சுக ஸ்வரூபமாயும், ஜன்மமற்றவராயும், அஜன்மாவாகிய ஞேயத்தைக் (பிரஹ்மத்தை) காட்டிலும் அபின்னமாயும், சர்வக்ஞராயும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
यथोक्तं परमार्थसुखमात्मसत्यानुबोधलक्षणं स्वस्थं स्वात्मनि स्थितम् ; शान्तं सर्वानर्थोपशमरूपम् ; सनिर्वाणम् , निर्वृतिर्निर्वाणं कैवल्यम् , सह निर्वाणेन वर्तते ; तच्च अकथ्यं न शक्यते कथयितुम् , अत्यन्तासाधारणविषयत्वात् ; सुखमुत्तमं निरतिशयं हि तद्योगिप्रत्यक्षमेव ; न जातमिति अजम् , यथा विषयविषयम् ; अजेन अनुत्पन्नेन ज्ञेयेन अव्यतिरिक्तं सत् स्वेन सर्वज्ञरूपेण सर्वज्ञं ब्रह्मैव सुखं परिचक्षते कथयन्ति ब्रह्मविदः ॥ ४७ ॥
(ச.பா) கூறப்பட்ட ஆத்ம சத்தியானுபோத பரமார்த்த சுகம் ஸ்வஸ்தம் அதாவது தன் ஆத்மாவில் நிலை பெற்றிருத்தல் சாந்தம் - எல்லா வகையிலும் அநர்த்தத்தின் நிவர்த்திரூபம். (सनिर्वाणम्) சநிர்வாணம் அதாவது கைவல்யம் என்று கூறப்படுகிறது. இந்த நிர்வாணத்துடன் கூடியதை இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாது. ஏனெனில் அதன் விஷயம் முற்றிலும் அசாதாரணமானது. சுகம் உத்தமம் - யோகிகளுக்கு பிரத்யக்ஷமாகும் நிரதிசய சுகமாகும். அவ்வாறே எதற்கு உத்பத்தி இல்லையோ அது அஜம். அதாவது விஷய சம்பந்தி சுகம் போல உற்பத்தி ஆகாதது. ஞேயத்தைக் காட்டிலும் அபின்னமானது. ஆகையால் தன்னுடைய சர்வக்ஞ ரூபத்தால் ஸ்வயம் பிரஹ்மம் அதுவே சுகம் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
सर्वोऽप्ययं मनोनिग्रहादिः मृल्लोहादिवत्सृष्टिरुपासना च उक्ता परमार्थस्वरूपप्रतिपत्त्युपायत्वेन, न परमार्थसत्येति । परमार्थसत्यं तु
(ச.பா) (அ.கை) மண், உலோகத்திற்கு சமமாய் மனோநிக்ரஹம் முதலியவை, சம்பூர்ண சிருஷ்ட்டி அவ்வாறே உபாசனா இவைகள் பரமார்த்த சொரூபத்தின் அடைவிற்காக உபாய ரூபமாய் கூறப்பட்டது. அவை பரமார்த்த சத்தியமல்ல. பரமார்த்த சத்தியமோ-
न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ४८ ॥
कारिका अन्वयः - जीवः न कश्चित् जायते अतः अस्य सम्भवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ।
காரிகா அர்த்தம் - எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எந்த அஜன்மா (பிறப்பற்ற) பிரஹ்மத்திற்கு உத்பத்தி கிடையாது அதுவே சர்வ உத்தமமான சத்தியமாகும்.
न कश्चिज्जायते जीवः कर्ता भोक्ता च नोत्पद्यते केनचिदपि प्रकारेण । अतः स्वभावतः अजस्य अस्य एकस्यात्मनः सम्भवः कारणं न विद्यते नास्ति । यस्मान्न विद्यतेऽस्य कारणम् , तस्मान्न कश्चिज्जायते जीव इत्येतत् । पूर्वेषूपायत्वेनोक्तानां सत्यानाम् एतत् उत्तमं सत्यं यस्मिन्सत्यस्वरूपे ब्रह्मणि अणुमात्रमपि किञ्चिन्न जायते इति ॥ ४८ ॥
(ச.பா) எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதாவது கர்த்தா போக்தா இவைகள் உத்பத்தியாவதில்லை. ஆகையால் ஸ்வபாவமாகவே இந்த ஏகமாகிய அஜன்மா ஆத்மா சம்பவிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. ஆகையால் எந்த ஒரு ஜீவனும் உத்பத்தியாவதில்லை என்பது இதன் தாத்பர்யம். முன்பு கூறிய உபாய ரூபமாய் கூறப்பட்ட சத்தியத்தைக் காட்டிலும் உத்தம சத்தியம். இந்த சத்திய ஸ்வரூப பிரஹ்மத்தில் எந்த ஒரு வஸ்துவும் அணு மாத்திரமும் உத்பத்தியாகாது.
इति तृतीयमद्वैतप्रकरणं सम्पूर्णम् ॥